Tuesday, December 17, 2019

2019இல் தடம் பதித்த வீராங்கனைகள்


பூட்டிய விலங்கு அறுபட்டால் பெண்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இந்திய விளையாட்டு வீராங் கனைகளே சாட்சி. 2019-இல் பல வரலாற்று சாதனைகள் படைத்த வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு:
போராடி வென்றவர்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.யு. சித்ரா, ஆசியத் தடகளப் போட்டியில் 1500 மீட்டர் பிரிவில் மூன்றாம் முறை யாகத் தங்கம் வென்று சாதித்தார். பெற் றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். சித்ராவுக்கு இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைத்துவிட வில்லை. ஆசியப் போட்டியில் பங்கேற் பதற்கான வீரர்கள் பட்டியலை இந்தியத் தடகள சம்மேளனம் வெளியிட்டது. அதில் சித்ராவின் பெயர் இல்லை. எதற்கும் துவளாத அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் வழங்கிய நீதி சித்ராவைப் போட்டியில் கலந்துகொள்ள வைத்தது.
சச்சினை வென்ற ஷபாலி
அரியானாவைச் சேர்ந்த பதினைந்து வயதான ஷபாலி வர்மா மிக இளம் வயதில் அரை சதம் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் பதினாறு வயதில் புரிந்த சாதனையை இவர் முறியடித் துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ஷபாலி.
மாவட்டத்தின் முதல் பெருமை
புதுக்கோட்டை வட்டாப்பட்டியைச் சேர்ந்த பூவிதா, தேசியக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ராணியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரு கிறார். ஹரியாணாவில் உள்ள ரோஹ் தக்கில் நடைபெற்ற தேசியக் குத்துச்சண் டைப் போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பூவிதா.
போல்ட்டின் சாதனையை

முறியடித்த அல்லிசன்
அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெல்லிக்ஸ் உலக தடகளப் போட்டிகளில் ஜாம்பவானாக இருந்த ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தார். தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4400 தொடர் ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தார் அல்லிசன். இதன்மூலம் உலக தடகளப் போட்டியில்12 தங்கப் பதக்கங் களைப் பெற்றுள்ளார் அல்லிசன். ஆனால், உசேன் போல்ட் 11 தங்கப் பதக்கங்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்.
தடகளத்தின் தங்க மங்கை
ஹிமா தாஸ், தடகளத்தின் தங்க மங்கை. 2019-இல் மட்டும் சர்வதேசத் தட களப் போட்டிகளில் அய்ந்து தங்கப் பதக் கங்களை வென்று சாதனை படைத் துள்ளார். 2018-இல் ஆண்டு உலக ஜூனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் ஹிமா தாஸ்.
ஒரே தோட்டா இரண்டு தங்கம்
இளவேனில் வாலறிவன், இந்த ஆண்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. சர்வதேச அளவில் நடைபெற்ற உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். சர்வதேச அளவில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கோல்டன் ராக்கெட் விருதை இவர் பெற்றிருக்கிறார்.
உலகப் போட்டியில் ஒருவர்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக் கான ஃபிபா பெண்கள் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக சேலம் வீராங்கனை மாரியம்மாள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த இவர், கைத்தறித் தொழிலாளியின் மகள்.
வாகையர் பெண்கள்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அய்ந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை 15 வயதான கோரி காஃப் முதல் சுற்றிலேயே வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த சர்வதேசத் தடகளப் போட்டியில் 32 வயதான ஜமைக்கா வீராங்கனை செல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ், தங்கம் வென்றார். குழந்தை பிறப்புக்குப் பிறகு ஷெல்லி கலந்துகொண்ட முதல் போட்டி இது. இதில் 100 மீ. பிரிவு ஓட்டத்தை 10.71 விநாடிகளில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தி, உலகின் மிக வேக மாக ஓடும் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
மாற்றத்தின் வெற்றி
ஸ்லோவாகியா நாட்டில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனிதா ஆண்டோ தங்கம் வென்றார். இப்போட்டியில் வென்றதன்மூலம் தொடர்ந்து ஆறாம் முறையாகத் தங்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
கபடிப் போட்டியில் மகளிர் அணி
மலேசியாவில் நடைபெற்ற உலகக் கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் தமிழகம் சார்பில் மதுரையைச் சேர்ந்த குருசுந்தரி மட்டுமே இடம் பெற்றி ருந்தார். 15 ஆண்டுகளாகக் கபடி ஆடி வரும் குருசுந்தரி கோவை வனத்துறை வனக்கோட்டத்தில் பணிபுரிந்துவரு கிறார்.

