Tuesday, March 30, 2010

குடிஅரசு தொகுதிகள் வெளியீடு!



பெரியார் களஞ்சியம்
குடிஅரசு (தொகுதிகள் 6)
(1926, 1927, 1928ஆம் ஆண்டுகள்)
வெளியீடு!

இன்று (30-03-10) மாலை
சென்னை - பெரியார் திடலில்


அவசியம் வருக!!!
அனைவரும் வருக!!!

Monday, March 15, 2010

அண்ணாசாலை- பெரியார் நுழைவு வாயில்


தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றல்கள் அளப்பரியன என்பது நாடு அறிந்ததே.

எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளிட்டவை-களில் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்கிற அளவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றாலும், கட்டடக் கலையிலும் கூட கூர்த்த மதிநுட்பம் மிக்கவர் என்பதன்மூலம் சகலகலா வல்லுநர் என்னும் பெருமைக்கு உரியவர் ஆகிறார்.

கலைஞர் அவர்களே பலமுறை சொல்லி-யுள்ளபடி, ஏன் தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவிலேயே குறிப்பிட்-டுள்ள-படி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாமான்யர்தான் கலைஞர்,- பார்ப்பனர் அல்லாதார் என்ற நிலையால், இந்நாட்டு ஊடகங்கள் (பெரும்-பாலும் ஆரியக் கூட்டத்தின் கையிருப்பில்தானே!) அவரை உயர்த்திப்பிடிக்க வேண்டிய சாதாரண கடமையைக் கூடச் செய்ய மறுக்கின்றன. எங்-காவது ஒட்டடை அவர் மேல் ஒட்டிக் கொண்-டிருக்கிறதா என்று தேடித்தடி பூதாகாரப்படுத்து-வதில்தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

என்னதான் அவர்கள் இருட்டடிப்பு செய்யப் பார்த்தாலும் உலக அளவில பீடுறும் சிறப்புக்-குரியவர் என்று பலதரப்பினரும் பாராட்டும் அளவுக்குப் புதிய கட்டடம் வானளாவி நிற்கிறதே. அதனை என்ன செய்ய முடியும்?

கலைஞரின் செயல்திறனை புத்தாக்கப் பெருமையை யார் நினைத்தாலும் மறைத்துவிட முடியாது.

திராவிடர் கட்டடக் கலை அம்சத்தையும் உள் வாங்கிக் கொண்டு, புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்குவதில் அவர் அல்லும் பகலும் காட்டிய ஆர்வம், -கொடுத்த ஊக்கம் அசாதாரணமானவை. 86 வயதுக்குள் குடிகொண்டிருக்கும் இளமை வீறுகொண்டு நிற்கும் விந்தையை இவரிடம் காண முடிகிறது.

முதுமை, இளமை என்பது ஆண்டுகளைப் பொறுத்ததல்ல, உணர்வுகளைப் பொறுத்தது என்று வாழ்ந்து காட்டிய வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வீறு நடைபோடும் அந்த உறுதிதான் அதே இடத்தில் அவரை வார்த்து எடுத்திருக்கிறது.

அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லும்போது பொதுத் தொண்டை, ஒரு கலையாக மாற்றியவர் என்றார். - அந்தக் கலை உணர்வு கலைஞரிடம் காணப்-படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!

அண்ணா சாலையில், அண்ணா சிலை வழியாக, பகுத்தறிவுக் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றிக் கொண்டுதான் புதிய சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய வேண்டும்.
சட்டமன்றத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு-வரும் தந்தை பெரியார் யார்? அவரின் பிரதம சீடரான அண்ணா யார்? எந்த கொள்கை-களுக்-காக அவர்கள் வாழ்ந்தார்கள்? பொதுத் தொண்-டினைத் தொண்டறமாக உருவாக்கிய அந்த மாமனிதர்களின் மானமிகு உணர்வுகள் என்னென்ன?

