தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றல்கள் அளப்பரியன என்பது நாடு அறிந்ததே.
எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளிட்டவை-களில் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்கிற அளவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றாலும், கட்டடக் கலையிலும் கூட கூர்த்த மதிநுட்பம் மிக்கவர் என்பதன்மூலம் சகலகலா வல்லுநர் என்னும் பெருமைக்கு உரியவர் ஆகிறார்.
கலைஞர் அவர்களே பலமுறை சொல்லி-யுள்ளபடி, ஏன் தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவிலேயே குறிப்பிட்-டுள்ள-படி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாமான்யர்தான் கலைஞர்,- பார்ப்பனர் அல்லாதார் என்ற நிலையால், இந்நாட்டு ஊடகங்கள் (பெரும்-பாலும் ஆரியக் கூட்டத்தின் கையிருப்பில்தானே!) அவரை உயர்த்திப்பிடிக்க வேண்டிய சாதாரண கடமையைக் கூடச் செய்ய மறுக்கின்றன. எங்-காவது ஒட்டடை அவர் மேல் ஒட்டிக் கொண்-டிருக்கிறதா என்று தேடித்தடி பூதாகாரப்படுத்து-வதில்தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்து கொண்டிருக்கிறது.
என்னதான் அவர்கள் இருட்டடிப்பு செய்யப் பார்த்தாலும் உலக அளவில பீடுறும் சிறப்புக்-குரியவர் என்று பலதரப்பினரும் பாராட்டும் அளவுக்குப் புதிய கட்டடம் வானளாவி நிற்கிறதே. அதனை என்ன செய்ய முடியும்?
கலைஞரின் செயல்திறனை புத்தாக்கப் பெருமையை யார் நினைத்தாலும் மறைத்துவிட முடியாது.
திராவிடர் கட்டடக் கலை அம்சத்தையும் உள் வாங்கிக் கொண்டு, புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்குவதில் அவர் அல்லும் பகலும் காட்டிய ஆர்வம், -கொடுத்த ஊக்கம் அசாதாரணமானவை. 86 வயதுக்குள் குடிகொண்டிருக்கும் இளமை வீறுகொண்டு நிற்கும் விந்தையை இவரிடம் காண முடிகிறது.
முதுமை, இளமை என்பது ஆண்டுகளைப் பொறுத்ததல்ல, உணர்வுகளைப் பொறுத்தது என்று வாழ்ந்து காட்டிய வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வீறு நடைபோடும் அந்த உறுதிதான் அதே இடத்தில் அவரை வார்த்து எடுத்திருக்கிறது.
அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லும்போது பொதுத் தொண்டை, ஒரு கலையாக மாற்றியவர் என்றார். - அந்தக் கலை உணர்வு கலைஞரிடம் காணப்-படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!
அண்ணா சாலையில், அண்ணா சிலை வழியாக, பகுத்தறிவுக் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றிக் கொண்டுதான் புதிய சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய வேண்டும்.
சட்டமன்றத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு-வரும் தந்தை பெரியார் யார்? அவரின் பிரதம சீடரான அண்ணா யார்? எந்த கொள்கை-களுக்-காக அவர்கள் வாழ்ந்தார்கள்? பொதுத் தொண்-டினைத் தொண்டறமாக உருவாக்கிய அந்த மாமனிதர்களின் மானமிகு உணர்வுகள் என்னென்ன?
பிரதமர் அவர்கள் திறப்பு விழாவில் சுட்டிக்-காட்டினார்; திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை, சமத்துவச் சிந்தனைகள் இவற்றை அசை போட்டுக் கொண்டுதான் சட்டமன்ற வளாகத்துக்குள்ளே நுழையமுடியும், நுழையவும் வேண்டும்.
இது ஏதோ குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் மண்ணின் உளவியல் (Soil Psychology) என்பது இந்த வகையிலே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவிலேயே எந்த மாநில சட்ட மன்றத்திலும் நிறைவேற்றப்பட முடியாத சமூகப் புரட்சி சார்ந்த சட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டு சட்டமன்றத்-தில்தான் நிறைவேற்றப்பட்டன என்றால், அதற்குக் காரணம் இந்த அடித்தளம்தான்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூக சீர்திருத்த உணர்வு தலை தூக்கி நிற்கிறது. அதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ராமாசாமிதான் என்று அமெரிக்காவின் ஜான் ரைட்லி போன்ற மூத்த பேராசிரியர்கள் கருத்து என்பதையும் கவனத்தில் கொண்டால் தமிழ்நாட்டின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
சட்டமன்றத்தின் புதிய கட்டடம்_ வளாகம் உருவாக்கப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைகளில் பிறழ்வு இல்லாமல் மேலும் வீறுநடை வளர்ச்சிப் போக்கு காணப்படட்டும்!
No comments:
Post a Comment