இத்தாலியில் 2ஆம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு

இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறை முக நகரம் பிரிந்தி. இங்குள்ள திரையரங்கு ஒன்றை புனர மைக்கும் பணிகள் அண்மை யில் நடந்தது.
அப்போது அங்கு கட்டு மான பணிக்காக குழி தோண் டியபோது வெடிக்காத வெடி குண்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது, 2ஆம் உல கப்போரின் போது 1941ஆம் ஆண்டு இத்தாலி மீது இங் கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.
இதையடுத்து, 1 மீட்டர் நீளமும், 200 கிலோ எடை யையும் கொண்ட அந்த வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க வைக்கும் தீவிர முயற்சியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்ட ஆராய்ச் சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய அதிகாரி கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையொட்டி முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக் கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப் பட்டனர். சுமார் 1,000 பாது காப்பு படை வீரர்கள் மற்றும் 250-க்கும் அதிகமான தன்னார் வ லர்கள் மக்களை பாதுகாப் பான இடத்துக்கு வெளியேற் றும் பணிகளை மேற்கொண் டனர்.அதுமட்டும் இன்றி பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனை கள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
சிறையில் இருந்த 200-க் கும் அதிகமான கைதிகள் 35 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப் பட்டனர். மேலும் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திட்டமிட்டப்படி ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.
முன்னதாக கடந்த 1ஆம் தேதி இத்தாலியின் துரின் நகரில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட தும், சுமார் 10 ஆயிரம் மக்களை வெளியேற்றிவிட்டு ராணுவவீரர்கள் அந்த வெடி குண்டை செயலிழக்க செய்த தும் குறிப்பிடத்தக்கது.

புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலமும், தமிழியல் ஆய்வு நடுவமும் இணைந்து நடத்தும் புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் என்ற தேசியக் கருத்தரங்கு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள்.. புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில் ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட உள்ளது. கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்வன்றே இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன.
கருத்தரங்கினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்கிறார். நிறுவன  இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமை யேற்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துறைத்தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் தொடக்கவுரையாற்றி, ஆய்வுக்கோவையை வெளியிடுகிறார். பிற்பகல் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சிஷினி அவர்கள் நிறைவுரை ஆற்றுகிறார்.

தமிழ் அடையாளங்களை பின்பற்றாவிட்டால் தமிழ்நாட்டிலேயே நாம் அகதிகளாக மாறி விடுவோம் தஞ்சை பல்கலை. துணைவேந்தர் எச்சரிக்கை

தமிழ் மொழி சார்ந்த இலக்கணம், இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளை இளைஞர்கள் கற்றுக் கொள்ள ஆர்வமுடன் முன்வர வேண்டும். தமிழ் அடையாளங்களை நாம் பின்பற்றவில்லை என்றால், தமிழ்நாட்டிலேயே நாம் அகதிகளாக மாறி விடுவோம் என தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த் துறை மற்றும் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 15-வது பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலை. வெள்ளிவிழா அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் பேசிய தாவது: தமிழில் தரமான ஆய்வுகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக பல் கலைக்கழக மானியக் குழு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. நாட்டில் தமிழில்தான் அதிக ஆய்வுகள் நடக்கின்றன.
இந்தியாவில் 2017 - 20-18ஆ-ம் ஆண்டில் 29,775 பேர் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தில் அதிகம் பேர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில் வேர்ச்சொற்கள் அதிக மாக உள்ளன. இதனால் ஆழமான, தனித்துவம் மிக்க மொழியாக திகழ்கிறது. தமிழ் இலக்கணம், இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளை இளை ஞர்கள் கற்றுக்கொள்ள ஆர்வ முடன் முன்வர வேண்டும். தமிழ் அடையாளங்களை பின் பற்றவில்லை என்றால் தமிழ் நாட்டிலேயே அகதிகளாக மாறி விடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகால மரத்தை வெட்டுவதா?-மக்கள் எதிர்ப்பு

