தழாளர் என்னும் முறை யில் பெரியார் பொருள் இழப்பையும் பொருட்படுத்தாமல் விடாப் பிடியாய் ‘விடுதலை' நாளிதழை நடத்திக் கொண்டு வந்தமைக்கு அதனால் தமிழ் மக்களுக்குக் கிட்டிய அரும்பெரும் நன்மைகள் தாம் தலை யாய அடிப்படை. பெரியார வர்களே, "நமது விடுதலை பத்திரிகை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நமது நாட்டு மக்க ளுக்கு இன்னமும் சரிவரத் தெரியவில்லை. நமது விடு தலையே இல்லை என்றால் இன்றைக்கு அரசாங்கமே பார்ப்ப னரல்லாதார் கைக்கு வந்திருக்காது. இது ஒரு சிலருக்குத்தான் - பொறுப்பு ணர்ச்சியுடன் சிந்தித்துப் பார்க்கின்றவர்களுக்குத் தான் தெரியும்" என்பது அவரின் மதிப்பாய்வு.
நூற்றுக்கணக்கான அம் மாற்றங்களை இங்கே எண்ணிக் கையிட முடியாதாகையால் சிறப்பான சிலவற்றை நினைவு படுத்திக் கொள்ளலாம். ராஜகோபாலா ச்சாரியார் 1938ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், "சரணாகதி மந்திரி சபை... ஆம் நாள். இன்னும் எத்தனை நாள்" என்பதாக அன்றாடம் ‘விடுதலை' பெட்டிச் செய்தி போட்டது மட்டுமா? அவர் பள்ளிகளில் புகுத்திய கட்டாய இந்தியை எதிர்த்து, தந்தை பெரியாரும் தமிழ்ச் சான்றோரும் நிகழ்த்திய நீண்ட அறப்போர் தொடர்பான ஆயிரக்கணக் கான செய்திகளை ஆச்சாரியார் பதவியை விட்டுச் செல்லும்வரை ஒன்று விடாமல் விரிவான
செய்திகளை நாட்டுக்குத் தந்தது ‘விடுதலை'.
தொடர்ந்து
தொடர் வண்டி நிலையச் ‘சிற்றுண்டிச்சாலை'களில் "பிராமணர்" - "சூத்திரர்" என்னும் இடப்பிரிவினை நில விய இழிநிலை நீங்கியமை.
பார்ப்பனர்கள் நடத்தி வந்த உணவுக்கடைகளின் பெயர்ப்பலகைகளில் இடம் பெற்றிருந்த ‘பிராமணாள்' எனும் வர்ணாச்சிரமப் பெயர் மறைந்தோடியமை
ஒவ்வொரு ஆணின் பெய ருக்கும் பின்னொட்டாகக் குறிக்கப்பட்டு வந்த ஜாதிப் பெயர் ஒழிந்து விட்டமை
"குத்திரச்சி, ஒத்திப்போ!' என்று நீரெடுக்க வரும் நம் பெண்ணைக் கொச்சைப் படுத் திய பார்ப்பனிகளின் அநாகரி கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை
பார்ப்பனச் சிறுவர்களைக் கூட, அல்லாதார் ‘சாமி' என்று விளிப்பதும், பஞ்சமர் ஏனைய ஆண்களின் முன்னிலையில் சாமி என அடங்குவதும் பழங் கதையாய் ஆகி விட்டமை
ஒவ்வொரு மாவட்டக் காங்கிரஸ் தலைமைப் பொறுப் பிலும் பார்ப்பனரே இருந்த காலம் காணாமற் போய், இன்று ஒவ்வொரு கட்சியின் மாநிலத் தலைவராகப் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதவரே இருக்கும் விந்தை நிகழ்ந்தமை
கலப்புத் திருமணம் செய்தோர்கள் "ஜாதி கெட்ட வர்கள்" என்று பழி சுமத்தப்பட்ட நாள்கள் மறைந்து, இன்று அத்த கையோர் மதிப்பிற்குரியோராக ஏற்கப்படும் சூழ்நிலை தோன்றியமை
'இராமாயணம் ஒரு கட்டுக்கதையே! என்று வாய் விரித்து ஆச்சாரியாரே ஒப்புதல் கூற்று வெளியிட நேர்ந்தமை
