Sunday, September 2, 2012

எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்?


எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்?
நடிகர் ரஜினிகாந்துக்கும், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கும் மிகவும் அக்கறையான பிரச்சினை என்ன தெரியுமா?
ஜெயா தொலைக்காட்சியில் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் நடத்தி வந்த எங்கே பிராமணன்? என்ற தொடர் இடையில் நின்று போய் விட்டதே என்ற மிகப் பெரிய கவலைதான்.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகியோருக்குப் பாராட்டு விழா மற்றும் ஜெயா தொலைக்காட்சி 14ஆம் ஆண்டு விழா கடந்த 29ஆம் தேதி சென்னையில் நடந்தது.
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, கமலகாசன், கே. பாலசந்தர், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
திருவாளர் சோ. ராமசாமி பார்வையாளர் பகுதியில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பேச ஆரம்பித்தார். ஜெயா டி.வி.யில், சோ எழுதிய எங்கே பிரா மணன்? நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்தேன் திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதனைத் தொடராமல் இருப்பது தெரிய வர... அவரிடமே கேட்டேன். முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லி விட்டேன் என்றார்.
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான் என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு அப்படியே சீரியஸாக தலையில் கை வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துத் சிரித்தனர்.
- ஜூனியர் விகடன் 5.9.2012 பக்கம் 6,7
இதில் இரண்டு மூன்று விடயங்கள் உள்ளன. நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ரஜினிக்கும், முதல் அமைச்சருக்கும் கவலை எதைப் பற்றியது என்பது முதல் கேள்வி.
எங்கே பிராமணன்? இப்பொழுது எங்கே இருக்கிறான்? என்று சோ கேட்கிறாரா? அந்தக் கேள்வியில் பிரா மணன் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவது தொக்கி நிற்கவில்லையா?
இதில் சோவுக்கே குழப்பம் உண்டு பிராமணன் என்பவன் பிறப்பால் வருவதல்ல. அவனின் குணம் வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப்பட் டனர் என்று சோ எழுதியதுண்டு.
பிறப்பின் அடிப்படையில் பிரா மணன் பிறந்தான் என்கிறபோது அதனை நோக்கி வீசப்படும் அம்பு களின் சுணையைத் தாங்க முடியாமல் இப்படி விளக்கம் சொல்ல வேண்டியா யிற்று என்பதுதான் உண்மை. சோ குறிப்பிடும் யஜூர் வேதமாக இருந்தாலும் சரி, மனுதர்மம் ஆனாலும் சரி அவர் கூறும் கூற்றுக்கு எதி ராகவே இருக்கின்றன.
யஜூர் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.
பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும்  சத்திரியன் பிறந்தான்; துடைகளி னின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.
மனுதர்மத்திற்கு வரிந்து வரிந்து வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டி ருக்கிறாரே - சோ - அந்த மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87 என்ன கூறுகிறது?
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் என்று தானே மனுதர்மமும் கூறுகிறது.
