மாதவிடாய் நாட்களில், உடல் சோர்வு நீங்க
வும், ரத்த இழப்பை ஈடுசெய்யவும், பெண்களின் இடுப் பெலும்புகளுக்கு உறுதி
யளிக்கவும் புரதச்சத்தும், கால்சியம் சத்தும் மிக இன்றியமை யாததாகிறது.
இச்சத்துகள் குறைபாடாக இருக் கும் வேளையில், மாதவிடாய் வயிற்றுவலி
அதிகரித்தாற்போல் காணப்படும். எனவே, மாதவிடாய் துவங்கும் ஒரு வாரத்திற்கு
முன் பிருந்தே, முட்டை, பால், கேழ்வரகு, உளுந்து ஆகிய உணவுப் பொருட்களை
தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட களி,
புட்டு, வடை, கூழ், அடை, கஞ்சி போன்ற உணவுகள் வயிற்றுவலியைத் தடுப் பதுடன்,
அந்நாட்களில் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான கூடுதல் ஆற்றலையும்
அளிக்கிறது.
Tuesday, July 23, 2019
சூரிய தகடு மேற்கூரையோடு தயாராகும் வாகனம்
மேம்பட்ட தொழில்நுட்பம், பிற நிறுவனங்
களுக்கு முன்பாகவே புதிய தொழில்நுட்பங்களை தனது தயா ரிப்புகளில்
புகுத்துவதை டொயோடா நிறுவனம் வழக்கமாகக் கொண் டுள்ளது. உலகம் முழுவதும்
பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, டொயோட்டா
நறுவனம் பேட்டரி மாடல், ஹைபிரிட் மாடல் என பிற நிறுவனங்களுக்கு முன்பா கவே
அறிமுகம் செய்தது.
தற்போது அதையும் தாண்டி ஒரு படி மேலாக
சூரிய பலகை (சோலார் பேனல்) பதிக்கப்பட்ட காரை உருவாக்கும் முயற்சியில்
தீவிரமாக இறங்கியுள்ளது. இந் நிறுவனத்தின் பிரியுஸ் மாடல் கார் தற்போது
சோதனை ஓட்டத் தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
காரின் மேற்கூரை, முன்பக்க பானெட், பின்
பகுதி என அனைத்து பாகங்களிலும் சூரிய பலகை பதிக்கப்பட்டு அதிலிருந்து
கிடைக்கும் மின்சாரம் பேட்ட ரியை சார்ஜ் செய்யும். தொடர் மின் விசையில்
கார் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி காரைப் பொருத்த மட்டில் சார்ஜிங்
மிகப்பெரும் சவாலாக உள்ளது. மாறாக கார் இயங்கும்போதே காரின் மேற் பகுதியில்
உள்ள சூரிய பலகை மின்சாரத்தை தயாரித்து பேட்ட ரிக்கு அனுப்பும்போது காரின்
பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக் காது. இந்த சூரிய
மின்பலகை 0.3 மி.மீ தடிமன் கொண்டது.
இது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்யும் திறன் கொண் டது. வழக்கமாக பேட்டரி கார் ஓடும் தூரத்தை விட
கூடுதலாக 45 கி.மீ. தூரம் இந்த சோலார் மேற்கூரை கார் ஓடியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்த கார் வெற்றிகரமாக செயல்பட்டால்
இந்தியா போன்று ஆண்டு முழுவதும் வெயில் காயும் நாடுகளில் பிரியுஸ் காருக்கு
அமோக வரவேற்பு இருக்கும். சுற்றுச் சூழலும் காக்கப்படும்.
இயற்கை உப்பு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது
தீங்கு விளைவிக்கும் அனைத்து
பொருட்களிலிருந்தும் டேபிள் உப்பை அகற்றுவதற்கு தேவை என்று அண்மையில்
தனியார் இந்திய உப்பு பிராண்டுகளை உப்பில் பொட்டாசியம் ஃபெரோ சியானைடை
உறிஞ்சும் எதிர்ப்பு முகவராகப் பயன்படுத்துவது குறித்து கண்டறிந்த
சிவசங்கர் குப்தா கூறினார்.
