Friday, February 12, 2016

பெண்ணுரிமை - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு

பெண்ணுரிமை - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்று பவரான ரிச்சா மிஸ்ரா என்பவர் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில்  அவருக்கு வயது அதிகமாகிவிட்டது என்கிற காரணத்தைக்கூறி, அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வில் அவரின் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வழக்கில், மூத்த அலுவலர் நியமனங்களில் பெண் களுக்கு 10 ஆண்டுகள்வரை வயது தளர்வு செய்து நிய மிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாகவே அரசுத்திட்டங்களை நேரடியாக பெறுபவர்களாக பெண்கள் இருப்பதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு  முக்கியமான காரணியாக இருப்பவர்கள் பெண்களே ஆவர். பொருளாதாரம் மற்றும் அதிகாரங்களில் பெண்களுடைய பங்களிப்பு இருந் தால்தான் உண்மையான வளர்ச்சியை அடையமுடியும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
8.2.2016 அன்று வெளியான 38பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிடும்போது, “சமூக மாற்றங்களின் முக்கிய காரணிகளாக இருப்பதுடன், பெண்கள் மட்டுமன்றி ஆண்களின் வாழ்விலும் மாற்றங்களை பெண்கள் ஏற்படுத்துகிறார்கள். அரசே பெண்களைக் காப்பாற்றுங்கள், பெண்களைப் படிக்கவையுங்கள் என்கிற (பெண்களுக்கு கல்வி) திட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில், பெண்களுக்கு அதிகாரங்கள் அளிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். பன்னாட்டளவில் பெண்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் தடைகளையும், பாகுபாடுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அரசமைப்புச் சட்டம் கூறும் ஆண், பெண் சமத்துவ நிலை என்பதில் உண்மைநிலை வேறாகவே உள்ளது. அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற சமத்துவத்தை எட்டுவதற்கு நீண்டகாலம் ஆகிவருகிறது என்பதுதான் உண்மைநிலை’’ என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரங்கள் அளிக்கப்படுவதில் பெண்கள் நடத்தப்படுகின்ற விதம் என்பதில் மெதுவாகவே முன் னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. பொருளாதார சுதந்திரம் மற்றும் தற்சார்பு, பொதுமரியாதை ஆகிய வற்றின்மூலமாகவே எந்த ஒரு சூழ்நிலையையும் பெண்கள் எதிர்கொள்ளவும், வளர்ச்சிக்கான செயல் பாடுகளில் ஈடுபடவும் முடியும்.
நோபல் பரிசு பெற்றவரான பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், கூற்றை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது இனிய உறவுக்கு வழிவகுப்பதாகும். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.
பெண்களுக்கான அதிகாரம் மூலமாகவே திறமையாக தடைகளைக்கடந்து வளர்ச்சியை எட்ட முடியும். குறிப்பாக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், உரிமைகள், அரசியல் பங்களிப்புகள் அனைத்திலும் பெண்களால் சாதிக்க முடியும்.
ஆண், பெண் சமத்துவமின்மை காரணமாக வாய்ப் பின்மை, வறுமை உள்ளதாகவும், பெண்களுக்கான அதி காரமளித்தல் எனும் கொள்கை செயலாக்கம் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருக்கும் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் சமத்துவத்தை எட்டுவதற்கு பெண்களுக்கான அதிகாரம் அளிக்கின்ற கொள்கையை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். குழப்பத்துக்கு இடமில்லாமல் பெண்களுக்கான அதிகாரம் என்பது மேலும் ஊக்கத் துடன் வளர்ச்சியை முழுமையாக்கும்’’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்த தீர்ப் பாகும். மனித சமூகத்திலே கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை, பிள்ளைப் பெறும் இயந்திரமாகவும், வீட்டு வேலை பார்க்கும் சம்பளமே இல்லாத வேலைக்காரியாகவும் நடத்தினால், பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல, அது சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, கல்வி, வேலைகளில் வாய்ப்புக் கதவு திறக்கப்பட்ட நிலையில், மளமளவென்று முன்னேறி வருகிறார்கள்.
