Thursday, November 29, 2012

ஹிந்து தர்மாவைக் காப்பாற்றுகிறார்களாம்!


- மின்சாரம்
பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?
அவர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டார்கள். அவர்களிடையே எவ் வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன!
முனியாண்டி ஓட்டலில் மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள் _ தண்ணி அடிக்கிறார்கள்; கஞ்சா அடிக்கிறார்கள் என்று சொல்லுவதெல்லாம் மாற்றமா?
மாட்டு நாக்கைத் தேடி வாங்கி சாப்பிடும் சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூட பார்ப்பனீயத் தன்மையைக் கட்டிக் காப்பதிலும், முட்டுக் கொடுப் பதிலும் முப்புரி நூலை முறுக்கிக் கொண்டு முன் வரிசையில் தானே நின்றிருக்கிறார்.
பல்கலைக் கழகத்திலே தங்க மெடல் வாங்கிய கே.ஆர். நாராயணன் பட்டுச் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலை கொடுக்க முன் வரவில்லையே! மாறாகக் கிளார்க்கு வேலை இருக்கிறது _ என்ன போறீயா என்று கேட்டவர்தானே?
குடிஅரசு தலைவரான நிலையில் இதுபற்றிக் கூறிப் புலம்பினாரே கே.ஆர். நாராயணன்.
வலைத் தளத்தில் ஒரு செய்தி! சென்னையைச் சேர்ந்த நாகராசன் என்ற ஒரு பார்ப்பனர்; அவர் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்து, மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரலைப் படித்துத் திருந்தி விட்டாராம். (அரைகுறை ஆசாமி!)
என்ன திருத்தம்? அங்கேதான் சமாச்சாரமே சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது.
நாகராஜனின் மகள் -வைஷ்ணவி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் கட்டி இருக்கிறார்கள். பிள்ளையாண் டானுக்கும், பெண்ணுக்கும் இடைப் பட்ட வயது ஒன்றும் அதிகம் இல்லை _  பத்தே பத்து தானாம்!
சென்னையில் படித்த பெண்;  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு _ பள்ளித் தலைமை ஆசிரியை நல்லா படிக்கிற பெண்ணுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் என்று கேட்டி ருக்கிறார்.
இல்லை; இல்லை; கல்யாணத்துப் பிறகும் கூட எங்கள் பெண் படிப்பாள் என்று உத்தரவாதம் கொடுக்க, தலைமை ஆசிரியையும் நம்பி ஆசீர் வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்!
பெண்ணின் தாயார் சொல்கிறார் கேண்மின்! சிட்டியில கல்யாணப் பண்ணினா பிரச்சினை ஆகுமுன்னு கிராமத்திலே பண்ணினோம். அந்த நாள் கல்யாணம் பெரியவர் எப்படி சாஸ்திர வார்தமா பண்ணச் சொன் னாளோ அதே மாதிரி நடந்தது விவாகம் என்றார்.
பெண்ணின் தோப்பனாரோ கல்யாணம் சத்தியமங்கலத்தில் நடந்தது என்று கூறுகிறார்.
காஞ்சி  பெரியவாள் கூறியபடி நடத்தினார்களாம். ஹிந்து தர்மாவை கடைப்பிடிப்பதற்காகவே இப்படி செய்தார்களாம்!
பார்ப்பனர்கள் என்னவோ திருந்தி விட்டனர் என்று பார்ப்பனர்களைவிட பத்து மடங்கு அதிகம் பாய்ந்து பார்ப்பனர் அல்லாதார் சிலர் பசப்பு கிறார்களே _ இந்தக் குழந்தைத் திரு மணத்துக்கு என்ன சமாதானம் சொல்லுவார்கள்?
ஹிந்து தர்மாவைக் காப்பாற்ற இவ்வாறு செய்தார்களாம். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்... ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி கவலைப்படுகிறார் களே தவிர சட்டத்தை மலம் துடைக்கும் காகிதமாக அல்லவா கசக்கி வீசுகிறார்கள்?
பெண்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி எல்லாம் கூச்சல் போட் டார்கள்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்து சமூகமே கெட்டு விடும்; பெண் களுக்கு 10,12 வயதுக்கு முன்னமையே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத் திற்குப் பயப்படுவோமா என்று வயது சம்மதக் குழுவின் முன் சாட்சியம் அளித்தாரே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.
இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு
இந்து ஏடு வேடிக்கையான வெண் டைக்காய், விளக்கெண்ணெய் பாஷ்யம் செய்தது.
இதுகுறித்து திராவிடன் ஏடு மூக்கை உடைக்கும் வண்ணம் பதிலடி கொடுத்தது.
இந்து பத்திரிகையில்  10 வயதுப் பெண்ணோ அல்லது 12 வயதுப் பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத் திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே. நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனயே! இந்தக் காலத்தில்கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமோ? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படு வதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்குள் விட்டுக் கதவு சாத்து கின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.
இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக் குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது. (திராவிடன் 13.03.1928 பக்கம் 7)
என்னதான் பார்ப்பனர்கள் படித் திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும், தங்களின் பாசி பிடித்த பார்ப்பனீய ஆபாச கலாச்சாரத்திலிருந்து வெளியேறிட விரும்புவதில்லை.
எடுத்துக்காட்டாக திருவாளர் சோ. ராமசாமி அய்யரை எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை மனுதர்ம சாஸ்திரத்திற்கு முட்டுக் கொடுத்து எழுதி எழுதி மாய்கிறார்.
அந்த மனுதர்மம் என்ன கூறு கிறது? நாம் கூறினால் நமக்கு ஒரு முத்திரையைக் குத்தி விடுவார்கள் மறைந்த காஞ்சி மகாப் பெரியவாள் என்று மகாத்மியம் பேசுவார்களே, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அவரின் அத்தியந்த சீடர் அன்னியோன்யம் என்று சொல்லுவார்களே _ அந்த அளவுக்குப் பாசக் கயிற்றால் பிணை யப்பட்டவரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
நக்கீரன் இதழில்  எழுதிய  எங்கே போகிறது இந்து மதம்? என்ற தொடர் பெரிய நூலாகவே வெளி வந்துள்ளது.
பால்ய திருமணம் குறித்து மனுகூறுவதை அவரே விசனப்பட்டு எழுதியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதற்குக்கூட, எழுதுவதற்குக் கூட பேனாமுனை வெட்கப்படுகிறது.
இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?
மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...
இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என்  பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.
அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது என்று எழுதியிருப்பவர் விடுதலை ஆசிரியர் அல்லர்; மறைந்த மகா பெரியவாளின்  அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார் _ நினைவில் வையுங்கள்!
பார்ப்பனர்களின் கூவம் கலாச்சாரத்துக்கு மேலும் என்ன சாட்சியம் வேண்டும்?
பத்தாம் வகுப்பில் படித்த பெண்ணை சத்தியமங்கலத்துக்கு அழைத்துச் சென்று அய்ந்து நாள்கள் கல்யாணம் நடத்தியுள்ளனர் - பெரிய சங்கராச்சாரியார் சொன்னதுக்கேற்ப நடத்தி இருக்கின்றனர். ஹிந்து தர்மாவைக் கடைபிடிப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார்களாம். பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பதில் உங்கள் முடிவுக்கே!
சட்டம் என்ன செய்கிறது?

15 வயது பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீடுகளிலும் பால்ய கல்யாணங்கள் இன்றும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அரசு சட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பானேன்? பார்ப்பனர் சமாச்சாரம் என்றால் சட்டம்கூட பதுங்குக் குழிக்குப் போய் விடுமோ!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, November 28, 2012

கார்த்திகைத் தீபமா?


இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அது சடங்குகளின் - பண்டிகைகளின் குவியல். மனிதனின் அறிவைப் பாழ்படுத்துவதோடு நின்று விடாது; மனிதன் கடும் உழைப்பால் ஈட்டிய பொருளையும் சுரண்டக் கூடியதாகும்.
