Wednesday, June 12, 2019

வரவேற்கத்தக்க சட்ட முன்வரைவு வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையா னது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற் றோரை விட்டு பிரிந்து தனிக் குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள் ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், ஆதரவற்ற வர்களாக தவிக்க விடுகின்ற னர்.
இவ்வாறு வயதான பெற் றோரை முறையாக கவனிக் காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறை தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்து உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரை வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பிள்ளைகளால் கைவிடப் பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற் றால், பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர முடி யாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

கைதிகள் பரிமாற்றச் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும்

ஹாங்காங் கில் கைது செய்யப்படுபவர் களை சீனப் பெருநிலப் பகு திக்கு நாடுகடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று ஹாங் காங் அரசின் தலைவர் கேரீ லாம் தெரிவித்துள்ளார்.
அந்தச் சட்டத்துக்கு ஹாங் காங்கில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரீ லாம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கைதிகள் பரிமாற்றச் சட்ட மசோதா ஹாங்காங் சட்டப் பேரவையில் விரைவில் தாக் கல் செய்யப்படும்.
அந்தச் சட்டம் குறித்து தனியார் துறையினர் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொண்டு, மசோதாவில் சில மாற்றங்க ளைச் செய்துள்ளோம்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய அந்த மசோதா மீதான விவாதம் ஹாங்காங் சட்டப் பேரவையில் புதன் கிழமை மீண்டும் தொடங்கும் எனவும், இந்த மாதத்துக்குள் அது வாக்கெடுப்புக்கு விடப் படும் என்றும் எதிர்பார்க்கப் படுவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
ஹாங்காங்கில் கைது செய் யப்படுபவர்களை நாடுகடத்து வது தொடர்பான புதிய வரை வுச் சட்டத்தின்படி, சீன பெரு நிலப் பகுதி உள்பட ஹாங் காங்குடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொள்ளாத பகுதிகளுக்குக் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை நாடு கடத்த முடியும்.
இதற்கு, ஹாங்காங் முழு வதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர், ஜனநாயக ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ஹாங்காங்கின் முக்கிய நீதி அமைப்புகளான சட்டச் சங்க மும், வழக்குரைஞர்கள் மன்ற மும் குரல் கொடுத்து வரு கின்றன. புதிய சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்க ணக்கா னோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட் டத்துக்குப் பிறகு, ஹாங்காங் கில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டமாக அது இருந்தது.
இந்தச் சூழலில், ஹாங்காங் அரசின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

"பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் '' சார்பில் விழுப்புரம் முதல் இராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஜனநாயக அறப் போராட்டமான மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி தராததை அடுத்து அறப்போராட்டக் குழுவினர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தடைப்பட்டுள்ளதால், இன்று (12.6.2019) நடை பெறுவதாக இருந்த போராட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

பாஜக ஆளும் உ.பி.யில் மூன்றாம் பாலினத்தவர்மீதான அடக்குமுறை

உத்தரப்பிரதேச மாநி லத்தில் காவல் நிலைய வளாகத்தி னுள்  மூன்றாம் பாலினத்தவர்மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டுள்ளனர்.
அடி தாங்காமல் அவர்கள் அல றியபடியே காவல்நிலைய வளாகத் துக்குள் அங்கும் இங்கும் மறைவிடம் தேடி ஓடி ஒளிய முயற்சி செய்யும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தனியார் ஆங்கிலத் தொலைக் காட்சி செய்திகளின் படி, இந்தச் சம்பவம் மீரட்டின் லால் குர்தி காவல்நிலையத்தில் நடந்தது.  மூன் றாம் பாலினத்தவரிடையே கிடைத்த பரிசுகளை பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டது.
அதைக் கட்டுப்படுத்த தடியடி செய்ததாகப் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் நேரில் பார்த்த மற்ற சாட்சிகள் கூறுவதென்னவெனில் மீரட்டில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டபோது அங்கு உள்ள மக்கள் காவல்துறையினருக் குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற காவல்துறையினர் ஒரு குழுவை அழைத்து புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்நிலையம் உள்ளேயே இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட் டதால் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை உயர திகாரி நிதின் திவாரி கூறும்போது, மூன்றாம் பாலினத்தவர்களில்  இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பெரும் இடையூறு விளை வித்தனர். அதனால் காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ய நேர்ந் தது. ஆனால் அதீத பலப்பிரயோக மாக இருந்தால் நிச்சயம் விசாரணை வைக்கப்படும் என்றார்.
மூன்றாம் பாலினத்தவர் ஒருபுறம் சமுகத்தில் சில இடங்களில் மதிக்கப்பட்டு நல்ல முறையில் நடத்தப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் நாடு முழுதும் வன்முறை யைச் சந்தித்து வருவதாகவே சமுக ஆர்வலர்கள் கருதுகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது..

படேல் சிலையில் நடந்த மிகப்பெரிய ஊழலோ ஊழல்!

ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படும் உலகின் மிக உயரமான படேல் சிலை உள்ள வளாகத்தில்  மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே சர்தார் படேல் சிலை நிறுவப் பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இச்சிலை ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதற்காக மணல் அள்ளப்பட்டு நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த மணல் அள்ளும் பணியில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நர்மதா மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் இங்கிருந்து அள்ளப்பட்ட சுமார் 4.5 மெட்ரிக்  டன் எடையுள்ள மணல் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த மணல் திருடப்பட்டது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.
வழக்கமாக இதுபோல வழக்குகள் பதியும்போது உடனடி யாக பெயர் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்படும். ஆனால், தற்போது காவல்துறை நேரடியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயருடன் முதல் தகவல் அறிக்கை தயாரிக்க எண்ணி யுள்ளது.  சிலை தேர்வு முதல் சிலையின் இறுதிப்பணிவரை ரிலை யன்ஸ் மற்றும் எஸ்ஸார், எல் அன் டி என்ற சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ஊழல் நடந்தால் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்று பெறுப்பேற்கவேண்டும். ஆனால், மூன்று நிறுவனங்களுமே மோடியின் மிக நெருங்கிய நண்பர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் ஆகும். ஆகவே, இந்த ஊழல் விவகாரம் சில நாட்களில் காணாமல் போய்விடும்'' என்று புகார் அளித்த பழங்குடியின சமுகத் தலைவர்கள் கூறுகின்றனர்.

Tuesday, June 11, 2019

மார்பகப் புற்றுநோய்

புற்றுநோய்களில் ஒப்பீட்டு அளவில் ஆபத்து குறைந்ததாகக் கருதப்படுவது மார்பகப் புற்றுநோய்.
ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால், சில வகை மார்பகப் புற்றுநோய்கள் உயிரிழப்பை ஏற்படுத்திவிடக்கூடியவை.
இந்த வகை புற்றுநோயாளிகளும் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக் கிறது. சில பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, மார்பகப் புற்றுநோயாளிகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
Ribociclib  என்ற மருந்து புற்றுநோய் அணுக்களைப் பாதிக்கச் செய்கிறது. இந்த மருந்துடன் ஹார்மோன் சிகிச்சையையும் சேர்த்துக் கொடுக்கும்போது, முற்றிய நிலையில் உள்ள மார்பகப் புற்று நோயாளிகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஹார்மோன் சிகிச்சையை மட்டும் கொடுத்தபோது இருந்ததைவிட, Ribociclib மருந்தையும் சேர்த்துக் கொடுத்தபோது, உயிரிழக்கும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் புற்றுநோயியல் துறை ஆராய்ச்சியாளர்கள்.
இந்தச் செய்தி மார்பகப் புற்றுநோயாளி களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
சாராவின் ஆராய்ச்சி
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், மருத்துவர் சாரா ஹர்விட்ஸ் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
மெனோபாஸ் கட்டத்துக்கு முன்புள்ள, 59 வயதுக்குக் கீழுள்ள 672 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் ஹார்மோன் சிகிச்சை வழங்கப் பட்டது. இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டும் Ribociclib மருந்தும் சேர்த்துக் கொடுக்கப் பட்டது.
42 மாதங்களுக்குப் பிறகு மருந்தும் ஹார்மோன் சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்பட்ட பெண்களில் 70% பேர் உயிருடன் இருக்கிறார்கள். ஹார்மோன் சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்ட பெண்களில் 46% பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
“மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்காக, முதல் முறை நிகழ்த்தப் பட்ட வாழ்நாள் நீட்டிப்பு ஆராய்ச்சி இதுதான்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பது எல்லோருக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
Ribociclib  மருந்தும் ஹார்மோன் சிகிச்சையும்  எடுத்துக்கொண்ட பெண்களுக்கு 23.8 மாதங்கள் வரை புற்றுநோய் அணுக்கள் பரவவில்லை.
ஹார்மோன் சிகிச்சையும் மட்டும் எடுத்துக்கொண்ட பெண்களுக்கு 13 மாதங்களிலேயே புற்றுநோய் அணுக்கள் பரவ ஆரம்பித்துவிட்டன” என்கிறார் சாரா ஹர்விட்ஸ்.
முற்றிய நிலையில் உள்ள மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இந்த முதல் கட்ட ஆராய்ச்சி முடிவு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது.
எதிர்காலத்தில் இன்னும் முன்னேற்றம் நிகழக்கூடிய சாத்தியம் வாய்த்திருக்கிறது.

காலாவதியான மருந்துகளால் என்ன நிகழும்!

பலரும் நினைப்பது போல நாள் கடந்த மருந்தை உட்கொள்வதால், அது விஷமாவதில்லை.  உயிரையும் மாய்ப்ப தில்லை. இந்த மருந்துகளை உட் கொள்ளும்போது நான்கு முக்கியச் சம்பவங்களை நாம் எதிர்நோக்கலாம்.
1) மருந்தின் செயல்படும் திறன் குறைந்து போகும். உதாரணத்துக்கு வலிப்பு மருந்துகளை உட்கொண்டால், அவை செயல் இழப்பதால், நோயாளிக்கு வலிப்பு ஏற்படும் அல்லது வலிப்பு வருவதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.
2) காலம் கடந்தும் சில மருந்துகளின் செயல்பாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறையாததால், நோயாளிக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
3) மிகவும் அபூர்வமாகச் சில மருந்துகள் மாற்றம் அடைவதால்,  உடல் பாதிக்கப்படும்.  உதாரணத்துக்குக் காலாவதியான டெட்ராசைக்கிளின் மருந்தில் பல்வேறு ரசாயன மாற்றங் களும் ஏற்படுவதால், அது சிறுநீரகத்தைப் பாதித்துவிடும்.  ஆனால், அது கூட இப்போது கெடாதவாறு தயாரிக்கப் படுகிறது.
4) நாட்பட்ட நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அவற்றின் செயல்பாடு குறைந்து விடுவதால், பின்னாளில் இதே மருந்துகளுக்கு நுண்ணுயிர்கள் எளிதில் அழிவதில்லை. அதே மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனைப் (antibiotic resistance) பெற்றுவிடும். அதாவது, இதே மருந்துகள் வருங்காலத்தில் பயனில் லாமல் போய்விடும்.
என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கம், காலாவதியான மருந் துகள் விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உரிமம் பெற்ற மருந்துக்கடைகள்  ஓ. டி. சி எனப்படும் மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும். நோயாளிகளுக்கு ஓ. டி. சி  மருந்துகளை மட்டுமே கொடுப்பதுடன், அவை விலை குறைவாக இருப்பதால் குறைந் தது 10 மருந்துகளாகத் தேதியுடன் கொடுக்க வேண்டும்.
காலாவதியான மருந்துகளை மொத்த மருந்து விற்பனையாளரிடம் கொடுத்து, அவர்கள் மூலம் மருந்து தயாரிப்பாளர்களிடம் சமர்ப்பித்து அவற்றை முறையாக அழிக்க வேண்டும். இது குறித்துப் பதிவு செய்து பத்திரப் படுத்தி வைக்க வேண்டும். மாசுபட்ட காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வேதிப் பொருள் மிகுந்த உணவை உட்கொண்டு நோய்களுடன் வரும் மக்கள் மருந்து களையாவது சரியாகத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நோய்க்கான மருந்தே நோயை உண்டாக்காமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.
மருந்துகளின் ஆயுள்
மருந்துகள் பெரும்பாலும் 2-5 வருடங்கள்வரைகூட காலாவதியான தேதியைக் கொண்டிருக்குமாறு தயாரிக் கப்படுகின்றன.  இருந்தாலும், அவை மேலும் பல வருடங்கள் பலன் தரக்கூடிய வையாகவும், பயன் அளிக்கக்கூடிய வையாகவும் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆராய்ச்சிகளும் இதை யேதான் நிரூபிக்கின்றன. சுற்றுப்புற ஈரப்பதம், தட்பவெப்பம், காற்று போன்ற பல்வேறு காரணங்களால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
எந்த மருந்துகள் எளிதில் கெட்டு விடும்?
* திரவ மருந்துகள்,
* நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்,
* இன்சுலின் ஊசி மருந்து,
* நைட்ரோகிளிசரின் மருந்து
* குழந்தைகளுக்கான சிரப்கள்
* பொடியாகத் தயாரிக்கப் பட்டுத் திரவமாகக் கலந்து தரும் மருந்துகள்
* சொட்டு மருந்துகள் (கண் சொட்டு மருந்து, காது சொட்டு மருந்து) எளிதில் கெட்டுவிடும்.
* ஊசி மருந்துகள்
செய்ய வேண்டியது என்ன?
* மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கும்போது, காலாவதியாகும் தேதியை மறக்காமல் பார்த்து வாங்க வேண்டும்.
* தலைவலி,  காய்ச்சல் என வாங்கும் மருந்து களைக்கூட 10 மாத்திரையாக வாங்குவது நல்லது.
* தேதி சரிவரத் தெரியவில்லை என்றால் அதைக் கொடுத்துவிட்டு வேறு மருந்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.
* மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேதிகளை டைரியில் குறித்துவைத்துக்கொள்வது நல்லது.
* காலாவதியான மருந்துகளை முறையாகச் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். அழிக்க வேண்டும்.
* பெரும்பாலான மருந்துகளை வெளியில் வைத்திருந்தாலும், வெயில் படாமல், வெப்பம் படாமல் பாது காப்பது நல்லது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...