பிர்மாவின் முகத்திலிருந்து பிரா மணன் பிறந்தான் என்று  சொல்லி விட்ட பிறகு குணத்தின் அடிப்படை யில் பிராமணன் என்பதெல்லாம் பித்தலாட்டப் பேச்சு தானே!
சோவின் நேர்மையற்ற முடக் குவாதத்தில் மயங்கி எங்கே பிரா மணன்? தொடரில் அப்பாவித்தன மாக ரஜினி மயங்கி இருக்கக் கூடும்.
செல்வி ஜெயலலிதாவை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது - காரணம் சோவும், ஜெயலலிதாவும் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்.
கடைசியாக ரஜினிக்கு ஒன்று, பிறப்பின் அடிப்படையில் உருவாகின் றவன் பிராமணன் அல்ல என்று சொல்லும் திருவாளர் சோவும் சரி மற்றும் குருமூர்த்தி போன்ற பார்ப் பனர்களும் சரி மறக்காமல் ஆவணி அவிட்டத்தன்று முப்புரி நூலான பூணூலைத் தரிப்பது தாங்கள் இரு பிறவியாளரான பிராமணர்கள் என்பதை அறிவிக்கத்தான்; சோ வரிந்து எழுதும் பிராமணத் தன்மை அவரிடம் உள்ளதா என்பதை அவரே திறனாய்வு செய்து கொள்ளட்டும்!
சரி அவர்கள் பிராமணர் ஆகி விட்டனர்.
திருவாளர் ரஜினிகாந்த் அவர் களே, அவர்கள் கூறும் அந்த வருணா சிரம அடிப்படையில் நீங்கள் யார்? (உங்கள் குடும்பத்தை இதில் சேர்க்காதீர்கள்!)
நாம் யார்!  சூத்திரர்கள் தானே!
சூத்திரர்கள் என்றால் யார்? அதே மனுதர்மம் இவ்வாறு கூறுகின்றது.
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)
அவர்கள் பிராமணர்கள் என்றால், நாம் யார்? சூத்திரர்கள். சூத்திரர்கள் என்றால் இந்த ஏழு பொருளுக்குச் சொந்தக்காரர்கள்.
இவை எல்லாம் உள்ளபடியே ரஜினிக்குத் தெரிந்திருந்தால் எங்கே பிராமணன்? என்ற அந்தத் தொடரை ஏன் நிறுத்தினீர்கள் என்று சோவைக் கேட்டிருக்க மாட்டார்.
மாறாக - எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று கூறும் அந்தப் பிராமணன் எங்கே? என்று துப்பாக்கி யோடு புறப்பட்டு இருக்க மாட்டாரா?
ரஜினி ஒரு அப்பாவி - சோவின் சூது - வாது பேச்சில் மயங்கி இருப்பார்.
தந்தை பெரியாரைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதபோது பெரியார் கொள்கை இந்தக் காலத் துக்கு ஒத்து வராது என்று சொன்ன ரஜினி, தந்தை பெரியாரைப் பற்றிப் புரிந்து கொண்ட பிறகு, அதுவும் பெரியார் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தன் கருத்தை மாற்றிக் கொள்ள வில்லையா?
அதேபோல அந்தப் பிராமணா - சூத்திரா விடயத்தில் உண்மையைத் தெரிந்து கொண்டால் தோசையைப் புரட்டிப் போடக் கூடியவராகத்தான் ரஜினி இருப்பார் என்று நம்புவோம்!  தொடர முடியாத காரணம், என்று சோ கூறினாராமே என்ன காரண மாம்? பார்ப்பனர்கள் எதிர்ப்பா? பார்ப்பனர் அல்லாதார் எதிர்ப்பா? அல்லது எடுத்துச் சொல்ல சரக்கு இல்லையா?
இதைத் தொடர முடியாத அள வுக்கு என்ன வெட்டி முறிக்கிறார்? இந்தத் தொடரின் மூலம் தேவை யில்லாமல் இந்தப் பிரச்சினையில் ஏன் சோ கை வைக்க வேண்டும் என்று அவாளின் அறிவு ஜீவிகள் சொல்லி விட்டாளா? முதல்வர் சொல்லியும் கேட்டகாத ஒருவர் சோ என்று ரஜினி சொன்னதும் சோ சீரியஸாக தலை யில் ஏன் கை வைத்துக் கொள்ள வேண்டும்! முதல் அமைச்சரின் அக்னிப் பார்வை சுட்டெரித்து விடுமே என்ற பயம்தான் காரணமாக இருக்க வேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>



