Saturday, October 21, 2017

குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? அம்பலத்துக்கு வந்த இரகசியம்....


காந்திநகர், அக்.20  குஜராத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதன் உள்நோக்கம் குறித்து பாஜக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்ற நிலையில், பாஜக முதல்வரான விஜய் ரூபானியின் குஜராத் மாநில அரசு பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்துள்ளது.

தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் குஜராத் மாநில அரசு ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் அறிவிப்பின்படி, குஜராத் மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  ஊதிய நிரந்தரம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஊதிய உயர்வு செய்வதாகவும் அறிவித் துள்ளது.

105 நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப் படையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மா வத்சால்யா திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச் சைக்கு ரூ.2 லட்சத்தின்கீழ் பயன்பெறும் பய னாளிகள் ஆண்டு வருவாய் 1 லட்சத்து 50ஆயிரம் என்ற கட்டுப்பாட்டினை 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

இதற்காக நான் 2014 இல் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை . . .

ஷோபா டே

இந்தியாவில் திருவிழாக் காலம் என்று அழைக்கப் படுவது அதிக அளவில் இறுதி ஊர்வலங்களைக் கொண்டதாக இருக்கிறது. மிகுந்த அதிர்ச்சி அளிக்கத் தக்கதும், அதே நேரத்தில் எளிதாக தவிர்த்திருக்கக் கூடியதுமான, மும்பை ரயில் மேம்பால கூட்ட நெரிசலில் 23  மனித உயிர்களின் இழப்பு, அவ்வப்போது இது போன்ற மக்களின் இறப்புகளைப் பற்றிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளும் மும்பை நகருக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைந்து விழித்தெழச் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு நமக்காக விட்டுவிட்டுச் சென்ற நமது இரயில்வே துறை, மக்களுக்குப் பயன் அளிக்கும் வழியில் இல்லாமல் மிகமிக மோசமான கட்டமைப்பைப் பெற்றதாக இன்று இருக்கிறது. அன்றாடம் ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பது ஏதோ ஓர் அற்புதம் போலவே தோன்றுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள ரயில்வே மேம்பாலங்கள், மக்கள் கடந்து செல்லும் பாலங்களைப் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அதன் முடிவுகள் உங் களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்க இயன்றதாக இருக்கும். ஒரு விசாரணை ஆணையத்தை அமைப் பதை விட உருப்படியானதொரு வழியில் ரயில்வே துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கச் செய்வதற்கு ஒரு நகர்ப்புற ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 23 மக்கள் உயிரிழக்க வேண்டியதாக இருக்கிறது.
உறுதியுடன் செயல்படுபவர் என்ற பெயர் பெற்ற, மும்பை நகர வாசியான  ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறையின் திறமையின்மை யையும், சுறுசுறுப்பின்மையையும் அவரது முகத்தில் அறைவதைப் போல் தோன்றுவதை நன்றாக உணரவே செய்கிறார்.

அவரது அமைச்சரகமும், அவரது பெயரும் இந்த நிகழ்ச்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளன. மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இயன்ற அளவுக்கு அறிவு படைத்தவராகவும் அவர் இருந்தார். அதனால்தான் புல்லட் ரயில் பற்றிய விவாதத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மிகுந்த ஆடம்பரத்துடன், மார் தட்டிக் கொண்டு மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகுந்த செலவு கொண்ட பயண திட்டம்தான் இந்த புல்லட் ரயில் திட்டம்.
அதற்கான செலவினை ஒப்பிட்டுப் பாருங்கள்.  பாங்காக்கை தென்சீனாவுடன் இணைப்பதற்கான  3000 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட் ரயில் திட்டத் துக்கான செலவு 5.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால், மும்பையை அகமதாபாத்துடன் இணைக்கும் 500 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட் ரயில் திட்டத் துக்கான செலவினம் 17 பில்லியன் டாலர். பாருங்கள்! இதுபோன்ற புல்லட் ரயில் நமக்குத் தேவையா? நிச்சயமாகத் தேவையே இல்லை. யார் அதனைப் பயன்படுத்தப் போகிறார்கள்?  அதிவேகமாக அகமதா பாத்துக்கு மக்கள்  சென்றடைய வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு செல்ல தின்று கொழுத்த வியா பாரிகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மும்பை மாநகரத்தின் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைக்கும் மாநகர ரயில் பயணத்தில் மக்கள் கூட்ட வெள்ளத்தில், நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாடம் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்குப் பயன்படும்படி நகர்ப்புற ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதை விட்டுவிட்டு,  நம் மீது தேவையே அற்ற இந்த புல்லட் ரயில் திட்டம் திணிக்கப்படுகிறது.

இந்த இந்தியா-ஜப்பான் கூட்டு திட்டம் நுண்ணிய மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் போனால், இந்த நிர்வாகமே தடம் புரண்டு போய்விடும் என்பது மட்டும் நிச்சயமானது ஆகும். அகமதாபாத்துக்கு அடிக்கடி செல்லும் மக்கள் அங்குள்ள மக்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்து வருகின்றனர். எப்போதும்  மவுனமாக வாய் மூடி இருந்து,  மோடி-ஷா-அதானி மூன்று பேரையும்  கண்களை மூடிக்கொண்டு ஆத ரித்து வந்த சாதாரணமான வியாபாரியும் கூட,  இழந்து போன தங்கள் குரலைத் திரும்பப் பெற்று உரக்கப் பேசுவதுடன், நகைச்சுவை உணர்வோடும் பேசத் தொடங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அரசியல் விசுவாசத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிகள் போதுமான அளவுக்கு சமூக வலைதள மேடைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதற்காக, மோடியைத் துணிவுடன் கண்டித்து கேலி செய்யும் கேலிச் சித் திரங்கள் ஏராளமாக புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் வியாபாரத்தை இழந்துவிட்ட வணிகர் சமூகத்தின் கோபம் மாபெரும் பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்திய பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களாக உருவெடுத்து வந்தன.

நடுத்தரக் கடைக்காரர்களில் இருந்து பெருந்தொழிலதிபர்கள் வரை,  ஒட்டு மொத்த குஜராத் மாநிலமே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறை இரண்டும் எதேச்சதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தப் பட்டதை எதிர்த்து கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் ஒரு தடையை நீங்கள் விதிக்க நேர்ந்தால், அதாவது வன்முறையைக் கையாள  நேர்ந்தால், உடனடியாக நீங்கள் மக்கள் விரோதியாக ஆகிவிடுகிறீர்கள். தங்களது ஆதர்ச நாயகனான நரேந்திர மோடிக்கு எதிராக இந்த அளவுக்கு பலமாக மக்கள் எழுச்சி பெறுவார்கள்  என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் மக்களிடைய பேசிக் கொள்ளப்படும் கேலிப் பேச்சுகள் ஒரு புறமிருக்க,  நன்கு உணரக்கூடிய ஏமாற்ற உணர்வு மக்களிடையே நிலவுவதையும், அவற்றை வெளிப் படுத்துவதற்கான தொரு மக்களின் புரட்சி கனன்று கொண்டிருப்பதையும் நன்றாகக் காணமுடிகிறது. குஜராத் மக்களின் உணர்வு களை நன்கு அறிந்திருக்கும் டில்லி எஜமானர்கள், மக்களின் இந்த புதிய மனநிலையைக் கண்டுணர்ந்து மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்து வருகின்றனர்.
சகிப்புத் தன்மையின்மையின் கொடூரமான முக மும் குஜராத்துக்குள் தென்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 2017 நவராத்திரி கொண்டாட்டங்களின்போது ஆனந்த் மற்றும் வதோதராவில் இருந்து வந்துள்ள செய்திகளில், மிகுந்த கவலை அளிக்கும் செய்தி, ஜெயேஷ் சோலங்கி என்ற 20 வயது தலித் இளைஞன் மேல் ஜாதி படேல்களின் குழு ஒன்றினால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதுதான். வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று தனது தாயிடம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு சொல்லிவிட்டுப் போன அந்த இளைஞன் கொல்லப்படுவதற்கு  என்ன குற்றம் செய்தான்? பக்கத்தில் நடைபெற்ற உயர்ஜாதி கர்பா நடனத்தைப் பார்க்க அவன் துணிந்ததுதான் அவன் செய்த குற்றம்.
கிராமத்தில் உள்ள பழமையான சோமேஸ்வர் ஆலயத்தில் நடனக்காரர்கள் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகிலேயே, பாதுகாப்பு அற்ற அந்த இளைஞன் கொல்லப்படுவதை எவருமே தடுத்து நிறுத்த முன்வராத நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறான். அவன் செய்த ஒரே தவறு பாதுகாப்பான ஒரு தூரத்தில் இருந்து மேல்ஜாதியினர் நடனத்தைப் பார்த்தான் என்பதுதான். இதுதான் மோடியின் இந்தியாவா? உயர் வேகம் கொண்ட அதிக விலை கொண்ட புல்லட் ரயிலும் யாருக்கும் தேவையில்லை;  அப்பாவி மக்கள் மீது அன்றாடம் வன்முறைத் தாக்குதல்கள் மேற் கொள்ளப்படவும் தேவையில்லை.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று மோடி அரசை, தான் அளித்த சூடான பேட்டி ஒன்றில் அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.  கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு முன்பு எப் போதுமே இல்லாத அளவுக்கு மேற்கொள்ள நடை முறைப்படுத்தப்பட்டதுதான் பணமதிப்பிழப்பு நட வடிக்கை என்று அருண்ஷோரி மிகச் சரியாக விவரித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த  அரசு கூறிய காரணங்கள், நோக்கங் களில்  எது இது வரை நிறைவேறியுள்ளது? கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதா? அனைத்துக் கருப்புப் பணமும் வெள்ளைப் பணமாக ஆகிவிட்டது. தீவிர வாதம் ஒழிந்துவிட்டதா? தீவிரவாதிகள் இந்தியாவுக் குள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்று அருண் ஷோரி பதில் அளித்துள்ளார்.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று மக்கள் வெளிப்படையாகவும், வேகமாகவும் பேசுவதைப் பற்றிதான் மிகவும் புகழ் பெற்ற சிந்தனையாளர்களும் மேலும் மேலும் பேசுகிறார்கள். மக்களின் மனநிலையில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு நல்ல சான்றாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. பெற்ற மாபெரும், வியக்கத் தக்க வெற்றியைக் கண்ட மக்களில் எவருமே,  மக்கள் மனநிலையில் இத்தகைய மாற்றம் ஏற்படப் போகிறது என்று  எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.  நீண்டதொரு காலத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதர வாளராக இருந்த நான் கடந்த பொதுத் தேர்தலில்,  பா.ஜ.க.வுக்கு வாக்களித்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. நாட்டிற்கு  வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் உறுதி அளிக்கும் பா.ஜ.க.வுக்கு ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை அளித்துப் பார்க்கலாமே என்று என்னைப் போன்று நினைத்து வாக்களித்த  பல நகர்ப்புற வாக் காளர்கள் பலரும் இருந்திருக்கக் கூடும்.  அவர்களுக்கு உறுதி அளித்தவைகளில் மாற்றத்தைத் தவிர வேறு எதுவுமே கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு ஒரு மாற்றம் கிடைத்தது. அதுவும் எப்படிப்பட்ட மாற்றம்? மிகமிக மோசமான மாற்றம். புதிய வேலை வாய்ப்பு களும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. கடுமையாகவும் நேரடியாகவும் கூறுவதானால்,  இந்தியா அரசு ரீதியாக ஏமாற்றப்பட்டது என்றே சொல்லலாம். அதனால் ஏற்பட்ட பேரழிவு ஈடு செய்ய முடியாதது; சரி செய்ய முடியாதது. வாக்காளர்கள் அனைவரும் ஆட்சியா ளர்கள் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
தீபாவளி சமயத்தில் சந்தடியுடன் விளங்கும் கொலாபா சந்தைக்கு இந்த வாரம் நான் சென்றிருந்த போது, உற்சாகமற்ற முகங்களைத்தான் நான் பார்த்தேன். இங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள் குஜராத்திகள். பழைய சரக்கு இந்த அளவுக்குத் தேங்கி இருக்கும் நிலையில்,  இந்தநெருக்கடியில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது பற்றி அவர்கள் வியப்பும் கவலையும் கொண்டவர்களாக உள்ளனர். கார்ப்பரேட் நன்கொடைகள் 70 விழுக்காடு குறைந்து போயிருந்தது. தனது கடையில் இருந்த விற்கப்படாத பொருள்களையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளி வியாபாரி, இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்பதற்கான நம்பிக்கை சிறிதும் இல்லை என்று ஒப்புக் கொண்டார். நீண்ட தொரு காலம் அவர் காத்திருந்தால், தங்கள் சொந்தக் காரர்களைக் காண்பதற்கு அவர் புல்லட் ரயிலில் போகமுடியும் என்று நான் கூறினேன். அதனைக் கேட்டு சிரித்த அவர், ‘‘அதற்கு முன் ஏமாற்றத்தினால், எனது தலையை குண்டினால் வெடித்துக் கொள்வேன். 2014 இல் இதற்காக நான்  பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை'' என்று கூறினார். இந்தியாவின் நீள அகலம் முழுவதிலும் அந்த உணர்வு எதிரொ லித்துக் கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது.
நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்'', 06.10.2017 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

