Friday, June 2, 2017

‘சாமர்த்தியம்' இனி எடுபடாது!

மாட்டிறைச்சித் தொடர்பான சிக்கலில் வசமாக சிக்கிக் கொண்டு விட்டது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. எதிர்ப்புகள் கடும் புயலாகச் சுழன்றடிக்க ஆரம் பித்தவுடன் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?
மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என்று யார் சொன்னது. இறைச்சிக்காக மாடுகளை சந்தைக்குக் கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்று முட்டாள்தனமாக விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
அவர்கள் சொல்லுவதை வைத்துப் பார்த்தாலும்கூட இறைச்சிக்காக மாடுகளை சந்தைக்குக் கொண்டு செல்லக்கூடாது என்றால், அதன் பொருள் என்ன?
இறைச்சிக்காக அனுப்பினால்தானே இறைச்சியைச் சாப்பிட முடியும்? மீனைப் பிடித்தால்தானே மீனைச் சாப்பிட முடியும்? ரொம்பவும் சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு, தங்களின் அறியாமை இருட்டை வெளிச்சமாகக் காட்டிக் கொள்கின்றனர்.
பசு மாட்டு விடயத்தில் தொடர்ந்து இவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பின்னோக்கிப் பயணித்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சங் பரிவாரைச் சேர்ந்த வர்கள் ஆங்காங்கே எத்தகைய வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், இப்பொழுது அவர்கள் சொல்ல முயற்சிக்கும் சமாதானம் என்பது வேரற்றது என்பது விளங்கி விடுமே!
அரியானா மாநிலத்தில் செத்த மாட்டின் தோலை உரித்த தாழ்த் தப்பட்ட தோழர்கள் அய்வரை அடித்தே கொலை செய்தவர்கள் யார்? உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி நகரில் அக்லாக் எனும் முசுலிம் சமுதாயப் பெரியவர் அடித்துக் கொல்லப்பட்டது எந்த அடிப் படையில்? அவர் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, கோவில் மணியை அடித்து மக்களைத் திரட்டி அடித்துக் கொல்லவில்லையா?
குஜராத் மாநிலத்தில் பசுவைத் தோலுரித்ததாகக் கூறி தலித் துகள்மீது தாக்குதலைத் தொடுத்தவர்கள் யார்? மத்தியப் பிரதேசம் மந்த்சோர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சிக் கொண்டு சென்றதாக இரு முஸ்லிம் பெண்மணிகளை பஜ்ரங்தள் காலிகள் தாக்கியது எந்த அடிப்படையில்?
பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மாவட்டத் தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகக் கூறி, பெலுகான் எனும் முதியவர் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் அடித்துக் கொல்லப்படவில்லையா? அப்படிக் கொன்ற கொடியவர்களை புரட்சிவீரன் பகத்சிங்கோடு ஒப்பிட்டு சங் பரிவார்க் கும்பல் புகழவில்லையா?
அந்த முஸ்லிம் முதியவர் அடித்துக் கொல்லப்படும் காட்சியை சமூக வலைதளங்களில் பார்த்தவர்களின் குருதி உறைந்து விடுமே!
இதில் என்ன கொடுமை தெரியுமா? அடித்துக் கொல்லப்பட்ட பெலுகானின் மகன்கள் இருவர் மாடு திருடர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதுதான். இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர் யாரோ அனாமதேயம் அல்ல - ராஜஸ்தான் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கடாரியாதான் இப்படி ஒரு குற்றச்சாட்டைப் பட்டவர்த்தனமாக முன்வைத்தார். விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது நிரூபணமாகி விட்டது. (அப்படி யானால், அந்த அமைச்சரை என்ன சொல்லுவது - என்ன செய்வது?) பி.ஜே.பி. அமைச்சர்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு அல்லவா!
மகாராட்டிரம், அரியானா பகுதிகளில் மாடுகளை வாகனங் களில் ஏற்றிச் சென்றால் அவ்வளவுதான் - பசு பாதுகாவலர்கள் எனும் பெயரில் காவிக் காலிகள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கடும் தாக்குதலைத் தொடுக்கிறார்கள். லாரியில் மாடுகளோடு வந்தவர்களின் காலில் லாடம் அடித்த நிகழ்வுகளும் உண்டே!
