Saturday, June 4, 2016

ஜூன் 21 - எச்சரிக்கை!



- மின்சாரம்


அய்ந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப் படும் சில மாதங்களில் இருந்தே தன் னுடைய காவிவெறியை மறைத்து மீண்டும் வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிய மோடி தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த மறு நாளே தன்னுடைய சுய உருவத்தை காட்டிவிட்டார்.
 ஜூன் 21 ஆம் தேதி நடக்கும் உலக யோக தினத்தை முன்னிட்டு அன்றையதினம் இந்தியாவின் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் யோகா பயிற்சி நடக்க வேண்டும் என்றும்,
இந்த பயிற்சியின் போது ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் அவசியம் உச்சாடனம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆயூர்வேத அமைச்சகம் (ஆயூஸ்) சுற்ற றிக்கை விடுத்துள்ளது. இந்த மந்திர உச்சா டனைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
‘ஓம்’ சமஸ்கிருத மந்திரங்களுடன் பிரார்த்தனைகள் 
உலக யோகா நாளில் ஓம் என்ற சொல் லுடன் உச்சரிக்கவேண்டிய சமஸ்கிருத மந்திரங்களை ஆங்கிலம், இந்தி மற்றும் அனைத்து மாநில மொழிகளிடம் சமஸ் கிருத ஓசைவடிவில் அதன் விளக்கத்தை யும் அச்சடிக்கும் பணியில் ஈடுபட ஆரம் பித்து விட்டது.
மேலும் ஆயூஸ் அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் உலக யோகா தினம் காலையில் 45 நிமிடங்கள் அரசு அலுவலகம் பள்ளிக்கூடம் மற்றும் விருப்ப முள்ள தனியார் நிறுவனங்களில் நடை பெறும். இதில் மத்திய மாநில அரசு அலு வலகங்களில் பணியாற்றுபவர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரிகள் மேலும் அரசுடன் இணைந்து யோகா நாளைக் கொண்டாட விரும்பும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும், இந்த யோகா நாளில் சுமார் 22 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொள் வார்கள், முதல் 6 நிமிடங்கள் சூரிய வணக்கத்துடன் கழுத்து மற்றும் தோள் தொடர்புடைய யோகாப் பயிற்சி, அதனை அடுத்து 2 நிமிடங்கள் சமஸ்கிருத மந்திரங் களுடன் பிரார்த்தனைகள், அதன் பிறகு 23 நிமிடங்கள் தொடர்ந்து யோகா பயிற்சி நடைபெறும்.
இந்த 23 நிமிட யோகா பயிற்சியின் போது ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோல்கத்தாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தலைவர் சபீப் காஜி கூறியுள்ளதாவது: மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதச்சார்பற்ற கொள் கைக்கு எதிரானதாகும், இது அதிகாரத் தைக் கையில் வைத்துள்ளவர்களின் அதிகாரத் திமிரின் வெளிப்படாகும். இந்த நாட்டில் உள்ள பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையை சீர் குலைக்கும் நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு உலக யோகா  நாள் கொண்டாட்டத்திற்கு  முன்பு மோடி ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் கூறுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.  நமது நாட்டில் நோயாளிக்கு மருந்து கொடுப் பதைக் கூட மதக்கண்ணோட்டத்தில் பார்க் கிறார்கள்.
ஓம் என்ற சொல் சிலருக்கு பிரச் சனைகளைக் கிளப்பி விடுகிறது என்று கூறியிருந்தார். ஆயூஸ் அமைச்சரகம் யோகா தினத்தன்று ஓம் என்ற மந்திரமும் சமஸ்கிருத உச்சரிப்பும் கூறவேண்டிய தேவையில்லை என்று 2015-ஆம் ஆண்டு சுற்ற்றிக்கை அனுப்பியிருந்ததாகக் கூறியிருந்தது.
இது குறித்து பாஜகவின் தீவிர ஆதர வாளரான அனுபம் கேர் விவாதத்திற்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரத்தை சொல்ல விருப்ப மில்லாதவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற விருப்பமில்லாதவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் சொல்கிறவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கட் டும்! சொல்லாதவர்கள் நோஞ்சான்களாக போகட்டும் என்றும் கூறினார்.
யோகா பற்றி சில தலைவர்களின் கருத்து
யோகா என்பது சனாதன மதம் (இன்று இந்துமதம் என்று மாறிவிட்டது) கொடுத்த வரமாகும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குவங்கிக்காக இதை எதிர்க் கின்றனர் என்றார் ராஜ்நாத் சிங். (2014)
யோகாவில் ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லையென்றால் அது நீர் இல்லாத நதி போல் விண்மீன் இல்லாத வானம் போல் இருக்கும் என்கிறார் ஸ்மிருதி இரானி.  யோகா என்பது முனிவர்கள் மற்றும் வேதத்தில் புலமைபெற்ற ரிஷி களால் உருவாக்கப்பட்டது, இந்து மதத்தில் இருந்து யோகாவைப் பிரிக்க முடியாது என்கிறார் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார மய்யத்தின் தலைவர் சுதர்ஷன் ராவ். (ஜூன் 2015).
இந்தப் போக்கைக் கவனிக்கும்போது ஒன்று மட்டும் உறுதியாகி விட்டது. பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் நேரிடை யான பொருளாக ஏற்க முடியாது; அதற்குள் பூடகமாக இந்துத்துவா நஞ்சை வைத்திருப் பார்கள் என்பது மட்டும் உண்மை.
உடற்பயிற்சி தேவைதான் - இவர்கள் சொல்லுவது - அறிமுகப்படுத்துவது உடற் பயிற்சியல்ல- இந்துத்துவாவை உள்வாங்கும் மூளைக்கான பயிற்சி.
இதனை முற்றவிட்டால் பிற மதத்தி னரைக் கடிக்கும்; மதச் சார்பற்றவர்களை விழுந்து பிடுங்கும்; பகுத்தறிவாளர்களை விழுந்து பிராண்டும்.
முளையிலேயே இதனைக் கிள்ளி எறியாவிட்டால் பின்னர் அதிக விலை கொடுக்க நேரிடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஓம் என்பது என்ன?



தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறையில் ஆண்- பெண் பாலியல் ஆற்றல் ஏன் அவ்வளவு முக்கியத்துவமாய் இருக்கிறது?
தாந்திரீகர்கள் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் புணர்ச்சி  வணக்கத்திற்குரியதாகி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிரம்மாவும், மாயாவும்போல, சிவனும் பார்வதியும் போலத் தெய்வங்களுங் கூடத் தங்களுக்கு இணைதுணைகளைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ளதைவிட வேறெந்த நாட்டிலும் ஆண் - பெண் கலப்பை சின்னமாகக் கொண்ட இயற்கைச் சக்தி வழிபாடு அதிக அளவில் நடைமுறைப்படுத்தப் பெறவில்லை.
இலிங்கமும் (ஆண்குறி) யோனியும் (பெண்குறி) என்னும் இவ்விரண்டின் இணைப்பு அடையாளங்களும் சிவசக்திக் கலாச்சாரமாக இலட்சக்கணக்கான இந்திய மக்களால் வணங்கப் பெறுகின்றன.
எனவே, இந்த வழிபாடு உண்மையில் சக்தி தேவதையின் வாயிலாக வெளிப்படும் இயற்கையின் பெண் சக்தியை அல்லது பார்வதியென்றும், தேவியென்றும், துர்க்கையென் றும், பவானியென்றும், மீனாட்சி என்றும், மகா காளியென்றும் அறியப்படுகின்ற சிவக்கடவுளின் இணைகளின் ஆற்றல் விசையை வணங்குதல் என்பதேயாகும்.
ஓம் என்னும் அடையாளமும் ஓம்காரமும் இவவுலகத்தில் இன்றுவரை வாழ முடிந்துள்ள வேறெந்த சின்னத்தைக் காட்டிலும் காலத்தால் முந்தியது என்பதைத் தாந்திரீகர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இந்தியா, தென் கிழக்கு ஆசியா, நேபாளம், மங்கோலியா, சைனா, ஜப்பான் ஆகிய நாடு களையும் வட - தென் அமெரிக்கர்களின் பழைய நாகரிகங்களையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஓம் என்பதையோ ஓம்காரம் என்பதையோ, ஆண் - பெண் கூட்டினை வற்புறுத்தும் ஆழ்ந்த உட்பொருள் கொண்ட சின்னமாக நம்புகின்றனர் என உறுதிப்படுத்துகின்றனர்.
இந்தப் பொருள்பற்றிப் பல்வேறு புனைகருத்துகள் முன்னெடுத்து வைக்கப்பட்டாலும் ஓம் என்பது நிரந்தர சக்தி விசையின் அடையாளம். உயிரின் அடிவேர் - கண்ணுக்குத் தெரியாத அணுவிலிருந்து இந்த அண்டப் பரப்பு அல்லது ஆண்டவன் வரையிலுமான படைப்புகள் அத்தனைக்கும் அடிப்படை - இறந்த, நிகழ்வு, எதிர் காலங்களின் சின்னம் என்பதிலே ஹிந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கீழை உலகின் குடிகள் ஆகியோரிடையே முழமையான கருத்தொற்றுமை நிலவுகிறது.
தாத்திரீகம் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்
1) கடவுளின் பெயர் அல்லது ஓம் - ஓம்கார் என்னும் தேவநாகரி எழுத்து புழக்கத்திற்கு வருவதற்கு முன் மென்மையான களிமண்ணில் தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு வந்தது. ஓம் அல்லது ஓம்கார்  என்ற அடையாளம் பனையோலைகளில் எழுதப் பெற்றதும் இன்றும் எழுதப்படுவதும் ஆகும்.
2) எனவே, ‘ஓம்’ என்னும் சொல் ஆண் - பெண் குறியின் சேர்க்கையின் மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதே.
இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்டது எனும் கேள்விக்கு பண்டைய தீர்க்க தரிசிகளின் ‘ஓம்’ என்று விடையிறுத்தனர். இரு பாலரின் இணைப்பையே அவர்கள் ஓம் என அடை யாளப்படுத்தினர். இந்த இணைப்பினால்தான் உலகமே உண்டாயிற்று. இந்தியாவின் பழங்கால முனிவர்களும் வரும் பொருளுரைப்போரும். யோகிகளும் இந்த ஆண் - பெண் புணர்ச்சிக் குறியீடே ஓம் என்பதில் எந்த அய்யத்திற்கும் இடம் வைக்கவில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் பரந்த அளவில் நல்லறி குறியாகப் பயன்படுத்தி வரும் இந்திய ஸ்வஸ்திகா என்பது போகம் யோகம் ஆகிய இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப்படுத்திக் காட்டுவதே யாகும் என்பதைத் தாந்திரீகர்கள் நிறுவுகின்றனர்.
ஒரு கருத்து நெறியினர் திபெத், நேபாளம், பூட்டான், சிக்கிம் இன்னும் பல இந்திய மாநிலங்கள் ஆகிய இடங்களில் மிகவும் சாதாரண மாய் பொதுவானதாய் ஆகிவிட்ட பல்கணவர் உடைமை எனும் மரபினை அடிப்படையாய்க் கொண்டதுதான் ஸ்வஸ்திகா என்று நம்புகின்றனர். தந்திரக் கலையானது ஸ்வஸ்திகாவை யோனியின் புனிதக் கோயில் என்றே அழைக்கிறது. தாந்திரீகர்கள் பாலியல் புணர்ச்சி தொடங்கு வதற்கு முன்னால் ‘ஸ்வஸ்திகா மங்களத்ரவ்யா’ என்ற சொற்றொடரை ஓதுகின்றனர். ஸ்வஸ்திகா அடையாளம் ஓம் அல்லத ஓம்காரின் விளைவான கிளை என்பது மறந்து விடாதவாறு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இரண்டாவது மிகமிகச் சாதாரணமாய்ப் பயன்படுத்தப் பெறும் மந்திரம் ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதாகும். சுருக்க மாய்க் குறிப்பதென்றால் இது கலவியையும் பேரின்பத்தையும் பற்றிய மந்திரம். ஓம் என்பது தொடக்கத்திற்கும் முடிவிற்கு மானவோர் அசைச் சொல்லாகும். லிங்கத்தை (ஆண் குறி) சுட்டுவது மணி, பத்மே என்றால் புனித யோனியில் (பெண் குறி) எனப் பொருள்படும். ஹம் என்பது மிகவுயர்ந்த சக்தியின் ஆதாரமந்திரமாகும்.
“ஆண், பெண் பாலியல் சேர்க்கையே தலைமையான படைப்பாற்றலின் வாழ்க்கையின் விருப்பாற்றலின் அடிப்படை”
- தாந்திரீக மந்திரம்
(கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரா - காமம் சார்ந்த வழிபாடு (Tantar the erotic cult) - எனும் Orient Paper Backs நூலிலிருந்து)