கிருஷ்ணபகவானின் தீபாவளி ‘அருள்பாலிப்பு’ இதுதானா? காற்று மாசு-தீ விபத்துகள்-நீரில் மூழ்கிச் சாவு



சென்னை, அக்.20 இந்து மதப் பண்டிகையான தீபாவளியன்று பட்டாசு வெடிப்பால் தீ விபத்துகள், வேறு எப்பொழுதும் இல்லாத அளவுக்குக் காற்றில் மாசு அளவு அதிகம், ‘புனித’ நீராடச் சென்றவர்கள் சாவு என்று இழப்புகளும், தீங்கு களும் போட்டிப் போட்டுள்ளன. தீமைகளை அழிப் பதுதான் தீபாவளியின் தத்துவம் என்போர், தீபாவளியால் ஏற்பட்ட இந்தக் கேடுகளுக்கு, இழப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?
பட்டாசு வெடித்து 302 தீ விபத்துகள்,
329 பேர் காயம்
தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. 329 பேர் தீக்காயம் அடைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் கூறியதாவது: தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 164 தீ விபத்துகள் ராக்கெட் பட்டாசு களால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக சென்னையில் 28 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன.
காஞ்சிபுரம் -2, திருவள்ளூர் -1, திருவண்ணாமலை- 2, நாகப்பட்டினம் -8, புதுக்கோட்டை -8, கடலூர்- 12, கோவை-4, திருப்பூர்- 4, ஈரோடு- 5, சேலம்- 1, திண்டுக்கல்- 4, நாமக்கல் -2, மதுரை- 18, தேனி -2, ராமநாதபுரம் -4, சிவகங்கை -8, விருதுநகர் -10, தூத்துக்குடி-1, திருநெல்வேலி -17, கன்னியா குமரி -6, கரூர்- 10, தஞ்சாவூர்- 12, திருவாரூர் -21 இடங்களில் என பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது 836 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தது.
தீ விபத்துகள் அதிகம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் ராக்கெட் பட்டாசுகளை திறந்த வெளிகளில் மட்டுமே வைத்து வெடிக்க வேண்டும். இதைப் பலர் பின்பற்றுவதில்லை என்றார்.|
சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள்


தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கும்போது தீக் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழு வதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் அடைந்ததாக 329 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள் ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 17 பேர் லேசான காயத்துடன் வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றனர். 9 பேர் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் வசந்தாமணி கூறும்போது, பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்து 26 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் 9 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 2 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 42 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர் என்றார்.
சென்னையில் 80 டன் பட்டாசு கழிவுகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உருவான 80 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5,300 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணியில் 19,000 துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 80 டன் பட்டாசுக் கழிவுகள் நேற்று அகற்றப்பட்டன. அவை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி, கும்மிடி பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக் கும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
23 விமானங்கள் தாமதம்
தீபாவளி பட்டாசால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றி கடும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால், 23 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.
எனினும்  புதன் நள்ளிரவுவரை பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதேபோல் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஆலந்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பம்மல், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றி கடும் புகை மூட்டம் உருவானது. விமானங்களின் ஓடு பாதை யிலும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து இரவு 10.30 மணியளவில் அய்தராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தை தரை இறக்க முடியாத சூழ்நிலை உருவானது.
நீண்ட நேரத்துக்கு பின்னர் அந்த விமானம் பெங்களூ ருவுக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து புகை மூட்ட மாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், ஹாங்காங், தோகா, கத்தார், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்களும் மற்றும் டில்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணி வரை புகைமூட்டம் இருந்தது. பின்னரே நிலைமை சீரானது. இதைத் தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்குப் பின்னர் ஒவ்வொரு விமானமாக புறப்பட்டுச் சென்றன. புகைமூட்டத்தால் 23 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காற்று மாசு 8 மடங்கு அதிகம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் புகை காற்று மண்டலத்தின் இயல்புநிலையை தாக்குகிறது. இதனால் வளிமண்டலத்தில் தாக்கம் ஏற்பட்டு, பொதுமக்களின் உடல்நலத்துக்கும் தீங்கு ஏற்படுகிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், 125 டெசி பெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏற்படும் காற்று மாசு அளவை கண்காணிக்க மத்திய மாசு கட்டுப் பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் ஒலி மாசு அளவை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத் தலின்படியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய வாரம் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வும், 6 மணி நேர ஒலி அளவு சோதனையும் செய்து பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகிறது.
இதன்படி 12- ஆம் தேதி மற்றும் 18- ஆம்  தேதிகளில் (தீபாவளி) ஆய்வுகள் செய்யப்பட்டு, வளிமண்டலத்தில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் காற்று மாசு காரணிகளான மிதக்கும் துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் அளவு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியின்போது அதிக அளவிலேயே காணப்பட்டது.
இதற்குக் காரணம் தீபாவளி நாளன்று மழை, வெயில், காற்று இல்லாமல் இதமான காலநிலை நிலவியதால் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பரவாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டன. இதனால் அதிக அளவு காற்றில் மாசு கண்டறியப்பட்டது.
குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய குடியிருப்பு பகுதிகள், சவுகார் பேட்டை வர்த்தகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், தியாக ராயர் நகர் வர்த்தக பகுதிகளில் 18 ஆம் தேதி, தீபாவளிக்கு முந்தைய வாரமான 12- ஆம் தேதிகளில் காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவான 80 மைக்ரோ கிராமுக்கு உட்பட்டதாகவே 2 நாள்களும் இருந்தன.
ஆனால், ஆய்வு செய்யப்பட்ட 5 இடங்களிலும் மிதக் கும் துகள்கள் 100 மைக்ரோ கிராம் அளவை விட தீபாவளி அன்று அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக சவுகார் பேட்டையில் 8 மடங்கு மாசு அதிகம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கி அறுவர் சாவு
திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் ஆண்ட்ரூஸ் (வயது 29), இஸ்மாயில் (19). இவர்களது நண்பர்கள் சதாம் உசேன் (23), சிவகுரு (24) உள்பட 12 பேர் தீபாவளியை முன்னிட்டு திருச்சி அருகே திருவளர்ச் சோலை பொன்னுரங்கபுரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
மதியம் 2 மணியளவில் 4 பேர் அங்கு குளிக்க ஆற்றில் இறங்கினர். மற்ற நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் செல்லவில்லை.
அந்தப் பகுதி மணல் குவாரி என்பதால் சில இடங்களில் புதைகுழிகள் இருந்துள்ளன. இதனை அறியாத அவர்கள் ஆற்றில் இறங்கிய போது சுமார் 20 அடி ஆழத்தில் மூழ்கத் தொடங்கினர். முதலில் ஆண்ட்ரூஸ், இஸ்மாயில், சிவகுரு ஆகியோர் தண்ணீருக்குள் மூழ்கியபடி சுழலில் சிக்கி நீந்த முடியாமல் மூச்சுத் திணறினர்.
மேலும் தங்களை காப்பாற்றும்படி 3 பேரும் அபய குரல் எழுப்பினர். அருகில் இருந்த சதாம் உசேன் அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் அந்த சுழலில் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
நண்பர்கள் 4 பேரும் நீண்ட நேரமாகியும் கரைக்கு வராததால் சந்தேகம் அடைந்த மற்ற நண்பர்கள் குளிக்க சென்ற இடத்தில் தேடினர். ஆனால் 4 பேரையும் காணாததால் திடுக்கிட்டனர். இந்த சம்பவம் மதியம் 3.30 மணிக்கு நடந்துள்ளது.
அதன்பிறகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிந்தது. கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். சிறீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூழ்கி 4 பேரின் உடல்களையும் தேடினர்.
இரவு 7 மணியளவில் ஆண்ட்ரூஸ் மற்றும் இஸ்மாயில் ஆகியோரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் அவர்கள் மூழ்கிய இடத்தில் பாதுகாப்பு வசதியுடன் தீயணைப்பு வீரர்கள் உடல்களைத் தேடினர்.
இதில் நேற்று காலை 7 மணிக்கு சிவகுரு உடல் மீட்கப்பட்டது. சதாம் உசேன் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிறீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் உள்பட நண்பர்கள் அனைவரும் ஒர்க் ஷாப், பிளம்பிங் போன்ற தொழில்கள் செய்து வந்தனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள் 12 பேரும் எப்போதும் ஒன்றாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளியை முன்னிட்டு அனைவரும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி குளித்தபோது 4 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி திருச்சியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்டது கொடையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் காலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் கொண்டாடினார்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மகள் கார்த்திகா (9), மகன் கதிரேசன் (7) ஆகியோருடன் குளிப்பதற்காக சென்றார். கிராமத்தையொட்டிய காவிரியின் கிளையான அமராவதி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.
முதலில் மகன் கதிரேசன் ஆற்றில் இறங்கினான். அப்போது ஆற்றின் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதில் கதிரேசன் இழுத்துச் செல்லப்பட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு மகனை மீட்க ஆற்றில் இறங்கிய தந்தை சக்திவேல் புதை மணலில் சிக்கிக் கொண்டார்.
இதைப்பார்த்த கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலின் மகள் கார்த்திகா செய்வதறியாமல் தவித்தார். தந்தையும், தம்பியும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதை கண்டு உரக்க கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் அங்கு ஓடிவந்தனர்.
அவர்கள் ஆற்றில் குதித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சக்திவேல், கதிரேசன் இருவரையும் பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையிரன் 2 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தீபாவளி பண்டிகையன்று தந்தை, மகன் ஆற்றில் மூழ்கி பலியானது அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா: பட்டாசு கடையில் தீ விபத்து: ஒருவர் பலி, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம்    