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக வந்தாலும் வந்தார், சங் பரிவார்க் கும்பலுக்குக் கொம்பு முளைத்து விட்டது.  அவர்களுக்கு “யுவவாகினி’’ என்ற பட்டப் பெயர் வேறு; காவல்துறை வாகனங்களில் கையில் தடியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்களே!
சமூக வலைதளங்களில் ஒரு காட்சி. உ.பி.யில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, ஓட்டுநரின் அருகில் அமர்ந்து கொண்டு, ‘பசு எங்கள் தாய் என்று சொல்லு’ என்று கூறி, ஓட்டுநரின் கன்னத்தில் அடித்துக்கொண்டே செல்லுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தடியர்கள்.
அந்தக் காணொலிக் காட்சியின் கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?  ‘‘ஆம் - அப்படித்தான் அடிப்போம், உதைப்போம், எரிப்போம்‘’ என்று எழுதப்பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக் கிறோமா? பி.ஜே.பி. அதிகாரத்திற்கு வந்தாலும் வந்தது - நாடு காட்டுவிலங்காண்டிக் காலத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விட்டதே!
சங் பரிவார்களின் இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், இப்பொழுது மத்திய பி.ஜே.பி. மாட்டிறைச்சி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கை எந்த அடிப்படையில் என்பது எளிதில் விளங்கி விளங்கிடுமே.
பி.ஜே.பி. ஆளும் சில மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மூன்றாண்டு தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று சட்டம் செய்துவிட்டார்கள்.
பி.ஜே.பி. ஆட்சி செய்யும் இரண்டொரு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியதை இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி மத்திய பி.ஜே.பி. ஆட்சி இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கிவிட்டன. சென்னையில் அய்.அய்.டி.யில் மாட்டுக்கறி சாப்பிட்ட மாணவனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பி விட்டது; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலை ஏற்பட்டு விட்டது. மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் இறங்கினால், பி.ஜே.பி.யின் ஆட்சி அதிகாரச் செருக்கெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அந்த நிலை வருவதற்கு வேறு யாரும் காரணமல்ல - பி.ஜே.பி.தான் - அதன் சங் பரிவார்க் கும்பல்தான்.
மரியாதையாக மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை பின்வாங்கப்படவேண்டும்; முரண்டு பிடித்தால், வட்டியும் முதலுமாக சேர்ந்து சுமக்க நேரிடும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

‘‘மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை சட்டப்படி செல்லுமா?’’ -ஓர் அலசல்

பொ. நடராசன்
நீதிபதி (பணி நிறைவு)
செயலாளர், வழக்குரைஞரணி,
திராவிடர் கழக சட்டத்துறை.

மோடியின் மத்திய அரசு 23.05.2017 முதல் மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுவதை தடை செய்து மிருகவதை தடுப்பு (கால் நடை சந்தைகளை) ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2017 (The Prevention of Cruelty to Animals (Regulation of Livestock Markets) Rules 2017)அறிவித்திருக்கிறது. மேற்கண்ட விதிகள் 22(b) (iii) இன்படி ஒருவர் தனது கால்நடையை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரும் போது, அக்கால்நடை இறைச்சிக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை என எழுத்து பூர்வமான விளம்புதல் செய்யவேண்டும். 
விதி 22 (e) (i) கால்நடையை வாங்குபவர் அதை மேற்கொண்டு இறைச்சிக்காக விற்பதை தடை செய்கிறது. இவ்விதிகள் பிரதான சட்டமான மிருகவதை, தடுப்புச் சட்டம் 1960 இன் பிரிவு 38 (1) இன் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ளன. எந்த ஒரு விதியும் பிரதான சட்டத்திற்கு விரோதமாக, எதிராக இருக்ககூடாது என்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதியாகும். 
ஆனால் இந்த மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை செய்யும் விதிகள் பிரதான சட்டமான ‘‘மிருகவதைத் தடுப்புச் சட்டம்’’, 1960 க்கு புறம்பானது, எதிரானதாகும். மிருகவதைத் தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 மனிதர்களின் உணவுக்காக மிருகங்கள் அழிக்கப்படுவதற்கு விதி விலக்கு அளிக்கிறது. அதே நேரத்தில் அப்படி அழிக்கும் போது தேவையில்லாத வலியோ, இம்சையோ கூடாது (not accompanied by unnecessary pain and suffering)என்றும் அப்பிரிவு வலியுறுத்துகிறது. 
எனவே, மிருகவதை தடுப்புச் சட்டம், 1960 மிருகங்களை உணவுக்காக கொல்வதை அனுமதிக்கிறது என்பது தெளிவான விசயமாகும். ஒரு பிரதான சட்டம் உண வுக்காக மிருகங்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கும் போது அச்சட்டத்தின் கீழ் உருவான விதிகள் (Rules)  எவ்வாறு அச்சட்டத்திற்கு எதிராக இருக்க முடியும் என்பதே சட்டம் படித்த அனைவரின் கேள்வியாகும்.
இப்போது,இயற்றப்பட்டஇவ்விதிகள்பிரதான சட்டத்தையே செல்லாததாக்கிவிடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். பிரதான சட்டத்திற்கே எதிரான விதிகள் செல்லத்தக்கதல்ல, நடைமுறைப்படுத்த முடியாதவை என்பதும் சட்ட நியதியாகும்.
அதோடு மட்டுமல்லாது ‘‘கால்நடை சந்தைகள்’’ என்பது விதி 2(b) இல் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் சந்தைக்கு அல்லது ஆடு மாடுகள் வெட்டுமிடத்திற்கு அருகில் கால்நடைகளை தங்க வைக்கும் இடமும் (Lairage) ‘‘சந்தைகள்’’ எனக் கருதப்படும் என விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த விளக்கத்தில் தான் குறும்பான அயோக் கியத்தனம் அடங்கியுள்ளது. கால்நடைகள் வெட்டு மிடத்திற்கு அருகில் கால்நடைகளை தங்க வைத்தாலே அது ‘‘கால்நடைச்சந்தை’’ என்றே ஆகிவிடும். ஒரு கால்நடையை அங்கு தங்க வைத்தாலே அது ‘‘கால்நடைச்சந்தை’’ என்றே ஆகிவிடும்.
‘‘அகில இந்திய மாட்டிறைச்சி மற்றும் கால்நடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்’’ கால்நடை சந்தையின் மூலம் 9% விற்பனை நடைபெற்று வருகிறது என்றும், 1% மட்டுமே விவசாயிகள் நேரடியான விற்பனையில் நடைபெறுகிறது என அறிவித்திருக்கிறது. எனவே இது கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கின்ற முயற்சியே ஆகும். இறைச்சி விற்பனையைத் தடை செய்ய தனியாக சட்டமியற்றலாமே தவிர விதிகள் மூலம் தடை செய்ய முயலுவது சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
அப்படியே தனிச்சட்டம் வந்தாலும் அரசியல் சட்டபிரிவு19(1) (g) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் வியாபாரம் செய்வதற்கான ஒருவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். மேலும் ஒருவரது உணவை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது அரசியல் சட்டப் பிரிவு 21-க்கு விரோதமானது. இதை Hinsa Virodhak Sangh vs Mizapur Moti Kuresh Jamat (2008) 5 SCC 33, and In Re Ramlila Incident (2012) 5 SCC 1
வழக்குத் தீர்ப்புகள் தெளிவாக விளக்கியுள்ளன.
எனவே இத்தடையானது மனிதர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. ஆனால் அவ்வாறு அரசியல் சட்டத்தால் அடிப்படை உரிமைகள் ஏதும் வழங்கப்படாத கால் நடைகளைக் காப்பாற்றுகிறது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சிவில் யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள் ‘‘மாற்றம்'' கருதி வாக்களித்தவர்களே உஷார்! உஷார்!! - கி.வீரமணி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை வெறிப்பேச்சு
வெட்டுவோம் - குத்துவோம் - கொல்லுவோம் என்று பேசுவதா?
மத்திய - மாநில அரசுகள் மவுனம் காப்பது ஏன்? ஏன்?
சிவில் யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள்
‘‘மாற்றம்'' கருதி வாக்களித்தவர்களே உஷார்! உஷார்!!
2019 தேர்தலில் வெற்றி பெற வியூகம் - வீழ்த்திடத் தயாராவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி veeramani
பசுவதை செய்பவர்களை வெட்டுவோம், கொல்லுவோம் என்று வி.எச்.பி.காரர்கள் பச்சையாக, வெறித்தனமாகப் பேசுகிறார்கள். மத்திய - மாநில அரசுகள் கைகட்டி வேடிக் கைப் பார்க்கின்றன. ஒரு சிவில் யுத்தத்தையே தொடங்கி விட்டனர். மாற்றம் வரும் என்று கருதி பி.ஜே.பி.,க்கு வாக்களித்த இளைஞர்களே, பொதுமக்களே அடுத்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற, மத அடிப்படையில் வாக்கு வங்கியை உருவாக்க வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! என்ற முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
‘பசு பாதுகாப்பு, பசுவதைத் தடுப்பு’ என்ற பெயரால் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்குக் கீழ்படி யும் பா.ஜ.க. அரசு, பசு, ஒட்டகம், எருமை மாடு - இவைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது சந்தைகளில் என்கிறது.
ஒரு கல்லால் இரு மாங்காய்களா?
அப்படி இந்த மிருகங்களை விற்பனை செய்வோருக்குத் தகுந்த சான்றிதழ் இன்றி - அதாவது இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்ற சான்றிதழ் உரிய அதிகாரிகள் குழுவிடம் பெற்றுத்தான் விற்க முடியும் என்று அரசு ஆணை (Notification) போட்டதானது - மறைமுகமாக இந்த இறைச்சி விற்பனையைத் தடை செய்வதாகத்தான் பொருள். காரணம், இறைச்சிக்கு - பால் தராத, வறட்டு மாடுகளை விற்றுத்தான், ஏழை விவசாயிகள் மீண்டும் பால் கறவை மாடுகளை வாங்குவது வழக்கம். அதைத் தடுத்து விடுவது அந்த ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் - ஒரு கல்லால் இரண்டு மாங்காய் என்பதுபோல் இந்த இறைச்சி உண்பதையும் தடுக்கும் ‘லாவகமான’ திட்டமும் ஆகும் இது.
இரண்டு முக்கிய காரணங்கள்
இதனை இப்போது அறிவித்திருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1. மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகள் - கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பல துறைகளில் பெருமையுடன் குறிப்பிடும்படி எதுவும் இல்லாததோடு, இப்படி ஒரு பிரச்சினையைக்  கிளப்பினால், திசை திருப்பிவிட்டு, ஹிந்துத்துவா ஆட்சியை - ‘பெரும்பான்மை இந்துக்கள்’  என்ற மதவெறியைத் தூண்டி விட்டு,   இந்து வாக்கு வங்கியை ஒரு முனைப்படுத்த (பிவீஸீபீu ஸிமீறீவீரீவீஷீus (Hindu Religious Polarisation) 2019 தேர்தலுக்கு இப்போதே வித்தூன்றும் திட்டமும் உள்ளது!
விஷம் கக்கும் வி.எச்.பி. பேர்வழி
பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதுபோல், வடநாட்டில் பெரோசாபாத்தில் (Ferozabad) பஜ்ரங் தள் அமைப்பினரின் பயிற்சி முகாம் நடந்து முடிவடையும் நிலையில், அதில் கலந்துகொண்டு நடத்திய விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) சர்வதேச கூட்டுச் செயலாளர் என்ற பதவி வகிக்கும் சுரேந்திர ஜெயின் என்ற ஒரு நபர் மிகவும் மோசமான பகிரங்க வன்முறைப் பேச்சினைப் பேசியுள்ளார்.
(இது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 1.6.2017 ஏட்டில், 11 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது).
நெஞ்சைப் பிளப்பார்களாம்!
‘‘பசுவதைத் தடுக்க காவல்துறையினர் தயங்கினால், அப்படி செய்வோரை நாங்களே நெஞ்சைப் பிளப்போம்; தமிழ்நாட்டில் (அய்.அய்.டி.) மாட்டுக்கறி விருந்து நடத்தியவர்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களைப் பாராட்டுகிறோம்.’’
‘‘பசுவைக் கொல்லுவோரும் உங்கள் கத்திகளைத் தயாராக வைத்திருங்கள்; அவற்றைப் பயன்படுத்தியே இனி அவை பசுவை அறுப்பதற்குப் பதிலாக உங்கள் கழுத்துகளை அறுப்ப தற்கே நாங்கள் (விசுவ ஹிந்து பரிஷத் - பஜ்ரங் தளத்தினர்) பயன்படுத்துவோம்! இனி பசு வதையை நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்!
அதுபோலவே இஸ்லாமி யர்களும், இந்துக்களும் ‘லவ் ஜிகாத்’ - காதல் மணங்களை செய்து கொள்வதையும் நாங் கள் அனுமதிக்கமாட்டோம்! சிறுபான்மைச் சமூகத்தினர் எங்கள் பெண்களை மணந் தால், அவர்களிடமிருந்து திரும்ப எங்கள் பெண்களை மீட்டெடுக்கத் தயங்கமாட் டோம்'' என்றெல்லாம் பகிரங்கமாகப் பேசி ஏடுகளில் வெளிவந்துள்ளது!
ஒரு ஜனநாயக நாட்டில் வெட்டுவோம், குத்துவோம் என்று பேசுவதா?
ஒரு  ஜனநாயக நாட்டில், இப்படி பகிரங்கமாகக் கொல்லுவோம், குத்துவோம், பெண்களைத் தூக்கி வருவோம் என்று பேசுவதை மத்திய - மாநில அரசுகள் எப்படி அனுமதிக்கின்றன?
உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாமா?
இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தி, மதக்கலவரத்தைத் தூண்டி - முன்பு பாபர் மசூதி இடிப்பை வைத்து ஹிந்து வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொண்டது போல், சட்டம், ஒழுங்கை அவர்களே கையில் எடுத்துக்கொண்டு தங்கள் வெறியாட்டத்தைத் தொடங்கி விட்டனர்; பிரதமர், மத்திய - மாநில அரசுகள் தங்கள் மவுனத்தின்மூலம் இப்பணிக்கு கண் சிமிட்டி உசுப்பி விடும் நிலை உள்ளதோ என்ற நியாயமான அய்யத்திற்கு என்ன பதில்?
சிவில் யுத்தம் தொடக்கமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் 30.5.2017 சென்னை பெரியார் திடலில் பேசும்போது இவர்கள் ஒரு ‘‘சிவில் யுத்தத்திற்கு’’ இதன்மூலம் வித்திடுகிறார்களா என்று கேட்டார்; அவர் பேசிய சில மணிநேரத்தில் வடக்கே உ.பி.யில் அவர்கள் ஆட்சியிருக்கிறது என்ற அசட்டுத் துணிச்சலில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்தப் போர்ப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெறும் கடைசி நாளில் ஒரு பார்ப்பன நீதிபதி (ஷர்மா) இந்திய அரசியல் பிரமாணத்திற்கு எதிராக, புனித பசுவை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவியுங்கள் என்று கூறியுள்ளார்.
நாடு எங்கே செல்கிறது?
‘வேலிகளே பயிரை மேயும்' இந்த அநியாயம்பற்றி உலக நாடுகள் என்ன கருதும்?
காவிக் கூட்டம், கருத்து மோதலைக் கைவிட்டு, கைகலப்பு, கொலைத் தூண்டல்களைச் செய்யலாமா?
சட்டம் வேடிக்கை பார்ப்பதா?
இனியும் ஏமாறாதீர்
இளைஞர்களே!
இளைஞர்களே, வளர்ச்சிக்கு வாக்களிக்கிறோம் என்று சொல்லி, பிரதமர் மோடி கட்சிக்கு வாக்களித்தீர்களே,
இதற்குத்தானா?
இனி ஒருமுறையும் ஏமாற்றிட பகிரங்க மதவெறித் தூண்டிலைத்  தூக்கிப் புறப்பட ஆயத்தமாகிவிட்டனர்!
சிறுபான்மை - பெரும்பான்மை பிளவை முதலீடாக மாற்றி - வெற்றி பெறும் வியூகம் வகுத்து விட்டனர்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.
சென்னை
1.6.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...