Tuesday, July 2, 2013

இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 1



அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி,
சென்னை.

விவேகானந்தர் விழாக்கள்
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா கொண் டாட்டங்கள் நாடெங்கும், ஏன் உல கெங்கும் கொண்டாடப்படுகின்றன. தமிழக அரசும் தன் பங்கிற்கு ராம கிருஷ்ண மடத்திற்கு பலவற்றை வாக்களித்துள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே விவேகானந்த இல்ல விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார், மிக்க மகிழ்ச்சி. சென்னை விவேகானந்தா கல்லூரி நிர்வாகமும் தனக்கே உரிய முறையில் தொடர்ந்து 15-ஆவது முறையாக ஒரு பார்ப்பனரையே கல் லூரி முதல்வராக நியமித்து விவே கானந்த விழாவைக் கொண்டாடி யுள்ளது. இந்தத் தருணத்தில் ராமகிருஷ்ண மிஷனால் நடத்தப்படும் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய போக்கினை அரசு மற்றும் பொதுமக்கள் குறிப்பாக சுவாமி விவேகானந்தரிடம், அவரது லட்சியங்களிடம் ஈடுபாடு கொண்ட வர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் எதற்காக உருவானது?
விவேகானந்தரை தேசபக்தத் துறவி என்று சிறப்பிக்கிறார்கள். அவரால் தான் ராமகிருஷ்ண மடம், துறவியர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் ராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப் பினையும் நிறுவினார். (1897, மே முதல் நாள்). அந்த ராமகிருஷ்ண மிஷனால், விவேகானந்தரின் சமூக மாற்றக் கனவுகளை நிறைவேற்ற மாணவர் இல்லம் முதலில் உருவானது.
விவேகானந்தரின் சமூக நீதி
விவேகானந்தரின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களையும், லட்சியங்களையும் ஒரளவிற்கு உள்வாங்கிக் கொண்டால்தான், அவரால் உருவான ராமகிருஷ்ண மிஷன், அவரது நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்துக்களையும், லட்சியங் களையும் ராமகிருஷ்ணமட வெளியீடு களே தெளிவுபடுத்துகின்றன. அவற் றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
புரோகித - பார்ப்பன ஆதிக்கம்
இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திற்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை.... புரோகித ஆதிக்கமும், அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களை கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன.
எனது பாரதம், அமரபாரதம். இராம கிருஷ்ண மடம் வெளியீடு சென்னை 2005
இங்கு புரோகித ஆதிக்கம் என்று விவேகானந்தர் குறிப்பிடுவது பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் என்பதை பின்வரும் விவேகானந்தரின் சொற்களில் அறி கிறோம்.
பார்ப்பனர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர் களுக்கும் அவர்களது சந்ததிகளுக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப் படுகின்றன. அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி யில்லை; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை,
- அதே புத்தகம் பக்கம் 75
இத்தகைய பார்ப்பன ஏகபோகச் சதியை மேலும் கடுமையாக விவேகானந் தர் சாடுகிறார்.
புரோகிதத்துவம் (அதாவது பிரா மணீயம் அல்லது பார்ப்பனீயம்) இந்தி யாவைப் பீடித்த ஒரு சனியன். பார்ப்பனர் களும், சத்திரியர்களும் செய்த கொடுங் கோன்மை கூட்டுவட்டி போட்டு அவர்கள் தலையிலேயே மறுபடியும் விழுந்திருக் கிறது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனமும் இழிவும் தான் அவர்கள் கர்ம வினையின் பலன்
- அதே புத்தகம் பக்கம் 38 -39
தென்னிந்தியாவில் சத்திரியர்கள் இருந்ததில்லை என்பதை விவேகானந் தரே வேறொரு தருணத்தில் கூறி யுள்ளார். எனவே இங்கே சீரழிவின் முழுப்பொறுப்பும் பார்ப்பனர்களுக்கே உரித்தாகிறது. அதிலும் கல்வித் துறை யில் பார்ப்பனச் சதியை விவேகானந் தரால் சீரணிக்க இயலவில்லை.
ஆணவம், அரசு ஆணை இவற்றின் துணையுடன் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம், எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் (பக்கம் 39)
தேசியப் பெரும்பாவம்
இதனை ஒரு தவறு என்று தட்டிக் கழிக்க விவேகானந்தர் விரும்பவில்லை. பெரும் பாவம் என்று அடையாளப்படுத்து கிறார்.
சாதாரண மக்களைப் புறக்கணித் தது நமது தேசியப் பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். (பக்கம் 47)
தேசத்தின் சீரழிவிற்கு யார் காரணம், எது காரணம் என்பதை மிகத் தெளி வாகவும், திடமாகவும் எடுத்துரைத்த விவேகானந்தர், அதற்கான தீர்வையும் மிக விரிவாகவே கூறியுள்ளார்.
நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பின ருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது:
இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வதற்கு முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள்... சமுதாய சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வியை அளிப்பது தான்.
கல்வியில் முன்னுரிமை யாருக்கு?
மக்களுக்குக் கல்வி என்று பொத் தாம் பொதுவாகக் கூறிவிடாமல் யாருக்கு கல்வியில் முன்னுரிமை தர வேண்டும் என்பதைப் பற்றியும் விவேகானந்தர் மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார். அவரது சொற்களிலேயே அவற்றைக் காண்போம். இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம். ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளை விட பலவீனர் களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது கல்வி கற்பித்தல் சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு பார்ப்பனனுக்குத் தேவையில்லை. பார்ப்பனனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண் டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர் கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டு செல்வது பைத்தியக்காரத் தனம் அல்லவா?
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் ராமகிருஷ்ண மட வெளியீடு பக்கம் 96
சண்டாளர் போன்றவர்களுக்கு இயற்கை பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தரவில்லை என்ற விவே கானந்தரின் புரிதலில் நமக்கு உடன் பாடு இல்லை. சூத்திர பஞ்சமர்களுக்கு வாய்ப்புகள் தராமல் தடுத்தது பார்ப் பனிய வக்கிரம் என்பது நமது அனு பவம். ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வெகு மக்களுக்குத்தான் முன் னுரிமை வேண்டும் என்ற விவே கானந்தரின் சமூக நீதியைப் போற் றியே ஆக வேண்டும் நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள்
சமூக நீதிக் கல்விக்கு பார்ப் பனர்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட விவேகானந்தர் அவர்களிடம் பின் வருமாறு கூறினார்:
ஏ பார்ப்பனர்களே! பரம்பரை கார ணமாக பார்ப்பனர்களுக்கு கீழ்ஜாதி யினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கின்றது என்றால், பார்ப்பனர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள். எல்லாவற்றையும் கீழ்ஜாதியினருக் காகச் செலவிடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் எல்லா செல் வமும் தேவைப்படுகிறது. பார்ப்பனர் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவி யிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரி யர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும் பகுத் தறிவுமாகும்.
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் பக்கம் 97.
இது தந்தை பெரியாரின் வார்த்தை களல்ல; விவேகானந்தரின் வார்த் தைகள். சமநீதி-சமவாய்ப்பு என்பதை விவேகானந்தர் என்ற துறவி பின் வருமாறு வலியுறுத்துகிறார்.
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடு; பிறகு
இறைவனின் விருப்பப்படி ஆகட்டும்
இறைவனையும், இறைவனின் விருப்பத்தையும் உறுதி செய்ய முடியாது. ஆனால் விவேகானந்தரது விருப்பம், லட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டது.
(தொடரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:

5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!
மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!
நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!
நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!
இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.
இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.
முதல் அமைச்சரின் கருத்து
வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.
அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.
அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம்  (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.
தேவை மறுபரிசீலனை!
இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.
மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.
தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
1.7.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கல்கியும் துக்ளக்க்கும்!

நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.
பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.
பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.
சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?
அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.
மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.
இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு  ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.
பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.
துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)
மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!
நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:
இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.
மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.
அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.
எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும்.

Monday, July 1, 2013

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.
தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!
கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.
இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.
ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!
பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.
இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).
மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?
தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?
தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?
இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.
32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.
ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!
காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.
ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.
இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!
புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!!   பூம் பூம் பூம்...!
- கருஞ்சட்டை

இளநீரின் இரகசியங்கள்...

பல வகை குளிர்பானங்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் பலருக்கு இளநீரின் அருமைகளும், பெருமைகளும் தெரிவதில்லை.
குழந்தை முதல் முதியோர் வரை இதனைப் பருகலாம், தாய்ப்பால் இல்லாத அல்லது புகட்ட முடியாத சூழ்நிலை வரும்பொழுது, பசும் பாலுடன் சம அளவு இளநீர் கலந்து குழந்தை களுக்குப் புகட்டலாம். இளநீரில் நேந்திரம் பழத்தைப் பிசைந்து உண்பதும் சிறந்தது.
இளநீர் ஒன்றினை எடுத்து, சீவி, பாதி அளவு நீரைப்பருகிவிட்டு, இளநீர் வாய்க்குள் சிறிய வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, முந்திரிப்பழம், அவல் ஆகியவைகளையும் சேர்த்து, அடைத்துவிட வேண்டும்.
அதிகாலை யில் அதனை எடுத்து சாற்றைப்பிழிந்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் தொடர்புடைய நோய்கள் அகலும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது, உடலில் தண்ணீர்த் தன்மையும், தாது சத்தும் குறையும். அதனை ஈடுகட்ட இளநீர் பருகவேண்டும். இளநீரில் ஆரஞ்சுப் பழச்சாற்றைக்கலந்து நோயாளிகளும் பருகலாம்.
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால், உணவுக்கட்டுப் பாட்டில் இருப்பவர்கள் தங்கள் உடல் சோர்வைப் போக்க தினமும் இளநீர் பருகலாம். மூத்திரப்பை தொடர்புடைய நோய்களால் அவதிப்படு கிறவர்கள் இளநீர் பருகினால் சிறுநீரகப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சிறுநீரின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் நினைவு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அவர்களுக்கு இளநீர் கொடுக்கலாம்.
அல்சர், அஜீரணம், இரைப்பை நோய்கள், பெருங்குடல் வீக்கம், மஞ்சள் காமாலை மற்றும் மூலநோய் போன்ற நோய்களுக்கும் இளநீர் சிறந்த மருந்தாகும்.
தினமும் இளநீரால் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் புள்ளிகள் நீங்கி முகம் புதுப்பொலிவுடன் காணப்படும். இளநீருடன் தேன் கலந்து பருகினால் நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல், அல்சர் போன்ற நோய்கள் நீங்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காக அவர்களுக்கு இளநீர் பருகத்தரலாம்.
ஒரு கப் இளநீரில் அரைகப் பாலுக்குரிய சக்தி, வைட்டமின் பி, சி, கால்சியம், பொட் டாசியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்கள் கூட தாராள மாக இளநீர் பருகலாம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...