'எஸ்' வங்கி இயக்குநர்களில் ஒருவர் ரவி
ராகவேந்திரா. நடிகர் ரஜினி யின் மைத்துனர், பிரபல இசை யமைப்பாளர்
அனிருத்தின் தந்தையும் இவர் தான்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது
நிரந்தர வைப்புத் தொகையான ரூ.1500 கோடியை கடந்த மாதம் 'எஸ்‘
வங்கியிலிருந்து திரும்பப் பெற்றது. அடுத்த மாதம் வங்கி திவாலாகும் என்பது
இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது "ஏழுமலை யானுக்கே வெளிச்சம்!"
'எஸ்' வங்கி, ரிசர்வ் வங்கி யின்
கட்டுப்பாட்டிற்கு வருவ தற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குஜராத்தில் உள்ள
ஒரு நிறுவனம், தன் கணக்கில் உள்ள சுமார் 250 கோடி ரூபாயைத் திரும்ப
பெற்றது. எப்படி என்பது மத்திய பெரி யவாள்களுக்கே வெளிச்சம்!
மற்ற வங்கிகள் முன் வராத நிலையில்
காத்திருந்த கொக்கு போல எஸ்பிஅய் வங்கி, 'எஸ்' வங்கியின் பெரும்பாலான
பங்குகளை வாங்க முன் வந்தது எப்படி என்பதும் யாருக்கு வெளிச்சம்?
இன்னும் உண்மைகள் வெளி வந்தால் அதில்
கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்களுக்கு மாரடைப்பு என்பது நிச்சயம்!
எல்லா பெரிய அமைப்புகளும் சேர்ந்து மக்களுக்கு போட்ட நாமம் வடகலையா?
தென்கலையா? என்பதே கேள்வி!
No comments:
Post a Comment