நன்றியைப்பற்றி வைகோ பேசலாமா?
மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்கள் _ டெல்லியில் இன்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ள பெரியார் மய்யம் குறித்துப் பேசியிருக்கிறார்.
பெரியார் மய்யம் அமைவதற்குக் காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும் என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல (தினமணி 2.5.2010)
திராவிடர் இயக்க வரலாற்றிலும், தமிழர்கள் வரலாற்-றிலும் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் நிகழ்ச்சி டெல்லி பெரியார் மய்யத் திறப்பு விழா!
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறி-வாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் நிலை-யில், திரு வைகோ அவர்கள் மட்டும் வேறு வகையில் சிந்திப்பது வருந்தக் கூடிய ஒன்றாகும். முதல் அமைச்சர் கலைஞர் திறக்கிறார் என்கிற ஆத்திரத்தில் நிதானமிழந்த முறையில் வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நன்றியைப் பற்றி திராவிடர் கழகத் தலைவருக்கா இடித்துரைப்பது?
அவசர வைகோ!
இப்பொழுது மட்டுமல்ல; டில்லி பெரியார் மய்யம் மீண்டும் தொடங்குவதற்கான விழா நடைபெற்றதாகவும் அந்த விழாவில் வைகோ பெயர் உச்சரிக்கப்படவில்லை-யென்றும் குறை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட-வர்தான் இவர் (சங்கொலி 12.9.2003 பக்கம் 41 இடிக்கப்-பட்டது 2001-_இல் வைகோ சொல்லியிருப்பது போல 1998_இல் அல்ல). அப்படி ஒரு விழாவே, நடைபெறவில்லை _ அவசரப்பட்டு வைகோ அறிக்கை வெளியிட்டாரே என்று விடுதலையில் (7.9.2003) மறுப்பு வெளி-யிட்டோம்.
வைகோ செய்த உதவிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எப்பொழுதுமே நன்றி கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (16.12.2001)வில் தீர்மானம் வாயிலாகவே நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு முன்கூடப் போக வேண்டாம்; 22.4.2010 அன்று பத்து நாள்களுக்குமுன் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலையில் வெளி-யிட்ட அறிக்கையில்கூட அன்றைய பிரதமர் வாஜ்பேயி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை மறக்காமல் பதிவு செய்திருக்கிறார். இவரது அவசரமும் ஆத்திரமும்தான் இவரை அரசியலில் பரிதாபப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டிருக்கிறது போலும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழதோடு தனிக் கடிதம் வைத்தும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதே (26.4.2010)
அடுத்த இலைக்குப் பாயசம் போடுங்கள் என்கிற பாணியில் வைகோ பேசியிருப்பதாகத் தெரிகிறது.
திரு வைகோ அவர்களுக்கு அவரின் அலுவலகத்-திலேயே டில்லி திறப்பு விழா அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் தாழ்வானதாகும்!
உண்மை இவ்வாறு இருக்க, நாநடுங்க வேண்டிய ஒரு சொல்லை தாய்க் கழகத்தின் தலைவர்மீது பயன்படுத்தியிருப்பது பண்பாட்டுத் தளத்தில் மிகவும் தாழ்வானதாகும். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் 5ஆவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய மானமிகு மாண்புமிகு முதல் அமைச்-சர் கலைஞர் அவர்கள் பெரியார் மய்யத்தை திறப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதுதான்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர் எப்படி ஒரு அரசி-யல் கட்சியை நடத்தப் போகிறார் என்று தெரிய-வில்லை.
நன்றியைப்பற்றியெல்லாம் திரு. வைகோ அவர்கள் பேசுவது தகுதியானதல்ல; கலைஞர் அவர்களின் காலடியில் உட்கார்ந்து கசிந்துருகியவர் கடைசியில் அவர் காலையே வாரியதையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா?
கலைஞர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் உயிரோடு இருப்பார்; அதுவரை நான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? (இந்தவுரையாடல் வைகோ அவர்களுக்குப் புரிந்திருக்குமே!) என்று சொல்லும் அளவுக்கு வைகோ நன்றியுணர்ச்சியின் சின்னமாவார்.
யாரை திருப்திபடுத்த!
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்-காகவும் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் குறி வைக்க வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவாளர்களும், உண்மைத் திராவிட இயக்கத்தவர்களும், தமிழுணர்வாளர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தந்தை பெரியார் மய்யத்தின் திறப்பு விழா குறித்து வயிற்றில் குத்திக் கொள்வது (மகா-பாரதக் கதைகளைச் சொல்லுவதில் கெட்டிக்காரரா-யிற்றே) வடிகட்டிய மனக்கிலேசமாகும் (ஷிணீபீவீனீ). இதுதான் தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் வைகோ அவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், பற்றுதலுமா? பரவாயில்லை; டெல்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துகள் சொல்ல மனம் இல்லா விட்டாலும் தான் யார்? தம் இயல்பு என்ன? குணாம்சம் என்ன? என்பதை அறிவித்து விட்டார் _ அதற்காகவாவது நம் நன்றி சொல்லலாம் _ அல்லவா!
- கலி. பூங்குன்றன்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
சென்னை பொதுச் செயலாளர்
2.5.2010 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment