Monday, March 2, 2020
இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்யும் டிரம்பை சாடும் பெர்னி சாண்டர்ஸ்
இந்தியா வுக்கு ஆயுத விற்பனை செய்வ
தற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் பதவிக் கான வேட்பாளர்
பெர்னி சாண்டர்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது குடும்பத்துடன் வந்து சென்ற
அமெரிக்க அதி பர் டிரம்ப் க்கு இந்தியாவில் கோலாகல வரவேற்பு அளிக்
கப்பட்டது. இதற்காக குஜராத் அரசு சார்பில் ரூ.100 கோடி செலவு
செய்யப்பட்டுள்ளது. டிரம்ப் வருகைக்கு இத்தனை ஆடம்பர செலவுகள் செய்வ
தற்காக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டிரம்ப்புக்கு
குடியரசுத் தலை வர் மாளிகையில் அளிக்கப் பட்ட விருந்தை காங்கிரஸ் கட்சி
புறக்கணித்தது.
அமெரிக்க அதிபரின் தனது இந்தியா வருகையின்
போது எவ்வித பொருளாதார ஒப்பந்தமும் கையெழுத்தா காது என அரசு தெரிவித்தி
ருந்தது. இரு நாட்டுத் தலை வர்களும் அரசாங்க ரீதியான பேச்சு
வார்த்தையில் மட் டுமே ஈடுபடுவார்கள் என கூறப்பட்டது. கடந்த ஆண்டு
அமெரிக்கா இந்தியாவை விருப்பமான வர்த்தக நாடு கள் பட்டியலில் இருந்து
நீக்கி வளர்ந்த நாடு என அறிவித் தது.
இது குறித்து எவ்வித கலந்துரையாடலும்
நடந்த தாகத் தெரியவில்லை. அமெ ரிக்க அதிபர் டிரம்ப் தான் செல்லும்
நாடுகளுடன் பாது காப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளார். அந்த வகை யில் தற்போது இந்திய வருகை யின் போதும் பாதுகாப்பு
உபகரணங்கள் விற்க ஒப்பந் தம் இட்டுள்ளார்.
இதற்கு அமெரிக்கக் குடிய ரசுக் கட்சியின்
தலைவர்களில் ஒருவரும் அதிபர் வேட்பாள ருமான பென்னி சாண்டர்ஸ், கடும்
எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இந்தியாவுக்கு வந்த டிரம்ப் பருவ நிலை
மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஒப்பந்தங்கள் ஏதும் செய்யாமல்
ஆயுத விற்பனை ஒப்பந்தம் செய்திருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் தின போட்டிக்கு... ஓவியம், கட்டுரை, கதை வரவேற்பு
தேசிய அறிவியல் தினத்தையொட்டி
நடத்தப்படும் ஓவியம், கட்டுரை, கதை போட்டிக்கு பள்ளி மாணவர்கள்,
பொதுமக்களிடமிருந்துபடைப்புகள் வரவேற்கப் படுகின்றன.
இது குறித்து புதுச்சேரிஅறிவியல் இயக்க
தலைவர் சேகர் விடுத்துள்ள அறிக்கை:- தேசிய அறிவியல் தினத்தையொட்டி மூன்று
பிரிவுகளில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஓவியப்போட்டி: இதில்,
5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர் பெண்
விஞ்ஞானி என்ற தலைப்பில் ஏ-4 வெள்ளை பட தாளில் (சார்ட் ஷீட்) ஓவியம்
வரைந்துஅனுப்ப வேண்டும். ஓவியம் வண்ணமிடலாம்.ஓவியத்துடன் அவசியம் பள்ளி
படிப்பு சான்றிதழ் இணைத்து அல்லது பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் பெற்று
அனுப்பிட வேண்டும்.
கட்டுரை போட்டி: இதில் 9ஆம் வகுப்பு முதல்
பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் 'அறிவியலில் பெண்கள்' என்ற தலைப்பில் 2 ஆயிரம்
வார்த்தைக்கு மிகாமில் ஏ-4 தாளில் ஒரு பக்கத்திற்கு 15முதல் 18 வரிகள்
வீதம் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரையுடன் பள்ளி படிப்பு
சான்றிதழ் இணைத்தோ அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்து பெற்று
அனுப்பிடவேண்டும்.
கதை போட்டி: மக்கள் அறிவியல் அறியவும், அவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் கதை எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்போர் 'யார் விஞ்ஞானி' என்ற
தலைப்பில் எட்டு பக்கத்திற்கு மிகாமல் ஏ-4 தாளில் ஒரு பக்கத்திற்கு 15
முதல் 18 வரிகள் வீதம் கதை எழுதி அனுப்ப வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட
புதுச்சேரி மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
அனைத்து போட்டியாளர்களும் மார்ச் 5 ஆம்
தேதிக்குள் தங்கள் படைப்புகளை துணை தலைவர், அறிவியல் இயக்கம், 40, உடையார்
வீதி, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி -605008 என்ற முகவரிக்கு வந்து சேர
வேண்டும்.