யுனிவர்சல் அயோடைசே ஷன் என்பது ஒரு பெரிய
மார்க் கெட்டிங் வித்தை மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட உப்பை “அயோ டைஸ்
உப்பு” என்று விற்க சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது நம்
நாட்டில் ஏராள மாகக் கிடைக்கும் இயற்கை உப்பு விற்பனையை நசுசிக்கியுள்ளது
என்று 91 வயதான குப்தா கூறி னார். பல கோடி இந்திய உப்புத் தொழிலின்
மாற்றத்தைக் கண்ட வர்.
"மாபெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள்,
தங்கள் வணிக நோக் கங்களுக்காக, தரமற்ற உப்பை இந்தியாவில் பெரும் விலைக்கு
விற்பனை செய்து வருகின்றனர். இது மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.
இயற்கை உப்பு நுகர்வு அவசியத்தை பொது மக் கள் உணர்ந்து கொள்ள வேண் டிய
நேரம் இது” என்றார் குப்தா.
வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி செய்துள்ள
தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடுகளில் தனக்குள்ள சொத்து விவரங்களை
வெளியிட வேண்டும் என்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தர
விட்டது.
முன்னதாக, மல்லையாவுடன் தொடர்புடைய
பல்வேறு சொத்துகளின் உரிமையாளர் குறித்த தகவல்களை வெளியிடக் கோரி இந்திய
பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் அந்த நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மல்லையாவின் தந்தை பெயரிடப்பட் டுள்ள
விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் உரிமையாளர் யார் என்பது குறித்த முக்கிய ஆவணத்தை
வெளியிட வேண் டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
இரண்டு சொகுசு படகுகள், விலை யுயர்ந்த
பழங்கால கார்கள், விலையுயர்ந்த ஓவியங்கள், பிரபல இசையமைப்பாளர் எல்டன் ஜான்
பயன்படுத்திய பியானோ இசைக்கருவி உள்ளிட்ட சொத்துகள் மல்லையாவின் பெயரில்
இருப்பதாக இந்திய வங்கிகள் கருதுகின்றன.
எனினும், இந்த சொத்துகள் தனது
குடும்பத்தினர் பெயரிலும், விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் பெயரிலும் இருப் பதாக
மல்லையா கூறி வருகிறார். அதே போல், விஎம்டிஎஸ் அறக்கட்டளையில் இருந்து
தனக்கு எந்தவொரு நிதிப் பலனும் கிடைக்கப்பெறுவதில்லை என் றும் மல்லையா
கூறிவருகிறார்.
இந்நிலையில், இந்திய வங்கிகளின் மனு மீது
நீதிபதி ராபின் நோவெல்ஸ் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்திய
வங்கிகளின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிகெல் டோஸி, முன்வைத்த வாதம்:
மல்லையாவுக்கு சொந்தமாக வெளி நாடுகளில்
உள்ள சொத்துகள் தொடர் பாக இந்திய நீதிமன்றங்களிலும், பிரிட் டன்
நீதிமன்றத்திலும் முழுமையான தகவல் சமர்ப்பிக்கப்படவில்லை. வழக் கில்
தொடர்புடைய மல்லையாவின் சொத்துகளில் பல விஎம்டிஎஸ் அறக் கட்டளையின்
கட்டுப்பாட்டில் உள் ளது. அந்த அறக்கட்டளை மல்லையா வின் குடும்ப
உறுப்பினர்களுடன் தொடர் புடையது.
விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் உரிமையாளர்
யார் என்பதற்குத் தகுந்த பதில் கிடைக்கப்பெறவில்லை. அது தொடர்பான இந்திய
வங்கிகளின் கேள் விகளுக்கு கிடைத்த பதில் ஒன்றுக் கொன்று முரண்பட்டுள்ளன
என்று வழக்குரைஞர் நிகெல் டோஸி வாதா டினார்.
அதைப் பதிவு செய்துகொண்ட நீதி பதி ராபின்
நோவெல்ஸ், மல்லையா வோடு தொடர்புடைய சொத்துகளின் உரிமையாளர்கள் குறித்த
விவரங்களை அறியும் உரிமை இந்திய வங்கிகளுக்கு உள்ளது. அது குறித்த தகவலை
வெளியிடாதது மனுதாரருக்கான (இந்திய வங்கிகள்) அநீதியாகிவிடும். எனவே,
மல்லையா தனது வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று
உத்தரவிட்டார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு உதவி செய்யத் தயார்: இம்ரானிடம் டிரம்ப் உறுதி
காஷ்மீர் பிரச்சினையில்
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தி யஸ்தம் செய்ய தயாராக இருப் பதாக பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கானிடம் அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம்
மேற்கொண்டுள்ள இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை வாசிங்ட னில் உள்ள
அதிபர் இல்ல மான வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்தார். காஷ்மீர்
பிரச்சினை குறித் தும் இரு தலைவர்களும் பேசி னர். அப்போது,
இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினை யைத் தீர்க்க
விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் உதவ முடியும் என்றால், மத்தியஸ்த ராக
செயல்படவே விரும்பு வேன் என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த
கருத்தை இம்ரான் கான் வரவேற்றார். மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டால் பல
லட்சம் மக்களின் வேண்டுகோள் நிறைவேறும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தவிர, காஷ்மீர் விஷயத்தில்
மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் (ஜி
20 உச்சி மாநாட்டில்) என்னை சந் தித்த போது கேட்டுக் கொண் டார் என்றும்
டிரம்ப் கூறிய தாக செய்தி வெளியாகியுள் ளது. இந்திய வெளியுறவுத் துறை
அமைச்சகம் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர் பாக
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில்
(டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர்
மோடி காஷ்மீர் பிரச்சினை தொடர் பாக எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை.
காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ் தான் இடையிலானது. இதில் மூன்றாவது நபர்
தலையீட் டுக்கு அவசியமில்லை. முத லில் காஷ்மீரில் பயங்கரவா தத்தை
தூண்டிவிடுவதையும், இந்தியாவுக்கு எதிரான பயங் கரவாதிகளை ஆதரிப்பதை யும்
பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள சிம்லா ஒப்பந்தம், லாகூர்
ஒப்பந்தம் ஆகியவற்றை பாகிஸ்தான் முழுமையாகக் கடைப்பிடித்தால் அடிப் படை
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.க. சங்பரிவார் கூட்டத்தின் பரிதாப நிலை
இந்தியா முழுவதும் பா.ஜ.க. நடந்து முடிந்த
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், தமிழ்நாட்டில் அவர்களின்
குதிகால் எலும்பும், நரம்பும் முறிந்தும், உடைந்தும் முடங்கி விட்டன.
வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முகம் வெளுத்து விட்டார்கள்.
மக்கள் வெளியில் மார்தட்டி அவர்களால்
பேசவே முடிய வில்லை. தொலைக்காட்சிகளில் அரட்டை அடித்தவர்கள் எல்லாம்கூட,
தேர்தல் வெற்றிக்குப் பிறகு தடாலடியாக அவர்களால் பேச முடியவில்லை; ஒன்று
கொடுத்து ஒன்பது அடி வாங்கினார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் ரூபாய்
மதிப்பிழப்பைப் பற்றியோ ஜி.எஸ்.டி. பற்றியோ ஏன் மோடி உட்பட எவராலும் வாய்த்
திறந்து பேச முடியவில்லை. 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் பற்றி
எந்தத் தேர்தல் மேடையிலும் ஏன் மூச்சு விடவில்லை?
