Saturday, June 7, 2014

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

 

 சென்னை: டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:

டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான் அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது  பெறுவார்கள்.

மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69 புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள் மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும்.

இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Friday, June 6, 2014

அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்? .


நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

- குடந்தை கருணா

Read : http://viduthalai.in/page1/81322.html#ixzz33qJbyDzc

Thursday, June 5, 2014

பூனாவில் நடந்தது என்ன!


பூனா, ஜுன் 5- வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார்.

இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது.  சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை  முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிரோதிகள் வாகனங்கள்மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.

130 அரசு பேருந்துகள், 21 தனியார் வாகனங்கள் சேதமாயின. மேலும், ஒரு பேருந்து, டெம்போ, மோட்டர் பைக் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன.  கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. எதிர்ப்பா ளர்கள் இந்த கலவரத்தில் வகுப்பு பேதங்களையும் காட்டி, மதத்துக்குரிய இடங்களையும் தாக்கிக்  கலவரங்களில் ஈடுபட்டனர். போப்கெல் பகுதிக்கு அருகில் உள்ள கணேஷ்நகர், போசாரியில் உள்ள லேந்தவாடி, லோஹோகான், ஹடாப்சார் பகுதியை அடுத்த சையத் நகர் மற்றும் புர்சங்கி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவாக காவிக்கொடிகளுடன் மோட் டர் பைக்குகளில் ஊர்வலமாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியவாறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். கடை களை அடைக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது,  அமெரிக்காவிலிருந்து இயங்கக்கூடிய சமூக வலை தளத்தி லிருந்து பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்றுமாறு கோரினர். அதே பதிவுகள் மற்றொரு சமூக வலைதளத்திலும் 1-6-2014அன்று பதிவாகி உள்ளது. பின் அகற்றப்பட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சஞ்சய் குமார் கூறும்போது, முதற்கட்டமாக பலமணிநேரத்துக்குப்பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. முகநூலில் பிரச்சினைக்குரிய பதிவு இடப்பட்டுள்ளதை விசாரணை செய்து வருகிறோம்.

117 பேர் கைது!

1-6-2014 அன்று மாலையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்காண தொடர்ந்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகி றோம். வன்முறைச்சம்பவங்கள்  52 இடங்களில் நடைபெற்றுள்ளன. 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் சேதத்தில் போசாரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. நூர் மொஹல்லாஹ் பகுதியில் 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இருசக்கர வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295-ஏவின் கீழ்(பிரிவினைவாதம் மற்றும் தீங்கி ழைத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதம் மற்றும் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத் தின்கீழும் கோத்ருட் மற்றும் ஹிஞ் ஜெவாடி காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாதவர்கள்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தர்மவீர் சிறீ சாம்பாஜி மகராஜ் என்கிற பெயரில் முகநூலில் சனிக் கிழமை (31-5-2014)  இரவு சத்ரபதி சிவாஜி, பால் தாக்கரே, கணேஷ் கடவுள் (வினாயகன் படம்) மற்றும் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆகிய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் பதிவிடப் பட்டுள்ளன. அதனால், உடனடியாக எதிர்வினைகள் ஏற்பட்டு, காவல்துறை யிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சாபேகர் சவ்க் பகுதியில் இரவு 9.30 மணிக்கு  12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாட்ஸ் அப் எனும் இணைய இயங்குதளம்மூலமாக காட்டுத்தீயாக முகநூல் பதிவு பரவியது. வதந்தி பரப்புவர்களும் பதட்டத்தை ஏற்படுத்தும்வகையில் உண்மைக்கு மாறானவற்றை பரப்பினர்.