Friday, June 3, 2016

அநீதிக்கு இடம் தரும் கடவுள்


20.11.1932 - குடிஅரசிலிருந்து...
உலக உற்பத்திக்கும் இயற்கை தோற்றங்களுக்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்க வேண்டாமா என்று கேட்பதின் மூலம் எப்படியாவது ஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச் செய்து அதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே  சர்வசக்தி, சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக் காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக வைத்து பெரிய ஆகாய கோட்டைகள் கட்டு வதையும் பார்த்திருக்கிறேன்.
உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங் களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் சைன்சைத் தொடர்ந்து கொண்டே போனால் என்றும் சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு சைன்சுக்கு யார்கர்த்தா என்கின்ற கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்கவில்லை என்று பதில் சொன்னால் அதுதான் கடவுள் என்று சொல்லி திருப்தி அடைவார்கள்.
அப்படியானால் அந்த கடவுளுக்கு யார் அவர் எப்படி உண்டானார், அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதான கேள்விகளை  முன்னைய விஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்விகளை போலவே, போட்டோமானால் அப்படிபட்ட கேள்வி கேட்க கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாக உண்டான தென்றும் அதற்குக் கால வரை இல்லையென்றும் சொல்லுவார்கள்.
அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லி விடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோ யூகத்தின் மீது அதுவும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா என்கிற யூகத்தின் மீது இது வாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம் என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.
பொறுப்பு ஏற்றுவது ஆனால் அப்படிப் பட்டதின் மீது மனித வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமத்துவதும், அதை வணங்குவதும், தொழுவதும், பிரார்த்தனை செய்வது என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம் என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுய நலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கை பிரியத்திற் காகவும் பிறர்க்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத் திற்கும் கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்று வதைப் பார்த்தால் பிறகு எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சி யானாலும் அது எங்கிருந்த போதிலும் அதை அழித்தே தீர வேண்டியிருக்கிறது.
திருடனுக்கும் கடவுள்
அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன்தான் திருடப் புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டு புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலைகாரனும் தான்.
விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலை யடைந்த உடன் கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்துகிறான். இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமையாளனும் தனது சொத்துக்களை திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான்.
இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும் செல்வவான்களும்  கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிர வேறு எதற்காவது பயன்படுகிறதா என்று பாருங்கள்.

மருத்துவத் துறையினர் உயிருடன் விளையாடுவதா?



இந்தியாவில் உள்ள பல்வேறு இரத்த வங்கிகளில் சரிவர பரிசோதனை செய்யப்படாமல் வாங்கப்பட்ட  இரத்தம் நோயாளிகளுக்கு செலுத்தப் பட்டதால் இதுவரை 2234-பேர்களுக்கு எச்.அய்.வி நோய் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு இரத்தவங்கிகள் இரத்தத்தை வாங்கும் போது சரியாக பரிசோதனை செய்வதில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்ற அப்பாவிகள் எச்.அய்.வி. நோயாளிகளாக மாறும் கொடுமை நடந்துள்ளது.

23.5.2016 அன்று நடந்த விபத்து ஒன்றில் சிக்கிய அஸ்ஸாமைச் சேர்ந்த சவ்ரவ் குலாட்டி என்ற சிறுவனுக்கு கவுகாத்தி அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவனுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.அய்.வி. கிருமி இருந்த காரணத்தால் அந்த சிறுவனுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த சேதன் கதாரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில விவரங்களைக் கேட்டிருந்தார். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சரியாக பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதன் காரணமாக 2234-அப்பாவிகள் எயிட்ஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதில் உத்தரப் பிரதேசத்தில் 361 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படாத இரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.அய்.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், குஜராத் மாநிலத்தில் இதே போல் 292 பேரும், பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து கேதன் கதாரி கூறும் போது 2015-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் போது சுகாதாரத்துறைக்கு பெருமளவு நிதி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் முற்றிலும் நின்றுபோய் விட்டன. மேலும் நோய்த் தொற்றுள்ள இரத்தம் மற்றும் பல முறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு பெருகியுள்ளது. தற்போது தனியார் மருத்துவ மனைகளில் மாத்திரம் ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.
பொதுவாக நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மய்யங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி இன்மையின் காரணமாக அவர்கள் நோயாளிகளைத் தவறாக வழி நடத்துகின்றனர்.
இதனால் தொற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகமாகிறது. இரத்த வங்கிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க அரசு மருத்துவமனைகளில் போதுமான நிதியில்லாத காரணத்தால் இது போன்ற ஆபத்தான நோய்த் தொற்று ஏற்படுவது சாதாரண நிகழ்வாகி விட்டது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (என்.ஏ.சிஏ)  இணை இயக்குநர் மருத்துவர் நரேஷ் கோயல்  இந்த தவறுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இந்த தகவல் அறிக்கை மற்றும் இது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்த் தொற்று இல்லாத இரத்தம் கொடையாகப் பெறப்படுவதில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மலேரியா, எச்.அய்.வி. மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களைப் பரப்பும் கிருமிகளைக் கொண்ட இரத்தம் பல்வேறு அரசு மருத்துவமனைகளைச் சென்றடைந்து விடுகிறது, அங்கிருந்து நோயாளிகளுக்குச் செலுத்தும் போது பிறருக்கும் பரவி விடுகிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