இன்னும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். ஆண்களுக்கு 50 விழுக் காடு, பெண்களுக்கு 50 விழுக்காடு என்ற சம வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் உண்மையிலேயே ஜன நாயகத்தையும், சமூகநீதியையும் நாம் மதிக்கிறோம், பின்பற்றுகிறோம் என்று பொருள்.
வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராகத் துரும்புக் கிடைத்தாலும் தூணாக்கிக் காட்டுவார்கள் - அதனை எல்லாம் புரிந்துகொண்ட நிலையிலேதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரியானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பெண்கள் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் எந்த மதம் தடையாக இருந்தாலும் அதையும் தகர்த்தெறிய வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன் தெரிவித்த கருத்துகளை காலந்தாழ்ந்தாவது நீதிமன்றங்கள் நிலை நாட்டுவது வரவேற்கத்தக்கதாகும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு

பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை
மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு
சென்னை, பிப். 11_ பி.ஜே. பி.யுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தி.மு.க. பொருளா ளர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக அறிவித்து விட் டார்.
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
உண்மை
இல்லை
தமிழக சட்டசபை தேர் தலை தி.மு.க._ பா.ஜ.க. சேர்ந்து சந்திக்கப் போவ தாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்தத் தகவலில் எந்த அடிப்படை உண்மை யும் இல்லை.
தி.மு.க._ பா.ஜ.க. இடையே எந்த ரகசிய பேச்சுவார்த் தையும் நடக்கவில்லை. ஆனால், தி.மு.க.வை தீண் டத் தகாத கட்சி என்று கூறி வந்த பாரதீய ஜனதா இப்போது எங்களைத் தேடி வருவதாக தகவல் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மு.க.ஸ்டாலின் மறுப் பைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமி ழிசை சவுந்தரராஜனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர் தமிழிசை அளித்த விளக்கம் வருமாறு:
கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக இதுவரை வெளியான எல்லா தகவல்களும் யூகங் கள்தான். பா.ஜ.க. சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறி விப்பும் வெளியிடப்பட வில்லை.
நாங்கள் பேச்சு நடத் தியது போல வெளியான தகவலில் உண்மை இல்லை. எனவே தி.மு.க.வுடன் கூட் டணிபற்றி பதில் அளிப்பது சரியாகாது என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்
புதுடில்லி, பிப்.11_ இந்திய வரலாற்றுச் சின்னங்களின் பராமரிப்பை தனியாரிடம் அளிக்க ஆலோசனை செய்து வருவதாக மத்திய கலாச் சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித் துள்ளார். இந்திய தொல் பொருள் ஆய்வகத்தில் உள்ள அலுவலர் பற்றாக் குறையை சமாளிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள் ளது.
மத்திய அரசின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப் பாக செயல்பட்டு வருவது இந்திய தொல்பொருள் ஆய்வகம்(ஏ.எஸ்.அய்). இது, ஆக்ராவின் தாஜ்மகால், டில்லியின் செங் கோட்டை உட்பட நாட் டிலுள்ள அனைத்து வர லாற்றுச் சின்னங்களை புதுப்பிப்பதுடன், பாது காத்தும், பராமரித்தும் வருகிறது.
இங்கு பணியில் இருக்கும் பாதுகாப்புப் படைகளும் ஏ.எஸ்.அய். யால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஏ.எஸ்.அய்.யிடம் உள்ள அலுவ லர் பற்றாக்குறை அதிக மாக உள்ளது. இதை அதி கரிக்க அரசிற்கு ஆர்வம் இல்லை என்பதால் நாட் டின் சில வரலாற்றுச் சின் னங்களை பராமரிப்பு மற் றும் பாதுகாப்பிற்காக தனி யாரிடம் ஒப்படைக்க மத் திய கலாச்சாரத்துறை அவ் வப்போது யோசிப்பது வழக்கமாக உள்ளது.
ஏனெனில், முறையான பராமரிப்பு இன்றி இந்திய வரலாற்றுச் சின்னங்களில் பல அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. இதற்கு ஏ.எஸ்.அய்.யிடம் இருக்கும் நிதிப்பற் றாக்குறையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
இவற்றை தனியாரிடம் ஒப்படைக்க ஒவ்வொரு முறையும் வர லாற்றாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந் தும் கடும் எதிர்ப்புகள் கிளம்புவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த முறை மத்திய கலாச்சாரத் துறையின் சார்பில் வர லாற்றுச் சின்னங்களை தனி யாரிடம் ஒப்படைக்க தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கான யோசனை, சில துறையினர் மற்றும் சுற்றுலா தலப் பகுதிகளில் இருந்து வந் துள்ளது. டில்லியின் செங் கோட்டை, குதுப்மினார் ஆகியவற்றின் உட்புற பரா மரிப்பை தனியார் அளிக்க யோசித்து வருகிறோம்.
இவை சுத்தப்படுத்துதல், கழிவறைகளை சுத்தமாக்கு தல், பாதுகாப்பு, நூலகம், பசுமைப் பராமரிப்பு, சிற் றுண்டி போன்றவை ஆகும். இதன் மீதான கருத்துகளை பிரபல தனியார் நிறுவனங் களிடம் இருந்து பெற விரும்புகிறோம். எனத் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அமைச்சர், நேற்றுமுன் தினம் டில்லியில் சுற்றுலா தகவலகம் துவக்கி வைத்த போது தெரிவித்தார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திருச்சி-சிறுகனூர் ‘பெரியார் உலகம் திடலில்’ இருபெரும் மாநாடுகள்! தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்

திருச்சி-சிறுகனூர் ‘பெரியார் உலகம் திடலில்’ இருபெரும் மாநாடுகள்!
தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்
கே.என்.நேரு உள்ளிட்ட தி.க., தி.மு.க. பிரமுகர்கள் உடனிருந்தனர் - மாநாட்டு நிதியும் குவிந்தது
திருச்சி, பிப்.11_ பெரியார் உலகம் சிறுகனூரில் (திருச்சி) மார்ச் 19, 20 ஆகிய நாள் களில் நடைபெறவிருக்கும் மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான கே.என். நேரு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தி.க., தி.மு.க. தோழர்கள் உடனி ருந்தனர். மாநாட்டுக்கு நிதி யையும் தோழர்கள் அளித்த னர். செய்தியாளர் கள் சந்திப்பும் அங்கு நடந் தது.
திருச்சி சிறுகனூரில் மார்ச் 19, 20 ஆகிய தேதி களில் ஜாதி தீண்டாமை மற்றும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ள திடலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் நேரில் பார்வையிட்டு தேவையான அறிவுரைகளையும் வழங்கி னார். மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் கூறுகையில், சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் இரண்டு நாள் மாநாடு, மாபெரும் அள வில் நடைபெற இருக்கின் றன. முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடாக  ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடாகவும், இரண்டா வது நாள் சமூக நீதி மாநாடும் நடைபெற இருக் கிறது. இம்மாநாட்டில் முக் கிய தலைவர்கள் அழைக் கப்பட்டிருக்கிறார்கள்.
மூத்த தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, லாலுபிரசாத் உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
தே.மு.தி.க.வின் எதிர்காலம்
மேலும் செய்தியாளர்கள் கேட்டதற்கு தி.மு.கவுடன், தே.மு.தி.க. கூட்டணி சேருமா? என்று கேட்டதற்கு  தி.மு.கவுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று கூறினார். மேலும் செய்தியாளர்கள்  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் ஆத்திகருக்கு லாபமா? நாத்திகருக்கு லாபமா? என்று கேட்டதற்கு இரண்டு பேருக்குமே லாபம். ஆனால் நாத்திகர்கள் யாரும் அர்ச்சகராக போவதில்லை.
ஆத்திகரும், பிற ஜாதியினரும் தான் நேரடியாகப் பயன்பெறுவார்கள்  என்றார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தோழர்கள்
முன்னதாக மாநாட்டுத் திடலை முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு, மாநகர தி.மு.க. செயலாளர் மு.அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திருச்சி மாவட்ட தி.க தலைவர் மு.சேகர், பொறியாளர் சுந்தரராசுலு, பேராசிரியர்கள் நல்.இராமச்சந்திரன், ப.சுப்பிரமணியம், லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,
திருச்சி மாவட்ட செயலாளர் ச.கணேசன், லால்குடி மாவட்ட துணை தலைவர்கள், ப.ஆல்பர்ட், அட்டலிங்கம் ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, சிறுகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி(தி.முக), வேங்கூர் தனசேகரன்,
மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், சிறுகனூர் கிளை செயலாளர் கணேசன் உள்ளிட்ட தி.மு.க நிருவாகிகளும், தி.க மாவட்ட அமைப்பாளர் இளவரி, மோகன்தாஸ், சத்தியமூர்த்தி, தேவா, முருகன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பெரம்பலூர் முகுந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் உடனிருந்தனர்.
உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, February 10, 2016

சிறப்புச் சலுகைகள் பெறுவதற்கான சிறப்புரிமை பெற்றிருப்பது


(ஜாதியின் பெயரிலான  அடக்குமுறை திட்டமிட்டு பின்பற்றப்படுகிறது;
அறிந்தோ அறியாமலோ நம்மில் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறோம்)
அண்மையில் கணினி வலைதளத்தில் வளைய வந்து கொண்டிருக்கும் ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உடல் பருத்த ஒருவன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு முழுவதும் குடிக்க முடியாமல் வாயில் வைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் கீழே சிந்துவது போலவும், கீழே தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மெலிந்த ஒருவன் அவன் சிந்தும் தண்ணீரை தாகத்துடன் பருகுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிதான் அது. பின்னர் அந்த கேலிச் சித்திரம், அந்த நடைமுறையை நீங்கள் வெறுத்தால், உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நம்மை கேட்கிறது. புகழ்பெற்ற கலாச்சாரத்தைப் பெற்றவர்கள் என்று பறைசாற்றிக்கொள்பவர்களின் இந்த ஒரு தோற்றத்தைப் பார்த்தால்போதும், ரோஹித் வெமுலா போன்ற தலித்துகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது நமக்குப் புரியும்.
இந்த கேலிச்சித்திரம் செய்யும் மாயவித்தை என்னவென்றால், சிறப்பு சலுகைகள் பெற்று கீழ்ஜாதி மக்களை அடக்கி ஒடுக்கி வரும் உயர்ஜாதி மக்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவதுதான். மக்கள் தொகையில் 15 - 20 விழுக்காட்டினராக இருக்கும் நிலை யில்    நாட்டில் உள்ள அரசுப் பணிகளிலும், கல்வி நிறு வனச் சேர்க்கையிலும் 50 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ஜாதி மக்கள் பெற்று வருவதை இந்த மாயவித்தையினால்தான் நியாயப்படுத்த முடியும்.
அவ்வாறு இருக்கும்போது, வெமுலாவின் தற் கொலை ஒரு ஜாதிப் பிரச்சினையே அல்ல என்றும், வெமுலா ஒரு தலித்தே அல்ல என்றும் உயர்ஜாதியினர் மறுத்துவருவதில் வியப்பேதும் இல்லை. மத்திய அமைச்சர்கள்,  செயல்திட்டங்களை வடிவமைக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களால் வெளியிடப்படும் இத் தகைய அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. மன அழுத்தம்தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று மனநோய்மருத்துவர்களின் கருத்துகளும் உயர் ஜாதியினரின் கேலிச்சித்திரங்களும் கணினி தளத்தில் வளைய வந்து கொண்டிருக்கின்றன.
முன்னேற்றக் கருத்து கொண்ட உயர்ஜாதியினரும் கூட, இந்த தலித்துகளின் பிரச்சினை,  பல்கலைக் கழக அளவில் தீர்க்கப்படவேண்டிய ஒரு நிர்வாகப் பிரச்சினை என்றே கூறுகின்றனர். கோட்பாட்டு அளவிலும், பொருளாதார ரீதியிலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியையோ, எந்த மதத்தையோ சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மக்களை ஜாதியின் அடிப்படையில் பிளவு படுத்தி நிற்கும் ஒரு மிகப் பெரிய சமூகத்தின் ஒரு சிறிய பகுதிதான் இந்தப் பல்கலைக் கழகம் என்பதைக் கூட எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நடைமுறையிலும் நிலவி வரும் ஜாதிய நடைமுறை ஒழிக்கப்படாத வரை,  கல்வி நிறுவனங்களில் எந்த அளவில் சீர்திருத்தம் மேற்கொள்வதும் பயன்தராது.
இதில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால்,  சமூகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  நாம்  என்னும் உயர்ஜாதியினர்தான் பிரச்சினையே என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தலித்துகளை (அவர்களை) சீர்திருத்துவது என்பதில் இருந்து தேடும் விளக்கை, ஜாதியின் பெயரால் தாங்கள் பெறும் சிறப்பு சலுகைகளைத் தாங்கள் பெறுகிறோம் என்பதை  ஏற்றுக் கொள்ளாமல் ஜாதிய அடக்குமுறையை நடைமுறைப்படுத்தி வரும்  உயர்ஜாதியினர் (நம்மை நாமே) சீர்திருத்திக் கொள்வது என்பதன் பக்கம் நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல ஆயிரம் ஆண்டு காலமாக உயர்ஜாதி மக்கள் அனுபவித்து வரும் சமூக, பொருளாதார, கலாச்சார அளவிலான சிறப்புச் சலுகைகளை மறைப்பதற்காகப் போடப்படும் திரையே தகுதி மற்றும் திறமை என்பவையாகும்.
இந்த சிறப்புச் சலுகைகள் ஜாதிக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதல்ல; பிரிவு, பாலினம், இனம் போன்ற மற்றவைகளுக்கும் கூடப்பொருந்தும். அமெரிக்காவில் நிலவும் மனஅளவிலான போராட்டத்தைப் பற்றி கீ.ஙி.ஞிu ஙிஷீவீs என்பவர் குறிப்பிடும்போது, வெள்ளைய ரின்ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில், ஏழையான ஒரு வெள்ளைக்காரனும் கருப்பர்களை விட உயர்ந்தவன் என தன்னை நினைத்துக் கொள்கிறான் என்று கூறி யுள்ளார். இதனைத்தான் ஜாதிப் பிரிவினை என்பது உழைப்பைப் பகிர்ந்துகொள்வது என்பதாக இல்லாமல், உழைப்பாளர்களைப் பிரித்து வைப்பதாகவே உள்ளதென அம்பேத்கர்  கூறியிருக்கிறார்.
இடஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டு நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40-50 விழுக்காடு ஆசிரியர் பணியி டங்கள் உள்ள மத்திய, மாநில அரசுப் பல்கலைக் கழ கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீங்கலான மற்ற அனைத்துத் துறைகள் ஒவ்வொன்றிலும் உயர்ஜாதி சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகஅளவில் நிலவி வருவதன் காரணமாகவும், இடஒதுக்கீடு இல்லாத சக்தி வாய்ந்த தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தலித் மக்கள் எவருமே இடம் பெறாத நிலை காரணமாகவும்,  கிரிக்கெட், பாலிவுட், நுகர்வோர் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆங்கில மொழிவழி ஊடகங்களின் பிரச்சாரங்கள் காரணமாகவும்  ஏற்படும்  ஜாதி பற்றிய மனவியல் ரீதியான போராட்டங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள உயர்ஜாதி மக்கள் முழுமையாகத் தவறி விடுகிறார்கள்.
இத்தகைய சிறப்புச் சலுகைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதே,  ஜாதி ஒழிப்பிற்குத் தடையாக இருப்பதும்,   உயர்ஜாதியினரின் பழிவாங்கும் மனப்பான்மைக்குக் காரணமாக இருப்பது மாகும். இத்தகைய சிறப்புச் சலுகைகள் இருப்பது ஏற்றுக் கொள்ளப்படாதது ஜாதிக்கு மட்டுமே பொருந்துவது அல்ல. அண்மையில் அமெரிக்காவில் எல்.டெய்லர் பிலிப்ஸ் மற்றும் பிரியான் லோயரி என்பவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து, இத்தகைய சிறப்புச் சலுகைகள் வெள்ளைக்காரர்களுக்கு இருப்பது பற்றி அவர்களிடம் கேள்வி கேட்டபோது,  அதனை அவர்கள் மறுக்காதது மட்டுமன்றி,  தனிப்பட்ட தடைகளால் அவர்கள் அந்தச் சலுகைகளை அனுபவிக்க முடியாமல் இருப்பதாகக் கூறியதும் தெரியவருகிறது. லோயரி கூறுகிறார்:  நல்ல விஷயங்களைப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அவைகளை உங்கள்  உழைப்பினால் பெறாமல், சிறப்புச் சலுகைகளாக நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க நீங்கள் விரும்புவதில்லை என்று கூறுகிறார்.