சித்திரை - தமிழ் வருஷப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, இராம நவமி, ஆடி மாதம் பூர நட்சத்திரம் விழா, ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி புரட்டாசி, நவராத்திரி (ஒன்பது நாள் கூத்து)
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி இன்னோரன்ன... புரட்டாசி சனி (4 சனிக்கிழமை களிலும் விரதம்) மகாளய அமாவாசை அய்ப்பசி - தீபாவளி கந்தர்சஷ்டி கார்த்திகை மாதம் - கார்த்திகைத் தீபம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
தை தமிழர் திருநாளையும் மாற்றி சங்கராந்தி ஆக்கப்பட்ட கொடுமை! (புராணக் கதை புகுத்தப் பட்டுள்ளது) தைப் பூசம், தை அமாவாசை மாசி மகம், மகாசிவராத்திரி; பங்குனி - பங்குனி உத்திரம், காமன் பண்டிகை.
இப்படி பார்ப்பன சுரண்டலுக்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்துள்ளனர். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த கதையாக ஒவ்வொரு நாளும் பண்டிகை - பண்டிகை என்று கூறி மக்களை சக்கையாக உறிஞ்சி எடுக்கும் மகா மகா கொடுமை.
இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் கதை களோ ஆபாசம் - அருவருப்பு - அடி முட்டாள்தன மாகும்.
ஒரு கதையா? இரு கதையா? பைத்தியக்கார னுக்குக் கள் ஊற்றிய மாதிரி உளறல்! உளறல்!!
நவராத்திரி, தீபாவளி முடிந்த கையுடன் கார்த்திகை வந்து விட்டது. வீட்டுக்கு வீடு அகல் விளக்கு ஏற்றி வைப்பது என்பது எண்ணெய் செலவுக்குத்தான் கேடு.
இன்று திருவண்ணாமலையில் மகா தீபமாம்.
இதற்கு என்ன கதையளப்பு?
பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி- இரண்டு பேர்களில் யார் பெரியவன் என்ற சண்டையாம் (கடவுள்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது சண்டைதானா?)
பரமசிவன் நடுவில் புகுந்து ஜோதி உருவெடுத்து என் அடி, முடிகளை யார் முதலில் காண்கிறார்களோ அந்த ஆள் தான் பெரிய ஆள் என்றானாம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டே போனானாம். அடியைக் காண முடியாமல் திரும்பினானாம். (இதனை வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு கதை!)
பிரம்மன் அன்னப் பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றானாம். அப்பொழுது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே வந்து கொண்டு இருந்ததாம்! எங்கிருந்து வருகிறாய் என்று அன்னப் பறவை தாழம் பூவைப் பார்த்துக் கேட்டதாம். சிவன் முடியிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டுள்ளேன் என்றதாம் தாழம்பூ.
எனக்கு ஒரு உதவி செய். சிவன் முடியை நான் பார்த்துவிட்டதாக சாட்சியம் சொல்லு என்று அன்னப் பறவை - கெஞ்ச, தாழம்பூவும் பரிதாபப்பட்டு பொய்ச்சாட்சி சொல்ல ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் வந்து சொல்ல, சினம் கொண்ட சிவன் சபித்து விட்டானாம். உனக்குக் கோயில் இல்லாமல்  போகக் கடவது! என்று பிர்மாவுக்கும் - பூசைக்கு உதவாமல் போகக் கடவாய் என்று தாழம்பூவுக்கும் சிவன் சாபமிட்டானாம்!
விஷ்ணுவும், பிர்மாவும் தவறுகளை ஒப்புக் கொண்டு - சிவனே நீதான் சக்தி வாய்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு, தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததன் அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்! என்று கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் சம்மதித்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று கூறினானாம். அதுதான் திருவண்ணாமலையில் மகா தீபம் கொண்டாடப்படும் இலட்சணம்!
இதில் சில கேள்விகள் உண்டு. பிர்மா, விஷ்ணு எனும் கடவுள்களிடையே யார் பெரியவன் என்று சண்டை போடுவது அசல் சிறுபிள்ளைத்தனம் அல்லவா!
இரண்டாவது, படைத்தல் கடவுள் என்று பார்ப்பனர்கள் கூறும் பிர்மா பொய் சொல்கிறானே, இது எந்த வகை ஒழுக்கம்?
மூன்றாவது, சிவன்தான் மற்ற இரு கடவுள் களையும்விட பெரியவள் என்பதை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்களா?