மடத்துத் தலைவர்கள் பல்லக்கில் அமர்ந்து கொள்ள, பஞ்சமரும் சூத்திரரும் அவர்களின் பல்லக்குத் தூக்கி களாகத் தொண்டாற்றிய காட்சிகள் இன்று காணக்கிடைக் காதவை என்றாகியமை
களிமண் பிள்ளையார் உருவங்களை நாடு முழுவ திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெளிப்படையாகப் போட்டு உடைத்து, நம்பிக்கையாளர்களுக்கு அறிவு கொளுத்தியமை
அரசுப் பணிமனைகளில் மாட்டப்பட்டிருந்த‘கடவுளர்' படங்கள் அகற்றப்பட ஏற்பாடு பண்ணியமை
புலவர்களிடம் உறைந் திருந்த ‘திருக்குறள்' எனும் அறிவு நூலைப் பொது மக்கள் கைக்குக் கிட்டச் செய்தமை
மடவார் என்றழைக்கப்பட்ட நம் மகளிர் மாஞாலமே வியக்கும் அளவிற்கு அறிவாளராக - ஆற்றலாளராக உலா வரும் உயர்நிலை உருவானமை
கல்விக் கூடங்களில் குறிப்பாகத் தொடக்கப் பள்ளி களில் பெண்பால் ஆசிரியர் நிறையப் பங்களிப்புச் செய்ய வைத் துள்ள புரட்சி
வகுப்புரிமைக் கொள்கையை விடாது பற்றிக் கொண் டிருந்த மாநில முதல்வர்கள் ஓமந்தூரார், குமாரசாமிராஜா இருவரின் சான்றாண்மை
வகுப்புரிமைக் கொள்கையை விடாது பற்றிக் கொண் டிருந்த மாநில முதல்வர்கள் ஓமந்தூரார், குமாரசாமிராஜா இருவரின் சான்றாண்மை
தொழிற் கல்வியகங்களிலும், அரசுப் பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு செய்ய ஏந்தாக இந்திய அரசமைப்புச் சட்டத் தை முதன் முறையாகத் திருத்திய புதுமை
நாட்டாட்சியின் தலை மைச் செயலகத்தில் கவரிமான் களெனத் தம் குடுமி களை விரித்துப் போட்டுக் கொண்டு பார்ப்பனர் இன்பந்துய்த்த காட்சியெல்லாம் மறைந் தொழிந்து, இன்று ‘கருப்புத் திருவுருவங்களும்' அமர்ந் திருக்கும் அழகுத் தோற்றம்
முதன் முதலாய் ஆதி திராவிடப் பெருமகன் ஒருவர் சென்னை உயர்முறை மன்றத்தில் தீர்ப்பாளராகப் பொறுப் பேற்றமை
ஆச்சாரியாரின் ‘குலக் கல்வி'த் திட்டம் தொலைந்து போக, காமராசரின் திட்டத்தில் 33,000 பள்ளிகள் முளைத்தமை
ஆச்சாரியாரின் ‘குலக் கல்வி'த் திட்டம் தொலைந்து போக, காமராசரின் திட்டத்தில் 33,000 பள்ளிகள் முளைத்தமை
பஞ்சம-சூத்திரப் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வில் அமர்ந்து தேறி, எளிதாகக் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து விடப் பார்ப்பனர்க்குப் பெருங் கருவியாக விருந்த 'ஷிமீறீமீநீtவீஷீஸீ' எனும் வடிகட்டும் முறைக்கு விடையனுப்பு விழா எடுக்கப் பட்டமை
பாடநூல்களை அரசே அச்சிட்டு மலிவு விலையில் மாணாக்கர்க்கு வழங்கும் உருப்படியான திட்டம் நடை முறைக்கு வந்தமை
‘தாலுகா போர்டு', ஜில்லா போர்டு', 'ரெவின்யூ போர்டு' என்று அழைக்கப்பட்டகேடான அமைப்புகள் வெவ் வேறு கட் டங்களில் கலைக்கப்பட்டமை