செப்டம்பர் 01-15-2012

பா.ஜ.க.


பாரதீய ஜனதா கட்சி என்ற ஒன்றை அனுமதிப் பதே கூட கூடாத ஒன்றுதான். இக்கட்சியும் சரி, இதன் தாய் வீடான சங்பரிவார்க் குப்பைகளும் சரி மூடநம்பிக்கைகளை அடை காத்துக் குஞ்சு பொரிக்கும் வேலையில் தான்  ஈடுபட்டுக் கொண் டுள்ளன.
விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மத்தியில் தூண்ட வேண்டும் இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என் கிறது இந்திய அரச மைப்புச் சாசனம் 51A(h).
இந்தச் சாசனத்திற்கு உண்மையாக இருப்ப தாகத் தான் பா,ஜ.க. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் நடத்தை யில்? 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் எனும் எங் கள் கடவுள் அணில் களையும், குரங்குகளை யும் கொண்டு கடலில் பாலம் கட்டினான் என்று அரட்டை அடிக்கிறார் கள்.
இதன் மூலம் மக்கள் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரத் திட் டத்தை முடக்கிவிட்டனர். ஒன்றில் மக்கள் உறுதி யாக இருக்க வேண்டும். பா.ஜ.க. என்ற கட்சி நாட்டு மக்களின் வளர்ச் சிக்கு விரோதமான ஒன்று என்பதில் திட காத்திரமான தெளி வுடன் இருக்க வேண் டும்.
இன்னொரு சேதியு முண்டு. ராஜஸ்தான் மாநிலம் முன்பு பா.ஜ.க. வசம் இருந்தது வசுந்தரா எனும் ராஜ குலத்துப் பெண்மணி முதல் அமைச்சராக இருந்தார்.
இப்பொழுதோ அம் மாநிலம் காங்கிரஸ் வசம், முதல் அமைச்சர் அசோக் கெலாட்.
சென்றாண்டு கடும் கோடை அம்மாநிலத்தை வறுத்து எடுத்தது; மழை இல்லை. முதல் அமைச்சர் கெலாட் அமெரிக்கப் பயணமான மறுநாள் அம்மாநிலத்தில் மழை வெளுத்துக் கட்டியது.
ஆகா, அருமையான சந்தர்ப்பம்! காங்கிரஸ் காரரான கெலாட் இருந்தால் மழை பொழி யாது; வெளிநாடு சென்று விட்டதால் மழை கொட் டுகிறது என்று பிரச்சாரம் செய்தனர். பதாகைகளை அமைத்தனர்.
இந்தஆண்டு கெலாட் உள்ளூரில் இருக்கும்போதே மழை பெய்து விட்டதால் பா.ஜ.க.வினரின் முகம் சுருங்கி விட்டதாம் - இதையும் அவாளின் தினமலர்தான் வெளி யிடுகிறது. மழை பொழி வதற்கும் ஒருவர் ஊரில்  இல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? மழை பெய்வது எதனால் என் பதை எல்.கே.ஜி. மாண வர்களிடம் தெரிந்து கொள்ளட்டும் பா.ஜ.க.
- மயிலாடன்


Saturday, September 1, 2012

மோடிகள் பேசலாமா?


