Thursday, December 5, 2019

பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம் பாரீர்!

இரயில்வே துறை வீழ்ச்சி
2017-2018 நிதியாண்டில் இரயில் வேயின் வருவாய் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் வீழ்ச் சியைச் சந்தித்துள்ளது.
2016-2017 ஆம் ஆண்டில் கூடு தல் வருவாய் ரூ.4913 கோடியாக இருந்தது.
2017-2018 ஆம் ஆண்டிலோ ரூ.1665 கோடியாக வீழ்ச்சி அடைந்தது.

மாதர் சங்க நடைபயணத்துக்குத் தடையும் - கைதும் ஏன்?

பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், மதுக் கடைகளை மூடவும் கோரி வடலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினரை (சி.பி.எம்.) தாம்பரத்தில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த இரு கோரிக்கைகளும் அ.தி.மு.க. அரசுக்கு உடன்பாடு அற்றவையா?
தடையை மீறினார்கள் என்பதற்காக காவல்துறை அத்துமீறி நடந்துகொண் டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம், கருத்துரிமை என்பதெல்லாம் பேணப்பட வேண்டிய  சட்ட ரீதியான உரிமையாகும்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

காவல்துறை தேர்வுக்கு திருநங்கையரை அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

'காவல்துறைப் பணிக்கான உடல் தகுதித் தேர்வுக்குத் தயாராகியுள்ள திரு நங்கையர் அய்ந்துபேரை அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில், தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கையர் சாரதா, தேன்மொழி, சென் னையைச் சேர்ந்த தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். சாரதா 32மதிப்பெண்கள், தேன்மொழி 30மதிப் பெண்கள், தீபிகா 32மதிப்பெண்கள் பெற்றனர். இவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவுக்கு நிர்ண யிக்கப்பட்ட, 44மதிப்பெண் எடுக்காததால், உடல் தகுதி தேர்வுக்கு, இவர்களை அழைக்க வில்லை.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மூவர் உள்ளிட்ட அய்ந்து திருநங்கையர், மனுக் கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.
உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள, அய்ந்து பேரையும் அனுமதிக்கவும், அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை, சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும், சீருடை பணியாளர் தேர் வாணையத்துக்கு, நவம்பர் 14இல், நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 'இந்த உத்தரவை நிறை வேற்றவில்லை' என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், வழக்குரைஞர் ஆஜராகி தெரிவித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இடைக்கால உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். விதிகளில் திருத்தம் வராமல் நிவாரணம் பெற, திருநங்கையருக்கு உரிமையில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
மற்ற சாதாரணமான வழக்குகளை போல, இந்த மனுக்களை கருத முடியாது. திருநங்கை யருக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருதி, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, நவம்பர் 14இல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை, நாளைக்குள் நிறைவேற்ற வேண்டும். உத்தரவை நிறைவேற்ற வில்லை என்றால், இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடவடிக்கை முழுவதற்கும், தடை விதிக்கப் படும். எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கை தாக்கல் செய்ய, நாளை மறுநாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப் படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

பாஜகவை விட்டு விலகிச் செல்லும் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் மகாராட்டிராவில் காலியாகும் பாஜக கூடாரம்