நான்காவது, கார்த்திகையில் ஜோதியாய்த் தோன்றுவேன் என்று சிவன் சொன்னபடி, அவனாக அல்லவா ஜோதியாக உருவெடுக்க வேண்டும்? மாறாக மனிதர்களே கொப்பறை சட்டியில் நெய்யை ஊற்றி காடாத் துணியைப் பற்ற வைப்பது யாரை ஏமாற்ற? இது பச்சையான மோசடியல்லவா!
பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுமே - யார் சிந்திக்கப் போகிறார்கள்? உணவுக்குப் பயன்பட வேண்டிய நெய்யை டன் டன்னாக நெருப்புக்கு இரையாக்குகிறார்களே - இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு உண்டா? சிந்திப்பீர்!

பெரிய மனிதர்கள் - பதவியாளர்கள் விஞ்ஞான விரோதிகளா?


-ஊசி மிளகாய்-
நீதிஅரசர் ஜஸ்டீஸ் சந்துரு அவர்கள் ஒரு விழாவில் பேசும் போது,
வகுப்பறைகளில்கூட விஞ் ஞானத் தேடல் இல்லாத நிலைதான் இன்று உள்ளது. இப்போது, வாஸ்து சாஸ்திரத்தால், மக்கள் படாத பாடுபடுகின்றனர்.
நீதிபதிகளிடம்கூட, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்ப்பதன் மூலம், மூடநம் பிக்கைகளை ஒழிக்கலாம்.
- என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. வரவேற்க வேண்டியது மட்டுமல்ல; அரசினருக்கும் தேவையான அறிவுரையுமாகும்.
உலகிலேயே பல மணி பகல் நேரங்களை - ராகு காலம், எம கண்டம், கெட்ட நேரம், மரண யோகம் என்ற சாக்கைக் காட்டி  வீணாக்கும் விந்தை மனிதர்கள் இங்கு ஏராளம் உண்டு.
படிப்பறிவு அவர்களை பகுத் தறிவைப் பயன்படுத்துவோராக்க முனையவில்லை; பெரியார் போன்ற தலைவர்களும், அவர்தம் இயக்கமும், ஏடுகளும் பிரச்சாரமும்தான் இதனைச் செய்கின்றன.
நம் நாட்டு அரசியல் சட்டத்தின் 51ஏ பிரிவு அடிப்படைக் கடமைகளில் முக்கியமான கடமைகள் பற்றி வலியுறுத்திச் சொல்கின்றது!
பல அரசுத் துறைகளைப் பொறுத்த வரைகூட மதச் சார்பின் மையை காலில் போட்டு மிதிப்ப துடன் மூடநம்பிக்கைகளை வழிபட்டு பரப்பிடும் கருவிகளாக உள்ளன!
ஊடகங்கள் - பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் எல்லாம் நல்லநேரம், சகுனங்கள், வாஸ்து சாஸ்திரம், யாகம், பூஜை புனஸ் காரம், தீபாவளி, ஆயுத பூஜை (குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் களில்) - வசூல் ராஜாக்களாகவும் மாறி, கேவலமாக - பாமரத் தனத்தின் உச்சிக்கே சென்று அறியாமைச் சேற்றைப் பூசி, தங்கள் அலுவலகங்களையே கழுதை புரண்ட களங்களாக ஆக்கி விடு கின்றனர்!
அய்யப்பன் கோயில் போவ தற்குப் போடும் வேஷத்திற்கு அரசு விதிகள், காவல்துறை விதிகள்படி அனுமதி இல்லை; ஆனால் அந்த விதிகள் எல்லாம் இன்று குப்பைக் கூடையில் கிடக்கின்றன!
தாடி மீசை, கழுத்தில் மணி, காவி கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற சாமிகளாக கான்ஸ்டே பிளிலிருந்து போலீஸ் மேலதிகாரி வரை ஆகிவிடுகின்றனர்.
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே இந்த வேடத் தில் - அய்யப்ப சீசனில் காட்சி அளித்ததை நாம் கண்டி ருக்கிறோம்.
