Wednesday, May 9, 2018

'நீட்'டை ஒழிக்கும் வரை தொடர் போராட்டங்கள்! போராட்டங்கள்!!

மாநில பாடத் திட்டங்களில் படிக்கும் பெரும்பான்மை மாணவர்களைப் புறக்கணித்து விட்டு சிறுபான்மை எண்ணிக்கையில் படிக்கும் சி.பி.எஸ்.. பாடத் திட்டத்தில் 'நீட்' என்பது மோசடியே!

தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்திற்கு இடமில்லை; தமிழ்நாட்டின் இந்தக் கல்விக் கொள்கைக்கு மாறாக மும்மொழி திட்ட கொள்கையுடைய சிபிஎஸ்இ---யின் பாடத்திட்டங்களில் 'நீட்' தேர்வு நடத்துவதும்தேர்வை நடத்திட சி.பி.எஸ்..யிடம் பொறுப்பை ஒப்படைப்பதும் திட்டமிட்ட சதியே

'நீட்'டை ஒழிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள சமூகநீதி அறிக்கை வருமாறு:
'நீட்' தேர்வு என்பது, பார்ப்பன மேலாதிக்க ஜாதியினர் கல்வியை மீண்டும் மனுதர்ம யுகத்திற்கே கொண்டு செல்லப்படுவதற்கான பா... அரசின் திட்டமிட்ட ஏற்பாடு ஆகும்.
நரபலி! நரபலி!! நரபலி!!!
இதனை உச்சநீதிமன்றத்தையே கருவியாகப் பயன்படுத்தி, சமூகநீதியை பலிபீடத்தில் நிறுத்தி, அதனை "காவு" வாங்கி வருவதோடு, அதன் நீட்சி தாழ்த்தப்பட்ட சமூக மருத்துவ கனவாளராகிய அனிதா முதல், ஒடுக்கப்பட்ட சமூகப் பெற்றோர்கள் மூவரையும், நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கும், மய்யங்களுக்கும் அலைக்கழித்ததன் விளைவாக "நரபலி"யை மேலும் மேலும் கொடுத்துள்ளோம்.
விளக்குடி, சிவகங்கை அருகே சிங்கம்புணரி மற்றும் புதுச்சேரி பெற்றோர்கள் தங்களின் (இருபால்) பிள்ளைகளை டாக்டர்களாக்கிப் பார்க்க விரும்பி உயிர்ப்பலியை 'நீட்'டின் கோரப் பசிக்கு உணவாக அளித்துள்ள கொடுமை, மனிதாபிமானம் உள்ள அனைவரது நெஞ்சங்களையும் பிளக்கவே செய்கிறது.
பொறுப்பு மத்திய - மாநில அரசுகளே!
இதற்கு தற்போதுள்ள மத்திய அரசும், மாநில அரசுமே முழு பொறுப்பேற்க வேண்டியவர்களும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களும் ஆவார்கள்; எப்படி?
1. தமிழ்நாட்டில் கடந்த சுமார் 1லு ஆண்டுகளுக்கு முன்னால் சட்டமன்றத்தில் 'நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரும், (எதிர்க் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு நீட் தேர்வு விதி விலக்கு மசோதாக்கள் இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறாமலும் - அல்லது தகுந்த காரணம் காட்டி நிராகரிக்கப்பட முடியாமலும் - எங்கிருக்கிறது என்று அறிய முடியாத - வெட்கங் கெட்ட நிலைதான்!
தமிழ்நாடு அரசும், ஆளுங் கட்சியின் சுமார் 50 எம்.பி.க்களும் இருந்துமா இந்நிலை?
இந்த விலக்குக் கோருவது, மத்திய அரசு, மாநில அரசிற்குக் காட்டும் சலுகையோ, போடும் பிச்சையோ அல்ல! அரசியல் சட்டப்படி நமக்குள்ள உரிமை! உரிமை!!
தமிழ்நாட்டின் இரு மசோதாக்களின் நிலை என்ன?
கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பாதிக்கா வண்ணம் இந்த ஆண்டிற்காவது விலக்குத் தரும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அன்றைய வர்த்தக அமைச்சர் (இன்றைய பாதுகாப்பமைச்சர்) திருமதி. நிர்மலா சீத்தாராமன் கொடுத்த வாக்குறுதியை மெய்யெனக் கருதி, தமிழ்நாட்டு மருத்துவத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் டில்லிக்குச் சென்று காவடித் தூக்கி, பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினரே!
இந்த லட்சணத்தில் தமிழ்நாடு 'நீட்' தேர்வினை எதிர்க்கிறது என்று ஒரு புறம் கூறிக் கொண்டே, மற்றொருபுறம் 'நீட்' தேர்வு பயிற்சி மய்யங்கள் என்ற பெயரால், மாணவர்கள் - பெற்றோரின் மத்தியில் ஒரு மறைமுக ஏற்பு மனப்போக்கையே உருவாக்கி, எதிர்ப்பினை நீர்த்துப் போக உதவுகின்ற வகையில்தான் இன்றுவரை "வித்தைகளை" நடத்தி வருகின்றனர்!
தமிழக  மாணவர்களைப் பழி வாங்கும் கெட்ட நோக்கம்!
துவக்கத்திலிருந்தே 'நீட்' தேர்வு எழுதச் சென்ற அத்துணை இருபால் மாணவர்களும் மிகப் பெரும் அவமானங்களைச் சுமந்து, மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்குமே ஆளாகினரே! இப்போது நடந்துள்ள  தேர்வுக்காக வெளி மாநிலத்திற்கு நம் பிள்ளைகள் - அதுவும் ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநில மய்யங்களுக்குச் செல்ல வைப்பது அநீதியல்லவா! வேண்டுமென்றே தமிழக மாணவர்களைப் பழி வாங்கும் கெட்ட நோக்கத்தோடு தானே இப்படி சி.பி. எஸ்.. துறை நடந்து கொள்ளுகிறது - மறுக்க முடியுமா?
இதற்கு உச்சநீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பும் - 'அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்' என்ற பழமொழிக்கொப்ப, தேர்வுக்கு மூன்று நாள் இருக்கும்போது - அறிவிக்கப்பட்ட வேறு மாநிலங்களுக்குச் சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என்ற தீர்ப்பு மூலம் மாணவர்கள் அலைக்கழிப்பு என்ற "விஸ்வரூபம்" எடுக்கச் செய்துள்ளது.
பொதுப் பட்டியல் என்றால் என்ன?
கல்வி என்பது மத்திய அரசின் ஏகபோக அதிகாரத்துறையா? மாநில அரசுப் பட்டியலில் (State List)  முன்பு இருந்த கல்வி 1976இல் ஒத்திசைவுப்  பட்டியலுக்கு (Concurrent List) ஒரு தலைப்பட்சமாக எடுத்துச் செல்லப்பட்டாலும் - ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் சி.பி.எஸ்.. (CBSE) நிர்வாகம் தமிழ் மாநிலத்தில் "தனிக்காட்டு ராஜ்யம்" நடத்தி வருகிறது.
இது ஒருவகை நவீன மனுவின் வர்ண தரும ஏற்பாடு  தானே! அதோடு அதில் வர்க்க ஆதிக்கமும் புகுந்து விளையாடுகிறது!
சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர், பிர்மாவின்தலையில் பிறந்தவன், மற்ற பெரும்பான்மையினர் "சூத்திரர்கள் பிர்மாவின் காலிலும், அதற்கும் வெளியே பிறந்தவர்கள் "பஞ்சமர்" என்றும் ஆக்கியுள்ளதுபோல் - மாநிலத்தில் 10 அல்லது 15 விழுக்காடு உள்ள மாணவர்கள் சி.பி.எஸ்.. பள்ளிப் பாடத்தில் படிக்கின்றனர். 80 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் மற்றும் செக்கண்டரி பள்ளிப் பாடமும் படிக்கும் நிலையில் இந்தப் பெரும்பான்மையினர் அலட்சியப்படுத்தப்பட்டு, சி.பி.எஸ்.. பாடத்  திட்டத்திலிருந்து 'நீட்' தேர்வுக்கான கேள்விகள் பெரிதும் என்றால் இதைவிட ஒரு பச்சை அநியாயம், திட்டமிட்ட சதி வேறு  ஒன்று இருக்க முடியுமா?