அதிகாலை 2 மணிவரையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று காவல்துறையின் உயர் அதிகாரி கூறுகிறார். பாதிப்புக் குள்ளான பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட் டனர். கலவர தடுப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் தலைமையகத்திலிருந்து மேன்மேலும் ஆயிரக்கணக்கிலான காவல் படைகள் குவிக்கப்பட்டன. ஆயுதப்படையினரும் 31-5-2014 அன்று நள்ளிரவுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பூனா காவல்துறையின்சார்பில் டில்லியிலுள்ள கணினி அவசர பொறுப்புக் குழுவி னரின் (Computer Emergency Response Team-CERT) உதவியுடன் முகநூலில் பதிவிடப்பட்டவை நீக்கப்பட்ட ன.

முகநூல் இணைய செயல்பாடுகளின் கட்டுப்பாட்டகம் அமெரிக்காவில் இருப்பதால் சில நேர தாமதத்துக்குப் பின்னர் பிரச்சினைக்குரிய பகுதிகள் முகநூலிலிருந்து நீக்கப்பட்டன. சமக இணைய தளங்களிலிருந்து எதையும் நீக்க வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். அதன்படி டில்லியி லுள்ள கணினி அவசர பொறுப்புக்குழு (Computer Emergency Response Team-CERT) செயல்பட்டு பிரச்சினைக்குரிய முகநூல் பதிவை நீக்கினர். நிஹால் கான் என்கிற பெயரில் இளம் நிகில் டைகோன்  படத்துடன் 31-5-2014 அன்று இரவு வாட்ஸ் அப்பில் பரபரப்புடன் வலம் வந்தது. 1-6-2014 அன்று பிற்பகலில் முகநூலில் பதிவிட்டவர் கஸ்பா பேத் பகுதியைச் சேர்ந்த  டைகோன் என்பவர் என்று தெரிவந்தது. அதன்பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

பூனா நகரின் வடக்குப்பகுதி இந்த கலவரத்தில் கல்வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹின்ஜெவாடி, பிம்பிரி, சின்ச்வாட், போசாரி, கட்கி, ஏர்வாடா, பூனா-அகமத்நகர் சாலை, கராதி, வேனோவ்ரி, ஹடப்சர் உள்ளிட்ட பூனா மாவட்டத்தின் பல்வேறு பகுதி களும், லோனி கல்போர், வேகோலி, வாட்கான் மாவல் மற்றும லோனவாலா ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உள்ளா யின. மும்பை-பூனா நெடுஞ்சாலை, பூனா-அகமத்நகர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலும் சாலை போக்கு வரத்து முடக்கப்பட்டது. காவல் துறையினர்  27 வழக்குகளைப் பதிவு செய்து, 53 பேரைக் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஆயுதப்படையினரின் இரு பிரிவுகள், அதிரடிப் படையினர்  பூனாவைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் தொடர்ந்து பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து சுற்றி வருகின்றனர் என்று பூனா புறநகருக்கான காவல் கண்காணிப் பாளர் மனோஜ்குமார் லோகியா கூறினார். பூனாவின் நகரப் பகுதிகளில் மூன்று பிரிவாக ஆயுதப்படைப்பிரிவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பூனாவின் வடக்கு நகர்ப் பகுதியில் டிஜீபி பொறுப்பில் உள்ள காவல் உயர் அதிகாரியின் மேற் பார்வையில் மண்டலங்கள் மூன்று மற்றும் நான்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்புப்பணிகளில் வடக்குப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூனாவின் காவல் துறையின் ஆணையர் சதீஷ் மாத்தூர் விடுப்பில் உள்ளார். பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள் ளார். எந்த பதிவையும், படத்தையும், கருத்தையும் பொதுமக்களின் மனங் களைப் புண்படுத்தும்வகையில் முன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள எண் நூறு (100 )செயல்பட்டுவருவதாகவும் மாத்தூர் தெரிவித்தார்.