எண் கணித மூட நம்பிக்கை காரர் (Numerology) கத்தியால் குத்தப்பட்டு டெல்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மயக்கந் தெளிந்த பிறகு அறை எண் 13 என்பதைப் பார்த்து அலறி அடித்து, அய்யோ எனக்கு 13ஆம் எண் ஆகாதே என்று அலறி, மாற்றச் சொல்லி அடம் பிடித்தார்; வேறு அறைகளே காலி இல்லை, அவர் திருப்திக்காக - அவர் தூங்கும் போது பார்த்து 13ஆம் எண்ணை 12A என்று மாற்றி பெயிண்ட்டரை அழைத்து வந்து எழுதி வைத்து, மாற்றம் செய்தனர்; அதன் பின்னரே அவருக்கு நிம்மதி!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் (சீக்கிய) பிரதமர் வரை திருப்பதி கோயிலுக்குப் போவது - ஏழு மலையானிடம் வேண்டுவது என் றால் என்ன பொருள்? மதச்சார் பின்மையா?
51A   பிரிவில் கூறிய அடிப்படைக் கட மையைப் பரப்புவதா அது?
to develop scientific temper, humanism, spirit of  enquiry and reform  -  என்று கூறும் அரசியல் சட் டக் கடமைக்கு இதுவா விளக்கம்?
அறிவியல் மனப்பான்மையைப் பெருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மூடநம்பிக்கையைப் பரப்பாமலாவது இருக்க வேண் டாமா?
விஞ்ஞான ஆசிரியர், மாணவர் எல்லாம் கிரகணங்களுக்கு முழுக் குப் போடுவது அறிவியல் மனப் பான்மையா? பட்டினி கிடப் பது, சாப்பிட மறுப்பது ஆதாரமற்ற செயல் அல்லவா? அய்யோ பாரத நாடே!  அஞ் ஞான பூமியே!

ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!


சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு மூலதனம் பிரச்சினை:
வாக்கெடுப்பு நடத்தினால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!
தமிழர் தலைவர் அறிக்கை

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்துத் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (27.11.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு மூலதன முதலாளிகளை அனுமதித்தால் நம் நாட்டு சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், காங்கிரஸ், மற்றும் ஒரு சிலர் தவிர, எல்லோரும் எதிர்க்கிறார்கள். ஏனோ ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை இதில் பிடிவாதம் காட்டுகிறது.
மாநில அரசுகளுக்குச் சுதந்தரம் உண்டு. அனுமதிக்கவோ, மறுக்கவோ என்று கூறிடும் நிலையில் இதில் பிடிவாதம் காட்டுவது முரண்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும்.
தி.மு.க. இதில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது; வாக்கெடுப்பை வலியுறுத்தி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சி திட்டமிட்டே நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. மக்கள் விரோதப் போக்கே ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் கேலிக் கூத் தாக்குகின்றனர்.
வாக்கெடுப்பு நடத்தினால்கூட, இன்றுள்ள சூழ்நிலையில் பல எதிர்க்கட்சிகளே ஆட்சியைக் கவிழ்க்க அவசரப்படாதபோது, தயாராக இல்லாதபோது, இப்போது  பாராளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது எப்படி  நியாயமானதாகும்?
இந்நிலையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; அதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் காரணமாக அமைய மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. திராவிடர் கழகம் தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டைப் பாராட்டுகிறது.
பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனை உள்ள எதிர்க்கட்சிகளும் இதே நிலையை எடுப்பதன் மூலம் மதவெறிக் கட்சிகளை கரங்களை மறைமுகமாக வலுப்படுத்தக் காரணமாகி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை  
27.11.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, November 27, 2012

இந்துத்துவா என்பது உயர் ஜாதியினரின் ஆதிக்கம்


வரலாற்றாளர் இராமச்சந்திர குஹா படப்பிடிப்பு
பிரபல வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா அவர்களால் எழுதப்பட்ட புதிய நூலில் இந்துத்துவாவின் ஜாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
(தன்னுடைய புதிய புத்தகத்தில் திரு. இராமச்சந்திர குஹா பரந்த பகுதிகளைத் தொட்டிருந்தாலும், ஒரு வரலாற்றாளனைவிட, ஒரு  விசாரணையாளனாகவே தன்னை ஆட்படுத்திக் கொள்ளுகிறார் - சரோஜ்கவுர்)
தனது அண்மை வெளி யீடான தேச பக்தர்களும், பிரிவினைவாதிகளும் (Patriots and Partisans) என்ற புத்தகத்தின் முன்னுரை யில், சுற்றுச்சூழல் இயலார், மட்டைப் பந்து இயலார், மற்று வரலாற்றாளர் ஆகி யோர்பற்றி குஹா எழுது கிறார்:
நான் ஒரு மிதமான போக்குடையவன் சமயங் களில் அவற்றை வேகமான முறையில் வெளிப்படுத்து பவன். இது என்னை ஒரு முரண்பட்டவனாகவும், பொருந்தாதவனாகவும் காட்டுகிறது! வாதங்களில் இடதுசாரியாகவும், வலது சாரியாகவும் காட்டப்படு கிறேன். பல்வேறு வகைப் பட்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பில், இடதுசாரி, வலதுசாரி சித்தாந்தங் களுக்கு நடுநிலையை தனது வேகமானதாகவும், ஆத்திரமூட்டக் கூடியது மான கருத்துக்கள் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுகிறார்.
முக்கியமான ஆபத்துகள்
இந்தப் புத்தகம், அவருடைய பார்வையில் இந்தியக் குடியரசிற்கு விளைய இருக்கும் முக்கிய ஆபத்துகளைப் பற்றி முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. மற்ற கட்டுரைகள் இந்துத்துவம், இடதுசாரி கம்யூனிஸ் டுகள், பரம்பரை ஆட்சி எண்ணம் பீடித்த காங் கிரஸ் கட்சிபற்றிய விமர் சனக் கண்ணோட்டத்து டன் எழுதப்பட்டவை. பிறகு குஹா, காந்தியின் பன்முக மதங்கள் எவ்வாறு இன் றைய சூழலுக்குப் பொருந் தும் என்பதையும் ஆய் கிறார். ஜவகர்லால் நேரு வின் மரணத்திற்குப் பிறகு, அவரது பேரும், புகழும் சரிந்ததையும் அவர் ஆய்வு செய்கிறார்.
இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் எழுத்தாளர்களைப் பற்றி யும், படிப்பாளிகள் பற்றியும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் இரு மொழி வல்லுநர் களான அறிவாளிகள் ஏன் தற்பொழுது வலுவிழந்த நிலையில் உள்ளனர் என் பது பற்றியும் விளக்கு கிறார்.
துணிச்சலான விவாதங்கள்
அவர், இதழ் ஆசிரிய ராக, புத்தகக் கடை உரிமை யாளராக, ஒரு பெரிய புத்தக வெளியீட்டகமாக, மற்றும் புகழ்பெற்ற வர லாற்று ஆவணக் காப்பக மாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறார். அரசியலைப் பற்றியோ, பண்பாட்டைப் பற்றியோ, தனி மனிதர் களைப்பற்றிய சித்திரத் திலோ, சமூக நிகழ்வு களைப் புகுத்திப் பார்ப்ப திலோ குஹா துணிச்ச லாக விவாதத்துக்குள்ளா கும் முறையில் எழுதி யுள்ளார்.
அவர் எல்லாத் துறை களையும்பற்றி எழுதியி ருந்தாலும், மேலெழுந்த வாரியாக அவரது எழுத் துக்களைப் படித்தால், அரசியல் பன்முகத்தில், அவர் யாரைக் குறி வைக் கிறார் என்பது வெளிப் படையாகும். நாம் அவரை ஒரு தெளிவு பெற்ற இந்து மத  நம்பிக்கையாளராக, இந்துத்துவாவின் கோபம் ஊட்டுபவராக, அல்லது நாட்டுப்பற்றுடையவராக அடையாளம் கண்டு கொள் வது நமது கண்ணோட் டத்தைப் பொறுத்தது.