சி.பி.எஸ்.. தகுதி திறமை இது தானா?
தகுதி, திறமைக்கு அடையாளம் தாங்கள்தான் என்று பீற்றிக் கொள்ளும் சி.பி.எஸ்.-யின் தகுதிநிர்வாகத் திறமையின் லட்சணம் நன்றாக விளங்கிவிட்டதே, ஊர் சிரிக்கிறதே! சர்வீஸ் கமிஷன் தேர்வில் எழுதும் 12 லட்சம் பேர்களுக்கு தேர்வு மய்யங்கள் அமைத்த தமிழ்நாட்டிற்கு  அதிகபட்சம் சுமார் ஒரு லட்சம் பேர் எழுதிட தேர்வு மய்யங்களை ஏற்பாடு செய்ய முடியாதா என்று தமிழ்நாடு அமைச்சர் இப்போது கேள்வி கேட்கிறார்!
இதை உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்குரைஞர் மூலம் கேட்டிருக்க வேண்டாமா? இங்குதான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியிருக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கவா?
தேர்வு நடத்துவதிலும் குளறுபடி! இந்தியில் கேள்வித் தாள்கள் சில ஊர்களில் கொடுக்கப்பட்டு, 5 மணி நேர தாமதமாம்! பிள்ளைகள் 5 நிமிடம் தாமதம் என்றால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் நிலையில், இப்படி 5 மணி நேர அலைக்கழிப்புதான் 'அவாளின்' தனித் 'தகுதி'  'திறமையா?'
சி.பி.எஸ்.. பள்ளிகளுக்கு இடம் இல்லை என்று துணிந்து கூற வேண்டும் தமிழக அரசு. தமிழ்நாடு அரசின் 50 ஆண்டு கால கொள்கை  இரு மொழித் திட்டமாகும். இந்நிலையில் மும்மொழித் திட்டம்  உள்ளதாலும், 'நீட்' தேர்வு பல குளறுபடிகளும், ஊழலும் செய்ததோடு, கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகளின் வர்த்தக களமாக்கிடும் பயிற்சி மய்யங்கள் கொழுக்கவே  உருவாக்கப்பட்டது என்பதால் 'நீட்' தேர்வை எதிர்த்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு விலக்குப் பொறுவதற்காக  தொடர் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் - ஒத்த கருத்துள்ள அனைவராலும்!
புதுவை 'ஜிப்மர்' (Jipmer) டில்லி எயிம்ஸ் (AIIMS)  இவைகளுக்கு மட்டும் விலக்காம்!
இது என்ன இரட்டை அளவுகோல்!
அடுத்தாண்டு 'நீட்' கிடையாது என்று சொல்லும்   துணிவு உண்டா?
"அடுத்த ஆண்டு தேர்வு மய்யங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கும்" என்று தமிழக அரசோ, அமைச்சர்களோ கூறுவதைவிட, அடுத்த ஆண்டு முதலே 'நீட்' தேர்வே இருக்காது  -அதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றே தீருவோம் என்றல்லவா அமைச்சர்கள் கூற வேண்டும். அப்படிக் கூறத் துணிவு இல்லாதது ஏன்?
போராட்டம் தொடரட்டும்! தொடரட்டும்!
உள்ளத்தில் உறுதி இருந்தால் - நிச்சயம் கூற முடியும். பிடிவாதம் காட்டிடும் மத்திய பா... அரசுக்கு வரும் 2019 தேர்தலில்  அல்லது எப்போது தேர்தல் வந்தாலும், அத்தகைய ஆட்சிக்கும், அவர்களுக்குத் துணையான பொம்மாலாட்ட தமிழ்நாடு அரசுக்கும் தமிழக மக்கள் விடை கொடுத்து வீட்டுக்கனுப்புவார்கள் என்பது உறுதியிலும் உறுதி!
போராட்டம் தொடரட்டும்! தொடரட்டும்!!