1-6-2014 அன்று  கலவரங்களில், கல்வீச்சில் ஏராளமானோர்  படுகாயம் அடைந்திருந்தாலும், 12பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு சாசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

முகநூலில் பதியவிட்டவர் கடுமை யாகத் தாக்கப்பட்டதால் சுயநினை விழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ளார். சாசூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மாஷ்கே கூறும்போது, அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் தீவிர மாக அவர்நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
-  பூனா மிர்ரர், 2-6-2014

இந்த கேலிச் சித்திரங்களை வெளி யிட்டது யார் என்று உறுதி செய்யப் படாத தொடக்க நிலையிலேயே குறிப்பிட்ட சிறுபான்மையினர் தான் இதனைச் செய்துள்ளனர் என்று புரளி யைக் கிளப்பி மென்பொருள் நிறுவ னத்தில் பணியாற்றிய பொறியாளர் கொல்லப்பட்டுள்ளார்!

அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் மாநிலங்களில் இதே பாணி தொடரப் படலாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தினமணிக் குடுமி!

நம் நாட்டு இளைஞர்களிடம் தற்போது ஒரு விஷயம் பரவலாகக் காணப்படுகிறது.

அது பிற நாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசை மேதைகள், நடிகர்கள் போன்றவர்களின் படம் அல்லது பெயர் தாங்கிய டி-ஷர்ட்டை பெருமை யாக அணிந்துகொள்ளும் போக்கு.

குறிப்பாக சேகுவாரா எனப்படும் அர்ஜென்டினா நாட்டில் பிறந்த மார்க்சிய புரட்சியாளர். இவர் பெயர் கூட பலருக்குச் சரியாகத் தெரியாது.

ஆனால், இவரைப் போன்ற அயல் நாடுகளில் போற்றப்படும் சில தலைவர்களின் படங்களும், பெயர்களும் இங்கு பனியன்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றை நமது இளைஞர்கள் விரும்பி வாங்கி அணி கின்றனர்.

நம் நாட்டு இளைஞர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத் துரை, வாஞ்சிநாதன், பூலித்தேவன், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், வீரசாவார்க்கர், பகத்சிங் போன்ற எண்ணி லடங்கா சுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம்பற்றி ஒன்றும் தெரிய வில்லையா? அல்லது இதிலும் வெளிநாட்டு மோகமா? என்று எதையோ எழுத வந்த தினமணி சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் ஒரு வேலையைச் செய்தி ருக்கிறது.

(தினமணி, 2.6.2014, நமது பெருமை அறிவோம் எனும் கட் டுரை, பக்கம் 8).

மற்றவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்; வீரர்களின் பட்டியலில் வீரசாவார்க்கர் எங்கு வந்தார்?

வீர வாஞ்சி எங்கு வந்து குதித்தார்? ஒருக்கால் பெயரில் வீர என்ற சொல் ஒட்டியிருப் பதால் வீரர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டாரோ!

அந்தமான் சிறையிலி ருந்து இந்த வீர சாவார்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் எத்தனை! எத்தனை!!
இன்றைக்கு இந்துத்துவா, இந்துத்துவா என்று கூச்சல் போடுகிறார்கள் அல்லவா, அதன் உற்பத்தி மூளை சாவார்க்கர்தானே!

இஸ்லாமியராகிய நீங்கள் எங்களை (இந் துக்களை) கொன்றீர்கள்.

எங்களின் வழிபாட்டுச் சிலைகளை உடைத்தீர்கள். எங்கள் பெண்களைக் கடத்திச் சென்றீர்கள். உங் களின் அநீதியான நடை முறைகள் எங்களுக்கு வலி யைத் தந்துள்ளது.

நாங்கள் இப்படியே எப்பொழுதும் வாழ முடியாது. எனவே, நாங்கள் சொல்கிறோம்.

இந்துஸ்தான் இந்துக்களின் தாய் நாடு.

எனவே, இந் துக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பது இந் துக்களின் கடமையாகும். இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா அல்ல - அவர்கள் துருக்கியையும், அரேபியாவையும் தங்கள் நாடாகக் கருதுகின்றனர். அவர்கள் இதயம் இந்தியாவில் இல்லை என்று சொன்னவர்தான் தினமணி தூக்கிப் பிடிக்கும் சாவார்க்கர்.