கிருமித் தொற்று உள்ள இரத்தம் செலுத்தப்பட்டதால் எய்ட்ஸ் நோய் அதிகம் பரவுவது தொடர்பாக எழுந்த இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு எச் அய் வி நோய்த் தொற்று உள்ளவர்கள் 8 முதல் 10 விழுக்காடு இருந்தனர். இன்று 2 விழுக்காடாக குறைந்துள்ளது. சில பரிசோதனை மய்யங்களில் தவறுகள் ஏற்பட்டுள்ளன. அதை விரைவில் சரிசெய்து விடுவோம். ஆகவே நிதிக்குறைப்பிற்கும், நோய்கிருமி தொற்றுள்ள இரத்த பரிசோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் சமாதானம் கூறுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் இந்த அபாயகரமான நிலைக்குக் காரணம் அரசுத்துறை என்பது மட்டும் உறுதியாகி விட்டது. சரியான பரிசோதனை இல்லாமல் இரத்தம் செலுத்தப்படுவது யார் குற்றம்? அரசுப் பணியாளர்மீதுதானே? அப்படி என்றால் அரசு தானே அதற்குப் பொறுப்பு. மத்திய பிஜேபி ஆட்சியின் ஈராண்டு கால சாதனைப் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். உயிருடன்  விளையாடும் விபரீதத்தை  ஓர் அரசே அரங்கேற்றலாமா?