பிரதமர் அவர்கள் திறப்பு விழாவில் சுட்டிக்-காட்டினார்; திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை, சமத்துவச் சிந்தனைகள் இவற்றை அசை போட்டுக் கொண்டுதான் சட்டமன்ற வளாகத்துக்குள்ளே நுழையமுடியும், நுழையவும் வேண்டும்.

இது ஏதோ குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் மண்ணின் உளவியல் (Soil Psychology) என்பது இந்த வகையிலே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவிலேயே எந்த மாநில சட்ட மன்றத்திலும் நிறைவேற்றப்பட முடியாத சமூகப் புரட்சி சார்ந்த சட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டு சட்டமன்றத்-தில்தான் நிறைவேற்றப்பட்டன என்றால், அதற்குக் காரணம் இந்த அடித்தளம்தான்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூக சீர்திருத்த உணர்வு தலை தூக்கி நிற்கிறது. அதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ராமாசாமிதான் என்று அமெரிக்காவின் ஜான் ரைட்லி போன்ற மூத்த பேராசிரியர்கள் கருத்து என்பதையும் கவனத்தில் கொண்டால் தமிழ்நாட்டின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

சட்டமன்றத்தின் புதிய கட்டடம்_ வளாகம் உருவாக்கப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைகளில் பிறழ்வு இல்லாமல் மேலும் வீறுநடை வளர்ச்சிப் போக்கு காணப்படட்டும்!

Thursday, March 11, 2010

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.

ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார்.

இயற்கைவாதி செ. கஜபதி
(நன்றி: எதிரொலி -28.2.2010)

Thursday, January 21, 2010

யார் இந்த பெரியார்?


யார் இந்த பெரியார்?
காசியம்பதி
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி
தினமும் காலையில் வில்வம் பறித்துக்-கொண்டு வரும் அந்த அந்தணப்பையன் பல்லே தேய்க்கலை, ஸ்நானமே பண்ணலை என்ற சேதி மடத்தலைவர் காதுகளை ஒரு நாள் எட்டியது. ராமு பாட்டிற்கு காலங்கார்த்தாலே வில்வமும் கையுமாய் குளிரில் நடுங்கியபடி வரும் போது, மடத் தலைவர் ராமுவின் மடி ஆசாரத்தின் லட்சணத்தை எல்லாம் தானே நேரிலும் பார்த்து விட்டார். அவருக்கு செ-மை கோபம் வந்தது, பட்டென அவர் ஏதோ கத்த, ராமுவும் பதிலுக்கு சுருக்கென ஏதோ சொல்ல, வாய் வார்த்தை முற்றிப்போய், பேக் அப் என்று விரட்டியே விட்டார் மடத்தலை-வர். அதனால் வேறு வழி இல்லாமல் ராமு நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கும் நிலைமை ஏற்பட்டது.
இனி என்ன செய்வது? ராமு பிராமணன் அல்ல என்பதால் இலவச போஜனம் அவருக்கு கிடைக்காது. அதே காரணத்தினால் மாறு வேஷம் தரிக்காவிட்டால், அந்த ஊரில் வேலையும் கிடைக்காது. அப்படியே, கிடைத்-தாலும், வில்வம் பரித்துபோடும் அற்ப வேலைக்கே, காலங்கார்த்தால எழுந்திரு, குளி, பல் தேய், லொட்டு லொசுக்கு என்று அத்தனை நிபந்தனைகள் விதித்தார்கள். சரி தான் இந்த இம்சைக்கு, பேசாம நம்ம ஊருக்கே போய் தொலைக்கலாம் என்று ராமு நினைத்திருக் கலாம். ஆனால் துறவி ஆகவேண்டும் என்கிற வைராக்கியமும், தனித்து வாழ வேண்டும் என்ற தீர்மானமும், வாழ்க்கையைப் பற்றிய தன் கேள்வி-களுக்கு பதிலை புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தேடலும், ராமுவை காசியிலே இருந்துவிடத் தூண்டியன.
ஆனால் காசியில் வேலை வெட்டி இல்-லாமல் எப்படி அப்படியே இருக்க முடியும். சாப்பாட்டிற்கு என்ன வழி? உழைக்காமல் சாப்பிட இருக்கவே இருக்கிறதே ஒரு தொன்-மையான வழி. அது தான் காசிக்கு வந்து கங்-கையில் அஸ்தியை கரைத்தால் நேரே ஆத்மா சொர்க்கத்திற்கே போய்ச் சேரும் என்று அத்-தனை மனிதர்கள் நம்பினார்களே. இப்படி கங்கைக் கரையோரம் சிரார்த்தம் செய்பவர்கள் பிண்டம் போடும் அரிசி, பழம் ஆகிய உணவு பொருட்களை வாங்கி உயிர் வளர்க்கும் பிச்சைக்காரர்கள் காசியம்பதியில் பல பேர் ஏற்கனவே இருந்தார்களே, அவர்கள் ஜோதி-யில் ராமுவும் போய் அய்க்கியமாகி, கூட்டத்-தோடு கூட்டமாய் நின்று பிண்டம், பழம் என்று சாப்பிட்டுக்கொள்ள ஆரம்பித்தார்.
யோசித்து பாருங்களேன். எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பையன், இப்படி உணவு, உடை, உறைவிடம் என்று எந்த அடிப்படைத் தேவைகளுமே நிறைவேறாத நிலையில், தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ வேண்டும்; அதுவும் ஒரு நாள் இரண்டு நாளைக்கு அல்ல, கிட்டத் தட்ட அய்ந்தாறு வாரங்களுக்கு என்றால், அவர் மனதின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? நிச்சயம் தான் என்ற அகந்தை இருந்திருந்-தால் இப்படி பிச்சைக்கார வாழ்வை அவர் மேற்கொண்டிருக்க முடியாது. சொகுசான சுலபமான வாழ்கை மீது நாட்டம் இருந்திருந்-தால் இப்படி தெருவில் வாழ்ந்திருக்க முடி-யாது, எதற்கு வம்பு, ஈரோட்டுக்கே போயிட-லாம் என்று நினைத்திருப்பார். ஆக அகம்-பாவ-மும் இல்லை, சுக போகத்தின் மேல் ஆசை-யும் இல்லை, ஆன்மீகத் தேடல் மட்டுமே அவரை மேலும் மேலும் தூண்டிக்கொண்டே இருக்க, தனக்கு நேர்ந்த எந்த கஷ்டத்தையும் பெரிது படுத்தாமல் காசியில் காலம் கழித்தார் ராமு.
காரணம் அவர் அதுவரை கேள்விப்-பட்டதை வைத்து அவர் காசி என்றால், அது மஹா புண்ணியம் வாய்ந்த பாரம்பரியமான திருத்-தலம். அங்கே எல்லாமும் சுத்தமாகவும், மேன்-மையாகவும், திருத்தமாகவும் இருக்கும் என்று நம்பி இருந்தார். இப்படி எல்லாம் ஏதாவது பிரத்தியேக சிறப்பில்லாமலா இத்தனை கால-மாய் இத்தனை கோடி இந்துக்கள் காசியை மிக புனிதமான நகரம் என்று சொல்லி போற்றி இருப்பார்கள்.