ஒடிசா மாநிலத்தின் ரூர்கெலா பகுதியில் உள்ள சந்தையில் செயல்பட்டுவந்த பட்டாசு கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பட்டாசு கடையில் தீபாவளியை ஒட்டி இரவில் விற்பனை நடந்து முடிந்தது. இதனையடுத்து,  எஞ்சிய பட்டாசுகள் கடைகளில் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கடையில் நேற்று அதிகாலை திடீர் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள் அடுத்தடுத்த கடைகளுக்கும் தீயைப் பரவச் செய்தன. தீவிபத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தீவிபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Friday, October 20, 2017

மோடி அரசின்மீது மக்களது நம்பிக்கையின்மை வளர்ந்து கொண்டே வருகிறது

சஞ்சய் குமார்

இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள், இந்திய அரசியலை திடீரென சூடுபடுத்தி விட்டன. இந்திய மக்களிடையே பொதுவாகவே பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதாகத் தோன்றிய  நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணி அரசு, தனது கவர்ச்சியை இழந்து கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. தற் போதைய அரசுக்கு எதிரான மகிழ்ச்சியற்ற, ஏமாற்றம் நிறைந்த குரல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இப்போது கேட்க முடிகிறது. மக்களுக்கு இந்த அரசு என்ன செய்துவிட்டது என்று மக்கள் திடீரெனக் கேட்கத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க.வுக்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து கொண்டே வருவதாகத் தோன்றிய போதிலும்,  2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடையும் அளவுக்கு இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று கூறுவது மிகைப்படுத்திக் கூறப்படுவதாகத்தான் இருக்க முடியும்.

பாமர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு நிறைவேற்றாத போதிலும், பணமதிப்பிழப்பு நடவடிக் கைகள், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அவசரம் அவசரமாக நடைமுறைப்படுத்தியது போன்ற தவறான செயல்களுக்காகவும்,  மோடியிடமும் சந்தேகத்திற்கு இடமற்ற அவரது நேர்மை மற்றும் நாணயத்தின் மீதும் பெரும் அளவிலான மக்கள் கொண்டிருந்த  நம்பிக் கையின் காரணத்தால் மட்டுமே 
மோடியை மன்னிக்க மக்கள் தயாராக இருந்தனர்.

பல்கலைக் கழக மாணவர் அமைப்பு தேர்தல்கள்
நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த அரசியல் நிலை அல்லது மக்களின் ஆதரவையும் காட்டும் ஒரு முழுமையான சோதனையாக பல்கலைக் கழக மாண வர் அமைப்பு தேர்தல்கள் இருக்க முடியாது. என்றாலும் நம் நாட்டு இளைஞர்களின் மனதில் எத்தகைய சிந்தனைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு சில அடையாளங்களையாவது காட்டுபவை யாக இந்த தேர்தல்கள் உள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம், அய்த ராபாத் பல்கலைக் கழக மாணவர்களின் அமைப்பு தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பும் டில்லி பல்கலைக் கழகத்தைத் தவிர மற்ற பல்கலைக் கழக தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மாணவர்களின் ஆதரவு பல்வேறுபட்ட பல்கலைக் கழகங்களிலும் பலவிதமாக இருந்தது. ஆனால் மாணவர்களின் ஒட்டு மொத்த மனநிலை தெளிவாக இருந்தது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக்கு எதிரான அலையாக அது இருந்தது என்பது மட்டும் நிச்சயமானது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அய்தராபாத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், தொல்லை அளிப்பவர்கள் என்று பா.ஜ.க. குறித்து வைத்திருந்ததை எவர் ஒருவராலும் மறக்க முடியாது.