படைப்பில், மொபைல் எண் குறிப்பிட
வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 9489771796 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
"ஆதார்" எடுக்க முடியாதோருக்கு இனி தனி குடும்ப அட்டை
'ஆதார்' கார்டு எடுக்க முடியாத அளவுக்கு,
உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் களுக்கு மட்டும், தனி குடும்ப அட்டைகளை
வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமி ழக உணவு பங்கீட்டுக் கடை களில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப் படுகின்றன.
இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.
மத்திய அரசின், 'ஆதார்' எண் விபரங்கள் அடிப் படையில், உணவு வழங்கல் துறை
சார்பில்,கையடக்க வடி வில், 'ஸ்மார்ட்' குடும்ப அட் டைகள்
வழங்கப்படுகின்றன.இதனால், ஒரே நபர், பல முகவரி களில் கார்டுகள் வாங்குவது
தடுக்கப்பட்டு உள்ளது. பிறக்கும் போது, கைகள் செயல்படாத வர்கள்;
விபத்துக்களால், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்
களால், 'ஆதார்' அட்டை எடுக்க முடியவில்லை.
ஆதார் இல்லாததால், அவர்களுக்கு, ஸ்மார்ட்
குடும்ப அட்டை வழங்க முடிவ தில்லை. இதனால், உணவுப் பொருட்கள் வாங்க
முடியாமல், அவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, ஆதார் அட்டை வாங்க முடியாத அள
வுக்கு, உடல் நலம் குன்றியவர் களுக்கு, ஆதார் இல்லாமல், குடும்ப அட்டை
வழங்குமாறு, உணவு வழங்கல் துறைக்கு, மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்தது.
ஆனால், ஆதார் எண் பதிவு செய்யாமல், குடும்ப அட்டை வழங்க முடியாத அளவுக்கு, மென்பொருள் உரு வாக்கப்பட்டு உள்ளது.
எனவே, ஆதார் எடுக்க முடியாத நபர்களுக்கு
மட்டும், ஸ்மார்ட் கார்டுக்கு மாற்றாக, காகித வடிவில், தனி குடும்ப
அட்டைகளை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கணினி திறனை மேம்படுத்த "அய்டெக் லேப்" வசதி முழுமையாக அமல்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்த, "அய்டெக் - லேப்" அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்ததும்,
உயர்க்கல்விக்கு செல்லும் போது, அதற்கான நுழைவுத்தேர்வு,
போட்டித்தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும், கணினி சார்ந்தவையாகவே
உள்ளன. இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணினிப் பயிற்சியை வழங்க
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப
ஆய்வகம் (அய் டெக் - லேப்) அமைக்கும் பணி துவங்கியுள்ளது. உயர்நிலைப்
பள்ளிகளில், 11 கணினிகளும், மேல்நிலைப்பள்ளிகளில், 21 கணினிகளும் வழங்கப்பட
உள்ளன. கடந்த மாதம், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு,
கணினி வழியில் திறன் சோதனை தேர்வுகள் நடத்தப்பட்டன.
புதிய பாடத்திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடம் சார்ந்த விரிவாக கூடுதல்
தகவல்களுக்கு, 'க்யூஆர்' கோடு என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த
வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பாடவாரியாக, எளிமையான முறையில் பதிவேற்றம்
செய்து புரிந்து கொள்வது, இணையதளத் தேர்வு குறித்த தெளிவுகளை பெறுவது என
பல வகைகயில் மாணவர்களுக்கு, "அய்டெக் லேப்"பில் பயிற்சிகள் அளிக்கப்பட
உள்ளன.
அதற்கேற்ப, ஒவ்வொரு வகுப்புக்கும்
வாரத்துக்கு, இரண்டு பாட வேளை, கணினி சார்ந்த வகுப்புக்கு முக்கியத்துவம்
அளிக்கும் வகையில், கால அட்டவணை தயார் செய்யப்பட உள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப் பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
காந்தியாரின் மார்பில் புகுந்த 3 தோட்டாக்கள்
என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ -
காந்தியார் பேரன் துஷார் காந்தி ஆவேசம்
மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக, இந்திய மக்கள் இரண்டாவது சுதந்திரப்
போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக, காந்தியாரின் பேரன் துஷார் காந்தி
கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,
மக்கள் தொகை பதிவேடு ஆகியவை காந்தியின் மார்பில் புகுந்த 3 தோட்டாக்கள்
என்றும் துஷார் காந்தி குறிப்பிட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துஷார் காந்தி மேலும் பேசியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு
எதிராக, நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்
தொகை பதிவேடு ஆகியவை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை
ஏற்படுத்தக் கூடியவை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஒருதலைப்பட்சமாக
இயற்றப்பட்ட முதல் சட்டம் ஆகும். இது நமது அரசமைப்பின் ஆன்மாவிற்கு
எதிரானது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய
குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை எதிர்ப்பவர்கள் அனைவரும்
முஸ்லிம் அல்லது முஸ்லிம் சார்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதன்
பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இந்த இரண்டு சட்டங்களும்
பணக்காரர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரத்தில்
தொலைதூரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் வாழும் ஏழை மக்கள் இதனால்
பாதிக்கப்படுவார்கள். இந்த மக்கள் அரசாங்க அதிகாரிகளின் முன் தங்களை
நிரூபிக்க வேண்டும். எனவேதான், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய
குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இரண்டாவது
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு துஷார் காந்தி பேசியுள்ளார்.
