Monday, March 2, 2020

தேசிய அறிவியல் தின போட்டிக்கு... ஓவியம், கட்டுரை, கதை வரவேற்பு

தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடத்தப்படும் ஓவியம், கட்டுரை, கதை போட்டிக்கு பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடமிருந்துபடைப்புகள் வரவேற்கப் படுகின்றன.
இது குறித்து புதுச்சேரிஅறிவியல் இயக்க தலைவர் சேகர் விடுத்துள்ள அறிக்கை:- தேசிய அறிவியல் தினத்தையொட்டி மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஓவியப்போட்டி: இதில், 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர் பெண் விஞ்ஞானி என்ற தலைப்பில் ஏ-4 வெள்ளை பட தாளில் (சார்ட் ஷீட்) ஓவியம் வரைந்துஅனுப்ப வேண்டும். ஓவியம் வண்ணமிடலாம்.ஓவியத்துடன் அவசியம் பள்ளி படிப்பு சான்றிதழ் இணைத்து அல்லது பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் பெற்று அனுப்பிட வேண்டும்.
கட்டுரை போட்டி: இதில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் 'அறிவியலில் பெண்கள்' என்ற தலைப்பில் 2 ஆயிரம் வார்த்தைக்கு மிகாமில் ஏ-4 தாளில் ஒரு பக்கத்திற்கு 15முதல் 18 வரிகள் வீதம் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரையுடன் பள்ளி படிப்பு சான்றிதழ் இணைத்தோ அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்து பெற்று அனுப்பிடவேண்டும்.
கதை போட்டி: மக்கள் அறிவியல் அறியவும், அவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் கதை எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்போர் 'யார் விஞ்ஞானி' என்ற தலைப்பில் எட்டு பக்கத்திற்கு மிகாமல் ஏ-4 தாளில் ஒரு பக்கத்திற்கு 15 முதல் 18 வரிகள் வீதம் கதை எழுதி அனுப்ப வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட புதுச்சேரி மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
அனைத்து போட்டியாளர்களும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் தங்கள் படைப்புகளை துணை தலைவர், அறிவியல் இயக்கம், 40, உடையார் வீதி, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி -605008 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
படைப்பில், மொபைல் எண் குறிப்பிட வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 9489771796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...