இப்பொழுது புரி கிறதா?  சும்மா ஆடுமா தினமணிக் குடுமி?

- மயிலாடன்

பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

பிசினஸ் லைன் ஏடு அம்பலப்படுத்துகிறது
புதுடில்லி, ஜூன் 4- பிரத மர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணி யாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் சோச லிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த் திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பது தான்.

ஆனால், பிரதமர் அலு வலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணைய தளத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்த இணையதளத்தில் தனது சித்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: சங் அமைப்பின் சித் தாந்தம் என்பது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூல மாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய் வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற் றுவதே. இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணி யாற்றுவதற்கான வழி முறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

பிரதமர் அலுவல கத்தில் புதிய இணைய தளத் தில், முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப் பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புட னான தனிப்பட்ட நபர் களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ் வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.
அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வந்தது. உதா ரணத்திற்கு, 2001 ஆகஸ்ட் டில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம் தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச்செய லாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக் கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப் பட்ட நிகழ்ச்சி என்ற அளவி லேயே இருந்தது. அந்த நிகழ்ச்சி தொடர் பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலை வர் இனாம்தார் தொடர் பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தக வலும் உண்டு. இனாம் தாரை, வழக்குரைஞர் சாகேப் என்றும் குறிப்பிடு வார்கள்.

அவரைப்பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ் சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதா நாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப் பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அது தொடர்பு டைய ஆர்எஸ்எஸ் ஊழியர் களை பாதுகாப்பதற்கும் இதே வழக்குரைஞர் சாகேப் தான் வாதாடினார் என்பது தனிக் கதை.

நன்றி: தீக்கதிர், 31.5.2014

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பான் கி மூன் வலியுறுத்தல்



 உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை யடுத்து தனது அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 இதுதொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் பெண் கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதை நாம் அறிவோம். நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரையிலும் கலிபோர்னியா முதல் இந்தியா வரையிலும் இதுபோன்ற சம்பவங் கள் நிகழ்ந்துள்ளன.

 குறிப்பாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கழிப்பறை வசதி இல்லா ததே இதற்குக் காரணம் என கூறப்படுவது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது.

 பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அமைதி மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கிய, மனித உரிமை தொடர்புடைய, வளர்ச்சியை உள்ளடக்கிய பிரச்சினை ஆகும். அனைத்து வகையிலும் பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாக இது உலகம் முழுவதும் நடைபெறு கிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் அனை வருக்கும் அவமானம் ஏற்படுத்தக் கூடியது என்பதை மக்கள் அனை வருக்கும் உணர்த்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன் முறைக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்தார்.

 உத்தரப்பிரதேச சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

 யுனிசெப் அமைப்பின் இந்தி யாவுக்கான பிரதிநிதி லூயிஸ் ஜியார் ஜெஸ் அர்செனால்ட் கூறுகையில், "இந்தியாவில் உள்ள 65 சதவீத கிராம மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பெண்களும் சிறுமிகளும் இரவில் வெளியில் செல்ல நேரிடுகிறது. இது அவர்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானதாகும்" என்றார்.

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறை அமல்: தமிழக அரசு அறிவிப்பு


 அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

 கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, இடைநிலை ஆசிரியர்களை பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.
 
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
 
 இதற்கிடையே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், ‘வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது. இந்த முறை செல்லாது. ஒவ்வொன்றிலும் விண்ணப்பதாரர்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

 இதையடுத்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், ‘இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்விலும் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஒரே கட் ஆப் வந்தால்..

இந்த தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றால், வயதில் மூத்தவர்களுக்கு (பிறந்த தேதி அடிப்படையில்) முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
இடைநிலை ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
15
P%
P*15/100
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
25
Q%
Q*25/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
R%
R*60/100
பட்டதாரி ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
10
P%
P*10/100
பட்டப் படிப்பு
15
Q%
Q*15/100
பி.எட்.
15
R%
R*15/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
S%
S*60/100

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...