காங்கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004,2009 பொதுத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று குஜராத் மாநில முதல் அமைச்சர், உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அர்ச்சனை செய்யப்பட்ட நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மத்தியில் பி.ஜே.பி. ஆண்டதுண்டே; அந்தக் கால கட்டத்தில் பிஜேபி காப்பாற்றிய வாக்குறுதி கள் என்ன, சாதனைகள் என்ன என்று பட்டியல் போட்டுக் காட்ட மோடி தயார்தானா?
அயோத்தியில் பிஜேபி சங்பரிவார்க் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையிலும் கலவரம் ஏற்பட்டதே! அந்தக் கலவரத்திற்குக் காரணம் சிவசேனா - சங்பரிவார் என்று கூறப்பட்டதே - அது குறித்து நியமிக்கப் பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அளித்த அறிக்கையின் பேரில் சிவசேனா பி.ஜே.பி. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
ஒற்றை வரியில் அந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று அவ்வாட்சி நிராகரித்து விட்டதே! அதற்குப் பின் அமைந்த காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுக்க முனைந்தபோது பால்தாக்கரே நீதிமன்றத் திற்குச் சென்றபோது அந்தக் கூட்டம் பெரும் கலவரத்தில் ஈடுபடவில்லையா? இன்றுவரை அந்த வழக்கின் நிலை என்ன? யாருக்குத் தெரியும்?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் உள்ளிட்டோர் மீதான வழக்கு என்னவாயிற்று?
சாதனைகள் ஒருபுறம் இருக்கட்டும் - சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட கொஞ்சம் கூடத் தயங்காதவர்கள் சவால் விடலாமா?
சட்ட விரோத ஆட்சியை, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள சங்பரிவார் கும்பலுக்கு அதிகாரம் வழங்கிய மோடி அரசியல் சவால்களை வெளியிடுவது வெட்கக் கேடானதாகும்.
சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை 2010இல் முடிப்பதாக பிஜேபி வாக்குறுதி அளித்ததே! இதுவரை முடிக்கப்பட்ட துண்டா?
விவசாயத்திற்கான மின் இணைப்பு விண்ணப் பங்கள் 3 லட்சம் நிலுவையில் உள்ளன என்பது தான் மோடி அரசின் சாதனையா?
கிராமங்களில் வறுமையை ஒழிப்போம் என்றாரே மோடி. நிலைமை என்ன? வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் ஆறு லட்சம் குஜராத் கிராமங்களில் உள்ளன என்பதற்கு என்ன பதில்?
பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத் தாமல் மக்களைத் திசை திருப்பும் வழியில் மத வாதத்தின் பக்கம் கவனம் திருப்பப்பட்டது; எந்த அளவுக்குச் சென்றது குஜராத் பிஜேபி ஆட்சி?
குஜராத்தில் ஒரு கிராமத்திற்குள் நுழையும் போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழை கிறீர்கள் என்ற அறிவிப்புப் பலகை உங்களை வரவேற்கும். இதுதான் பிஜேபி ஆட்சியின் விளம்பரப் பலகை சாதனை!
பொய்யான வாக்குறுதிகளை அளித்திட சற்றும் கூச்சப்படாதவர்கள், டில்லியில் 2008 ஜூலையில் முஸ்லிம் பெண்கள் மாநாட்டினை நடத்தி என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தனர்? உண்மையில் முஸ்லீம்கள்மீது  நன்னம்பிக்கை பிஜேபிக்கு இருந்தது உண்டா?
பாபர் மசூதியை இடிக்க மாட்டோம், வெறும் கரசேவை, பஜனை மட்டும் செய்வோம்; - மசூதிக்குத் தொல்லை கொடுக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் பிஜேபியின் உத்தரபிரதேச முதல் அமைச்சர் வாக்குறுதி கொடுத்தாரே. அதுபோல நடந்து கொண்டாரா?
மசூதியைத் தரைமட்டமாக்கினார்களே! அதன் காரணமாக உ.பி. முதல் அமைச்சர் நீதிமன்றம் கலையும்வரை நின்றுகொண்டே இருக்கவேண்டும் என்று தண்டனை கொடுக்கப்பட்டதே - இதன் பொருள் என்ன?
வாய்மைக்கும் நடப்புக்கும் அறவே சம்பந்த மில்லாத கட்சி பி.ஜே.பி.யே! வரவேற்கிறோம்

பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!


பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!