சொந்த நாட்டு மக்களையே இந்திய அரசு அச்சுறுத்துகிறது!
அமெரிக்க செனட்டர்கள், அதிபர் வேட்பாளர்கள் குற்றச்சாட்டு
டில்லியில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை அமெரிக்க அரசியலிலும் புயலைக் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்,
இந்தியப் பயணம் மேற் கொண்டிருந்த நேரத்தில் இந்த வன்முறை நடந்ததும்,
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, டிரம்ப் மழுப்பலாக
அளித்த பதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. டிரம்பின் வெளியுறவுக்
கொள்கை சரியில்லை. அவர் இந்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக் கிறார்.
கலவரத்தை அவர் கண்டிக்க வில்லை.
இந்தியாவுடன் அவரது உறவு ஆக்கப்பூர்வமானதாக இல்லை. தேர்தல் சார்ந்ததாக,
விளம்பரம் சார்ந் ததாக மட்டுமே உள்ளது என்று அங் குள்ள எதிர்க்கட்சிகள்
குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பில், அமெரிக்க அதிபர்
தேர்தலில் போட்டியிட விரும்பும், பெர்னி சாண்டர்ஸ், “டில்லிவன்முறையானது,
தலைமைத்துவத்தின் தோல்வி” என்று டிரம்ப்- மோடி ஆகிய இருவரையுமே மறைமுகமாக
குறிப்பிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு விமர்சனம் வைத்திருந்தார்.
தற்போது, மேலும் பல அமெரிக்கத் தலைவர்களும் டில்லி வன்முறைக்கு கண்டனம்
தெரிவித்துள் ளனர்.
“இந்தியாவில் நடக்கும் வன் முறையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று, அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் கண்டித்துள்ளார்.
“டில்லியில் நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சி
அளிக்கின்றன. இது மிகப் பெரிய எச்சரிக்கை மணி. இரண்டு நாட்டு உறவில்
இதுபோன்ற வன் முறைகள் பெரிய பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்தும்” என்று
மற்றொரு செனட்டரான மார்க் வார்னர் குறிப்பிட்டுள்ளார். “டில்லி யில்
நடக்கும் வன்முறை கவலை அளிக்கிறது. இந்தியாவில் மத வெறியும், இன வெறியும்
உச்சம் அடைந்துள்ளது. அங்கு பன்முகத் தன்மை குறைந்து விட்டது. மதச்
சுதந்திரம் போய் விட்டது. பொது இடத்தில் கூட மோசமான வன்முறைகள் காவல்துறை
முன்னிலையில் நடக்கின்றன” என்று, அமெரிக்க எம்.பி. ஜேமி ரஸ்கின்
கூறியுள்ளார்.
“இந்தியாவில் உள்ள இஸ் லாமியர்கள்
கொடுமைப்படுத்தப்படு கின்றனர். அவர்கள் எல்லோரும் அந்நாட்டின் குடிமகன்கள்.
ஆனால், அரசு அவர்களை அச்சத்திற்கு உள் ளாக்கி உள்ளது. தங்களின் அரசியல்
லாபத்திற்காக இவ்வாறு செய்துள்ளது” என்று அமெரிக்க வெளிநாட்டு கவுன்சில்
தலைவர் ரிச்சர்ட் என் ஹாஸ் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக கட்சி யின் மற்றொரு
அதிபர் வேட்பாளரான துளசி கப்பார்ட் மட்டும், கருத்து எதையும்
தெரிவிக்கவில்லை. அவர், பாஜகவிற்கு நெருக்கமானவர் என்றும், அவரின் தேர்தல்
செலவுக்கு பாஜக நிதியுதவி செய்வதாகவும் ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.
இது ஜனநாயக கட்சிக்குள் அவருக்கு
பின்னடைவையும் அளித்துள்ளது. மோடியை எதிர்க்கும் இடதுசாரி சிந்தனை கொண்ட
பெர்னி சாண்டர்ஸ் முன்னிலை வகித்து வருகிறார்.
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...