தகுதி, திறமை என்ற இது போன்ற தவறாக வழிநடத்தப்பட்ட புரிதல்,  ஜாதி ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற தீவிர முயற்சிகளுடன் சேர்ந்து, உயர்ஜாதியினருக்கு சிறப்புச் சலுகைகள் இருப்பதை மறுக்கும் மனப்பான்மைக்கு ஆணிவேராக அமைந் துள்ளது. பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இல்லாத உயர்ஜாதி மக்களும், உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் நடைமுறையை அழிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட உயர்ஜாதியினரும்  இருக்கின்றனர் என்பது உண்மைதான்.  ஆனால், ஒரு பெண்ணியலாளராகவும், இனக்கோட்பாட்டு ஆர்வலராகவும் உள்ள பெக்கி மெக்கின்டோஷ் என்பவர் கூறுகிறார்: தனிப்பட்ட மனிதர்களின் இழிசெயல்களில் மட்டுமே இனவெறி இருப்பதைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்பட்டுள்ளதே அன்றி,  எனது குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தும் கண்ணுக்குத் தெரியாத நடை முறைகளில் உள்ள இனவெறியைக் காண்பதற்கு எனக்குக் கற்பிக்கப்படவில்லை.
ஜாதிய அடக்குமுறை என்பது திட்டமிட்டு நடை முறைப்படுத்தப்படுவதாகும்.  சிறப்புச் சலுகை பெறும் உயர்ஜாதியினர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்கின்றனர். இங்கு தனிப்பட்ட மனிதரின் பண்பாடு முக்கியமானதாகக் கருதப்படுவதில்லை. மெக்கின்டோஷ் கூறுவது போல, நீங்கள் மென்மையாக இருக்கும் அதே நேரத்தில் அடக்கி ஒடுக்குபவராகவும் இருக்க உங்களால் முடியும். உயர்ஜாதி காரணமாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதை நாம் எதிர்க்கும்போது,  இந்த எதிர்மறையான உண்மையை நாம் எதிர்கொள்கிறோம். அவசரமாக நாம் செய்யவேண்டியது என்னவென்றால், புதிய பாதையைத் திறந்து காட்டவல்ல 1988 இல் மெக்கின்டோஷ் வெளியிட்ட ஒரு கட்டுரையில்  வெள்ளைக்காரர்கள் பெற்றிருந்த 50 சிறப்புச் சலுகை களை பட்டியலிட்டுக் காட்டியிருந்தது போன்று உயர் ஜாதியினருக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் பட்டியல் ஒன்றினை முழுமையாகத் நாம் தயாரிக்க வேண்டும். தலித் மாணவர்களின் தற்கொலையைப் பொருத்த அள வில் இவ்வாறு செய்வது மிகவும் பொருத்தமானதும் அவ சியமானதும் ஆகும்.