பல்வேறு பல்கலைக் கழகங்களில் பா.ஜ.க. ஆதரவு அமைப்பு  அடைந்துள்ள இத்தகைய தோல்வி பா.ஜ.க.வுக்கு கவலை தரும் விஷயமாக இருக்க வேண்டும். பா.ஜ.க.மீது மக்கள் கொண்டிருந்த ஆதரவு நிலவிய இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இத்தேர்தல்களில் இத்தகைய தோல்வியை சந்தித்து இருக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இளைஞர்கள் பெரிய அளவில் ஒரு முக்கியமான பங்காற்றினர் என்பதால், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின  தோல்வி பா.ஜ.க.வுக்கு  ஓர் எச்சரிக்கை மணியைப் போன்று இருப்பதேயாகும். 2014 தேர்தலில் இளைஞர்கள் பெரும் அளவில் மோடிக்கு  ஆதரவாகத்  திரண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். இந்த பல்கலைக் கழக தேர்தல்கள் பா.ஜ.க.வுக்கு கவலை அளிப்பவையாக இல்லாமல் போனாலும் கூட, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளை வளர்ப்பவையாக இருந்ததைப் பற்றி பா.ஜ.க. நிச்சயமாகக் கவலைப்பட்டே ஆக வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர் இயக்கம் மற்ற பல்கலைக் கழகங்களுக்கும் பரவுவதற் கான ஆற்றல் கொண்டதாக உள்ளது. 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்று பாஜ.க. அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் பா.ஜ.க. மீது இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம் பெருகி வருவது  பா.ஜ.க.வுக்கு ஆபத்தானது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவில் இருந்தது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
விவசாயிகளின் பிரச்சினைகளும் போராட்டங்களும்
நாடெங்கிலும் பா.ஜ.க.மீது விவசாயிகளுக்கு இருக்கும் அதிருப்தியையும் காண முடிகிறது. குறைந்த அளவு உற்பத்தி விலை, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையாக இருந்த போதிலும்,  விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற இதர பிரச்சினைகள் பற்றிய அவர்களது மற்ற கோரிக் கைகளும் உள்ளன. விவசாயத் துறையின் பணப் பரிமாற்றம் அனைத்தும் ரொக்கப் பணப் பரிமாற்ற மாகவே இருப்பவை என்பதால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் தெற்குப் பகுதியில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களிலும், வடக்கே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங் களிலும், மேற்கே மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங் களிலும்  விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. பா.ஜ.க. அரசிடம் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றம், விவசாயிகளை நாடு தழுவிய அளவில் ஒன்று சேர்த்துள்ளது என்றே தோன்றுகிறது.
வியாபாரிகளிடையே அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வு
நகர்ப்புற மத்திய தர வர்க்க மக்களிடையே பா.ஜ.க. மீதான மனநிறைவின்மை வளர்ந்து வருவது தெளி வாகவே தெரிகிறது. இப்போது நாம் காணும் இத்தகைய, அரசு மீதான மனநிறைவின்மை, சில மாதங்களுக்கு முன்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. பா.ஜ.க. வின் முதுகெலும்பு போன்ற ஆதரவு அடித்தளமாக, அண்மைக் காலம் வரை இருந்து வந்துள்ள வணிகப் பெருமக்கள், சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய காரணத்தால், அரசின் மீது அதிருப்தி அடைந்தவர்களாக உள்ளனர். இந்த வரிக்காக பெரிய அளவில் கணக்குகள் பேண வேண்டிய சுமை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வரவு செலவுக் கணக்கு எழுதும் கணக்கர்களாக மோடி எங்களை ஆக்கிவிட்டார். நாங்கள் வியாபாரம் செய்வதா? அல்லது கணக்கு எழுதுவதா? என்று வியாபாரிகள் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. சிறு வியாபாரிகளுக்கு முதலில் பணமதிப்பிழப்பு நட வடிக்கை, இப்போது இந்த சரக்கு மற்றும் சேவை வரி என்ற இரண்டு விதமான சுமை ஏற்பட்டுள்ளது. இந்த சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு நடைமுறையின்படி பாமர மக்கள், சில பொருள்களை வாங்கும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. நுகர் வோரிடம் வியாபாரிகள் உங்களிடம் வாங்கும் கூடுதல் பணத்தை நாங்கள் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. மோடியிடம்தான் கொடுத்துவிடுகிறோம். உங்கள் பணத்தையெல்லாம் அவர்தான் எடுத்துக் கொண்டு போகிறார் என்று கூறுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் சில பிரச்சினைகளை சந்திக்கவே செய்தனர் என்றபோதிலும், இறுதியில் தங்களுக்கு சில பயன்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் நீண்டதொரு காலத்திற்கு அமைதியாகவே இருந்தனர். ஆனால், சரக்கு மற்றும் சேவை வரியால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பணமதிப் பிழப்பு நடவடிக்கைமீது மக்கள் தங்களது கோபத்தைக் காட்டச் செய்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு நடைமுறை மீது மக்கள் அதிக அளவில் கோபம் கொண்டுள்ளனர் என்பது அண்மையில் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அரசிடம் கேள்வி கேட்போர் பட்டியல் இத்துடன் நின்றுவிட வில்லை. தலைமை இல்லாத ஊதியக் குழுவின் கார ணமாகவும்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு நி;லுவைத் தொகை அளிக்க அனுமதிக்காத பா.ஜ.க.  அரசிடம் அதே அளவில் அரசு ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல்வேறுபட்ட பிரிவு வாக்காளர்களிடையே பா.ஜ.க. அரசு பற்றி வளர்ந்து வரும் மனநிறைவின்மை அரசுக்கு ஒரு நல்ல  அடையாளம் அல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த அதிருப்தி என்ற காற்றுப் பெரும் புயலாக மாறாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. மோடிக்கு மாற்றாக ஒரு தலைவர் இல்லை என்பதும்,  மோடி பற்றிய தனிப்பட்ட நம்பகத்தன்மையும்தான்.
இப்போது நம் முன் எஞ்சியுள்ள ஒரே ஒரு கேள்வி இதுதான்: இன்னமும் எவ்வளவு காலத்துக்கு, தனது தனிப்பட்ட தோற்றத்தாலும், நம்பகத்தன்மையாலும் மோடியினால் இந்த எதிர்ப்பு அலையைத் தடுத்து நிறுத்தமுடியு;ம்? அரசு நன்முறையில் செயல்பட்டு மக்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றனரே அன்றி, வெறும் பகட்டுப் பேச்சைக் கேட்பதில் ஆர்வம் அற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிக்கல்’, 02.10.2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

பி.ஜே.பி. பீடையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் என்ன செய்யவேண்டும்?

