Monday, January 6, 2020

மருத்துவக் கல்லூரிகளின் 1000 பேராசிரியர்கள் கூண்டோடு பதவி விலகல்; நோயாளிகள் அவதி

மத்தியப்பிரதேச மருத்துவக் கல்லூரி களின் பேராசிரியர்கள் கூண்டோடு பதவி விலகியுள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
7 வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் மற்றும் சலுகைகளில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மத்திய பிரதேச மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   மாநில அரசு அவர்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. தங்களது கோரிக் கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.   பதவி விலகல் முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள்  ஜனவரி 9 முதல் டூட்டி அறிக்கை அளிக்க மாட்டார்கள் என்று மத்திய மருத்துவ ஆசிரியர் சங்கத்தின் மாநில பிரிவு செயலாளர் டாக்டர் ராகேஷ் மால்வியா தெரிவித்தார். மற்ற கல்லூரிகளில் இருந்து மீதமுள்ள 2,300 ஆசிரியர்கள் வெள்ளிக் கிழமைக்குள் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதனால் 13 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நிலை மை கேள்விக்குறியாகி உள்ளது. இதில் காந்தி மருத்துவக் கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் போர் மூளும் அபாயம் அதிகரிப்பு

அமெரிக்கா வின் ஆளில்லா விமான தாக் குதலில், ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈராக்கில் நடந்த அவரது இறுதிச் சடங்கு அணிவகுப்பில் மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெ ரிக்கா-ஈரான் இடையேயான உறவு படிப்படியாக மோசம டைந்து வருகிறது. ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படை மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சமீபத்தில் சூறையாடப்பட் டது.
இத்தாக்குதலை அமெ ரிக்கா நடத்தியதா என்பது குறித்தும் உறுதி செய்யப்பட வில்லை.
உலக நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அடுத் தடுத்த நாட்களில் ஈராக்கில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், அமெரிக் காவும் வளைகுடா நாடுகளில் தனது படையை அதிகரித்து வருகிறது. ஈராக்கில் அமெ ரிக்க தூதரகம் தாக்கப்பட் டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 ராணுவ வீரர் களை பாக்தாத்துக்கு அனுப் பிய அமெரிக்கா, சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3,500 வீரர்களை குவைத்துக்கு அனுப்பி உள்ளது.

லிபியா ராணுவ பள்ளி மீது வான்வெளி தாக்குதல்: 28 பேர் பரிதாப பலி

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதி காரி கடாபி, 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரம டைந்துள்ளது. பல்வேறு ஆயு தக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட் டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக் கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டை யில் சுமார் 400 பேர் கொல் லப்பட்டுள்ளனர். கிட்டத் தட்ட 2 ஆயிரம் பேர் காய மடைந்துள்ளனர். 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத் தப்பட்டது. இந்த தாக்குதலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேர் பரிதாபமாக பலியாகி னர். மேலும் 12க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகா ரிகள் தெரிவித்தனர்.

5ஜி வசதி கொண்ட மடிக்கணினி சாதனம் அறிமுகம்


டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய மடிகணினி லேட்டிடியூட் 9510 பெயரில் பன்னாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 15 இன்ச் மடிகணினி 15 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக் கிறது. இது லேப்டாப் மற்றும் 2 இன் 1 என இருவிதங்களில் கிடைக்கிறது.
டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் 15-இன்ச் இன்ஃபி னிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது 14 இன்ச் நோட்புக் அளவிலும் கிடைக்கிறது. இதன் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடு திரை வசதி வழங்கப்பட்டுள் ளது. புதிய மடிகணினியில் இன்டெல் கோர் அய்7 பிரா சசர் வழங்கப்பட்டுள்ளது.
இதில் இன்டெல் வைபை 6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிம னாக இல்லாமல், மெல்லிய தாக இருக்க வழி செய்திருக் கிறது. இத்துடன் கார்பன் பிளேடு ஃபேன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப் பட்டுள்ளது.
மேலும் புதிய மடிகணினி யில் ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோ போன்களை கொண்டிருக்கி றது. இதுதவிர இன்டெலி ஜண்ட் ஆடியோ தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ் அழைப் புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும்.
டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது மடிகணினியை 35 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. மேலும் இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் வழங்கப்பட்டுள் ளன.
பன்னாட்டு சந்தையில் டெல் லேட்டிடியூட் 9510 விற்பனை மார்ச் 26ஆம் தேதி துவங்கும் என்றும் இதன் விலை 1799 டாலர்கள் (இந் திய மதிப்பில் ரூ. 1,29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மீண்டும் அணுஆயுத சோதனை- வடகொரியா பிரதமர்


உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொ ரியா தலைவர் கிம் ஜாங் அன் னும் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசினர்.
வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை உள்பட அனைத்து வகையான அணுஆயுத சோத னைகளையும் நிறுத்திவைப் பதாக அமெரிக்காவுக்கு வட கொரியா வாக்குறுதி அளித் தது.
அதன்படியே வடகொ ரியா அணுஆயுத சோதனை களை நிறுத்தியது. இதற்கு பிரதிபலனாக தங்கள் நாட் டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்தது.
ஆனால் அமெரிக்காவோ, அணுஆயுதங்களை முழுமை யாக கைவிட்டால் மட்டுமே பொருளாதார தடைகள் திரும்ப பெறப்படும் என்பதில் உறுதியாக உள்ளது. இத னால் இரு நாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப் பட்டு உள்ளது.
இந்த நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை மற்றும் அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வட கொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவில் பதற்றம் நீடிக்கும் சூழலில் நாட்டின் பாது காப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் 4 நாட்கள் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட் டத்தின் முடிவில் கிம் ஜாங் அன் முக்கிய முடிவுகளை அறிவித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்கொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற் கொண்டு, தங்கள் பொருளா தார தடைகளை முடுக்கி விட்டதால், வடகொரியா தாமாகவே அறிவித்த அணு ஆயுத சோதனை தடைக்கு இனி கட்டுப்பட தேவையில்லை.
வாக்குறுதிகளை நிறை வேற்ற நாம் மட்டும் அர்ப் பணிப்புடன் செயல்படுவது ஒரு தலைபட்சமானது. அதை நாம் இனியும் தொடரு வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
உலக அணுஆயுத குறைப் புக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பொய்யாக்கப்பட்டு விட் டன. எனவே நாம் மீண்டும் அணுஆயுத சோதனைக்கு திரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வடகொரியாவில் இருந்து புதிய வகையிலான ஒரு அணு ஆயுதத்தை எதிர் காலத்தில் உலகம் காணும் என அவர் கூறினார். எனினும் அவர் புதிய அணுஆயுதம் தொடர்பாக கூடுதல் தகவல் களை தெரிவிக்கவில்லை.
அணுஆயுத சோதனைக்கு திரும்புவதாக கிம் ஜாங் அன் கூறினாலும் அமெரிக்காவுட னான பேச்சுவார்த்தைக்கான கதவை மீண்டும் திறந்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அணுகுமுறைகளை பொறுத்தே அணுஆயுத சோதனைகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் 1070 பேராசிரியர் பணியிடங்கள் காலி

அரசு பொறியி யல் கல்லூரிகளில் 1,070 பேராசிரி யர் பணியிடங்கள் காலியாக உள் ளதால் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் பாதிக்கப்படுவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 500-க் கும் அதிகமான பொறியியல் கல் லூரிகள் இயங்குகின்றன. அதில், 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், 19 உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 32 கல்லூரிகள் செயல்பட்டு வருகின் றன. இதில் 65 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதற்கிடையே அரசு பொறியி யல் கல்லூரிகளில் 1,070 பேராசிரி யர் பணியிடங்கள் காலியாக உள் ளன. அண்ணா பல்கலைக்கழகத் தின் உறுப்புக் கல்லூரிகளில் மட் டும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரி யர் காலிப் பணியிடங்கள் உள் ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக் கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், 133 ஆசிரியர் பணியிடங் களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. ஒட்டு மொத்தமாக 1,070 பணியிடங்கள் வரை காலி யாக இருக்கும் நிலையில், வெறும் 133 இடங்களை மட்டும் நிரப்பும் அரசின் முயற்சி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Tuesday, December 31, 2019

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்க ளூரு நகரில் கருநாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோ ருக்கு அறிவித்த உதவித்தொகையை அம் மா நில முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார் மங்களூரு போராட்டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இறந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா. பெங்களூருவின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேராட் டங்கள் வெடித்து தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினார். எடியூரப்பா. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மங்களூரு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருக்கும் அதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தொடர்பிருப்பது உறுதியானால், அவர்களின் குடும்பங்களுக் கான உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்றார். கருநாடக முதல்வரின் இத்தகைய முடிவு சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற் படுத்தியுள்ளது.