Thursday, June 2, 2016

விடுதலையால் விளைந்த விந்தைகள்


தழாளர் என்னும் முறை யில் பெரியார் பொருள் இழப்பையும் பொருட்படுத்தாமல்  விடாப் பிடியாய் ‘விடுதலை' நாளிதழை நடத்திக் கொண்டு வந்தமைக்கு அதனால் தமிழ் மக்களுக்குக் கிட்டிய அரும்பெரும் நன்மைகள் தாம் தலை யாய அடிப்படை. பெரியார வர்களே, "நமது விடுதலை பத்திரிகை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நமது நாட்டு மக்க ளுக்கு இன்னமும் சரிவரத் தெரியவில்லை. நமது விடு தலையே இல்லை என்றால் இன்றைக்கு அரசாங்கமே பார்ப்ப னரல்லாதார் கைக்கு வந்திருக்காது. இது ஒரு சிலருக்குத்தான் - பொறுப்பு ணர்ச்சியுடன் சிந்தித்துப் பார்க்கின்றவர்களுக்குத் தான் தெரியும்" என்பது அவரின் மதிப்பாய்வு.
நூற்றுக்கணக்கான அம் மாற்றங்களை இங்கே எண்ணிக் கையிட முடியாதாகையால் சிறப்பான சிலவற்றை நினைவு படுத்திக் கொள்ளலாம். ராஜகோபாலா ச்சாரியார் 1938ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், "சரணாகதி மந்திரி சபை... ஆம் நாள். இன்னும் எத்தனை நாள்" என்பதாக அன்றாடம் ‘விடுதலை' பெட்டிச் செய்தி போட்டது மட்டுமா? அவர் பள்ளிகளில் புகுத்திய கட்டாய இந்தியை எதிர்த்து, தந்தை பெரியாரும் தமிழ்ச் சான்றோரும் நிகழ்த்திய நீண்ட அறப்போர் தொடர்பான ஆயிரக்கணக் கான செய்திகளை ஆச்சாரியார் பதவியை விட்டுச் செல்லும்வரை ஒன்று விடாமல் விரிவான
செய்திகளை நாட்டுக்குத் தந்தது ‘விடுதலை'.
தொடர்ந்து
தொடர் வண்டி நிலையச் ‘சிற்றுண்டிச்சாலை'களில் "பிராமணர்" - "சூத்திரர்" என்னும் இடப்பிரிவினை நில விய இழிநிலை நீங்கியமை.
பார்ப்பனர்கள் நடத்தி வந்த உணவுக்கடைகளின் பெயர்ப்பலகைகளில் இடம் பெற்றிருந்த ‘பிராமணாள்' எனும் வர்ணாச்சிரமப் பெயர் மறைந்தோடியமை
ஒவ்வொரு ஆணின் பெய ருக்கும் பின்னொட்டாகக் குறிக்கப்பட்டு வந்த ஜாதிப் பெயர் ஒழிந்து விட்டமை
"குத்திரச்சி, ஒத்திப்போ!' என்று நீரெடுக்க வரும் நம் பெண்ணைக் கொச்சைப் படுத் திய பார்ப்பனிகளின் அநாகரி கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை
பார்ப்பனச் சிறுவர்களைக் கூட, அல்லாதார் ‘சாமி' என்று விளிப்பதும், பஞ்சமர் ஏனைய ஆண்களின் முன்னிலையில் சாமி என அடங்குவதும் பழங் கதையாய் ஆகி விட்டமை
ஒவ்வொரு மாவட்டக் காங்கிரஸ் தலைமைப் பொறுப் பிலும் பார்ப்பனரே இருந்த காலம் காணாமற் போய், இன்று ஒவ்வொரு கட்சியின் மாநிலத் தலைவராகப் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதவரே இருக்கும் விந்தை நிகழ்ந்தமை
கலப்புத் திருமணம் செய்தோர்கள் "ஜாதி கெட்ட வர்கள்" என்று பழி சுமத்தப்பட்ட நாள்கள் மறைந்து, இன்று அத்த கையோர் மதிப்பிற்குரியோராக ஏற்கப்படும் சூழ்நிலை தோன்றியமை
'இராமாயணம் ஒரு கட்டுக்கதையே! என்று வாய் விரித்து ஆச்சாரியாரே ஒப்புதல் கூற்று வெளியிட நேர்ந்தமை
மடத்துத் தலைவர்கள் பல்லக்கில் அமர்ந்து கொள்ள, பஞ்சமரும் சூத்திரரும் அவர்களின் பல்லக்குத் தூக்கி களாகத் தொண்டாற்றிய காட்சிகள் இன்று காணக்கிடைக் காதவை என்றாகியமை
களிமண் பிள்ளையார் உருவங்களை நாடு முழுவ திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெளிப்படையாகப் போட்டு உடைத்து, நம்பிக்கையாளர்களுக்கு அறிவு கொளுத்தியமை
அரசுப் பணிமனைகளில் மாட்டப்பட்டிருந்த‘கடவுளர்' படங்கள் அகற்றப்பட ஏற்பாடு பண்ணியமை
புலவர்களிடம் உறைந் திருந்த ‘திருக்குறள்' எனும் அறிவு நூலைப் பொது மக்கள் கைக்குக் கிட்டச் செய்தமை
மடவார் என்றழைக்கப்பட்ட நம் மகளிர் மாஞாலமே வியக்கும் அளவிற்கு அறிவாளராக - ஆற்றலாளராக உலா வரும் உயர்நிலை உருவானமை
கல்விக் கூடங்களில் குறிப்பாகத் தொடக்கப் பள்ளி களில் பெண்பால் ஆசிரியர் நிறையப் பங்களிப்புச் செய்ய வைத் துள்ள புரட்சி
வகுப்புரிமைக் கொள்கையை விடாது பற்றிக் கொண் டிருந்த மாநில முதல்வர்கள் ஓமந்தூரார், குமாரசாமிராஜா இருவரின் சான்றாண்மை
தொழிற் கல்வியகங்களிலும், அரசுப் பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு செய்ய ஏந்தாக இந்திய அரசமைப்புச் சட்டத் தை முதன் முறையாகத் திருத்திய புதுமை
நாட்டாட்சியின் தலை மைச் செயலகத்தில் கவரிமான் களெனத் தம் குடுமி களை விரித்துப் போட்டுக் கொண்டு பார்ப்பனர் இன்பந்துய்த்த காட்சியெல்லாம் மறைந் தொழிந்து, இன்று ‘கருப்புத் திருவுருவங்களும்' அமர்ந் திருக்கும் அழகுத் தோற்றம்
முதன் முதலாய் ஆதி திராவிடப் பெருமகன் ஒருவர் சென்னை உயர்முறை மன்றத்தில் தீர்ப்பாளராகப் பொறுப் பேற்றமை
ஆச்சாரியாரின் ‘குலக் கல்வி'த் திட்டம் தொலைந்து போக, காமராசரின் திட்டத்தில் 33,000 பள்ளிகள் முளைத்தமை
பஞ்சம-சூத்திரப் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வில் அமர்ந்து தேறி, எளிதாகக் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து விடப் பார்ப்பனர்க்குப் பெருங் கருவியாக விருந்த 'ஷிமீறீமீநீtவீஷீஸீ' எனும் வடிகட்டும் முறைக்கு விடையனுப்பு விழா எடுக்கப் பட்டமை
பாடநூல்களை அரசே அச்சிட்டு மலிவு விலையில் மாணாக்கர்க்கு வழங்கும் உருப்படியான திட்டம் நடை முறைக்கு வந்தமை
‘தாலுகா போர்டு', ஜில்லா போர்டு', 'ரெவின்யூ போர்டு' என்று அழைக்கப்பட்டகேடான அமைப்புகள் வெவ் வேறு கட் டங்களில் கலைக்கப்பட்டமை
நம் தாயகத்திற்குத் ‘தமிழ் நாடு' என்று பெயர் சூட்டிப் புதிய வரலாறு படைக்கப் பட்டமை
தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சித் தீர்மானத்தின் உடனடிப் பலனாக, இந்திய நடுவண் அரசுத் தலைமை, தமிழக அரசின் தலைமை ஆகிய இரண்டின் சார்பாகவும் "இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படவே மாட்டாது" என்பதாக வெளிப்படையாக உறுதி அறிவிக்கப்பட்டமை
தமிழ்நாட்டரசின் இரு மொழிக் கொள்கை உலகிற்கே தெரியும் வண்ணம் அறிவிக்கப் பட்டமை
தெலுங்கானாவில் தூக்குக் கயிற்றுச் சுருக்குக்கு இலக்காக விருந்த பொதுவுடைமைத் தோழர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் சூழ்நிலை உருவாக்கப்பட்டமை
போன்ற பெரியாரியல் கோட்பாடுகள் நடப்புக்கு வரு மாறு நிறைவேற்றம் எய்தியமைக்கு ‘விடுதலை'யின் தொண் டறம் மாபெரும் காரணியாக நின்றது என்பது வரலாற்று உண்மையாகும்.
இவையெல்லாம் விந்தைகள் என்று அழைக்கப்படும் தகுதி படைத்தவை. இவ்வண்ணம் நாட்டின் ‘தட்ப வெப்ப இயற்கை'யையே மாற வைத்த பெருமிதத்திற்குரிய அருஞ்சிறப்பு இதழாளர் பெரியாரின் உடைமை!
"விடுதலை மலர்கள்
‘முடியின் இறகு'க்கு ஒப்ப ‘விடுதலை' ஆண்டு மலர்கள் ஒளிர்ந்தன. முதன் முதலில் ஆண்டு மலர் 1956 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளாகிய செப்டம்பர் 17ஆம் நாள் அன்றைய ‘விடுதலை' பொறுப்பாசிரியர் குத்தூசி குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
இன்றைய ‘விடுதலை' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொறுப்புக்கு வந்த பின்னர் 1962ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 அன்று ‘விடு தலை' - பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடப் பட்டுக் கொண்டு வருகிறது.
விடுதலை மலரில் பெரியாரின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரையும், அவரின் கொள் கை விளக்கக் கட்டுரைகளும் இயக்க முன்னோடிகள், பொது வாழ்வுத் தலைவர்கள், பல் துறை அறிஞர்கள், பாவலர்கள் ஆகியோரின் ஆய்வுப் படைப்புகளும் இடம் பெற்றன.
விடுதலை மலர் ஒவ்வொன்றும் அறிவுக் கருவூலம் என்பதில் அய்யமே இல்லை. மலர்களின் தனித்தன்மை களை விளக்குவதென்றால் அதுவே ஒரு தனிப்பொழிவாகி விடும், ‘விடுதலை' வளாகத்தில் அமைந்துள்ள
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் அந்நூலகம் போந்து நிறையச் செய்திகளை விடுதலை மலர்களி லிருந்து திரட்டித் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளில் பயன்படுத்துகின்றனர்.