அதனாலேயே எத்தனை துன்பங்கள் வந்தாலும் சரி, துறவறம் என்ற குறிக்கோளில் இருந்து மாறுவதே இல்லை, காசியை விட்டுப் போவதே இல்லை என்று படு தீவிரமாய் இருந்தார் ராமு. ஆனால் காசியிலேயே இருந்து அங்கு அன்றாடம் நடக்கும் வாழ்வியல் சமாசாரங்-களை பார்த்த போது தான் ராமுவுக்கு தன் உலகமே வேறு விதமாய் புரிய ஆரம்பித்தது.
கங்கை ஒரு புண்ணிய நதி என்று எல்-லோரும் சொல்கிறார்களே, வெறும் ஒரு நதியை போய், புண்ணிய தீர்த்தம் என்று சொல்-வது எப்படி செல்லுபடியாகும்? எகிப்தில் ஓடும் நைல், வட அமெரிக்காவில் ஓடும் மிஸிஸிப்பி, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான், ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ, ருஷ்யாவில் ஓடும் வால்கா, அவ்வளவு ஏன் பாகிஸ்தானில் ஓடும் சிந்துவைக் கூட யாரும் புண்ணிய நதி என்றெல்லாம் போற்றிக் கொண்-டிருக்க வில்லையே. இத்தனைக்கும் இந்த நதி-கள் கங்கையை விட வலிமையானவை; இன்னும் நிறைய உயிரைக் காப்பாற்றுபவை; அந்தந்த ஊர் மனிதர்களின் வாழ்விற்கே ஆதாரமானவை. ஆனாலும் இதில் எந்த நதியையுமே புண்ணிய தீர்த்தம் என்று அந்த நாட்டுக்காரர்கள் யாரும் கொண்டாட வில்லையே? ஏன்?
காரணம், எகிப்தியர், சிந்து நதியினர் எல்லோருமே மிக முதிர்ச்சி அடைந்த புத்திசாலிகள். இந்த குட்டை தண்ணீல குளிச்சா எல்லா பாவமும் போய்விடும் என்பது மாதிரியான பழங்குடி மனிதர்களின் குழந்தைத் தனமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்க-வில்லை. அதனால் நைல் நதியை ஒரு பெண்-ணாகவும் தெய்வமாகவும் பாவித்து, கங்கை-யைப் போல அவளை பகீரதன் தன் தவ வலிமை-யால் வானத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தான். அவளை சந்தணு என்கிற அரசன் மணந்தான்; அவளுக்கு பீஷ்மன் என்கிற மகன் உண்டு; அவளை சிவபெருமானும் மணந்தார்; அவளை அவர் தன் தலையிலேயே சுமந்தார் என்பது மாதிரியான பலதாரக் கதைகளை சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல், இந்த நதியை பாசனத்திற்கு எப்படி திசை-திருப்பிக் கொள்ளலாம்? என்று உருப்படியாக யோசித்தான் எகிப்து மன்னன்.
அதே போல் தான் யோசித்தான் கரிகால் சோழன். காவிரியை புண்ணிய நதி, அதில் நீராடினால் பாவம் போகும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வெட்டியாய் சுற்றாமல் கல்லணையை கட்டினோமா, காவிரியை அடக்கி பிரயோகித்தோமா? என்று ஆக்கபூர்-வமாய் செயல் பட்டான். ஆனால் அதே இந்தியாவின் இன்னொரு கோடியில் இருக்கும் கங்கை என்ற நதியை மட்டும் ஓவர் சென்டி-மெண்டுக்கு உட்படுத்துவது எத்தனை பெரிய முட்டாள்தனம்?
சரி, நதி தான் புண்ணியம் இல்லை என்றாகி விட்டது-. அப்படியானால், காசி என்கிற இந்த புராதனமான நகரம், ஒன்றும் இல்லாமலா அது புண்ணிய நகரம் என்று பெயர் பெற்றிருக்கும்? ஹிந்துமதம் என்ற ஒன்று உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பர்ஷவர் என்கிற இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர் பிறந்த ஊர் என்று சமணர்களால் போற்றபட்ட நகரம் காசி. அதன் பிறகோ, கவுதம புத்தர் காசியருகே இருக்கும் சாரநாத் என்கிற மான்கள் ஓடும் காட்டில் தங்கி நிறைய பிரசங்கமெல்லாம் செய்ததினால் பௌத்தர்களாலும், பிரத்தியேக நகர் என்று கருதப்படுகிறது இந்த காசி. அதனால் ஆதியில் சமணர்களும் பௌத்-தர்களும் இங்கே தீர்த்தயாத்திரை மேற்-கொள்ள ஆரம்பித்தார்கள். அசோகப் பேர-ரசனும், ஹர்ஷவர்த்தனரும், கனிஷ்கரும், இந்த ஸ்தலத்தில் பல திருப்பணிகள் மேற்கொண்டு இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக்-கினார்கள். ஆனால் சமணமும், பௌத்தமும், தேய்ந்து ஓய ஆரம்பித்ததும், காசியின் மதச்சாயமும் மாறியது. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காசிக்குப் போய், சக்தியின் செவி தோடு அங்கே விழுந்து விட்டதாய் ஒரு கதையைச் சொல்லி, அதனால் காசி இனிமேல் ஒரு சக்திஸ்தலம் என்று விட்டார். விசாலாக்ஷியுடன் விஸ்வ-நாதரை அங்கே குடி புக வைக்க, உடனே அது சைவர்களின் திருத்தலமானது. அதன் பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் தலை தூக்கிய-தும், காசி எங்கும் முகலாய கட்டிடங் களும், பாதைகளும், பயணத்தடங்களும் கட்டப்பட, இப்படியாக ஒவ்வொரு சமயத் திலும் ஒவ்-வொரு காரணத்திற்காக காசி போற்றப்பட, ஆங்கிலேயர்கள் தான் முதலில் கண்டு பிடித்-தார்கள், காசி எப்பேர்ப்பட்ட ஒரு வணிக மையம் என்று! பல ஊர்களில் இருந்து பலதரப்பட்ட மனி-தர்கள் என்ன காரணம் சொல்லிக் கொண்டு எந்த ஊரில் கூடினாலும், அங்கே முதலில் நடப்பவை, விபச்சாரம், வியாபாரம், வன்முறை குற்றங்கள் தான்.
ராமு என்னமோ காசி தன் ஞானக்-கண்களை திறந்து வாழ்வியல் ரகசியத்தை தனக்கு படக்கென்று சொல்லிக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டு காசியில் காலம் கழிக்க, தினம் தினம் அவர் தரிசித்ததென்னவோ, விதம் விதமான மனித சீர்கேடுகளைத் தான். துறவிகள் என்று சொல்லிக்கொண்டு போதைப் பொருட்களை ஊதித்தள்ளுவோர், அபச்சாரம் அபச்சாரம் என்று வாய் கிழிய பேசிவிட்டு, கொஞ்சமும் தயங்காமல் விபச்சாரம் புரிவோர். சைவம் சைவம் என்று சொல்லிக்கொண்டு மனித மாமிசம் உட்பட எல்லா விதமான மாமிசங்களையும் உட்-கொள்ளும் மனிதர்கள். தயவு தாட்சண்ய மின்றி, மதத்தின் பெயரால் சுயநலமாய் பிறரை ஏமாற்றும் கூட்டங்கள், இன்னும் இன்னும் நிறைய புண்ணியம் வேண்டும் என்கிற பேரா-சையில், யார் என்ன அபத்தமான சடங்கை சொன்னாலும், அடிபிரளாமல் அப்படியே செய்து வைக்கும், கண்மூடித் தனமான மனிதர்-கள்.இவர்களை எல்லாம் பார்க்கப் பார்க்க ராமுவின் மனதில் அதிருப்தி அலை அலையாய் படர ஆரம்பித்தது. தான் நினைத்தது போல, இது வரை தான் நம்பவைக்கபட்டிருந்தது போல, காசி என்பது ஒரு புண்ணிய பூமியே இல்லை. இந்த புண்ணிய பூமி பட்டமெல்லாம் பிழைப்ப-தற்காக புகுத்தப்பட்ட விளம்பர யுத்தி மட்டுமே. இந்த நகரின் அசிங்கங்களுக்கு மத்தி-யில் உட்கார்ந்திருந்தால், திடுதிப்பென்று மெய்ஞானம் ஒரு பிரகாசமான ஜோதியாய், கபாலத்தை துளைத்துக்கொண்டு அப்படியே உள்ளே இறங்கி, தன்னை ஆட்கொண்டு விடும் என்று எதிர்ப்பார்ப்பதெல்லாம் சுத்த பைத்-தியக்காரத்தனம்.
இந்த தெளிவு ஏற்பட்டதுமே ராமு, காசிக்கு ஒரு முழுக்கு போட முடிவெடுத்துவிட்டார். எப்படியும் ராமுவின் சுறுசுறுப்புக்கு காசியில் இப்படி வெறுமனே உட்கார்ந்து ஞானத்-திற்காக காத்திருப்பதெல்லாம் ஒத்துவராத காரியமாயிற்றே.
காசியை விட்டு போவது என்று முடிவு செய்த உடனே பயணச் சீட்டாவது வெங்காய மாவது, அது தான் சாமியார்/பிச்சைகாரன் கெட்டப்பில் இருக்கிறோமே, யார் கேட்-பார்கள்! என்று வித்தவுட் டிக்கெட், ரயில் ஏறி-னோமா, ஊர் போய் சேர்ந்தோமா என்று இருந்திருக்கலாம். ஆனால் ராமுவுக்கு நாணய-மாய் இருப்பதைத் தவிர வேறு எந்த குறுக்கு வழியும் தெரியவில்லை. அவசரத் தேவைக்கு என்று தன் இடுப்பில் அதுவரை கட்டி வைத்திருந்த தங்க மோதிரத்தை எடுத்தார், விற்றார். 19 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துக்-கொண்டு பயணச்சீட்டை வாங்கினார், ரயிலே-றினார். அஸ்ஸன்சூல், பூரி என்று இரண்டு இடங்களில் இறங்கி சில நாட்கள் தங்கினார். அப்புறம் கிளம்பி எல்லூர் என்ற இடத்திற்கு போனார். எதிர்பாராத விதமாக எல்லூரிலும் அவர் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை திசை மாறியது.