திருப்போரூர்-செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகாலமாக இருந்து வரும் மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை அடுத்த திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையின் நீளம் 27 கி.மீ.  இச்சாலை தற்போது இருவழிப்பாதையாக உள்ளது. சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல ஓ.எம்.ஆர். சாலை மற்றும் திருப்போரூர் வழியாக மாற்று வழி உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு வழிப்பாதையாக உள்ள திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்ய பணிகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகின்றன. இந்த சாலைப்பணிக்காக சாலையோரம் இருக்கும் 400 மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலைப்பணிக்காக தோண்டப்படும் பழமை வாய்ந்த மரங்களை மறு நடவு செய்யும் திட்டம் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் 100 ஆண்டுகள் பழமை மிக்க ஆலமரம் மறுநடவு செய்யப்பட்டது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப் படவில்லை.
இதனால், செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே விரிவுபடுத்தப்படும் சாலைப்பணிக்காக சாலையின் இரு பக்கமும் உள்ள மரங்கள் சரமாரியாக வெட்டி தள்ளப்படுகின்றன. குறிப்பாக, செம்பாக்கம் - காட்டூர் சந்திப்பில் 150 ஆண்டு பழமை மிக்க ஆலமரம் ஒன்று உள்ளது.
இந்த மரம் பிரமாண்டமான குடை போல் வளர்ந்து கண்கொள்ளா காட்சியாக உள்ளது. விரைவில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்த ஆலமரம் அகற்றப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று திட்டத்தை அரசு யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Monday, December 16, 2019

விலாவைக் கொத்தும் விலைவாசி உயர்வு 22 உணவுப் பொருட்களின் விலைகள் கடும் உயர்வு...வெங்காய விலை 4 மடங்கு அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் அரிசி, பருப்பு, கோதுமை, பால் உள் ளிட்ட 22 அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் கடும் உயர்வை சந்தித்துள் ளதாகவும்; குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் வெங்காயத்தின் விலை மட்டும் 4 மடங்கு உயர்ந்துள்ள தாக மத்திய அரசே ஒப்புக் கொண்டுள் ளது. கடந்த 10 மாதங்களுக்கான உணவுப் பொருட் களின் விலை உயர்வு குறித்து, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும், உணவுப் பொருட்கள் விலை உயர்வு குறித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வதற்கான காரணம் குறித்தும் கேட்டிருந்தனர். அவற்றுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மற் றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் பதில் அளித்துள்ளார்.
அதில் “கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி வெங்காயத்தின் விலை சராசரியாகக் கிலோ 81 ரூபாய் 90 பைசாவாக இருக்கிறது; ஆனால், கடந்த மார்ச் மாதம் 15 ரூபாய் 87 பைசாவாக மட்டுமே இது இருந்தது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களில் வெங்காயத்தின் விலை மட்டும் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல அரிசி, கோதுமை ஆகிய வற்றின் விலைகள் 10 சதவிகிதம்; பருப்பு வகைகளின் விலைகள் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள் ளன. காய்கறிகள், குறிப்பாக உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், சமையல் எண்ணெய், தேயிலை, சர்க்கரை, பால் உள்ளிட்ட 22 அத்தியாவசியப் பொருட்களின் விலை யும் சீராக உயர்ந்துள்ளது என்று பஸ் வான் ஒப்புக் கொண்டுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித் துள்ளது.நாட்டின் பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் 4.6 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், நவம்பர்  மாதத்தில் 5.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.2 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 3.9 சதவிகிதமாகவும் அதி கரித்திருந்தது. தற்போதைய உணவுப் பொருட் கள் விலை பணவீக்கமானது, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
இதற்கு முன்பு கடந்த 2016-ஆம் ஆண் டில் அதிகபட்சமாக உணவுப் பொருட் கள் பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந் தது. தற்போது மீண்டும் 6 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது.பணவீக்கம் உயர்வு எதிரொலியாக காய்கறிகளின் விலை 36 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பருப்பு வகைகள் 14 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தாய் மனு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மனு தாக்கல் செய்தார்.
டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம் சிங் என் பவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற் றொரு இளம் குற்றவாளி தண்டனை முடித்து விடுதலையானார். மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அக்ஷய் குமார் என்பவர் தனது தண்ட னைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், அக்ஷய் குமாரின் வழக்கை தள்ளுபடி செய்து, குற்றவாளி கள் அனைவரையும் உடனடியாக தூக்கி லிட வேண்டும் என நிர்பயாவின் தாய் நேற்று உச்சநீதிமன்றத்தில்  வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக் களும் 17ஆம் தேதி விசாரணைக்கு வருகி றது. இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஆணையைப் பிறப் பிக்குமாறு டில்லி உயர்நீதிமன்றத்திலும் நிர்பயாவின் தாய் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 18ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...