.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விடுதலையின் சந்தாதாரர் ஆகுங்கள்!

வருமானத்தை நோக்காது தமிழர்களின் தன்மானத்துக்காகப் பாடுபடும் 
82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விடுதலையின் சந்தாதாரர் ஆகுங்கள்!

‘விடுதலை’யை வாழ்த்துங்கள் - நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துங்கள்!

‘விடுதலை’ ஆசிரியர் விடுத்துள்ள ‘விடுதலை’பற்றிய அறிக்கை

81 ஆண்டுகள் கடந்து 82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’ நாளேட்டை வாழ்த்துங்கள் - சந்தாதாரர் ஆகுங்கள் என்று ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான நமது ‘விடுதலை’ நாளேட்டிற்கு இன்று (1.6.2016) 82 ஆவது பிறந்த நாள் விழா!

பகுத்தறிவுப் பகலவன் தந்த அறிவுக்கொடைகளான சுயமரி யாதை இயக்கம், ‘குடிஅரசு’, ‘விடுதலை’,  ‘பகுத்தறிவு’, ‘ரிவோல்ட்’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ போன்ற அறிவாயுதங்கள் ஏராளம்.

வீரஞ்செறிந்த விவேகப் பணிகள்!

அவற்றைக் கொண்டே சுமார் 90 ஆண்டுகால சுயமரியாதை இயக்க வரலாற்றில், அறியாமை,  ஜாதி, பெண்ணடிமை, மதவெறி, மூடநம்பிக்கை, பண்பாட்டுப் படையெடுப்பு போன்றவற்றை உளப்பூர்வமாக, விளைவுகள் எதுவரினும் சற்றும் அஞ்சாமல், நடுங்காமல், பின்வாங்காமல் பீடுநடை போட்டு, எதிர்த்து சமூகநீதியை,  பல்வேறு சமூக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம் - ‘விடுதலை’யின் வீரஞ்செறிந்த விவேகப் பணிமூலம்!

நார்வே நாட்டின் தலைசிறந்த பகுத்தறிவாளரான
லெவிஃ பிராகல் அவர்கள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் முழங்கினார்:

‘‘உலகின் வேறு எந்த நாட்டிலும் பகுத்தறிவாளர்களால் ஒரு நாளேடு நடத்த இயலவில்லை; தமிழ்நாட்டில் - அதுவும் தந்தை பெரியார் துவக்கிய இயக் கத்தினால் மட்டுமே தொடர்ந்து இந்நாளேடு - மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழு மூச்சுடன் அறிவுப் போர் நடத்தி, வெற்றி பெற்று வருகிறது’’ என்று குறிப்பிட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கம் ‘விடுதலை’ நாளேடு.

பேச முடியாதவர்களுக்காகப் பேசும் குரல் இந்த ‘விடுதலை’ நாளேடு!

ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த பெண்ணினத்தின் விடுதலைக்கு உழைக்கும் நாளேடு ‘விடுதலை’ நாளேடு!

சமூகநீதிக்காக சமர்புரியும்
பேராயுதமானது இந்த ‘விடுதலை’ போராயுதம்!

எத்தனையோ பலங்களை - சூழ்ச்சி பலம், அதிகார பலம், பத்திரிகை ஊடக பலம், அதிகாரவர்க்க பலம் எல்லா வற்றையும் பெற்ற சகலகலா சாமர்த்தி யங்களை எதிர்த்துப் போர்க்களத்தில் நின்று போராடும் அறிவு பலம் கொண்ட சாமான்யர்களின் சரித்திர நாளேடு நம் ஏடு ‘விடுதலை’!

லட்சக்கணக்கில் அச்சாகிடும் ஏடு களைக் கண்டு அஞ்சிடாத அரசுகள், எதிரிகள்  இந்த லட்சிய ஏட்டின் கருத்து வீச்சு களை - தங்கள் கோட்டையின்மீது விழும் வெடிகுண்டுகளாகக் கருதி  நடுநடுங்கும் வண்ணம், யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத ஏடு நம் ‘விடுதலை’ நாளேடு!