கி. வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
8.5.2018

Friday, April 27, 2018

பா.ஜ.க. என்றால் பச்சைப் பாசிசமே!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகள் பங்கேற்றது - குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜ.க. ஆதரவு வழக்குரைஞர்கள் போராட்டம் மேற் கொண்டது - பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசா ரணையில் ஈடுபட்ட அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இவ்வழக்கில் மிகவும் தீவிரமாகவும், உன்னிப்பாகவும் செயல்பட்ட காவல்துறையின் பெண் அதிகாரி ஸ்வேதம் பரி சர்மா, குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் இருந்து, அவர்களை சிறையில் அடைப்பது வரையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். விசாரணையின் போது அவர் எதிர்கொண்ட பிரச் சினைகள் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
செய்தியாளர்:- இந்த வழக்கை நீங்கள் வெளிக் கொண்டு வந்து உள்ளீர்கள், குற்றவாளிகள் சிறையில் உள்ளார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து இலக்காக் கப்பட்டு வருகிறீர்கள். இது உங்களை எப்படி பாதிக்கிறது?
ஸ்வேதாம்பரி:- 21-ஆம் நூற்றாண்டிலும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்மையில் மிகவும் வெட்கக்கேடானது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பதுதான் பிரதமர் மோடியின் முழக்கமாக உள்ளது, ஆனால் படித்த பெண், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதிக்காகப் போராடும்போது அவமதிக்கிறார்கள். என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், நீதித்துறையின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
செய்தியாளர்: வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவது எவ்வளவு கடினமானதாக இருந்தது?
ஸ்வேதாம்பரி:-இதுபோன்ற வழக்குகளில் ஒருநபரால் மட்டும் உண்மையை வெளிக்கொண்டு வருவது என்பது கிடையாது. எங்களுடைய டிஜிபி எஸ்.பி. வாயித்   முக்கிய மான பணியை மேற்கொண்டார். சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்மீது நம்பிக்கை கொண்டு இருந்தார். எங்களுடைய டிஎஸ்பியின் வழிகாட்டுதலின்படி செயல் பட்டோம். எங்களுடைய குழுவில் 6 பேர் இடம்பெற்று இருந்தோம். எஸ்எஸ்பி கண்காணித்தார். இந்த வழக்கைத் தீர்ப்பதில் ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவு இரவு, பகலாகப் பணியாற்றியது. நாங்கள் சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கச் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானோம்.  நாங்கள் இந்த வழக்கில் 72 நாட்களில் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினையை எதிர்கொண்டோம். பாலியல் வன்முறை குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய தேசியக்கொடியை அசைத்தது என்னை ஓர் அதிகாரியாக மிகவும் வேதனையடையச் செய்தது. மக்கள் எங்களுடன் பேசுவதற்கு அச்சப் பட்டார்கள். அவர்களை தைரியப்படுத்த முயற்சி செய்தோம், குற்றம் செய்யாதவர்கள் பயப்பட தேவை யில்லை என அவர்களுக்கு ஊக்கமளித்தோம். செய்தியாளர்:- இந்த வழக்கு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது? ஸ்வேதாம்பரி:- எங்களுடைய முதல்கட்ட குற்றப் பத்திரிக்கை தயாராகிவிட்டது, துணை குற்றப்பத்திரிக்கை ஒன்று நிலுவையில் உள்ளது. எங்களுடைய வழக்கு மிகவும் உறுதியாக உள்ளது. வாக்குமூலங்கள் அடிப் படையில் மட்டும் கிடையாது, அறிவியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. செய்தியாளர்:-  இந்த வழக்கில் சிலர் மத சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடுகிறார்கள். இது உங்களை எப்படி உணரச்செய்கிறது?
ஸ்வேதாம்பரி:- நான் டோக்ரா வம்சத்தை சார்ந்தவள். எல்லா மகளும் எல்லோருக்கும் மகள்தான் என்று சொல்வோம். நாங்கள் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள். சிறுமியின் மதநம்பிக்கை பற்றி நான் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மனிதராக இருப்போம், பின்னர் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளார். காவல்துறை அதிகாரியின் மேற்கண்ட கருத்துக்களும், தகவல்களும் பிஜேபி கூட்டணி ஆளும் ஜம்மு காஷ்மீரின் நிலையைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பாலியல் வன்முறைக்  கும்பலுக்குத் தேசியக் கொடி அசைத்து மரியாதையாம்! இதைவிடத் தேசியக் கொடியை எப்படிதான் அவமதிக்க முடியும்?
பச்சைப் பாசிசத்தின் மறுபெயரே பா.ஜ.க. - இந்துத்துவா எச்சரிக்கை.
இந்தச் சூழலில் துணிவாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்களே