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்ற ஒன்றைப்
பிடித்துக் கொண்டு, இராணுவத்தின் செயல்பாட்டை தங்களின் அரசியல் செயல்பாடாக
நீட்டி முழங்கினார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை
வாய்ப்பு என்னாச்சி - அண்ணாச்சி என்று சரமாரியாக எதிர்த் தரப்பிலிருந்து
வினாக்கணைகள் கிளம்பி இடுப்பை முறித்துப் போட்டன.
வெற்றி பெற்றும் மகிழ்ச்சியைத் தமிழ்நாட்டில் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற பாதிப்புக்கு ஆளாகி விட்டனர்.
உரிய முறையில் பதில் சொல்ல முடியாத பரிதாப
நிலைக்குத் தள்ளப்பட்ட பா.ஜ.க.வின் தமிழகத் தலைமை, தொலைக்காட்சி
விவாதங்களில் பா.ஜ.க.வினர் பங்கேற்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டது.
இதற்கு முன்பும்கூட புதிய தலைமுறையில்
ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு இப்படி ஓர் அறிவிப்பு வெளி வந்தது -
தமிழக பிஜேபி தலைமையிடமிருந்து; கொஞ்ச நாள் தாக்குப் பிடித்தனர். எல்லாத்
தொலைக்காட்சிகளும் சகட்டுமேனிக்குப் பிழிந்தெடுத்த நேரத்தில் "சுவற்றுக்
கீரையை வழித்துப் போடடி!" என்ற கணவன் போல வேறு வழியின்றி தாமாகவே வந்து
கதவு தட்டி தொலைக்காட்சி விவாதங்களில் தலை காட்ட ஆரம்பித்தனர்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க.
இருக்கும் திமிரில் அரட்டைக் கச்சேரியே நடத்தினார்கள். தேர்தல் கொடுத்த
பலத்த அடிக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்
பட்டனர்.
இப்பொழுது இன்னொரு வேலையில் இறங்கி
இருக்கின்றனர். தமிழ்நாடு பிஜேபி, சங்பரிவார்க்கு எதிர் நிலையில் எரிமலையாக
அனல் கக்குவதற்குக் காரணம் பெரியார் - திராவிட இயக்கத் தலைமை - திராவிடர்
கழகம் - வீரமணி என்று அறிந்த நிலையில் அவர்களை நோக்கி நான்கு கால்
பாய்ச்சலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய காரணத்தால் வட்டியும், முதலுமாக வாங்கிக் கட்டினர்.
பெரியார் சிலையைச் சிறுமைப்படுத்திய
ஆர்.எஸ்.எஸ். ஆசாமி, சிறையிலிருந்து பிணையில் வந்தாலே போதும் என்பதற்காக
தன்னை மனநோயாளி என்று காட்டி மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரும் நிலைக்குத்
தள்ளப்பட்டார்.
இந்த ஆத்திரத்திற்கு எல்லாம் வடிகாலாக
ஒதுக்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி
அவர்கள்மீதும், அவர்தம் குடும்பத்தினர் மீதும் அக்கப் போர்களையும், பழி
கூறுதலையும், பொய் மூட்டைகளையும் வீசி எறியும் எச்சக்கலை வேலையில்
இறங்கியுள்ளனர்.
வீரமணியின் குடும்பத்தினர் என்னை
சந்தித்துப் பேசினர் என்று ஜெயேந்திர சரஸ்வதி பேட்டிக் கொடுக்கப் போய்
வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் கொடுத்த நொடியில் சமாதானப் புறாவை அனுப்பித்
தப்பிப் பிழைக்கப் பார்த்தார். ஆசாமி மரணம் அடைந்த நிலையில் வழக்கிலிருந்து
உயிர் பிழைத்தார்.
இப்பொழுது அந்த வழியில், குறுக்கு வழியில்
விளம்பரம் பெறுவதற்காக அபாண்டமாகச் சேற்றை வாரி இறைக்கும் இழி தகை
வேலையில் இறங்கியுள்ளனர்.