உயர்ஜாதியினர் தாங்கள் பெறும் சிறப்புச் சலுகைகளை ஒப்புக் கொள்வது,  திறமையும் தகுதியும் நிறைந்த உயர்ஜாதி என்னும் நற்தோற்றத்தை மறுப்பதாக இருக்குமானால், நாம் எடுத்துவைக்க வேண்டிய இரண்டாவது அடி மிக வும் கொடியதும், துன்பம் தரத்தக்கதுமாகும். அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட உயர்ஜாதியினர் தயாராக இல்லாதநிலையில், அத்தகைய சிறப்புச் சலு கைகள் தங்களுக்கு இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதால் விளையும் பயன் ஏதுமில்லை. ஜாதிய பொய்களை முடிவுக்குக் கொண்டு வரும் உண்மையான போராட்டம் இதில்தான் இருக்கிறது. இளைய மார்டின் லூதர் கிங் கூறுகிறார்: சிறப்புச் சலுகைகள் பெற்ற குழுக் கள் தாங்களாகவே முன் வந்து அத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறாமல் கைவிட்டுவிடமாட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையாகும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்  அளிக்கப்படும்  இட ஒதுக்கீடு என்னும் ஒரு சிறு ஜனநாயக நடைமுறை,  உயர்ஜாதியினரிடையே ஒரு மோசமான, வன்முறையுடன் இணைந்த மாபெரும் எதிர்ப்பையே உருவாக்கிவிடுகிறது. எனவே, ஜாதிய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது, உயர்ஜாதி மக்களின் கருணையின் மூலம் எப்போதுமே நடைபெற இயலாததாகும். ஜனநாயக நடைமுறையில் பொதிந்துள்ள தவிர்க்க இயலாத, அவசரமான, முக்கியமான நியாய உணர்வை உயர்ஜாதியினர் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதற்கான நேரம் இதுவே. ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியர் மாயா ஏஞ்சலு  வாதிட்டபடி, செல்வச் செழிப்பு மிகுந்த வெள்ளைக்காரர் சமூகத்தில் வளர்வது என்பது,  கிரடிட் கார்டுகளுக்கு மரியாதை கொடுப்பது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது போன்ற செயல்களின் மூலம் வாழ்வது ஆகாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும், நீங்கள் ஆக்கிரமித்துள்ள இடத் துக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வதும்,  ஒருவரது மனிதத் தன்மைக்கு ஒவ்வொரு வாழும் மனிதரும் மரியாதை செலுத்துவதும்தான் வளர்வது என்பது.  நாமும், அதனைப் போல, உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு சமூகத்தில்,  தகுதியற்ற முறையில் நாம் ஆக்கிர மித்துள்ள பெரிய இடத்தை, எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கவேண்டுமோ, அந்த அளவுக்கு விட்டுக் கொடுப்போம்.

நன்றி: தி ஹிந்து ஆங்கில இதழ் ஞாயிறு மலர் 7-2-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


மீண்டும் நுழைவுத் தேர்வா? (1)


இப்பொழுது என்னவென்றால் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
நெருக்கடி நிலை காலத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மனப்பால் குடிக்கிறது போலும்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிலும் நுழைவுத் தேர்வு கிடையாது என்ற நிலை இருக்கும்பொழுது மத்திய அரசு எப்படி அதற்கு மாறான ஒன்றைத் திணிக்கலாம்?
இந்தியா முழுவதும் மூன்று மொழி இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான். தமிழும், ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டில், இந்திக்கு இடம் இல்லை என்பது தமிழ்நாட்டின் சட்ட பூர்வமான நிலை. அப்படி இருக்கும் பொழுது அகில இந்தியக் கொள்கை என்று மத்திய அரசு தமிழ்நாட்டில் திணிக்க முடியுமா?
அதே நிலைதான் இந்த நுழைவுத் தேர்வு பிரச்சினையிலும்; தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை எதிர்த்து அரசுக்குக் கடிதம் எழுதி இருக்க வேண்டாமா? எதிலும் தயக்கம் - மயக்கம் தானா?
இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அல்டம்ஸ் கபிர் மற்றும் நீதிபதி விக்கிரமஜித்சிங் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வரையறுத்துத் தீர்ப்புக் கூறி விட்டது.
நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான தீர்ப்பில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பின் கருத்துரையை ஏற்றுத்தான் மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. இதை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் குமட்டிக் கொண்டு வருகிறது; மத்திய அரசில் சட்டத்துறை ஒன்று இருக்கிறதா? அது நீதிமன்றம் தொடர்பான கோப்புகளைக் கைவசம் வைத்துள்ளதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
2013 ஜூலை 18ஆம் தேதி தீர்ப்பிலேயே மட்டையடியாக உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் அதிகாரம் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணியடித்து அறைந்ததுபோல தீர்ப்புக் கூறிய பிறகும், மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது என்று கூறி மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிவிக்கிறது. என்னே இந்த ஆட்சியின் இலட்சணம்!
