தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி
இயக்ககத்தின் கீழ் 500-க் கும் அதிகமான பொறியியல் கல் லூரிகள்
இயங்குகின்றன. அதில், 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், 19
உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 32 கல்லூரிகள் செயல்பட்டு வருகின் றன.
இதில் 65 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதற்கிடையே அரசு பொறியி யல் கல்லூரிகளில்
1,070 பேராசிரி யர் பணியிடங்கள் காலியாக உள் ளன. அண்ணா பல்கலைக்கழகத் தின்
உறுப்புக் கல்லூரிகளில் மட் டும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரி யர் காலிப்
பணியிடங்கள் உள் ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக் கப்படுவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், 133 ஆசிரியர் பணியிடங் களை
தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் கடந்த வாரம்
வெளியிட்டது. ஒட்டு மொத்தமாக 1,070 பணியிடங்கள் வரை காலி யாக இருக்கும்
நிலையில், வெறும் 133 இடங்களை மட்டும் நிரப்பும் அரசின் முயற்சி
பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
No comments:
Post a Comment