Wednesday, November 28, 2012

பெரிய மனிதர்கள் - பதவியாளர்கள் விஞ்ஞான விரோதிகளா?


-ஊசி மிளகாய்-
நீதிஅரசர் ஜஸ்டீஸ் சந்துரு அவர்கள் ஒரு விழாவில் பேசும் போது,
வகுப்பறைகளில்கூட விஞ் ஞானத் தேடல் இல்லாத நிலைதான் இன்று உள்ளது. இப்போது, வாஸ்து சாஸ்திரத்தால், மக்கள் படாத பாடுபடுகின்றனர்.
நீதிபதிகளிடம்கூட, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்ப்பதன் மூலம், மூடநம் பிக்கைகளை ஒழிக்கலாம்.
- என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. வரவேற்க வேண்டியது மட்டுமல்ல; அரசினருக்கும் தேவையான அறிவுரையுமாகும்.
உலகிலேயே பல மணி பகல் நேரங்களை - ராகு காலம், எம கண்டம், கெட்ட நேரம், மரண யோகம் என்ற சாக்கைக் காட்டி  வீணாக்கும் விந்தை மனிதர்கள் இங்கு ஏராளம் உண்டு.
படிப்பறிவு அவர்களை பகுத் தறிவைப் பயன்படுத்துவோராக்க முனையவில்லை; பெரியார் போன்ற தலைவர்களும், அவர்தம் இயக்கமும், ஏடுகளும் பிரச்சாரமும்தான் இதனைச் செய்கின்றன.
நம் நாட்டு அரசியல் சட்டத்தின் 51ஏ பிரிவு அடிப்படைக் கடமைகளில் முக்கியமான கடமைகள் பற்றி வலியுறுத்திச் சொல்கின்றது!
பல அரசுத் துறைகளைப் பொறுத்த வரைகூட மதச் சார்பின் மையை காலில் போட்டு மிதிப்ப துடன் மூடநம்பிக்கைகளை வழிபட்டு பரப்பிடும் கருவிகளாக உள்ளன!
ஊடகங்கள் - பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் எல்லாம் நல்லநேரம், சகுனங்கள், வாஸ்து சாஸ்திரம், யாகம், பூஜை புனஸ் காரம், தீபாவளி, ஆயுத பூஜை (குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் களில்) - வசூல் ராஜாக்களாகவும் மாறி, கேவலமாக - பாமரத் தனத்தின் உச்சிக்கே சென்று அறியாமைச் சேற்றைப் பூசி, தங்கள் அலுவலகங்களையே கழுதை புரண்ட களங்களாக ஆக்கி விடு கின்றனர்!
அய்யப்பன் கோயில் போவ தற்குப் போடும் வேஷத்திற்கு அரசு விதிகள், காவல்துறை விதிகள்படி அனுமதி இல்லை; ஆனால் அந்த விதிகள் எல்லாம் இன்று குப்பைக் கூடையில் கிடக்கின்றன!
தாடி மீசை, கழுத்தில் மணி, காவி கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற சாமிகளாக கான்ஸ்டே பிளிலிருந்து போலீஸ் மேலதிகாரி வரை ஆகிவிடுகின்றனர்.
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே இந்த வேடத் தில் - அய்யப்ப சீசனில் காட்சி அளித்ததை நாம் கண்டி ருக்கிறோம்.
எண் கணித மூட நம்பிக்கை காரர் (Numerology) கத்தியால் குத்தப்பட்டு டெல்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மயக்கந் தெளிந்த பிறகு அறை எண் 13 என்பதைப் பார்த்து அலறி அடித்து, அய்யோ எனக்கு 13ஆம் எண் ஆகாதே என்று அலறி, மாற்றச் சொல்லி அடம் பிடித்தார்; வேறு அறைகளே காலி இல்லை, அவர் திருப்திக்காக - அவர் தூங்கும் போது பார்த்து 13ஆம் எண்ணை 12A என்று மாற்றி பெயிண்ட்டரை அழைத்து வந்து எழுதி வைத்து, மாற்றம் செய்தனர்; அதன் பின்னரே அவருக்கு நிம்மதி!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் (சீக்கிய) பிரதமர் வரை திருப்பதி கோயிலுக்குப் போவது - ஏழு மலையானிடம் வேண்டுவது என் றால் என்ன பொருள்? மதச்சார் பின்மையா?
51A   பிரிவில் கூறிய அடிப்படைக் கட மையைப் பரப்புவதா அது?
to develop scientific temper, humanism, spirit of  enquiry and reform  -  என்று கூறும் அரசியல் சட் டக் கடமைக்கு இதுவா விளக்கம்?
அறிவியல் மனப்பான்மையைப் பெருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மூடநம்பிக்கையைப் பரப்பாமலாவது இருக்க வேண் டாமா?
விஞ்ஞான ஆசிரியர், மாணவர் எல்லாம் கிரகணங்களுக்கு முழுக் குப் போடுவது அறிவியல் மனப் பான்மையா? பட்டினி கிடப் பது, சாப்பிட மறுப்பது ஆதாரமற்ற செயல் அல்லவா? அய்யோ பாரத நாடே!  அஞ் ஞான பூமியே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...