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்தியநாத் பேசிய காணொலி ஒன்று இணைய தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் அவர் பேசியதாவது:


‘‘தாஜ் மகால் நமது அடையாளம் அல்ல, அயல் நாட்டுக்காரர்கள் அங்குவருவதைத் தவிர்க்கவேண் டும், அதற்குப் பதிலாக காசி, மதுரா, உஜ்ஜைன், அலகாபாத் சங்கமம் போன்ற இடங்களை சுற் றுலாத்தலமாக அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்,
தாஜ்மகால் நமக்கானதும் அல்ல; நமது கலாச்சாரத்தின் படி கட்டப்பட்டதும் அல்ல, நாங்கள் ஹுமாயுன்பூரை அனுமான்பூராக மாற்றினோம், குர்காவை குருகிரா மாக மாற்றினோம், இப்படி மாற்றவேண்டியவை நிறைய உள்ளன.  பாஜக ஆட்சி அமைத்தால் தாஜ் மகால் என்ற பெயரை ராம்மகால் என மாற்றி, அங்கு ராமருக்கான சின்னங்களை எழுப்புவோம். சுற்றுலா வருபவர்கள் அடிமைகளின் கட்டடத்தைப் (தாஜ் மகால்) பார்க்கும் பொழுது நமது கலாச்சார நாயகனின் புகழையும் கண்டு களிக்கட்டும்‘’ என்று அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இவர் கடந்த ஆண்டு பீகாரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், ‘‘நாம் வெளிநாட்டு விருந்தினருக்கு தாஜ்மகாலை நினைவுப் பரிசாக வழங்குகிறோம்; இப்படி கொடுப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும். மோடி, தான் செல்லும் நாடுகளில் அந்த தலைவர் களைச் சந்திக்கும்போது ‘‘பகவத் கீதை’’யைப் பரிசாக அளித்து, நமது கலாச்சார பெருமைகளை உலகத்திற் குக் கொண்டு செல்கிறார்’’ என்றும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் இடம் பெறவில்லை. தற்போது மாட் டிறைச்சி தொடர்பான வதந்தி பரவியதால் கொல்லப் பட்ட அக்லாக் படுகொலையில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், ‘‘தாஜ்மகால் அடிமையின் சின்னம்‘’ என்று கூறினார்.
தாஜ்மகால் விவகாரத்தில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் முதல் அம்மாநில முதல்வர் வரை மிகவும் எதிர்மறையான கருத்தைப் பேசிவருகின்றனர்.  நாட்டின் பெயரைக்கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றி விடுவார்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள் ளார்.
இவர்களின் இது போன்ற குதர்க்கமான பேச்சுகள் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தபோது,  ‘‘இது ஏதோ ஒரு சங்கீத்சோம் என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து அல்ல. இதுதான் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து எப்படி பிரிக்க முடியும்? மிகவும் தவறான பாதையில் பாஜக பய ணிக்கிறது. இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்த கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்க வேண்டும். கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட இந்த ஆட்சியாளர்கள் மாற்றிவிடுவார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் இவர்கள் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகிறார்கள்’’ இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
இந்த நிலையில், மதச்சார்பின்மையில் உறுதியாக நம்பிக்கைக் கொண்டவர்கள், காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், முசுலிம் அமைப்புகள், தலித் உரிமைக்குப் பாடுபடும் அமைப்புகள், தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் சிறுசிறு மாச்சரியங்களைத் தூர வைத்து, நாட்டின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, பொது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்தினால் தான் நாடு பிழைக்கும். நாகரிகமான வகையில் குடிமக்களும் இங்கு வாழ முடியும்.

குறிப்பாக இதில் இடதுசாரிகளின் முடிவு முக்கிய மாகும். கடந்த முறை செய்த தவற்றினை மீண்டும் செய்யக்கூடாது என்பதுதான் வெகுமக்களின் எதிர்பார்ப்பு!

தலைமைச் செயற்குழுத் தீர்மானப்படி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாக்களை அய்யா பிறந்த ஈரோட்டில் வழங்கிட உழைப்பீர்!

* பொதுவாக பிறந்த நாள் விழாவில் பங்கேற்க விரும்பாதவன் நான்!

* விடுதலை’ சந்தா வழங்குவது என்ற பொறியில் சிக்குண்டேன்!!

தந்தை பெரியார் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் உழைத்து வருகிறேன்

விடுதலை’யால் பல திருப்பங்கள் நிகழவேண்டிய காலகட்டம் இது!


‘விடுதலை’ ஏட்டால் பல திருப்பங்கள் நிகழ வேண்டிய காலகட்டத்தில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ‘விடுதலை’ சந்தாக்களை தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில் அளித்திட உழையுங்கள் என்று கழகத் தோழர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எனது பாசம் மாறா கழகக் குடும்பத்தவர்களே,

தமிழ் இன உணர்வாளர்களே,

பகுத்தறிவாளர்களான தோழர்களே,

பெரியார் பற்றாளர்களே,

அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும் கலந்த வணக்கம்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு சென்ற முறை (6.9.2017) கூடியதில், வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி (2017) எனது 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை ‘சுயமரியாதை நாளாக’ நடத்துவது என்பதாகவும், அதில் ‘விடுதலை’ நாளிதழ் சந்தாக்கள் 15 ஆயிரத்தை ஈரோட்டில் நடைபெறும் கொள்கைப் பிரச்சார விழாவில் என்னிடம் அளிப்பது என்றும் முடிவு செய்து எனக்கு அறிவித்தார்கள் நம் தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்களும், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும்.
பொதுவாகப் பிறந்த நாள் விழாக்களைத் தவிர்ப்பவன் நான்!
பொதுவாக எனது பிறந்த நாள் விழாக்களைத் தோழர்கள் நடத்தி, புத்தகங்களை அல்லது மலர்களை வெளியிடும்போதுகூட நான் அவற்றில் கலந்துகொள்வதில்லை; காரணம், தந்தை பெரியார் என்ற நமது மாபெரும் அறிவாசானின் பிறந்த நாளை வெகுச்சிறப்புடன் நாம் கொண்டாடுவதிலேயே நம் அனைவரின் பிறந்த நாள், மகிழ்ச்சி நாள், சாதனை நாள் எல்லாம் உள்ளடக்கமாகி நிற்கின்றன. பிறகு ஏன் தனித் தனி பிறந்த நாள் விழாக்கள் என்று எண்ணியதால்.
70 ஆண்டு கொள்கை உறவுடைய

மானமிகு கலைஞரின் அன்பு சிறையில் சிக்குண்டேன்!
எனது 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், இனமானத் தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரரும், இன்றுவரையில் 70 ஆண்டு கால கொள்கை நட்புறவு கொண்டவருமான நமது கலைஞர் அவர்கள் உரிமையுடன் எனக்கு ஆணையிட்டு அன்புச் சிறைக்குள் தள்ளி கலந்துகொள்ள கூறியதால், நடந்தது வள்ளுவர்கோட்டத்தில் - சென்னையில்!
அதுபோலவே, எனது 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்று தஞ்சையில் கழகக் குடும்பத்தவரின் ‘சந்தா தருதல்’ என்ற தூண்டிலை வைத்துப் பிடித்தனர்! தி.மு.க. பொருளாளராகவும், இன் றைய செயல் தலைவராகவும் உள்ள சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து கலந்துகொண்டு (கொட்டும் மழையிலும்) சிறப்பித்தார்.
‘விடுதலை’ சந்தாக்கள் எனும் பொறியில் சிக்குண்டேன்!
இவ்வாண்டு, 5 ஆண்டுகள் கூடிய நிலையில், சந்தாக்களை அளித்தல் என்ற ‘பொறி’ வைத்து என்னைத் தோழர்கள் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்கள் - மகிழ்ச்சியே!
நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1962 இல் என்னை அழைத்து நேரில் கேட்டபோது, நான் தயங்கியபடிக் கூறியது, ஊதியம் வாங்காமல் ‘விடுதலை’யில் பணி செய்கிறேன்; அதற்குத் தாங்கள் இசைவு தரவேண்டும் என்று கூறினேன்; காரணம், அவர் எனது வாழ்விணையரைக் கண்டறிந்து திருமணம் நடத்தியது - இந்த ‘‘நிபந்தனைக்கு’’ வாய்ப்பாக அமைந்துவிட்டது. இவ்வேற்பாட்டின் காரணமாக எங்கள் இருவருக்கும் ‘‘சொற்ப சுயமரியாதை சேதாரமே’’ ஏற்பட்டது.
இத்தனை ஆண்டுகளும் நான் ஒரு ஊதியம் வாங்கா ஊழியனாகவே தொடர்ந்துள்ள நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும்கூட மதிப்பூதியம்தானே!
ஊதியம் என்பது பொருள் என்ற பொருளில்தான் பொது வாகக் கூறப்படுகிறது.  மற்றபடி பாராட்டுவதும், பணி செய்ய உற்சாகப்படுத்துவதும்கூட ‘மதிப்பூதியம்‘தானே! தவிர்க்க முடியாத அவைகளைப் பெற்ற பிறகு ‘ஊதியம் வாங்காதவன்’ என்ற கித்தாப்புக்கு ஏது இடம்?
ஆனால், அப்படிப்பட்ட எனக்கு, கொள்கை குடும் பத்தவர்களும், ‘விடுதலை’யின் அன்பார்ந்த வாசகப் பெரு மக்களாகிய நீங்களும் ‘‘மடக்கி விட்டீர்கள்’’ - சந்தாக்களைத் திரட்டி வழங்கியதன்மூலம் ‘ஊதியம்‘ தந்துள்ளீர்கள்! தர விருக்கிறீர்கள் தொடர்ச்சியாக!

‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - ஆயுதம்!
இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள பல்வேறு அறைகூவல்களுக்கு ‘விடுதலை’ ஏட்டினை வெறும் காகிதமாகப் பார்க்காமல், அறிவுப் போருக்கான ஆயுதமாக - வாளும் கேடயமாகவே திராவிடத் தமிழ்ச் சமுதாயம் பார்க்கவேண்டும்.
‘விடுதலை’க்குச் சந்தா சேர்க்கும் பணி திசையெட்டிலும் தீவிரமாகக் கழகப் பொறுப்பாளர்களை - ‘உழைப்புத் தேனீக் களாகி’ - அவர்கள் சுழன்று சுழன்று பறந்து பறந்து பணிபுரிவதால் என்னை  - எனது 85 வயது ஆண்டில் முதுமை தாக்காமல் - என்றும் சீரிளமையும் செயல்திறனும் குன்றா உழைப்பினைத் தொடர்பவனாகவே வைத்திருக்கும் என்பது உண்மைதான்!
‘விடுதலை’ சந்தா என்னும் உற்சாக டானிக்!
‘விடுதலை’ சந்தாக்கள் என்ற ஊக்க மாத்திரையால், உற்சாக ‘டானிக்கால்’, ஒப்பரிய நன்கொடையாலே எனது ஆயுளை நீட்டிடச் செய்கிறீர்கள் என்பதும் உண்மைதான்!
அது எனக்கு மட்டுமா?
இந்த சமுதாயத்திற்கும், நம் ஒடுக்கப்பட்ட இனத்து மக் களுக்கும் அல்லவா போய்ச் சேரும் - சேரவேண்டும்!
‘விடுதலை’ இன்றேல்?
‘விடுதலை’ இன்றேல் நம் சமூகம் - இனம் - அதன் லட்சிய வளர்ச்சிப் பயணம் எப்படி அமையும்? கதிரவன் ஒளியில்லா காரிருள் தானே! கலங்கரை விளக்கற்ற கடற்பயணக் கப்பல்கள் என்பதுபோலத்தானே!
எனது இறுதி மூச்சுள்ளவரை - ஏன் எனக்கு ‘விடுதலை’ இந்த உலகிலிருந்து கிடைக்கும்வரை - ‘விடுதலை’க்கு என் பணி ஓயாத உண்மைப் பணியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
‘விடுதலை’க்கு உதவியர்கள், என் அருந்தோழர்கள் பலர் என்னை விட்டு - உலகத்தைவிட்டுப் பிரிந்த நிலையில், எனது உள்ளம் - போர்க்களத்தில் பல முக்கிய படைத் தளபதிகளை இழந்திட்ட உணர்வுகளைத் தந்து, தேள் கொட்டுவதுபோல் என்னைத் தாக்கும். ஆனால், அதை நான் எப்படி எதிர் கொள்வது வழமை தெரியுமா?
தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் என்மீது வைத்த நம்பிக்கை
முன்பு நமக்கு உதவிக்கு இருந்தவர்கள் இல்லாத நிலையில், அவர்களது உழைப்பையும் ஈடுகட்ட நாம் மேலும் கூடுதலாகப் பணியாற்றி தொய்வின்றித் தொடர் பணியாக நடத்தி, வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை நிறுத்தாமல் - நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், எனது அன்னையிலும் அன்னையாம் அம்மாவும் வைத்த நம்பிக்கை பழுதடைந்துவிடக் கூடாதே என்பதால், இந்த விழுதின் பணி வீரியம் குறையாது வேகத்துடன் நடத்தப்படவேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து கொண்டுள்ளேன் -
உங்கள் அனைவரின் கூட்டுத் துணையோடு!
எனவே,தோழர்களே!நீங்கள்அழைக்கும்ஊதியம்வழங் கிடும் பணிக்கு நான் எப்படி மறுப்புச் சொல்ல உரிமை யில்லையோ, அப்படியே உங்கள் அன்பையும், பேராதர வினையும் எமக்களிக்கும் உங்களுக்கும் உரிமையும், கடமையும் உண்டே!
‘விடுதலை’யால் பல திருப்பங்கள்  நிகழ்ந்து தீரும் காலகட்டம்!
‘விடுதலை’யால் பல திருப்பங்கள் நிகழ்ந்து தீரவேண்டிய அரிய தருணம் இது!
எனவே, போர் ஆயுத - அறிவாயுதக் கிடங்கினைப் பாதுகாக்கும் அரணாவீர் தோழர்களே!

