Thursday, June 5, 2014

பூனாவில் நடந்தது என்ன!


பூனா, ஜுன் 5- வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார்.

இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது.  சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை  முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிரோதிகள் வாகனங்கள்மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.

130 அரசு பேருந்துகள், 21 தனியார் வாகனங்கள் சேதமாயின. மேலும், ஒரு பேருந்து, டெம்போ, மோட்டர் பைக் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன.  கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. எதிர்ப்பா ளர்கள் இந்த கலவரத்தில் வகுப்பு பேதங்களையும் காட்டி, மதத்துக்குரிய இடங்களையும் தாக்கிக்  கலவரங்களில் ஈடுபட்டனர். போப்கெல் பகுதிக்கு அருகில் உள்ள கணேஷ்நகர், போசாரியில் உள்ள லேந்தவாடி, லோஹோகான், ஹடாப்சார் பகுதியை அடுத்த சையத் நகர் மற்றும் புர்சங்கி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவாக காவிக்கொடிகளுடன் மோட் டர் பைக்குகளில் ஊர்வலமாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியவாறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். கடை களை அடைக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது,  அமெரிக்காவிலிருந்து இயங்கக்கூடிய சமூக வலை தளத்தி லிருந்து பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்றுமாறு கோரினர். அதே பதிவுகள் மற்றொரு சமூக வலைதளத்திலும் 1-6-2014அன்று பதிவாகி உள்ளது. பின் அகற்றப்பட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சஞ்சய் குமார் கூறும்போது, முதற்கட்டமாக பலமணிநேரத்துக்குப்பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. முகநூலில் பிரச்சினைக்குரிய பதிவு இடப்பட்டுள்ளதை விசாரணை செய்து வருகிறோம்.

117 பேர் கைது!

1-6-2014 அன்று மாலையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்காண தொடர்ந்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகி றோம். வன்முறைச்சம்பவங்கள்  52 இடங்களில் நடைபெற்றுள்ளன. 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் சேதத்தில் போசாரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. நூர் மொஹல்லாஹ் பகுதியில் 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இருசக்கர வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295-ஏவின் கீழ்(பிரிவினைவாதம் மற்றும் தீங்கி ழைத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதம் மற்றும் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத் தின்கீழும் கோத்ருட் மற்றும் ஹிஞ் ஜெவாடி காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாதவர்கள்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தர்மவீர் சிறீ சாம்பாஜி மகராஜ் என்கிற பெயரில் முகநூலில் சனிக் கிழமை (31-5-2014)  இரவு சத்ரபதி சிவாஜி, பால் தாக்கரே, கணேஷ் கடவுள் (வினாயகன் படம்) மற்றும் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆகிய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் பதிவிடப் பட்டுள்ளன. அதனால், உடனடியாக எதிர்வினைகள் ஏற்பட்டு, காவல்துறை யிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சாபேகர் சவ்க் பகுதியில் இரவு 9.30 மணிக்கு  12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாட்ஸ் அப் எனும் இணைய இயங்குதளம்மூலமாக காட்டுத்தீயாக முகநூல் பதிவு பரவியது. வதந்தி பரப்புவர்களும் பதட்டத்தை ஏற்படுத்தும்வகையில் உண்மைக்கு மாறானவற்றை பரப்பினர்.

அதிகாலை 2 மணிவரையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று காவல்துறையின் உயர் அதிகாரி கூறுகிறார். பாதிப்புக் குள்ளான பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட் டனர். கலவர தடுப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் தலைமையகத்திலிருந்து மேன்மேலும் ஆயிரக்கணக்கிலான காவல் படைகள் குவிக்கப்பட்டன. ஆயுதப்படையினரும் 31-5-2014 அன்று நள்ளிரவுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பூனா காவல்துறையின்சார்பில் டில்லியிலுள்ள கணினி அவசர பொறுப்புக் குழுவி னரின் (Computer Emergency Response Team-CERT) உதவியுடன் முகநூலில் பதிவிடப்பட்டவை நீக்கப்பட்ட ன.