இந்துத்துவா என்பது உயர்ஜாதியினரின் ஆதிக்கம்
இந்தியாவைப்பற்றிய  பாரதிய ஜனதா கட்சியி னரால் முரண்பட்ட முறையில் குறிப்பிடப்படும் இந்து ராஷ்டிரா அதை இன்னும் உறுதியாகச் சொல்லும் ராஷ்டீரிய சுயம் சேவக் சங்கம் ஆகிய வற்றின் கூற்றுக்கள் பற்றி அவர் வன்மையாக எதிர்க் கிறார். அவருடைய கண் ணோட்டத்தின்படி, இந்துத் துவா அமைப்பானது வேறுபாடில்லாத ஆண் ஆதிக்கம் நிறைந்த உயர் சாதியினரைக் கொண்ட பெரும்பாலான நேரங்களில் இங்கே வசிக்காத இந்தியர் (Non-president Indians)  களைக் கொண்டதாகும்.
சங்பரிவார், ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா விழைவோர், மற்றும் பல்வேறு இந்துத்துவா வேண்டிகள் மீது, அவரது தாக்குதல்கள் வேக வீச் சுடன் கூடியவை. காரணம் பல்வேறு திசைகளிலிருந்து அவர் பெற்ற ஈமெயில்கள், அவரைக் காயப்படுத்திய துடன், இந்துத்துவா எதிர்ப்பாளராக அவரைக் குற்றம் சாட்டியதும்தான்.
தலைசிறந்த ஒரு இந்திய வரலாற்றாளன் இம்மாதிரி சிறு பிள்ளைத் தனமான விளையாட் டுகளில் ஈடுபடலாமா? அவர் சிறந்த முதிர்ந்த பங்களிப்பைச் செய்து இருக்க வேண்டும் என்று சிலர், கருத்து தெரிவித்து உள்ளனர். சிலருக்கு வர லாற்றை ஆவணப்படுத் துவதில் சிறந்த பணி செய்தவருக்கு இந்தக் கட்டுரை தொகுப்பானது ஒரு காமாலைப் பார் வையை எடுத்துக் காட்டு கிறது என்ற கருத்து நிலவு கிறது. அவரது இந்தி யாவைப் பற்றிய எந்தவித கோணமும் அவரது கருத் துக்கு விருப்பமற்றதாகத் தெரிவதால் அவை அவரது கட்டுப்பாடற்ற கருத்துக் களாக இல்லாமல் வெறுப் பின் விளிம்பில் நிற்கின்றன.
1920-லிருந்து சங்பரிவர்கள்பற்றி
குஹாவின் குறியான இந்துத்துவா 1920 சாவர்க் கார் காலத்திலிருந்தே எழுதப்பட்டு வந்தன. சாவர்க்கார், இந்து என்பதற்கு, வருங்கால சுதந்திர இந்தியாவின் இனம், மதம், சாதி மற்றும் வகுப்பு வேறுபாடில்லாத இந்தியக் குடிமகன் என்று விளக்கம், சொல்லியுள் ளார். சமபந்தி விருந்து முறையை முதலில் ஆரம் பித்து வைத்த சாதி இந்துக் களில் அவரும் ஒருவர். அது 1925இல் H.B. ஹெட்கிவார் (H.B. Hedgewar) என்பவ ரால் ஆர்.எஸ்.எஸ். தொடங்க காரணமாயிருந் தது. இந்திய விடுதலை உணர்வு, வடமொழியான சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை அறி யாததால்தான் என்ற நிலை ஆச்சரியத் திற்குள்ளானது இல்லை, அந்தக் குறைக்காக நாட்டின் இந்துக்கள் தங்கள் மேலே கோபம் கலந்த வெறுப்படைந்தனர்! அவரது சொந்த எல்லைக்குட்பட்ட  பார்வைகளின் படியே, குஹா நாட்டுப் பற்றா ளர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே எதிர்ப்புணர்வை ஊதி விடுகிறார்.
விசாரணை போல
மைனாரிட்டிகளைப் பற்றி பேசும்போது, அவர் வன்முறை பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். தற்பொழுதும், சமீப காலங் களிலும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளான இந்துக்கள் அல்லாதவர்களால் தாக்கப் பட்ட நிகழ்ச்சிகளை அவர் தவிர்த்து, இந்துக்களால் தாக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டும் பொறுக்கி எடுத்துக் குறிப்பிட்டுச் சொல்கிறார். குஹா, தன் கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, ஒரு வரலாற்று ஆசிரியனைப் போல் அல்லாமல் ஒரு விசாரணையாளரின் பங்கைப் பற்றியி ருப்பது நன்கு தெரிய வருகிறது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...