Tuesday, March 10, 2020

நாமம் வடகலையா? - தென்கலையா?


'எஸ்' வங்கி இயக்குநர்களில் ஒருவர் ரவி ராகவேந்திரா. நடிகர் ரஜினி யின் மைத்துனர், பிரபல இசை யமைப்பாளர் அனிருத்தின் தந்தையும் இவர் தான்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது நிரந்தர வைப்புத் தொகையான ரூ.1500 கோடியை கடந்த மாதம் 'எஸ்‘ வங்கியிலிருந்து திரும்பப் பெற்றது. அடுத்த மாதம் வங்கி திவாலாகும் என்பது இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது "ஏழுமலை யானுக்கே வெளிச்சம்!"
'எஸ்' வங்கி, ரிசர்வ் வங்கி யின் கட்டுப்பாட்டிற்கு வருவ தற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனம், தன் கணக்கில் உள்ள சுமார் 250 கோடி ரூபாயைத் திரும்ப பெற்றது. எப்படி என்பது மத்திய பெரி யவாள்களுக்கே வெளிச்சம்!
மற்ற வங்கிகள் முன் வராத நிலையில் காத்திருந்த கொக்கு போல எஸ்பிஅய் வங்கி, 'எஸ்' வங்கியின் பெரும்பாலான பங்குகளை வாங்க முன் வந்தது எப்படி என்பதும் யாருக்கு வெளிச்சம்?
இன்னும் உண்மைகள் வெளி வந்தால் அதில் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்களுக்கு மாரடைப்பு என்பது நிச்சயம்! எல்லா பெரிய அமைப்புகளும் சேர்ந்து மக்களுக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? என்பதே கேள்வி!

வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமல்

தேசியமய மாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன்.

வங்கிகளின் இணைப்பு விபரங்கள்
* பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின் றன.
* கனரா வங்கியுடன் சிண் டிகேட் வங்கி இணைக்கப்படு கிறது.
* இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப் படுகிறது.
* யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங் கியும், கார்ப்பரேஷன் வங்கி யும் இணைக்கப்படுகின்றன.
நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது, “வங்கி கள் இணைப்பது தொடர் பாக சம்பந்தப்பட்ட வங்கிக ளின் இயக்குநர்கள் குழு கூட் டங்களில் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. வங்கிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள் ளது. இதில் ஒழுங்குமுறை பிரச்சினைகள் எதுவும் இருக் காது” என்றார்.
2017ஆம் ஆண்டு நாட்டு டைமையாக்கப்பட்ட வங்கி களின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. தற்போது அந்த வங்கிகளின் இணைப்புக்கு பின்னால் நாட்டுடமையாக் கப்பட்ட வங்கிகளின் எண் ணிக்கை 12 ஆக குறையும்.

Monday, March 9, 2020

தபோல்கர் வழக்கில் முக்கிய திருப்பம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு

தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து மத்திய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
பகுத்தறிவாளரும், சமூக ஆர்வலருமான நரேந்திர தபோல்கர் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படுகொலையை கோவாவைத் தலைமையிடமாக கொண்ட சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் திட்டமிட்டு செய்தனர். வழக்கு விசாரணையில் சனாதன் சன்ஸ்தா உறுப்பினர்களை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பான முக்கிய குற்றவாளி இதுவரை சிக்கவே இல்லை. மேலும் கொலைக்கு முக்கிய ஆதாரமான துப்பாக்கி குறித்தும் சிபிஅய் விசாரித்து வந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கியை சிபிஅய் கண்டுபிடித்திருக்கிறது.
நார்வேயை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடனும், தொழில்நுட்பத்தின் பின்னணியிலும் துப்பாக்கியை மீட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.
இந்த துப்பாக்கி தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகு தான் தபோல்கர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகும். பலஆண்டுகள் தொடர் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இந்த துப்பாக்கியை கண்டுபிடித்து இருக்கிறோம்.
தபோல்கரின் உடற் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள துப்பாக்கிக் குண்டின் அளவு, அது எந்த ரகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகர்களான காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் வீரேந்திர ததே, வழக்குரைஞர் சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே, ஷரத் கலாஸ்கர் மற்றும் சச்சின் அண்டூர் உள்ளிட்ட 7 பேரை தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சிபிஅய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அய்ட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கலாம் மக்களவையில் தகவல்