புதுடெல்லி, ஆக.31- நடுத்தர குடும்பத்து பெண்கள், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர் என்று நரேந்திர மோடி கூறிய தற்கு மத்திய அமைச்சர்களும், பல்வேறு கட்சியினரும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.
(மேல் தட்டுப் பெண்கள் விதி விலக்கோ! இதில்கூட வருணப் பார்வைதானா?)
குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி, ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, `குஜராத் மக்களிடையே ஊட் டச்சத்து பற்றாக்குறை அதிகமாக காணப் படுவது ஏன்?' என்று நிருபர் கேட்டார்.
அதற்கு மோடி கூறியதாவது:-
குஜராத் மாநிலம் நடுத்தர வர்க்கம் நிறைந்த மாநிலம். நடுத்தர குடும்பத்தினர், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு தாய், பால் குடிக்குமாறு தன் மகளிடம் சொன்னால், அங்கு சண்டைதான் வரும். `பால் வேண்டாம். அதை குடித்தால் நான் குண்டாகி விடுவேன்' என்று மகள் மறுத்து விடுவாள். அது தான் இந்த நிலைமைக்கு காரணம்.
- இவ்வாறு மோடி கூறினார்.
அம்பிகாசோனி கண்டனம்
மோடியின் இக்கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:-
உலகிலேயே சிறந்த நிர்வாகி என தன்னை கூறிக் கொள்ளும் மோடி, இத்தகைய குழந்தைத் தனமான கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வரும் வேளையில், அவர் இதுபோன்ற மென்மை யான பிரச்சினைகளில் `பிசி'யாக இருக்கிறார்.
பெண்கள், தங்கள் குடும்பத்துக்காக சாப்பாட்டை துறந்து உழைத்து வருவது அவருக்கு தெரியாது போலும். அதனால்தான், அழகுக்காக பெண்கள் சாப்பிடாமல் இருப் பதாக கூறுகிறார். அவர் மீண்டும் முதல் அமைச்சராக போட்டி யிடவே தகுதி இல்லை.
- இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
கிருஷ்ணா திரத்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறிய தாவது:-
மோடியின் கருத்து தவறானது. அழகில் அக்கறை செலுத்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. அதற்கு மாறாக யாராவது நினைத்தால், அவருக்கு அறிவு இல்லை என்றே அர்த்தம்.
- இவ்வாறு அவர் கூறினார்.
லாலுபிரசாத் யாதவ் கண்டனம்
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறிய தாவது:-
பாசிச சக்திகள் இப்படித்தான் பேசும். பா.ஜனதா ஆளும் பீகாரில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. குஜராத் கலவர வழக்கில் மோடியின் அமைச் சர் சிக்கி உள்ளதால், மோடி பதவி விலகி மன்னிப்பு கேட்க வேண் டும்.
- இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. கிரிஜா வியாஸ் கூறுகையில், `ஊட்டச் சத்து பற்றாக்குறையை மறைக்க முயற்சிப்பதுடன், பெண்களை கேலி செய்திருக்கிறார், மோடி. பெண்கள், அழகில் அக்கறை செலுத்தினால் என்ன தவறு?' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், `சுகாதார துறையில் ஏற் பட்ட தவறை மறைக்க மோடி இப்படி பேசி இருக்கிறார். இது ஒரு முதல் அமைச்சருக்கு அழகல்ல' என்றார்.
இந்த குற்றச்சாட் டுகள் குறித்து பா.ஜனதா செய் தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு `மோடி போபியா' பீடித்து இருக்கிறது. அதனால்தான், மோடியின் பெயரை கேட்டாலே விமர்சிக் கிறது. அரசியல் சம்பந்தப் படாத விஷயங்களுக்கு கூட மோடியை விமர்சிக்கும் அள வுக்கு மோடியை நினைத்து பயப்படுகிறது.
- இவ்வாறு அவர் கூறினார்.

அலையாத்தி மனம்


அலையாத்தி மனம்
சுனாமி என்ற வார்த்தையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் நாளுக்கு முன்னர் நாம் கேள்வியே பட்டதில்லை. ஆனால் அந்த பேரழிவிற்குப் பின் மிகப் பெரிய பிரச்சினைக்கு சுனாமியை எடுத்துக்காட்டாகக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதன் பின்னர் இப்போது 2011 டிசம்பர் 30 ம் நாள் சுழன்றடித்து சூறையாடிய 'தானே' புயல் தன் 'சக்தி' எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டது.   ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாட்டிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது, நமக்கு வராது ஏனென்றால் இது  'புண்ணிய'பூமி என்று நினைத்து சும்மா இருந்துவிட முடியாது. உலகில் எப்போதும் எங்கேயாவது ஓரிடத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறன்றன. நமக்கும் நடக்கிறது.