அறிவித்ததைவிட, அதிகம் தந்தார்கள் - பெரியாருக்குப் பிறகு - அதுவும் அவருடைய ஊரான ஈரோட்டில் என்று மூக்கில் விரலை வைத்து இன எதிரிகள் மூலையில் முடங்கிட, முனைந்து உழையுங்கள்!

அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

சென்னை                                                  தலைவர்
19.10.2017                                             திராவிடர் கழகம்

Tuesday, October 17, 2017

காக்கிகளை ஆட்டுவிப்பது காவிகளா?

பாஜக ஆளும் அரியானா  மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் அய்ந்துபேர்மீது பசு மாட்டிறைச்சியை வைத் திருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில்  பசுப்பாதுகாவலர் கள் என்போர், தாக்குதலை நடத்தினார்கள். அதற்கு அடுத்த நாளிலேயே பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் பசுப்பாதுகாப்பு என்கிற பெயரால்,  இசுலாமியக் குடும்பத்தினரிடமிருந்து 51 பசு மாடுகள் பறிக்கப்பட்டு, கோசாலைக்குக் கொடையாக இந்துத்துவாவாதிகளால் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின்  ஆல்வார் பகுதியில் பசு மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருகின்ற விவசாயி சுப்பா மேவ் கான். இவர் இசுலாமியர் என்பதால், அப்பகுதியில் உள்ள இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த வர்கள் அவருக்கு எதிராக காவல்துறையினரிடம் பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில் புகார் கொடுத்தார்கள்.
பசுப்பாதுகாப்பு என்பதன் பெயரால், ஆறு மாதங் களுக்கு முன்பாக பெக்லுகான் எனும் பால¢ பண்ணை விவசாயி இந்துத்துவா வன்முறையாளர்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். தற்போது, சுப்பாமேவ்கான் (வயது 45) என்பவர் பண்ணையிலிருந்த 51 பசு மாடுகளை இந்துத் துவா தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக காவல்துறை யினரையும் இணைத்துக்கொண்டு பறித்துச் சென்று, பசுக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
3.10.2017 அன்று முதல் கிஷான்கார் பாஸ் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பசு மாடுகளை மீட்டுக் கொடுப் பதற்கு தொடர்ச்சியாக கிராமத்தினர் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
சுப்பா மேவ் கான் மற்றும் அவர் மகன் நஸ்ருகான் ஆகியோருக்கு உரிமையான பசு மாடுகளை வலுக்கட் டாயமாக பறித்து காவல்துறையினரின் துணையுடன் இந்துத்துவா தீவிரவாதிகள் பாம்போரா கோசாலைக்கு அளித்துள்ளனர்.
பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுவரும் விவசாயி சுப்பா மேவ் கான் கூறுகையில், “நாங்கள் பசு மாடுகளைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம். பால் உற்பத்தி செய்து விற்றுவருவதுதான் எங்களின் தொழிலாக உள்ளது. காவல்துறையினருடன் வந்து எங்கள் பசு மாடுகளை  அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள்’’ என்று புகார் கூறினார்.
இதில் மேலும் கொடுமை என்னவென்றால்,
பசு மாடுகளைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், பசு மாடுகளைக் கடத்துவதாக வழக்கு  தொடரப்படும் என்றும் இந்துத்துவா வன்முறையாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும்  மேவ் கானின் குடும்பத்தினர் கதறுகின்றனர்.
சுப்பா மேவ் கான் குடும்பத்தினருக்கு ஆதரவாக கிராமத்தினர் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இது வரவேற்கத்தக்கது.
இந்துத்துவாவாதிகள்மீது ஊர்மக்கள் வெறுப்புக் கொள்ள இதுபோன்றவை போது மானவையே!
சுப்பாமேவ் கான் ஒரு விவசாயி, அவர்மீது பசுப் பாது காவலர்கள் என்கிற பெயரில் தவறாக குற்றம் சுமத்து கின்றனர் என்று மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துமூலமாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கிஷான்கார் காவல்நிலையம், சார்ஆட்சியர் அலுவல கத்திலும் தம்முடைய கால்நடைகளை மீட்பதற்காக மனு கொடுத்து அலைந்துகொண்டுள்ளார். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பசு மாடுகளை கோசாலைக்கு கொண்டு சென்றதில் காவல்துறையினர் தங்களின் பங்கேதும் கிடையாது என்று தட்டிக்கழிக்கின்றனர்.
தற்போது, சுப்பாமேவ்  கான் பண்ணையில் உள்ள  17 கன்றுகளுக்கு பாலூட்ட பசு மாடுகளை மீட்க முடியாமல், கன்றுகளுக்கு புட்டிப்பால்  கொடுத்து வருகிறார்கள்.
பஞ்சாயத்துத் தலைவர் ஷெர் மொகம்மத் கூறும்போது, “முசுலீம் குடும்பத்தினர் பசு மாடுகளை மீட்பது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. கான் பசுவதை செய் வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்படி அவர் பசுவதையில் ஈடுபட்டார் என்றால், கான் மீது குற்ற வழக்கு பதிவு செய்யாதது ஏன்?’’ என்ற நியாய மான வினாவை எழுப்பினார்.
கிஷான்கார் காவல்நிலைய அலுவலர் ரத்தோர் கூறும்போது, “கிராமத்திலிருந்த சிலரே, கானின் பசு மாடுகளை கிராம கோசாலைக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். தற்போது, கிராமத்தினரே, கான் பசுவதை செய்யவில்லை, பால் விற்பனை செய்து தொழில் செய்து வருகிறார் என்று மனு கொடுத்துள்ளனர்’’ என்றார்.
உண்மை என்னவென்று தெரிந்திருந்தும் காவல்துறை கைகட்டி சேவகம் செய்வது ஏன்?
காக்கிகளை ஆட்டி வைப்பது காவிகளாக உள்ள மாநிலத்தில் என்னதான் நடக்காது?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...