இதனைப் பார்க்கும் பொழுது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நிருவாகத் திறன் எந்த அளவு கெட்டுப் போயிருக்கிறது என்பதை உணரலாம்.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நீதிமன்ற அவமதிப்பே என்பதில் அய்யமில்லை. நீதிமன்றத்தில் குட்டு வாங்குவது மோதிரக் கையால் வாங்கப்பட்ட குட்டு என்று ஒருக்கால் இந்த அரசுகள் கருதுகின்றனவோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
பிளஸ் டூ தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் வழக்கத்தில் உள்ள நடைமுறையில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள் - இந்தக் ‘கொலம்பசுகள்?’
மாநில அரசு நடத்திய தேர்வு செல்லத்தகாததா? அதில் மாணவர் பெற்ற மதிப்பெண்கள் மதிக்கத் தகுந்தவையல்ல என்று மத்திய அரசு கருதுகிறதா? இது தேவையில்லாமல் மாநில அரசோடு மத்திய அரசு மோதிப் பார்க்கத் துடிக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.
தமிழ்நாட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டது. (1982) அந்த ஆணையை அப்பொழுதே எரிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு.
நுழைவுத் தேர்வு செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது (27.6.2005) உண்மைதான்.
கல்வி நிபுணர் குழு அமைத்து அவர்கள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் தனி சட்டம் இயற்றி நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறிய யோசனையை (விடுதலை 16.1.2006) முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுச் செயல்பட்டு இருந்தால் உயர்நீதிமன்ற தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியதால் மற்றொரு முறையும் தமிழ்நாடு அரசு ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது (27.2.2006).
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2006இல் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியாளர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரை (7.7.2006) அடிப்படையில் கலைஞர் தலைமையிலான அரசு சட்டமியற்றி (5.3.2007) குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனை எதிர்த்தும் வழக்குப் போடப்பட்டது. முறைப்படி ஆய்வு நடத்தப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே (27.4.2007).
2010ஆம் ஆண்டில் இதே மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரைத்தபோது திராவிடர் கழகம் அதனை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை(29.12.2010) நினைவூட்டுகிறோம்.
இந்த வகையில் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் அகில இந்தியாவுக்கே வழிகாட்டும் என்பதில் அய்யமில்லை.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பத்மசிறீ விருதுகள் தேர்தல் காலங்களில் விருதுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆய்வில் தகவல்


புதுடில்லி, பிப்.9 தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள் ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது பத்மசிறீ விருது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மற்ற ஆண்டுகளை காட்டிலும் தேர்தல் காலங்களில் பத்மசிறீ விருதுகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. 
கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் 7 மாநிலங்கள் மொத்தமாக 63 சதவீத விருதுகளை கைப்பற்றியுள்ளன. அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இவற்றின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தலில் ஏற்பட்ட வெற்றி தோல்விக்கும் இதற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத போதும், 
அரசியலின் செல்வாக்கு பத்மசிறீ விருதுகளை வழங்குவதில் இருந்து வந்துள்ளது. 2004ம் ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த போது 74 பேருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் அந்த விருது பெற்றவர்களின் சராசரி எண்ணிக்கை 57.
அதே போல் 2009இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது 93 பேருக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 66 பேருக்கு மட்டுமே பத்மசிறீ வழங்கப்பட்டது. அதே போல் 2014இல் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது 101 பேருக்கு வழங்கப்பட்டது. 
அதற்கு முந்தைய நான் காண்டுகளில் சராசரியாக விருது பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 80. தேர்தல் அல்லாத ஆண்டுகளை காட்டிலும் 2004,2009, 2014 ஆகிய ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகமாக விருது எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்த அளவில் டில் லியும், மகாராஷ்டிராவும் அதிகமான எண்ணிக் கையை கைப்பற்றியுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் மொத்தம் 1200க்கு பத்மசிறீ வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு விருதுகளை இந்த இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. 
அடுத்தபடியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை பாதிக்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளன. ஆந்திரா வும், உ.பி.யும் தலா 6 சதவீதம். பீகார் உள்ள திலேயே மிகவும் குறைவாக 2 சதவீதம் என்ற அளவில் 20 பேருக்கு மட்டுமே பெற்றுள்ளது என்று அதில் தெரியவந்துள்ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...