இதற்கு நாளும் உழைப்பதைவிட யாம் பெறும் இன்பம் இவ்வையகத்தில் வேறு எதுவும் இல்லை. இல்லவே இல்லை!

தந்தை பெரியார் கொடுத்த பொறுப்பு!

1962 இல் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தனது அறிவுச் சுரங்கமான இந்த விடுதலையை இந்த எளிய தொண்டனின் பொறுப்புக்கு விட்டார்!
அலுப்பு, சலிப்பின்றி 54 ஆண்டு களாக கழகக் கொள்கைக் குடும்பத் தவரின் அரிய ஒத்துழைப்புடன் - கைம் மாறு கருதாது உழைக்கும் ‘விடுதலை’ப் பணிக் குடும்பத்தினரின் அரிய கூட்டு உழைப்பினாலும், ‘விடுதலை’ வளர்ந்து வருகிறது!  இணையத்தில் முதல் தமிழ் நாளேடாக இன்றும் இணையத்தில் 189 நாடுகளில் வாசகர்கள் நாள்தோறும் படிக்கின்றனர்.
‘விடுதலை’ கண்டறியாதவை!

எதிர்ப்புகள் - அரசுகளின் ஆதரவின்மை என்னும் கடும் வெப்பத்திற்கிடையே பல லட்சக்கணக்கான ரூபாய் பொருள் நட்டத்தினையும் ஏற்று அய்யா தந்த அருட்கொடையாக இன்னும் இது நெஞ்சை நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையுடன், எவருக் கும்  அஞ்சாத வீரத்துடன் மனிதகுல மாண்புக்கும் உரிமைக்கும் போர் முரசு கொட்டி வருகிறது!

தன்மானம், இனமானம் இவைகளுக்காகவே தன் வருமானத்தைத் துறந்த நிலையிலும் என்றும் தன் முழக்கத்தை நிறுத்துவதில்லை.

ஜோதிட மூடநம்பிக்கைகள், திரைப்பட செய்திகள், வருமானத்தைப் பெருக்க விறுவிறுப்பு செய்திகள் - இவை ‘விடுதலை’ கண்டறியாதவை!

அண்ணா ஆசிரியராக இருந்த விடுதலைக்கு அண்ணா பெயரில் உள்ள ஆட்சி- நூலகங்களில்
தடை விதிக்கலாமா?


அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த நாளேடான இந்த ‘விடு தலை’யை அண்ணா அரசு என்று பெயர் தாங்கிடும் கட்சி - ஆட்சி நூலகங்கள் வாங்கியதை நிறுத்திட்ட கொடுமை! இனியும் இம்முறையும் நீடிக்கலாமா?

அரசு நிதி - அனைவருக்கும் பொது, அதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கு ஏது இடம்?

அரசு விளம்பரங்களில் ‘விடுதலை’ புறந்தள்ளப்பட்ட ‘‘புதிய தீண்டா மையால்’’ ஒதுக்கப்படும் கொடுமை - இன்னமும் நீடிக்கலாமா?
கருத்துச் சுதந்திரத்திற்கு இவ்வளவு கடும் விலை நியாயம்தானா?
தமிழக ஆட்சியாளர்கள் சிந்திக் கட்டும்!

சந்தாதாரர் ஆவீர்!

நமது கழகக் குடும்பத்தவர்களுக்கும், ‘‘கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர் களான நமக்குப் பேராதரவு தரும் அன்பர்களுக்கும்’’ நமது வேண்டு கோள், ஒவ்வொருவரும் மற்ற இருவரை சந்தாதாரர்களாக்கி, எங்கள் பணிக்கு உரமிட்டு வளர்க்க உதவுங்கள்!

எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடாத இவ்வேடு, என்றும் எந்நிலையிலும் பீடுநடை போடும்!

வீதிகளில் துண்டை விரித்தேனும் விடுதலை தன்  தொண்டைத் தொடர இருக்கவே இருக்கிறது எங்கள் கருஞ்சட்டைப்படை! ‘விடுதலை’யை வாழ்த்துங்கள்! ஒத்துழையுங்கள்!!
நம்மை அழிக்க நினைக்கும் வீணர்களை வீழ்த்துங்கள்!

என்றும் உங்கள் தொண்டன்


கி.வீரமணி
ஆசிரியர்,
விடுதலை

சென்னை  
1.6.2016



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சமஸ்கிருதம், ஆரிய கலாச்சார திணிப்பு - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். என்பதுபோல அய்.இ.எஸ். என்ற பெயரில் அகில இந்திய கல்வி துறையா?
சமஸ்கிருதம், ஆரிய கலாச்சார திணிப்பு - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
அனைத்துத் தரப்பினரும் முளையிலேயே கிள்ளி எறிய ஒன்று திரள்வோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். என்பதுபோல அய்.இ.எஸ். என்ற பெயரால் அகில இந்திய கல்வித் துறை என்ற ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு, ஆரியப் பார்ப்பனிய பண்பாட்டைத் திணிக்கும் முறையில் பாடத் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய பிஜேபி அரசு திட்டமிட்டுள்ளது. இதனை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட சமூகநீதியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்  - வருமுன்னர் தடுத்திட வேண்டும் என்ற அபாய அறிவிப்பைத் அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அறிக்கை வருமாறு:

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத்தப்படும் பா.ஜ.க. அரசு, இந்த 5 ஆண்டு ஆட்சிக்குள் எப்படியாவது ஆர்.எஸ்.எஸ். முக்கிய கொள்கைகளை செயற்படுத்திவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது!

பிஜேபி அரசின் கண்ணுக்குத் தெரியாத
சர்க்கரைப் பூச்சு விஷ உருண்டைகள்


கண்ணுக்குப் பளிச்சென்று பட முடியாதபடி, சர்க்கரைப் பூச்சுடன் அந்த விஷ உருண்டைகள் கல்வித் துறையில் புகுத்தப்படுகின்றன; ஏனெனில் அதுதான் அவர்களது இலக்கு. எனவே இதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

1. நேரிடையாகவே சமஸ்கிருத திணிப்பு.