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வளராத காலங்களில் ஒரு நிகழ்வு நடந்த மூன்றாம் நாள்தான் நமக்கு செய்தியே தெரிய வரும். ஆனால் இப்போது மூன்று நிமிடங்கள் என்பது அதிகம். இதனால் பதற்றம் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மைதான். ஆனால் மீட்புப் பணிகளும் வேகமாகச் செய்ய முடிகிறது என்பதும் உண்மையே.
முன்பு சுனாமி தாக்கிய பகுதிகளில் கடலூரும் ஒன்று. இப்போது 'தானே' புயலும் தன் பங்குக்கு கடலூரை சின்னாபின்னமாக்கி விட்டது. 'தானே' தாக்கிய மூன்றாம் நாள் நான் (கட்டுரையாளர்) அங்கு இருந்தேன். அதாவது புயல் மீட்புப் பணிகளுக்காக அலுவலகப் பணி மேற்கொண்டேன். ஒரு நிமிடம் இலங்கை யுத்தக் களத்திற்கு வந்து விட்டோமோ என்று அதிர்ந்து போனேன். இயற்கை தொடுத்த போர் அது. குண்டு வீச்சு நடந்ததா என்று அய்யம் ஏற்பட்டது. அந்தக் கொடுமையைச் சொன்னால் சொல்லில் அடங்காது;எழுதினால் ஏட்டில் அடங்காது; அது இருக்கட்டும்.   இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் பொருளாதார இழப்புகள் ஆகியவை பணத்தால் மதிப்பிடப் படுகின்றன. இயற்கையின் தாக்குதலுக்குள்ளான இடத்தில் தப்பிய மனிதர்களுக்கு ஏற்படும்  மன அழுத்தத்திற்கு  அரசும் தொண்டு நிறுவனங்களும் கொடுக்கும் பணம் சார்ந்த இழப்பீடுகள் போதுமா? (போதுமானதா என்பது வேறு கேள்வி)    சுனாமி போன்றவற்றின் தாக்குதலைக் குறைக்க அலையாத்தி(னீணீஸீரீக்ஷீஷீஸ்மீ )(அலைகளின் வேகத்தைக்  கட்டுப்படுத்தும்) மரங்களை வளர்க்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்கான செயல் வடிவம் எந்த அளவில் இருக்கின்றதென்று தெரியவில்லை. ஆனால், மனமாத்தி முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் மன அலைகளின் வேகம் குறைந்து வாழ்க்கைப் படகை செலுத்த வசதியாக இருக்கும்.   இயற்கை இடர்பாடுகளால் நீங்கள்  உடல் ரீதியாகப் பாதிக்கப் படவில்லையென்றாலும் அது மோசமான உணர்ச்சிப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மன அழுத்தம், புரியாத எண்ணங்கள், மன ஒருமுகப்படுத்த இயலாமை,முடிவெடுக்க இயலாமை,உண்ணும் உறங்கும் முறைகளில் பாதிப்பு, பாதிப்பு ஏற்பட்ட நினைவு நாட்களில் பதட்டம், அதே போன்ற நிகழ்வுகள் வேறிடங்களில் நடந்தாலும் அதிர்ச்சி, மற்றவர்களோடு பழகுவதில் சிக்கல், தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மனதில் உறுதி வேண்டும். எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதால் அந்த எதிர்பாராததை எதிர்கொள்ள முன் தயாரிப்பு செய்துகொள்வது நல்லது. அடிக்கடி வெள்ளம் ஏற்படும் கடல் மற்றும்  நதிக்கரையோர மக்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது குறித்து எப்போதும் கவலைப் படுவது உண்டு. அவர்களின் நிலையற்ற வாழ்க்கை மிகவும் கவலைக்குரியது. வெள்ளம் வரப்போகிறது என்ற அபாய அறிவிப்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது. பயம் பதற்றத்தைச் சமாளிக்கும் எளிய பயனுள்ள வழிகளைத் தெரிந்துகொள்வோம். இது வெள்ள நேரத்தில் மட்டுமல்லாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் உடல், மன நலனுக்கு ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். வெள்ள அபாய நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உங்கள் கால்நடைகள், செல்லப் பிராணிகள் ஆகியவையும் பாதுகாப்பாக இருக்க ஒரு திட்டத்தை வைத்திருப்பது அவசியமாகும். அண்மைய இயற்கைப் பேரிடர்கள் சொல்லிக் கொடுத்தப் பாடம் அதுதான். அரசோ, மற்றவர்களோ உங்கள் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனம், உங்களுக்கு உதவக்கூடிய உறவினர், தங்குமிட விவரங்கள் வேறு தனியார், அரசு சார்ந்த உதவும் அமைப்புகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது அபாய நேரத்தில் உங்கள் பதற்றத்தைக் குறைக்கும்.
உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற நேரங்களில் உண்மையை விட புரளி வேகமாகப் பரவுவதுண்டு. ('தானே' புயல் தாக்கிய சில நாட்களில் கடலூரில் சுனாமி புரளி பரவியதால் கடலோர மக்கள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தனர்.) அதனால் உண்மையான தகவல்களைச் சேகரியுங்கள். அது உங்கள் அபாய நிலையின் அளவைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் வீண் அலைச்சலைக் குறைக்கும். உள்ளூர் செய்தி நிறுவனங்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள்,மக்கள் செய்தித் தொடர்பு அலுவலகங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கும். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. ஒரே செய்தியை பல பேர் பல முறை கூறுவதால் அபாயத்தின் அளவு அதிகமாகத் தெரிய வாய்ப்புள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.இது உங்கள் வலிமையின் ஆதாரம். ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதும் உதவி செய்து கொள்வதும் உங்கள் மன நலனுக்கு ஏற்றது. நல்ல உடல் நலனைப் பராமரிப்பது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை - சரியான அளவு சரிவிகித உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவை எந்த விதமான அச்சுறுத்தலையும் சமாளிக்கக் கூடியது. ஆரோக்கியமான உடல் எண்ணங்களில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு வெள்ளம் போன்ற அபாய நேரங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
குழந்தைகளோடு நெருக்கமாக இருங்கள்.
உங்கள் குழந்தைகள் தேவையில்லாத செய்திகளைக் கேட்பதைத் தடுங்கள். நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொலுங்கள். (சுனாமியின் போது கடலூரில் ஒரு தாயும் ஏழு வயது பெண் குழந்தையும் வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டு மின் கம்பத்தை தாயும் மின் கம்பியை குழந்தையும் பிடித்துக்கொள்ள ,(மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது) அவர்கள் காப்பாற்றப்படும் வரை அந்தக் குழந்தைக்கு அந்தத் தாய் தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தாராம்.-இதை அவர்களே சொல்லக் கேட்டேன்.)
நம்பிக்கையுடன் இருங்கள்.
அரசு ஊழியர்கள், மீட்புக் குழுவினர், ராணுவம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் போதிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்பதை நம்புங்கள். நீங்கள் ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருந்தால் அந்த அனுபவத்தை வைத்து இப்போதைய சூழ் நிலையை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
உதவியை நாடுங்கள்.
பயம் பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நீடித்த பின் விளைவுகளால் மற்றவர்களுடன் பழகுவதில் அல்லது வேலையில் அக்கறையின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் உரிய பயிற்சி பெற்ற மன நல வல்லுனரின் உதவியை நாடுங்கள். அவர்கள் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கு மீள உதவுவார்கள்.
நில நடுக்கத்தால் ஏற்படும் மன நடுக்கம்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசாக நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது நில நடுக்கம். 2001 ஜனவரி 26 ம் நாள்  குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் மிகப்பெரும் சேதம் விளைவித்து சில கிராமங்களை முற்றிலுமாய் அழித்து விட்டதை கண்ட போது அனைவர் மனதிலும் ஓர் அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வடக்கே ஆயிரம் கி.மீ. தாண்டி பிளந்த பூமி தெற்கே திருவையாறு வரை நிலத்தை அசைத்திருக்கிறது. அதைத் தவிர இப்பொழுது பாதுகாப்பான பகுதி என நம்பிக் கொண்டிருந்த சென்னையிலும் அவ்வப்போது  ஐந்து விநாடி பூமி அசைவு.   நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நம்முடைய குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பர்களோ இருந்தால் அவர்களுடைய பாதுகாப்பு நிலைமைப் பற்றி அறிந்தோ கொள்ள அதைப் பற்றிய செய்தியை மிகுந்த கவலையுடன் கவனிப்பது இயற்கையே. ஆனால்...
நாம் என்ன செய்ய வேண்டும்?
செய்திகளுக்கு இடைவேளை,  இடைவெளி இல்லாமல் செய்திகளைக் கேட்பது அழுத்தத்தை மிகவும் அதிகப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் நில நடுக்கம் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்தாலும் சற்று இடைவெளி விட்டு செய்திகளைப் பாருங்கள். அந்த இடங்களில் அவ்வளவு விரைவாக செய்தி திரட்ட முடியாது என்பதாலும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதடைந்திருக்கும் என்பதாலும் உடனடி செய்தி கிடைக்க வாய்ப்பில்லை. நிதானமாக இருங்கள்.