நான் உயி ரோடு இருக்கும்  வரை  குடி யுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு  வங்கத்தில்  செயல்படுத்த  விட மாட்டேன்’ என  அந்த  மாநில  முதல் வர் மம்தா பானர்ஜி தெ ரிவித்தார்.
மேற்குவங்க  மாநிலம், வடக்கு பார்கனாஸ் மாவட்டம்,  நைஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  வெள்ளிக்கிழமை அவர்  பேசியதாவது:-
‘சர்ச்சைக்குரிய  குடியுரிமை  திருத்தச்  சட்டத்துக்கு  எதிராக  நாடு  முழுவதும் மாணவர்கள் நடத்தி  வரும்  போராட்டத்தை  நான்  ஆதரிக்கிறேன். 18  வயது  பூர்த்தியானதும்     ஒரு அரசாங்கத்தை  தேர்ந்தெடுக்கும் உரிமையை  அரசமைப்புச்  சட்டம்  அவர்களுக்கு  வழங்கும்போது, அரசுக்கு  எதிர்ப்பு  தெரிவிக்க அவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் உரிமை இல்லையா?
நான் உயிருடன் இருக்கும்   வரை   குடியுரிமைதிருத்தச் சட்டத்தைமேற்கு வங்கத்தில் செயல்படுத்த  விடமாட்டேன்.நாட்டு  மக்களின்  உரிமைகளை யாரும் பறித்து விடமுடியாது.
யாரும் நாட்டைவிட்டு    அல்லது    மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. மேற்குவங்கத்தில்  எந்த  தடுப்புக்காவல் மையமும் அமைக்கப்பட மாட்டாது.
இந்த கடுமையான சட்டத்துக்கு  எதிராக  மாணவர்கள் ஏன் போராட்டங்களை  நடத்தி  எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடாது?  எதிர்ப்பு  தெரிவிக்கும்  மாணவர்களுக்குஎதிராக மத்திய அரசு நடவடிக்கை  எடுத்து  வருகிறது.
மேலும்  அவர்களை பல்கலைக்  கழகங்களிலிருந்து  இடைநீக்கம்  செய்வது  போன்ற  நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகிறது.
ஆரம்பத்தில்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறைவேற்ற பா.ஜ.க. முன்வந்த போது, அவர்களின் நோக்கத்தை நாங்கள்  உணரவில்லை.
ஆனால்,  நாட்டின்  குடிமக்களை  தனிமைப் படுத்துவதுடன்  இது  தொடர்புடையது என்பதை அறிந்தபோது, மேற்குவங்கத்தில் அதனை நிறுத்தி விட்டோம்.  மக்களுக்கு  ஆபத்தை  விளைவிக்கும்  எந்தச்  செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம்.
பிற்படுத்தப்பட்ட ஜாதி  சமூகங்களிடையே பிளவுகளை   உருவாக்க மத்திய  அரசு  முயற்சிக்கிறது.
மேற்கு  வங்கத்தில் 94 அகதிகள் முகாம்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இருப்பினும்,  தனியார்  மற்றும் மத்திய  அரசு  நிலங்களில் உள்ள  அனைத்து  அகதிகள் முகாம்களுக்கும் அங்கீகாரம்  வழங்க  மாநில அரசு  முடிவு  செய்துள்ளது.
வங்க மொழி பேசுபவர்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும்  பிரிக்க  மத்திய  அரசு விரும்புகிறது.  அவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள்,  கிறிஸ்தவர்கள்  மற்றும்   பவுத்தர்களைப்பிரிக்க  விரும்பு கிறார்கள். நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்று பேசினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...