Saturday, January 9, 2010

பார்ப்பனர்களின் பத்திரிகா தர்மம்!


பார்ப்பனர்களின் பத்திரிகா தர்மம்!
மின்சாரம்

பாரதிய ஜனதாவில் உமா சேர வழியில்லை என்று தலைப்பிட்டு தினமலர் ஒருசெய்தியை வெளி-யிட்டுள்ளது.

பா.ஜ. கட்சியில் இருந்த உமாபாரதி, கடந்த 2003_இல் நடந்த ம.பி. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில முதல் அமைச்சராகப் பதவியேற்றார். பின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உமாபாரதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது உண்மைதானா? போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தான் பதவியை ராஜினாமா செய்தாரா உமாபாரதி?

ஒரு ஆறாண்டுக்குள்ளேயே முரண்பாடான செய்திகளை இவர்களால் அவிழ்த்து விட முடிகிறது என்றால் மூவாயிரம் ஆண்டு செய்திகள்எல்லாம் எப்படியெல்லாம் மூக்கும், விழியும் வைத்து முக்காடு போட்டு செய்திகளை வீதி உலா வரச்செய்திருப்பார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதி என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உழைப்பால், மதவாதச் கர்ச்சனையால், அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து; வேறு வழியின்றி உமாபாரதியே அம்மாநில முதல் அமைச்சரும் ஆனார்.

