திருச்சி-சிறுகனூர் ‘பெரியார் உலகம் திடலில்’ இருபெரும் மாநாடுகள்!
தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்
தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்
கே.என்.நேரு உள்ளிட்ட தி.க., தி.மு.க. பிரமுகர்கள் உடனிருந்தனர் - மாநாட்டு நிதியும் குவிந்தது
திருச்சி, பிப்.11_ பெரியார் உலகம் சிறுகனூரில் (திருச்சி) மார்ச் 19, 20 ஆகிய நாள் களில் நடைபெறவிருக்கும் மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான கே.என். நேரு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தி.க., தி.மு.க. தோழர்கள் உடனி ருந்தனர். மாநாட்டுக்கு நிதி யையும் தோழர்கள் அளித்த னர். செய்தியாளர் கள் சந்திப்பும் அங்கு நடந் தது.
திருச்சி சிறுகனூரில் மார்ச் 19, 20 ஆகிய தேதி களில் ஜாதி தீண்டாமை மற்றும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ள திடலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் நேரில் பார்வையிட்டு தேவையான அறிவுரைகளையும் வழங்கி னார். மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் கூறுகையில், சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் இரண்டு நாள் மாநாடு, மாபெரும் அள வில் நடைபெற இருக்கின் றன. முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடாக ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடாகவும், இரண்டா வது நாள் சமூக நீதி மாநாடும் நடைபெற இருக் கிறது. இம்மாநாட்டில் முக் கிய தலைவர்கள் அழைக் கப்பட்டிருக்கிறார்கள்.
மூத்த தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, லாலுபிரசாத் உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
தே.மு.தி.க.வின் எதிர்காலம்
மேலும் செய்தியாளர்கள் கேட்டதற்கு தி.மு.கவுடன், தே.மு.தி.க. கூட்டணி சேருமா? என்று கேட்டதற்கு தி.மு.கவுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று கூறினார். மேலும் செய்தியாளர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் ஆத்திகருக்கு லாபமா? நாத்திகருக்கு லாபமா? என்று கேட்டதற்கு இரண்டு பேருக்குமே லாபம். ஆனால் நாத்திகர்கள் யாரும் அர்ச்சகராக போவதில்லை.
ஆத்திகரும், பிற ஜாதியினரும் தான் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தோழர்கள்
முன்னதாக மாநாட்டுத் திடலை முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு, மாநகர தி.மு.க. செயலாளர் மு.அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திருச்சி மாவட்ட தி.க தலைவர் மு.சேகர், பொறியாளர் சுந்தரராசுலு, பேராசிரியர்கள் நல்.இராமச்சந்திரன், ப.சுப்பிரமணியம், லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,
திருச்சி மாவட்ட செயலாளர் ச.கணேசன், லால்குடி மாவட்ட துணை தலைவர்கள், ப.ஆல்பர்ட், அட்டலிங்கம் ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, சிறுகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி(தி.முக), வேங்கூர் தனசேகரன்,
மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், சிறுகனூர் கிளை செயலாளர் கணேசன் உள்ளிட்ட தி.மு.க நிருவாகிகளும், தி.க மாவட்ட அமைப்பாளர் இளவரி, மோகன்தாஸ், சத்தியமூர்த்தி, தேவா, முருகன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பெரம்பலூர் முகுந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் உடனிருந்தனர்.
உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மேல்தட்டு வர்க்கம் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாளும்; அந்த வலைக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது
- இலங்கை அரசின் புது அரசமைப்புச் சட்டம் - ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சட்ட ரீதியான ஏற்பாடே!
- 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கண்காணிப்புக் குழுக்கள் வேண்டும்!
- மீண்டும் குலக் கல்வி திட்டமா?
- கழகக் குடும்பத்தவர்களே, கருஞ்சட்டை கடமை வீரர் - வீராங்கனைகளே திருச்சிக்குத் திரண்டு வாரீர்!
No comments:
Post a Comment