2. ஆர்.எஸ்.எஸ். கார்டுகளை வைத்திருப்போரே மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்படுதல்.

3. கல்வியை காவிமயமாக்கிடும் வகையில் பாட திட்டங்களை மாற்றிட  NCERT போன்ற  நிறுவனங்கள் Film and Television Institute of India (FTII) போன்றவை களுக்கு வரலாற்று ஆவணத் துறை போன்ற பலவற்றிற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே தலைவர்களாக நியமித்து, அதை அவர்கள் கண்விடல்!
அகில இந்திய கல்வி சர்வீசாம்!
4. மாநிலங்களே இருக்காமல் மத்தியில் ஒற்றை ஆட்சிமுறைதான் எங்கள் கொள்கை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை வகுத்த கோல்வால்கரின் முடிவு (ஆதாரம்:  Bunch of Thoughts) மாநிலங்களின் அதிகாரத்தை கூட்டாட்சித் (Federal) தத்துவத்தை அழித்தல் என்பதற்கொப்ப  இப்போது, “அகில இந்திய கல்வி சர்வீஸ்” என்ற ஒரு “புதுக்கரடியை” கல்வித் துறையில் நுழைத்து, மாநில அரசுகளுக்குள்ள கல்வி அதிகார உரிமைகளைப் பறிப்பதோடு, - ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல - ‘ஆர்.எஸ்.எஸ். மயமாக்க அவர்கள் சார்பு உள்ளவர்களை முக்கிய பல்கலைக் கழகங்கள், பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி எல்லாத் துறைகளிலும் நுழைக்கத் தீவிரமாக திட்டம் தீட்டி - அதை TRS சுப்ரமணியம் என்ற ஒரு பார்ப்பனர் (இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசின் அதிகாரி) தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதில், தகுதி, திறமை அடிப்படையில் அகில இந்தியாவிற்கும் பொருந்தக் கூடிய வகையில் நியமனங்கள் கல்வித் துறையில் ஏற்பட,

அய்.ஏ.எஸ்.,  அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்று மத்திய அரசிடமே இனி கல்வி  நியமனங்கள் இருக்கும், மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் வகையில் Indian Educational Service (I.E.S.) அய்.இ.எஸ். உண்டாக்கி, பிற மாநிலத்தவரையும், நம் மொழி, பண்பாடு அறியாதவர்களை, ‘நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கும் கதைபோல  செய்யத் திட்டமிட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டு, ஓசை யின்றி அவற்றைச் செயல்படுத்தவும் முனைப்பாக உள்ளனர்.
முளையிலேயே கிள்ளி எறிவோம்!

இதனை அனைவரும் முளையிலேயே கிள்ளி எறிய பெருங் குரல் எழுப்பி, இம்முயற்சியை முறியடிக்க முன் வர வேண்டும்

இல்லாவிட்டால் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக, நமது உரிமைகள் - மொழி - பண்பாட்டு விழுமியங்கள் சமஸ்கிருத - ஆரிய கலாச்சாரத்தால் விழுங்கப்பட்டு, ஏப்பம் விடும் நிலை ஏற்பட்டு விடும்!

நேற்று (30.5.2010) திராவிடர் கழக தலைமைச் செயற்குழு இதனை தீர்மானமாக்கி சுட்டிக் காட்டியுள்ளது!

மாநிலத்தில் உள்ள அரசுகள் - குறிப்பாக தமிழ்நாடு அரசும், முக்கிய பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அமர்ந்து தமது ஜனநாயகக் கடமை பூண்டுள்ள திமுகவும் மற்ற மாநில உரிமைகளில் அக்கறையும், கவலையும் கொண்டுள்ள முற்போக்காளர் - கட்சிகள் - அமைப்புகள் அத்தனையும், ஒருங்கிணைந்து ஒன்று சேர்த்து குரல் எழுப்பி, இத்திட்டத்தினை விரட்டி அடிக்க வேண்டும்.

நெருக்கடி நிலைக் காலத்தில்
பறிக்கப்பட்ட மாநிலக் கல்வி உரிமை


முன்பு - நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, எவ்வித முன் அறிவிப்பு - விவாதம் ஏதுமின்றி - பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
அகில இந்திய நுழைவுத் தேர்வும், அகில இந்திய கல்வி சர்வீசும் இரண்டையும், சமஸ்கிருதத் திணிப்பு பா.ஜ.க. ஆட்சியினர் திரிசூலமாக்கி, பிற மக்களின் உரிமைகளை குத்திக் கிழித்தெறிய முற்படுகின்றனர்!

முன்பு ஆச்சாரியார் 1952இல் கொணர்ந்த குலக் கல்வித் திட்டத்தைவிட மிகப் பெரிய ஆபத்தினை விளைவிக்க கூடியது மேற்காட்டிய இரண்டு திட்டங்களும்.
ஒன்றிணைந்து பாதுகாப்போம்

எனவே, எச்சரிக்கை செய்கிறோம்! எதிர்ப்புகளைக் குவியுங்கள்; இத்திட்டங்களை விரட்டி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் பழங்குடியினர், சிறுபான்மையினரின் கல்வி, உத்தியோக உரிமைகளைப் பாதுகாக்க முன் வருவோமாக!

இன்றேல்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்                   (குறள் 435)

இதன் பொருள்: குற்றம் நேர்வதற்கு முன் தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கையானது, தீ முன் வைக்கப்பட்ட வைக்கோல் குவியல் எப்படி எரிந்து அழிந்து விடுமோ, அப்படியே அழிந்து போய்விடும்.


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை 
31.5.2016


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...