இந்த நேரத்தில் 1994இல் கருநாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதிமீது கைது வாரண்டு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது _ அதாவது 10 ஆண்டுகள்கழித்து. இந்த நேரத்தில் பி.ஜே.பி.யில் இருந்த உயர்ஜாதி ஆதிக்க சக்திகளும், ம.பி. மாநில சொந்த கட்சி எதிராளி-களும் கூடி உமாபாரதி பதவி விலக வேண்டும் என்று நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தனர்.

உமாபாரதி பதவி விலகினார். வழக்கு நடந்தது. அந்த வழக்கில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அந்த நிலையில் பா.ஜ.க., உயர் மட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? மரியாதையாக மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே அறிவு நாணயம்?

என்ன நடந்தது? தற்காலிக முதல் அமைச்சராக உட்கார்ந்த பாபுலால் கவுர் அந்த நாற்காலியை விட்டு விலக மறுத்தார் _ பிஜேபியின் உயர் மட்ட _ உயர் ஜாதி ஆதிக்கவாதிகளின் அந்தரங்க உதவியோடு. (பிற்படுத்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்-டோரையும் மோதவிடும் தந்திரம்)

இவ்வளவுத் தகவல்களும் உள்ளுக்குள் உதிரப் பெருக்கெடுத்துக் கிடக்க தினமலர் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்று எழுதுகிறது என்றால், இவாளின் பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

உமாபாரதி என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. உமாபாரதிமீது வழக்கு என்பதற்காக பதவி விலகச் சொன்ன இந்த உத்தமப்புத்திரர்கள் இதே அளவுகோலை கட்சியின் மற்றவர்கள் விஷயத்தில் கடைபிடித்தார்களா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி-யான அத்வானியும், முக்கிய குற்றவாளியான முரளி மனோகர் ஜோஷியும் முறையே மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும் (அதன்பின் துணைப் பிரதமராகவும்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்களே, அது எப்படி?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்த நேரத்தில், அத்வானியும் ஜோஷியும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதனை ஜென்டில்மேன் வாஜ்பேயி ஏற்க மறுத்தது எந்த அடிப்படையில்? அதே நேரத்தில் அ.இ.அ..தி.மு.க. சார்பில் அமைச் சர் பொறுப்பேற்கச் சென்ற சேடப்பட்டி முத்தையா, அதன்பின் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் (இவர்மீது நேரிடையாகக் கூட குற்றச்சாற்று இல்லை; உதவியாளர்மீது வழக்கு) ஆகியோர் பதவி விலகினார்களே!

பா.ஜ.க. என்றால் பன்னீரில் பூத்தது _ மற்ற கட்சிகள் என்றால் சாக்கடையில் ஜனித்தது என்ற நினைப்போ!
இந்த நேரத்தில் இன்னொன்றும் உண்டு. அயோத்தியில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம்தான்; அதற்காக அத்வானியும், ஜோஷியும் பதவி விலகத் தேவையில்லை என்று சொன்ன சொக்கத் தங்கம் யார் தெரியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் _ ஜெயேந்திர சரஸ்வதி. ஜார்க்கண்டில் இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இதே சிபுசோரன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் அடேயப்பா, எப்படியெல்லாம் கூச்சல் போட்டார்கள்? ஜனநாயக விரோதம் என்று ஜன-நாயகத்தின் நவீன காவல்காரர்கள் போல எவ்வாறெல்லாம் கத்தித் தீர்த்தார்கள்? அதே சிபுசோரன் ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சர்ஆவதற்குக் அழுத்தங் கொடுக்கிறார்கள் என்றால் பி.ஜே.பி.யின்தார்மீக ஒழுக்கம் என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் யாரை ஏமாற்ற?

பார்ப்பனர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு நேரிடையாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில், பாரதிய ஜனதா என்ற அரசியல் முகமூடி அணிந்து அதிகாரத்தைக் கைபிடிக்க வியூகம் வகுத்துள்ளனர் என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர வேண்டும். அவர்களை உணர்ந்திட வைப்பதே நமது முக்கிய பணியாகும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...