அய்ட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இறுதி முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித் திருக்கிறார்.
ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு  கேள்வி ஒன்றினை முன்வைத்துள்ளனர். அதாவது அண்மைக் காலங்களில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கக்கூடிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மற்றும் மக்களின் கருத்து கேட்பு அவசியமில்லை என்ற ‘ஏ’ பிரிவிலிருந்து ‘பி2’ பிரிவிற்கு நீங்கள் மாற்றியுள்ளீர்களா? அவ்வாறு மாற்றப்பட்டிருந் தால் எந்த அடிப்படையில் இத்தகைய பிரிவிற்கு மாற்றியுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கக்கூடிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடந்த ஜனவரி 16ஆம் தேதி இதுபோன்ற இயற்கை ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி திட்டங்கள், ‘ஏ’ பிரிவிலிருந்து ‘பி2’ பிரிவிற்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் ஆய்வுக்காக தொடங்குகின்ற போது மாநில அரசின் கீழ் இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படி விண்ணப்பித்து அவர்களின் அனுமதியை  பெற வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களின் முடிவு தான் இறுதியானது என தெரிவித்துள்ளார். இது தவிர எந்தவொரு  குறிப்பிட்ட இடத்திலும், குறிப்பிட்ட ஒரு திட்டத்தை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது சம்பந்தப்பட்ட மாநில அரசின் இறுதி முடிவு என்பதையும் மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்ல, நீர் மற்றும் காற்று சட்டங்கள் உள்ளது. குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டியது கட்டாயம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே அய்ட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி திட்டங்களையும் செயல்படுத்து வதற்கு மாநில அரசின் அனுமதி கட்டாயம். அவர்கள் எடுக்கின்ற முடிவே இறுதியானது என்பதை மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியீடு

குடியுரிமை திருத் தச் சட்டத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும்நாடெங் கிலும்  பொதுமக்கள் வெகுண்டெழுந்து  போராடி வருகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளன.
இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கேள்விப்பட்டி யலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
இது சம்பந்தமாக மத்திய பதிவாளர் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 பக் கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை பதிவாளர் தலைமை விவேக் ஜோஷி கண்காணிக்க உள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 2-ஆவது கட்ட பணியும் நடைபெற உள்ளது.
முதல்கட்ட பணியோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத் தப்படும். முதல் கட்ட பணியில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2-ஆவது கட்ட பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் 31 கேள்வி களின் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 3 கேள்விகளின் விவரம் வெளியிடப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம் வருமாறு:-
1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங் குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண் ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திரு மணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.
15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவப்பறை உள்ளதா? 18. எந்த வகை கழிப்பறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன் படுத்தும் எரிபொருள். 23. வானொலி உள்ளதா?
24. தொலைக்காட்சி இருக்கிறதா? 25. இணையதள வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதா?
26. மடிக்கணினி மற்றும் கணினி இருக்கிறதா? 27. தொலைபேசி, அலை பேசி உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், இருசக்கர வாகனங்கள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. அலைபேசி   எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப் படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி
போன்ற விவரங்கள் இடம் பெற் றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் கனமழை - 17 பேர் பலி

பாகிஸ் தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக பல் வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட் டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத் துக்களில் சிக்கி 17 பேர் உயி ரிழந்தனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் படுகாயம டைந்துள்ளனர். இதற்கிடை யில், கனமழை யால் பாதிக்கப் பட்ட மக்க ளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வரு வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலை எண்ணெய் விலை ‘கிடுகிடு’

விருதுநகர் சந்தையில் நிலக்கடலை வரத்து குறைவால், கடலை எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வரத்து குறைவால் நிலக்கடலை பருப்பு மூட்டைக்கு ரூ.700 அதிகரித்துள்ளது. இதனால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.50, கடலை புண்ணாக்கு மூட்டைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு (80 கிலோ) (அடைப்பிற்குள் கடந்த வார விலை) - ரூ.7,000 (6,300), கடலை எண்ணெய் (15 கிலோ) - ரூ.2,250 (2,200), கடலை புண்ணாக்கு (100 கிலோ)  - ரூ.4,800 (4,500).
கடந்த 5 வாரங்களாக பாமாயில் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. நடப்பு வாரத்தில் கடலை எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து, பாமாயில் டின்னுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 15 கிலோ பாமாயில் ரூ.1,250 (1,245) என விற்பனையானது.
விருதுநகர் சந்தையில் நேற்றைய விலை நிலவரம்: உளுந்து (100 கிலோ)  - ரூ.6,000, லயன் உளுந்து  - ரூ.6,200, பர்மா உளுந்து  - ரூ.6,500, உளுந்தம்பருப்பு நாடு  - ரூ.9,500, உளுந்தம்பருப்பு லயன்  - ரூ.9,000, பர்மா உளுந்தம்பருப்பு  - ரூ.9,000, உளுந்தம்பருப்பு (தொளி)  - ரூ.8,000. பாசிப்பயறு  - ரூ.8,500, பாசிப்பருப்பு லயன்  - ரூ.11,000, துவரை லயன்  - ரூ.6,500, துவரம்பருப்பு லயன்  - ரூ.8,500,  துவரம்பருப்பு உடைசல்  - ரூ.8,200. கடலைப்பருப்பு  - ரூ.6,000, நாடு மல்லி (40 கிலோ)  - ரூ.3,500, லயன் மல்லி   - ரூ.2,700, பொரி கடலை(55 கிலோ) -  ரூ.3,600, ரங்கூன் மொச்சை  - ரூ.6,000,  வத்தல் (குண்டூர்) குவிண்டால்  - ரூ.14,000 வத்தல் (நாடு) குவிண்டால்  - ரூ.11,500 முதல் ரூ.13,000, முண்டு வத்தல் குவிண்டால் - ரூ.11,000 முதல் 12,500 வரை என விற்பனையானது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...