உலகப் புத்தக நாள்

உலக புத்தக தினம் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அய்ரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி, வரலாறுகள் பற்றி அறிந்து விழிப்புணர்வு பெறுவதற்குப் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங் களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நடப்புகளில் நூல்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, எது தெரியுமா? ஒரு நூல் மனிதருக்கு நன்மை தருமாயின் அந்த நன்மையினால் பாதிக்கப்படும் கூட்டம் தனக்கென்று சில பொய்யான கருத்துக்களைப் பரப்பி அதையே மெய்யெனச் சொல்லிவரும்.    இன்றைய வேதம், புராணம் மற்றும் மேற்கத்திய மத நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகக் கிளம்பின.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த எழுச்சியின் காரணமாக மக்கள் மூடநம்பிக்கை இருளிலிருந்து விலகிப் புத்துணர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் மக்கள் அறிவுடைமை மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வைப் பெற்றனர். இதற்கு முக்கிய காரணம் பகுத்தறிவுக் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எளிய மொழியில் மக்களிடையே அதிகம் பரவியதுதான்.  இன்று கூட மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் சடங்குகளால் எந்த ஒரு நன்மையுமில்லை என்ற சொல் உள்ளதை காண்கிறோம், அரிட்டாபட்டியில் பவுத்த துறவிகள் சங்கம் ஒன்று முன்பு இருந்ததை பல ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.  இதன்படி அப்போதைய அறிவார்ந்த நூல்கள் சமய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்து வந்தன. குறள் 2500 ஆண்டுகளுக்குமுன் இதற்காகக் குரல் கொடுத்தது. அறிவார்ந்த சமூகம் உருவாவதைத் தடுத்து நிறுத்த பொய்களைக் கூறும்  புனைச் சுருட்டுகள் மதத்தின் முகத் திரையோடு நூல்களாக வெளி வரத் தொடங்கின. இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவார்ந்த நூல்கள் அழிக்கப்பட்டன.  ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் அந்த நூல்கள் அழித்தொழிக்கப்பட்டன. நூல்களை எழுதியவர்கள் சாகடிக்கப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் பவுத்தம் அழிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாளாந்தா பல்கலைக் கழகம் எரியூட்டப்படவில்லையா?
இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தீயூட்டப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலும் அறிவியல் நூல்களை எழுதியவர்கள்  தீக்கிரையாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர் - தூக்கிலிடப்பட்டனர். ஆனால் மதநூல்களின் கருத்துக்களைப் பரப்பியவர்களுக்கு புதிதாக கண்டுபிடிக் கப்பட்ட தீவுகள் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டன. அவர்களின் நினைவாக பல நகரங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதுமுண்டு. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை மீண்டும் ஒரு கற்காலத்திற்கு நாடு சென்றுகொண்டு இருக்கிறது. பகுத்தறிவு கருத்துக்களை தொடர்ந்து எழுதிவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கொல்லப்படு கின்றனர். அறிவார்ந்த நூல்கள் தேடித்தேடி அழிக்கப் படுகின்றன. ஆளும் அரசியல்தலைவர்கள் மடமைக்குள் ளாக்கும் நூல்களை மக்களிடையே பரப்பும் செயல்களைச் செய்கின்றனர்.  இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் கொண்டாடும் நோக்கமே இந்தியாவில் சிதைந்து வருகிறது.
தந்தை பெரியாரோ பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் கண்டார். இலண்டன் ஆர்.பி.ஏ. வெளியிட்ட பகுத்தறிவு நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக  மார்க்ஸ் - எங்கல்ஸ் அறிக்கையை மொழி பெயர்த்து குடிஅரசில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனம் இந்த நூல் வெளியீட்டில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்த நிறுவனம்  வெளியிடும் நூல்கள் பொருளாதார லாப நோக்கம் கொண்டவையல்ல; இன்னும் சொல்லப் போனால் இந்தளவுக்கு மலிவாக யாரும் விற்பதில்லை.
தந்தை பெரியாரின் நூல்கள் பல மொழிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. நூல்கள் பரப்புதலை ஓர் இயக்கமாகவே இது நடத்தி வருகிறது. மேலும் விரிவாக்கத் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக்கண்காட்சிகளில் எல்லாம் அரங்கங்களை வாடகைக்கு எடுத்து இந்நூல்கள் வெகு மக்களைச் சென்றடையச் செய்வதில் வேகம் காட்டி வருகிறது.
புத்தகச் சந்தைகளையும்  நடத்தி வருகிறது. நூல்கள் வாசிப்பைப் பெருக்கி - பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சுவாசிக்கச் செய்வோம்.


உலகப் புத்தக நாளில் இந்த உன்னத உறுதிமொழியை மேற்கொள்வோம்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...