மகாராட்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக இருந்த  இரு மூத்த தலை வர்கள் கட்சித் தலைமை பிற் படுத்தப்பட்ட மக்களை வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பயன் படுத்திவருவதாக கூறி கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.
மகாராட்டிராவில் சட்டப் பேரவை தேர்தலில் அதிக உறுப்பி னர்களைக் கொண்ட கட்சி எனப் பெயர் பெற்ற போதிலும் பாஜக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வ ராகப் பதவி ஏற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலை இருந்தது.  அதை யொட்டி தேவேந்திர பட் நாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரா மலேயே பதவி விலகினார்.
அடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வ ராகப் பதவி ஏற்று நம்பிக்கை வாக் கெடுப்பு கோரினார்.   பா.ஜ.க.வுக்கு அவையில் போதுமான பெரும் பான்மை இல்லாததால் பாஜக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.  அடுத்ததாகச் சபாநாயகர் தேர்தலில் தோல்வி பயத்தால் பாஜக வேட் பாளர் போட்டியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் நானா படேல் போட்டியின்றி சபாநாய கர் ஆனார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களான பங்கஜா முண்டே மற்றும் எக்நாத் காட்சே ஆகியோர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படு கிறது.   இருவருமே பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இருவருக்கும் அவர்கள் சமூகத்தில் நல்ல ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது.   அவர்களது ஆதரவாளர்கள் தங்கள் தலைவர் களிடம்  பாஜக தலைமை அநியாய மாக நடந்து கொண்டதாக எண்ணி வருகின்றனர்.
குறிப்பாக பங்கஜா முண்டேவின் ஆதரவாளர்கள் அவர் முதல்வராக வருவார் என எதிர்பார்த்திருந்தனர்.   ஆனால் தேவேந்திர பட்நாவிஸ் அவர் எதிர்க்கட்சியுடன் நட்புடன் இருப்பதாகக்  கதை கட்டி அவரை தோற்க வைத்ததாக அவர்கள் எண்ணி வருகின்றனர்.
இவருடைய சகோதரரும் தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினருமான தனஞ்சய் முண் டேவை காரணம் காட்டி இவருக்கு எதிராக பட் நாவிஸ் காய் நகர்த்தி முதல்வ ரானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பங்கஜா முண்டே  மற்றும் எக்நாத் காட்சே இருவரும்  கட்சியை விட்டு வெளி யேறலாம் எனக் கூறப்படுகிறது. இதன் அறிகுறியாக அவர்கள் தங்களின் ஆதரவாளர்களிடம் பாஜக கூட்டங்களின் போது தங்கள் படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதே போல் சமூகவலைதளத்தில் தங்கள் கட்சி என்ற இடத்தில் பாஜக என்பதை நீக்கிவிட்டனர். இதில் எக்நாத் கட்சே  மகாராட் டிராவில் ஜனசங்கம் காலத்தில் இருந்தே பாஜகவின் முக்கியதலைவராக இருந் தார். மகாராட்டிராவில் பாஜகவை வளரவைத்ததில் முதன்மையான தலைவர் இவர் ஆவார்.
ஆனால் 2014-ஆம் ஆண்டு இவரை முதல்வராக மகாராட்டிர பாஜக பிரபலங்கள் முன்மொழிந்த போது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை சித்பவன் பார்ப் பனரான தேவேந்திர பட்னவிசை முதல்வராக முன்னிறுத்தியது, உள் ளூர் தலைவர் களின் கடுமையான எதிர்ப்பிற்கிடையே தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற் றார் என்பது குறிப்பிடத்தக்கது

உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் மரத்தடியில் பள்ளிகள் ‘விடுதலை' தகவல் உண்மையே!


பெரியார் பிறந்த நாள் மலரில் மதுரா பகுதியில் மரத்தடியில்  நடக் கும் பள்ளி ஒன்று படமாக வந்திருந்தது, ஆனால் இது பொய்யானது என்று சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில் பேசிய மதுரா நாடாளுமன்ற உறுப் பினர் எனது தொகுதியில் வயல் வெளியிலும், மரத்தடி யிலும் பள்ளிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்துக் கட்சி களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசி வரு கின்றனர்.
அதன்பகுதியாக, நடிகை யும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி பேசினார். மதுரா தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பின ராக  இருக் கும் அவர் கூறி இருப்பதாவது:
எனது தொகுதியில் பள் ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசம்.
நிறைய பள்ளிக்கூடங் களில் போதிய கட்டடங்கள் இல்லை. பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்படுகின் றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போதிய கல்வி கிடைக்க வில்லை.
அரசு, தனியார் பங்களிப்பு இணைந்து, இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண் டும். பள்ளிகளில் வகுப்பறை களை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனையா?

பொய் வழக்கில் 12 ஆண்டுகள் சிறையில் இருந்து அதற்குப்பின் அவர்கள் அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்படுவது - எந்தக் கணக்கில் சேர்ப்பது?
தீவிரவாத வழக்கில் கைதாகி பல்லாண்டுகள் சிறையில் இருந்து, பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்படுவதில் பெரும்பாலும் முசுலிம்களாகவே இருக்கிறார்கள். குறைந்தது ஆண்டுக்கு 5 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

Saturday, November 30, 2019

ஈராக் போராட்டம் எதிரொலி பதவி விலகினார் பிரதமர்

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத் தன்மை இல்லாமல் போனது.
தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட் டம் தாண்டவமாடி வருகி றது. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அர சின்மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பிரத மர் அதெல் அப்துல் மஹ திக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின் றனர்.
இந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதனால் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் குண்டால் சுடுவது அதி கரித்து வருகிறது. இதுவரை அங்கு 400-க்கும் மேற்பட் டோர் போராட்டங்களில் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, அதெல் அப்துல் மஹதி பிரத மர் பதவியில் இருந்து விலகு வதற்கும், பதவி விலகல் கடி தம் அளிப்பதற்கும் தயாராக உள்ளார் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈராக்கில் நடைபெற்று வரும் போராட் டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், எனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டுதான், பிரதமர் அதெல் அப்துல் மஹதி அரசு பதவி ஏற்றது என்பது நினைவு கூரத்தக்கது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...