உங்கள் அன்றாட செயல்களைத் தொடருங்கள்.
வழக்கமான வேலைகளைச் செய்வதன் மூலம் தொடர்ந்து நிலநடுக்கம் பற்றிய செய்திகள் கேட்பதையும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதையும்  தவிர்ப்பதால் பதற்றம் சற்றுக் குறையும்.
உடலை நல்ல ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்வதால் உணர்ச்சிகளை நல்ல நிலையில் நிர்வகிக்க முடியும்.
எதையும் எதிர் பாருங்கள்.
ஒரு பூகம்பம் ஏற்படுத்தும் பயங்கரமான பேரழிவு எந்த விதமான செய்தியையும் கொண்டுவரலாம். என்றாலும் நேர்மறையான எண்ணத்துடனே இருங்கள். நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் அடுத்து வரும் நாட்களை எதிர் நோக்குங்கள்.
உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
பல்வேறு நிறுவனங்கள் பூகம்பத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு பல வகைகளிலும் உதவி செய்கின்றன. அவர்களுக்கு பணமாகவோ உடல் உழைப்பின் மூலமோ உதவி செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல மாறுதல் (ஆறுதல்) கிடைக்கும்.
நம்பிக்கையை கை விடாதீர்கள்.
துன்பம் நிறைந்த அனுபவத்தால் மனதை பக்குவப் படுத்திக் கொண்டதன் மூலம் மரியாதைக்குரிய வளர்ச்சியை அடைய முடியும். இதன் மூலம் தன் வலிமையைத் தெரிந்துகொள்ள முடிவதுடன் வாழ்வதற்கு அர்த்தத்தை ஏற்படுத்த முடியும்.
உளவியலாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
சாதாரணமாக அளிக்கப்படும் அறிவுசார்ந்த, நடத்தை சார்ந்த, அறிவு-நடத்தை இணைந்த, இணைந்து பழகும் முறை, மனிதாபிமான நடத்தை, உள வலிமை படுத்தல் ஆகிய முறைகளில் ஒன்றையோ சிலவற்றை இணைத்தோ சிகிச்சை அளிப்பதன் மூலம் தனிஆளோ தம்பதியரோ குடும்பமோ பயனடையும்.ஹிப்னாடிச சிகிச்சை அளிப்பதன் மூலம் வலிகள், பதற்றம்,பிறழ் மனநிலை ஆகியவை பெரிய அளவில் குணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உளவியலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தம்,உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் அவர் களுடைய உணர்ச்சி நிலை, கோபம், அழுத்தம், துயரம் ஆகியவற்றைப் புரிந்து நடந்து கொள்ள உதவுகிறார்கள்.
பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்கப்படுத்துகிறார்கள். சிறிய ஆரம்பத்திலிருந்து படிப்படியாக நீண்ட நாள் இலக்கை அடையும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
பேரிடரின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் மீண்டு எதிர்கால வாழ்வை அமைத்துக் கொடுப்பதைப் பற்றிய பெற்றோரின் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், தொண்டர்கள் மற்றும்  ஊழியர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டை நீக்க உதவுகிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினர்,உறவினர் ஆகியோரைப் பற்றிய கவலைகளை மறக்க உதவுகின்றனர். பேரிடரிலிருந்து தப்பியவர்களுக்கு பயம்,பயங்கரக் கனவுகள்,உறுத்தலான மன நிலை,குழப்பம் போன்ற விளைவுகள் ஏற்படுவது இயல்பே எனவும் தக்க சிகிச்சையின் மூலம் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெளிவுபடுத்தி அதற்கான ஆவன செய்கிறார்கள். குழந்தைகளுக்குச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு  தக்க வழி காட்டுகிறார்கள். நீண்ட கால உதவியை எங்கே எப்படி பெறுவது என்பது போன்ற வழிகாட்டி ஆலோசனையைத் தருகிறார்கள்.
திடீரென்று ஏற்படும் இழப்புகளை  "இயற்கையின் கோணல் புத்தி" என்று தந்தை பெரியார் சொல்வார். பேரிடர் நிகழ்வுகளில் ஏற்படும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும்.ஏற்கனவே பட்டறிவு (பட்ட அறிவு) உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இனி இப்படியொரு நிகழ்வு ஏற்படக்கூடாது என்பது விருப்பமாகும் . நிகழ்ந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வது நம் பொறுப்புமாகும்.
- க.அருள்மொழி

செய்திகளை பகிர்ந்து கொள்ள

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...