முகநூல் இணைய செயல்பாடுகளின் கட்டுப்பாட்டகம் அமெரிக்காவில் இருப்பதால் சில நேர தாமதத்துக்குப் பின்னர் பிரச்சினைக்குரிய பகுதிகள் முகநூலிலிருந்து நீக்கப்பட்டன. சமக இணைய தளங்களிலிருந்து எதையும் நீக்க வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். அதன்படி டில்லியி லுள்ள கணினி அவசர பொறுப்புக்குழு (Computer Emergency Response Team-CERT) செயல்பட்டு பிரச்சினைக்குரிய முகநூல் பதிவை நீக்கினர். நிஹால் கான் என்கிற பெயரில் இளம் நிகில் டைகோன்  படத்துடன் 31-5-2014 அன்று இரவு வாட்ஸ் அப்பில் பரபரப்புடன் வலம் வந்தது. 1-6-2014 அன்று பிற்பகலில் முகநூலில் பதிவிட்டவர் கஸ்பா பேத் பகுதியைச் சேர்ந்த  டைகோன் என்பவர் என்று தெரிவந்தது. அதன்பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

பூனா நகரின் வடக்குப்பகுதி இந்த கலவரத்தில் கல்வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹின்ஜெவாடி, பிம்பிரி, சின்ச்வாட், போசாரி, கட்கி, ஏர்வாடா, பூனா-அகமத்நகர் சாலை, கராதி, வேனோவ்ரி, ஹடப்சர் உள்ளிட்ட பூனா மாவட்டத்தின் பல்வேறு பகுதி களும், லோனி கல்போர், வேகோலி, வாட்கான் மாவல் மற்றும லோனவாலா ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உள்ளா யின. மும்பை-பூனா நெடுஞ்சாலை, பூனா-அகமத்நகர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலும் சாலை போக்கு வரத்து முடக்கப்பட்டது. காவல் துறையினர்  27 வழக்குகளைப் பதிவு செய்து, 53 பேரைக் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஆயுதப்படையினரின் இரு பிரிவுகள், அதிரடிப் படையினர்  பூனாவைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் தொடர்ந்து பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து சுற்றி வருகின்றனர் என்று பூனா புறநகருக்கான காவல் கண்காணிப் பாளர் மனோஜ்குமார் லோகியா கூறினார். பூனாவின் நகரப் பகுதிகளில் மூன்று பிரிவாக ஆயுதப்படைப்பிரிவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பூனாவின் வடக்கு நகர்ப் பகுதியில் டிஜீபி பொறுப்பில் உள்ள காவல் உயர் அதிகாரியின் மேற் பார்வையில் மண்டலங்கள் மூன்று மற்றும் நான்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்புப்பணிகளில் வடக்குப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூனாவின் காவல் துறையின் ஆணையர் சதீஷ் மாத்தூர் விடுப்பில் உள்ளார். பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள் ளார். எந்த பதிவையும், படத்தையும், கருத்தையும் பொதுமக்களின் மனங் களைப் புண்படுத்தும்வகையில் முன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள எண் நூறு (100 )செயல்பட்டுவருவதாகவும் மாத்தூர் தெரிவித்தார்.

1-6-2014 அன்று  கலவரங்களில், கல்வீச்சில் ஏராளமானோர்  படுகாயம் அடைந்திருந்தாலும், 12பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு சாசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

முகநூலில் பதியவிட்டவர் கடுமை யாகத் தாக்கப்பட்டதால் சுயநினை விழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ளார். சாசூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மாஷ்கே கூறும்போது, அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் தீவிர மாக அவர்நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
-  பூனா மிர்ரர், 2-6-2014

இந்த கேலிச் சித்திரங்களை வெளி யிட்டது யார் என்று உறுதி செய்யப் படாத தொடக்க நிலையிலேயே குறிப்பிட்ட சிறுபான்மையினர் தான் இதனைச் செய்துள்ளனர் என்று புரளி யைக் கிளப்பி மென்பொருள் நிறுவ னத்தில் பணியாற்றிய பொறியாளர் கொல்லப்பட்டுள்ளார்!

அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் மாநிலங்களில் இதே பாணி தொடரப் படலாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...