ராஜாவை எனக்குத் தெரியும். ஆனால்
ராஜாவுக்கு என்னை தெரியாது என்பதுபோல, தி.க. தலைவர்மீது சேற்றை வாரி
இறைத்தால் ஏதோ ஒரு வழியில் விளம்பரம் கிடைக்காதா என்ற கீழ்த்தரமான வேலையில்
பூணூலை முடுக்கிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.
இதுபோலவே விபூதி வீர முத்துசாமிகளும்,
அணுகுண்டு அய்யாவுகளும் 'நிர்வாண' ஆட்டம் போட்டுக் கடைசியில் அடங்கிப்
போனார்கள். அதே ஆசாமி தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு மாலை
அணிவித்து மன்னிப்புக் கேட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு.
இவர்கள் பேசுமொழியில் பதிலடிகொடுக்க வெகு
நேரம் ஆகாது. அதற்கு அளப்பரிய அறிவும் தேவைப்படாது. சமூக வலை தளங்களில்
கழகத் தோழர்களே களத்தில் இறங்கத்தான் வேண்டும். அவர்களின் சாக்கடை நடையில்
அல்ல. அறிவார்ந்த பதிவு செய்திட!
ஓடிப் போய் திரும்பி வந்த சங்கராச்சாரியின் வண்டவாளங் களைத் தண்டவாளத்தில் ஏற்ற முடியாதா?
ஜெயேந்திர சரஸ்வதிபற்றி அனுராதா ரமணன்
என்ன சொன்னார் என்பதைக் கூடுதல் குறைச்சலின்றி கொட்ட முடியாதா? காஞ்சிபுரம்
மச்சேந்திர நாதர் கோயில் குருக்கள் பார்ப்பான் நடத்திய லீலைகளை
வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியாதா? அந்த லீலைகள் நடத்தப்பட்ட
தருணத்தில் மச்சேந்திரன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற வினாவையும்
எழுப்பலாமே!
அவர்கள் வேண்டுமானால் பொய்களை அவிழ்த்துக் கொட்ட வேண்டும். நமக்கோ உண்மைகளை சொல்லவே நேரமில்லை.
சங்கரமடம் போன்ற மூலத்தில் கை
வைத்தால்தான் ஆசன துவாரத்தில் கழு ஏற்றிய மாதிரி இருக்கும். நாகரிகமாக
உண்மையை எடுத்துச் சொல்ல முடியும். இதுவும் ஒரு திருப்பம்தான் சந்திப்போம்.
Monday, July 22, 2019
நான் குப்பை கூட்டவும், கழிப்பறை, சாக்கடை சுத்தம் செய்யவும் எம்.பி. ஆகவில்லை பெண் சாமியார் பிரக்யாசிங் திமிர் பேச்சு
கழிப்பறை யையும், சாக்கடையையும் சுத்தம்
செய்வதற்காக நான் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை என பாரதீய
ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச
மாநிலம் போபால் தொகு தியின் உறுப்பினருமான. பெண் சா மியார் பிரக்யாசிங்
அகம்பாவத்துடன் பேசியுள் ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் செகோர் நகரில்
ஓரிடத்தில் ஆட்கள் புடைசூழ அமர்ந்தி ருக்கும் பிரக்யா சிங், நான் சாக்கடை
அல்லது கழிப்பறை களை சுத்தம் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு தேர்வு
செய்யப்படவில்லை. நான் எதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டேனோ, அந்தப் பணியை
கண்ணியத்துடன் நிறைவேற் றுவேன்'' என்றுள்ளார். அவர் பேசும் அந்த காணொலி
தற்போது வெளியாகியுள்ளது.
தூய்மை பாரத இயக்கத் தில் நாடு முழுவதும்
முன் வந்து பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில்,
அதே கட்சியின் உறுப்பினரான சாமியார் பிரக்யா இவ்வாறு பேசியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...