‘தாலுகா போர்டு', ஜில்லா போர்டு', 'ரெவின்யூ போர்டு' என்று அழைக்கப்பட்டகேடான அமைப்புகள் வெவ் வேறு கட் டங்களில் கலைக்கப்பட்டமை
நம் தாயகத்திற்குத் ‘தமிழ் நாடு' என்று பெயர் சூட்டிப் புதிய வரலாறு படைக்கப் பட்டமை
தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சித் தீர்மானத்தின் உடனடிப் பலனாக, இந்திய நடுவண் அரசுத் தலைமை, தமிழக அரசின் தலைமை ஆகிய இரண்டின் சார்பாகவும் "இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படவே மாட்டாது" என்பதாக வெளிப்படையாக உறுதி அறிவிக்கப்பட்டமை
தமிழ்நாட்டரசின் இரு மொழிக் கொள்கை உலகிற்கே தெரியும் வண்ணம் அறிவிக்கப் பட்டமை
தெலுங்கானாவில் தூக்குக் கயிற்றுச் சுருக்குக்கு இலக்காக விருந்த பொதுவுடைமைத் தோழர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் சூழ்நிலை உருவாக்கப்பட்டமை
போன்ற பெரியாரியல் கோட்பாடுகள் நடப்புக்கு வரு மாறு நிறைவேற்றம் எய்தியமைக்கு ‘விடுதலை'யின் தொண் டறம் மாபெரும் காரணியாக நின்றது என்பது வரலாற்று உண்மையாகும்.
இவையெல்லாம் விந்தைகள் என்று அழைக்கப்படும் தகுதி படைத்தவை. இவ்வண்ணம் நாட்டின் ‘தட்ப வெப்ப இயற்கை'யையே மாற வைத்த பெருமிதத்திற்குரிய அருஞ்சிறப்பு இதழாளர் பெரியாரின் உடைமை!
"விடுதலை மலர்கள்
‘முடியின் இறகு'க்கு ஒப்ப ‘விடுதலை' ஆண்டு மலர்கள் ஒளிர்ந்தன. முதன் முதலில் ஆண்டு மலர் 1956 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளாகிய செப்டம்பர் 17ஆம் நாள் அன்றைய ‘விடுதலை' பொறுப்பாசிரியர் குத்தூசி குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
இன்றைய ‘விடுதலை' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொறுப்புக்கு வந்த பின்னர் 1962ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 அன்று ‘விடு தலை' - பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடப் பட்டுக் கொண்டு வருகிறது.
விடுதலை மலரில் பெரியாரின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரையும், அவரின் கொள் கை விளக்கக் கட்டுரைகளும் இயக்க முன்னோடிகள், பொது வாழ்வுத் தலைவர்கள், பல் துறை அறிஞர்கள், பாவலர்கள் ஆகியோரின் ஆய்வுப் படைப்புகளும் இடம் பெற்றன.
விடுதலை மலர் ஒவ்வொன்றும் அறிவுக் கருவூலம் என்பதில் அய்யமே இல்லை. மலர்களின் தனித்தன்மை களை விளக்குவதென்றால் அதுவே ஒரு தனிப்பொழிவாகி விடும், ‘விடுதலை' வளாகத்தில் அமைந்துள்ள
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் அந்நூலகம் போந்து நிறையச் செய்திகளை விடுதலை மலர்களி லிருந்து திரட்டித் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளில் பயன்படுத்துகின்றனர்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment