Wednesday, August 1, 2012

தமிழ்ப் பண்பாட்டின்மீது தாக்குதல்!


முனைவர்
பா.இறையரசன்
இந்திய நாகரிகம் திராவிடர்களின் பண்பாட்டால் உருவாகியது என்று கில்பர்ட் சிலேட்டர், சுனிதிகுமார் சட்டர்சி ஆகியோர் கூறுவர். ஆரியர் - திராவிடர் போராட்டம் மூவாயிரம் ஆண்டு பழைமை யுடையது; இதனை இராமாயணத்திலும் காணலாம் என்று கில்பர்ட் சிலேட்டர் கூறு வார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது. பிராமணாள் என்று பார்ப்பனர்கள் கூறிக்கொள்வது நம்மை அவர்கள் சூத்திரர்கள் என்பதா கும் என்று கூறிப் பெரியார் அதனை எதிர்த்தார். பிராமணாள் ஓட்டல் என்ற பெயர்ப்பலகைகளைத் தார் பூசி அழித்தார்.
கல்வெட்டு அறிஞரும் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநருமான நாக சாமி தம்முடைய ஆங்கில நூலில் பார்ப் பனர்களாலும், சமற்கிருதத்தாலும்தான் தமிழ் பல வளர்ச்சி நிலைகளைப் பெற் றுள்ளது. அதனால்தான் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுள்ளது  என்று கூறியுள்ளார்.  தமிழர்களின் இலக்கியம், இலக்கணம், நீதி, கல்வெட்டு, நிர்வாகம், கலை, பண்பாடு, இசை, நடனம் முதலிய அனைத்திலும் சமற்கிருத மொழியும் வேதமும் ஆளுமை செலுத்தின என்று எழுதியுள்ளார். அவர் கருத்துகளும் நமது மறுப்புகளும்:
1. பிராமணர்களே வேதம் சமற்கிருதம் ஆகியவற்றைக் கொண்டு தமிழைத் தொடக்க        காலத்திலிருந்து வளர்த்தனர். மறுப்பு: மொழி என்பது தனிப்பட்ட வர்களால் உருவாக்கப்படுவதில்லை; வளர்க்கப்படுவதும் இல்லை.  மன்னர் களும், புலவர்களும் பொதுமக்களும் என ஒட்டுமொத்த சமுதாயமே அதன் வளர்ச் சிக்கு வித்திடுகிறது.  பார்ப்பனர்கள் சமற்கிருதத்தைத் தங்கள் குழு மொழியாக மத அடிப்படையில் வைத்திருந்தனர். எனவேதான் சமற்கிருதம் எழுதப்படாத தாக விளங்கி இன்றுவரை  பேச்சு வழக்கற்றதாகவும் விளங்குகிறது.
செய்யப்பட்ட மொழி (சமற்கிருதம்) என்று பெயர் பெற்றது.  பிற்காலத்தில் தோன்றிய செய்யப்பட்ட மொழியாகிய சமற்கிருதம் மிகத் தொன்மையான தமிழ் மொழியைத் தொடக்க காலத்திலிருந்தே வளர்த்திருக்கமுடியாது. தாத்தாவைப் பேரன் வளர்த்தெடுத்தான் என்பது சரியா? தமிழ்க்கடலாம் மறைமலையடி களால் தனித் தமிழ்க் காலம் என்று காலவரையறை செய்யப்பட்ட  சங்க காலத்தையும் தங்கள் காலமாக மாற்றி வரையறை செய்திட செய்யப்படும் சூழ்ச் சியே  நாகசாமியின் கூற்று. அவரால் ஆரி யர் காலம் என்று வரையறை செய்யப்பட காலத்தில் நுழைக்கப்பட்ட மணிப்பிரவாள நடை யாரால் எப்படிக் கொணரப்பட்டது என்ற  வரலாறும், அதில்  பார்ப்பனர்கள் பங்கும், நோக்கமும், தமிழுக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் எப்படி எதிர் கொண்டு முறியடித்தார்கள் என்பதும் ஆய்ந்தால் நாகசாமியின் முகமூடி கிழி யும்.
அவர் நம்மை சீண்டிப் பார்ப்பதன்  நோக்கமும் புரியும். ஆரியர்கள், தமிழரி டமே, நாகரிகத்தையும் அறிவையும் பெற் றனர் என்று எச்.சி.வெல்சு கூறுவார்.  ஆரி யர்கள் வரும்முன்னரே சிந்து வெளி நாக ரிகம் சிறந்திருந்தது சிந்துவெளி எழுத் துகள் திராவிட மொழியைச் சார்ந்தவை என்று ஈராசு குருமார் கூறுவார்.
2. பிராமணர்கள் உருவாக்கிய பிராமி எழுத்தே தமிழ் எழுத்துகளுக்கு மூலம் எழுதப்படாததும், பேச்சு வழக்கற்றது மாகிய சமற்கிருதம்தான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வடதமிழி எழுத் தைக் கொண்டு எழுதப்படலாயிற்று.   ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே தமிழர்க்கு எழுதப் படிக்கத் தெரியும்.  எழுத்து சுவடி என்பன தனித்தமிழ்ச் சொற் களாதலுங் காண்க. (பரிதிமாற்கலைஞர்:  தமிழ் மொழியின் வரலாறு, ப.18) கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட  தமிழி (தமிழ்) கல்வெட்டுகள் கிடைத்துள் ளன என்பதனை நன்கறிந்தவர் இந்த நாகசாமி. தமிழ் எழுத்து முறை தொடக் கத்தில் தமிழி எழுத்து முறையாக விளங்கிப் பின்னரே வட தமிழி ,தென் தமிழி எனப் பிரிந்தது.  தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் வரி வடிவ எழுத்து முறை சிறந்திருந்தது. எனவே தொல்காப் பியருக்கு முன்னால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியைத் தமிழ் எழுத்து கள் பெற்றிருக்க வேண்டும் .  தமிழியை இவரைப் போன்ற திரிபுவாதிகள் அறிந்தே திட்டமிட்டுத் தமிழ்பிராமி எனக் கூறத் தொடங்கிப் பின்னர் அதையும் விட்டு விட்டு வடபிராமி தென்பிராமி எனத் திரித்து மெல்லமெல்லத் தமிழியைப் பிரா மியாக்கி, பிராமியை பிராமணருடைய தாக்கி தம்முடைய  ஆதிக்க மனப்பான் மையை வெளிப்படுத்தத் துணிந்தனர். எறும்பை எருமை என்று சொல்லி, எருமையை, யானைஎன்ற கதையாக இருக்கிறது.
3. தொல்காப்பியம்  சமற்கிருத இலக் கணங்களையும் இலக்கிய நெறிகளையும் பின்பற்றியது.  களப்பிரர்  கால பிராகிருத மும், பாலியும் (கி.பி 200-525 ) தமிழை அழிக்கப் புறப்பட்டன என்ற வரலற்றையும் மறந்து அப்போது சமற்கிருதமே இல்லை என்பதையும் அறிந்தே மறைத்து திரித்தவரே இவர். தொல்காப்பிய இலக்கணம் சமற்கிருத இலக்கணங்களுக்கு முற்றிலும் வேறு பட்டது.  சமற்கிருதம் ஆகிய செய்யப்பட்ட மொழிக்கு செய்யப்பட்ட இலக்கணங்கள் இயற்கை மொழியாகிய தமிழுக்கு எவ் வாறு பொருந்தும்?   ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் ஆகியவற்றில் இயற்கைக்குப் பொருந்தாத தன்மையைச் சமற்கிருதத்தில் காணலாம்.
எ.கா.: திணை, பால் அமைப்பு வடமொழியில் குறைபாடு உடையது.  கரம் ஆண்பால், மனைவி எனப் பொருள் தரும் தாரம் ஆண்பால், களத்திரம் அலிப்பால்  என்றும் அறிவுக்குப் பொருந்தாத பாகுபாடுகள் சமற்கிருதத்தில் உள்ளன. திணைப் பாகுபாடு, இலக்கியத்தையும் வாழ்க்கை யையும் அறத்தோடு இணைத்து கூறுதல் முதலியவை தமிழுக்கே உரியன. அறத் தொடு நிற்றல்  அன்பின் அய்ந்திணை இவையெல்லாம் தமிழர்க்கே உரியன இவை எவ்வாற்றானும் பிரகிருத சமற்கிருத இலக்கிய  இலக்கணங்களோடு பொருந்தி வருதற்கு இடமில்லை. மேலும் இவற்றில்  இதற்கான இலக்கணமே கிடையாது . மேலும் எந்த உலக மொழிகளிலும்  தமிழின்  பொருளதிகாரத்துக்கு நிக ரானது கிடையாது.
ஆரியர் வரும்முன்னரே தமிழ் வழங் கியது  தமிழ் இலக்கணத்தை பின்பற்றித் தம் இலக்கணத்தை ஆரியர்கள் அமைத்துக் கொண்டனர் என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறுவார். சமற் கிருதம் எழுத்து சொல் பற்றி மட்டும் பேசும் . இவ்வுண்மையை இவ்வுலக  அனைத்து மொழியலாளரும்  திறனாய்வாளரும் அறிந்து ஏற்றுக்கொண்டனர் என்பது இவருக்கு நன்றாகப் புரியும். எனவே முதலில் இவர் மறந்து போன தம் தமிழி லக்கண அறிவை வளர்க்கட்டும் அல்லது சமற்கிருத இலக்கணம் அறியாராயின் அறிய முயலட்டும். அன்றி அறிந்தே செய் யின் அவர் யார் என்பது சொல்லாமலே விளங்கும்.
4. தொல்காப்பியம் கூறும் அய்ந் திணை, நானிலம் ஆகியவை, பரதரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்ட  நாடகத் துக்கே  பின்புலமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளைப் பின்பற்றியவை.   அகப் பொருளும் அதன் துறைகளும், புறப்பொரு ளும் அதன் துறைகளும், அவ்விருவகைப் பொருள்களின் இயைபுகளும் வட மொழி யினின்றும் என்றென்றும் கிடைத்தலிய லாத அரிய தனித் தமிழ் விஷயங்களாம். (பரிதிமாற்கலைஞர்:  தமிழ் மொழியின் வரலாறு, ப.25) தமிழுக்கே உரிய சிறப் பான அய்ந்திணை, நானிலம் என்ற இயற்கை சார்ந்த நிலப்பாகுபாட்டையும், தொல்காப்பியத்துக்கே உரிய வாழ்விய லோடு கூடிய இலக்கணக் கோட்பாடு களையும் சிறுமைப்படுத்த முயன்றுள்ளார். முதன் முதலாக  புரந்தரதாசரால் கி.பி. 15  ஆம் நூற்றாண்டில்  கூறப்பட்ட  பரதரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து கி.மு. 7- ஆம் நூற்றாண்டின் தொல்காப்பியத் துக்கு வந்ததாகப் பதிவு செய்து தமி ழுக்குப் பெருங்கேடு  செய்யவும்  துணிந் தார்.
ஆனால் பரிதிமாற் கலைஞரோ, தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங் களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாமறிந் தன போலவும், வடமொழி யினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டி விட்டனர் (ப.20) - என்று சொல்கிறார். தமிழ் தாழ்ந்ததென்றும், சமற்கிருதமே உயர்ந்ததென்றும் நினைக்கக் கூடிய குலத்தில் பிறந்தும் தமிழின் பெருமையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் பரிதி மாற் கலைஞர்  எனப் பூரணலிங்கம் பிள்ளை பாராட்டுகிறார்.

5. வேத நெறியைப் பின்பற்றி இந் திரன், வருணன், குமரன் முதலிய கடவுள் களைத் தொல்காப்பியம் கூறுகிறது வேதம் கூறுவதைத் திரித்து தமிழர்க்கே உரிய குமரக் கடவுளையும் தன்வயமாக்கல் கொள்கையின்படி வேதக் கடவுளர் ஆக் கினர். எரியூட்டி, தீ வளர்த்து, ஆகுதி சொரிந்து, குதிரை, ஆடு, மாடு போன்ற விலங்கினங்களை ஆகுதியாக்கித் தீயி லிட்டு வழிபட்டுச்  சோமபானம், சுரா பானம் அருந்தித்  தீ வழிபாட்டைக் காட் டும் வேத நெறி எங்கே? இந்திரவிழா வழி பாட்டை நடத்திய தமிழரெங்கே? வான் சிறப்பு, மாமழை போற்றுதும் என உழவும், நீரும்  போற்றப்பட்டது தமிழரால்.

ஆனால் தீ வழிபாட்டை போற்றி இந்திரனை எதிரியாக்கி இழிவுபடுத்திக் கதைகட்டிய இவர்கள் எங்கே? தமிழரின் மதமே சைவம். ஆதி சங்கரர்  கி.பி. எட்டாம் நூற் றாண்டில் ஷண்மதக் கோட்பாட்டை உருவாக்கித்   தமிழரின் சிவன், திருமால், முருக வழிபாட்டைத்  தன் வயப்படுத்தி, வேத நெறியாகிய ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை, யானை முதலிய விலங்கினங் களை ஆகுதியாகத் தீயிலிட்டு உண்டு, சுராபானம் அருந்திக் களித்த ஆரியக் கூட்டத்தைத் தமிழ் நெறியாகிய சைவ நெறியைப் பின்பற்றச் செய்தார்.

6. தொல்காப்பியச் செய்யுளியல், உவமயியல், எழுத்தியல் ஆகியன சமற்கிருத்தை பின்பற்றியன. வடமொழியின் இலகு குரு கண யதி விருத்தம் என்ற பாகுபாடு கட்குத் தமிழில்  இடமேயில்லை.  தமிழ்ப் பாவியல்  (செய்யுளியல் ) கூறுகள் . தமிழுக்கே உரியன; அவை  வடமொழி யில் இல்லை. (பரிதிமாற்கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு ,பக்கம் 25)  தமிழ்  மோனை முத்தமிழ் என்ற சிறப்பை உடை யது. சொல்வழக்கற்ற, தனக்கென ஒரு நாடற்ற, இனமற்ற, இலக்கணமுமற்ற சமற்கிருதம் தொன்மையான தமிழுக்கு வழிகாட்டியது என்பது வேடிக்கை.

மறை மலை அடிகளார்  108 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1904  ஆம் ஆண்டு  மே திங்கள்  25  ஆம் நாள் மதுரை தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் இரண்டாம் நாள் உரை,  இன்றைய நாகசாமியின் ஏகடியத் துக்கு வரிக்கு வரி   தக்க பதிலடி ஆகும்.

7. திருமண முறை பிராமணர்களால் உருவாக்கப்பட்டது. அகநானூற்றில் சொல்லப்படும் திருமண முறை மணல் பரப்பிப் பந்தல் போட்டு என்று இன்றும் நாம் தொடரும் திருமணமுறையை இவர் எப்படித் தங்களால்தான் உருவாக்கப் பட்டது  என்று சொல்லலாம்? பார்ப்பனர் கூறும் திருமண மந்திரம் எவ்வளவு கீழ்த் தரமானது என்பது நமக்குத் தெரியும்.

8. தொல்காப்பியம், பிராமணர்களை உயர்ந்தோர் என்றும் அந்தணர் மறை மொழி என்றும் கூறுகிறது. ஆரியர் என்றால் இழிந்தோர் என்பதை, மிலேச்சர் ஆரியர் - என்று திவாகரம் (நூற்பா 72) கூறும். தொல்காப்பியர் கூறுவது தன் நெறி வழுவாச் சான்றோரான அற வோரை மட்டுமே. அறவோர்தான் அந் தணர் ஆவர்.

9. சிலப்பதிகாரம் காப்பியம் இல்லை; கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடக நூல்; சமற்கிருத நாட்டிய சாத்திரத்தை பின்பற்றியது;  வரிப்பாடல்கள் அலங்கார சாத்திரங்கள் கூறும்  யமகம் என்பதைப் பின்பற்றியவை.  சிலப்பதிகாரம் சிறந்த முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப் பியம் என்றெல்லாம் திறனாய்வாளர் களால் ஏற்கப்பெற்றுள்ளது. சமற்கிருத காப்பியங்கள்தான் தொன்மமும் (புராண மும்) கற்பனையும் கொண்டு செயற் கையாக உருவக்கப்பட்டவை.

சிலப்பதி காரத்தில் வரும் சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், இலங்கை மன்னன் கயவாகு முதலியோர் வரலாற்று மன்னர்கள் ஆவர். பூம்புகார் அகழ்வாய் வுகள், கண்ணகி கோயில் முதலியன சிலப்பதிகாரத்தை வரலாற்றுக் காப்பியம் என உறுதி செய்யும்.

சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாடல்கள் தொன்மையான தமிழிசை வடிவங்களாகும். யமகம் என்பது மடக் கணி. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அணிவகையைக் கொண்டு பழைமையான சிலப்பதிகாரத்தோடு ஒப்பிட்டுப் பிற் காலமாகக் கூறுதல் பிழை. சமற்கிருதத் தில் இசைப்பாடல்கள் இல்லை; பிற் காலத்தில் சிலர் உருவாக்கினர்.

10. சங்க இலக்கியங்கள் செயற்கை யாகப் பாடப்பட்ட பாடல்களை உடையன; வரலாற்றுத் தன்மை அவற்றில் இல்லை. சங்க கால மக்கள் வாழ்வு இயற்கை யானது , ஆதலால் அவர்களால் பாடப் பட்ட பாடல்களும் இயற்கையோடு இயைந் தவை. பறவைகளையும், விலங்குகளையும் மரங்களையும், செடிகொடிகளையும் பூக் களையும் போற்றி யாமம், வைகறை. என நாளையும்  இளவேனில், முதுவேனில் என ஆண்டையும் வகுத்து இயற்கை யோடு இயைந்த வாழ்வு தமிழர் வாழ்வு. மயில் அகவுவது போலவும் ஆசிரியர் கூறுவது போலவும் அமைந்த ஆசிரியப் பாக்களால் பெரிதும் பாடப்பெற்றவை சங்கப்பாடல்கள்; இசை நயம் சான்றவை கலி, பரி ஆகிய பாடல்கள்; சிறிது நெகிழ் வுடைய வஞ்சிப்பாடல் அளவில் குறைவே; முடிவுரை சொல்வது போல் சுருங்கச் சொல்ல வெண்பாக்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. எனவே மிகவும் இயற்கையும், எழிலும் கொண்டவை சங்க இலக்கியங்கள்.

செயற்கையாகப் பாடாமல், புனைந் துரையோ பொய்யுரையோ கற்பனையோ இல்லாமல் பாடப்பெற்ற சங்கப்பாடல்கள் அக்கால மன்னரையும், மக்களையும் உள்ளவறே பாடியுள்ளதால் வரலாற்றுச் சான்றுகளாகவே அமைந்துள்ளன. கி.மு. 3ஆம் நூற்றாண்டளவிலிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை எழுதப்பெற் றுள்ள  பிற நாட்டார் குறிப்புகளும், பிற நாடுகளிலும் தமிழகத்திலும் கிடைத் துள்ள தொல்லியல் சான்றுகளும் இதனை உறுதி செய்கின்றன. சங்ககாலக் கல் வெட்டுகள் சங்க இலக்கியச் செய்திகளை உறுதி செய்கின்றன. (திரு.நாகசாமியே  சில சங்ககாலக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார்) ஆரியம் நன்று, தமிழ் தீது என்ற குயக்கொண்டானைச் சாகும்படியாக ஆணையிட்டு பிறகு மன்னித்து உயிர்ப்பித்தார் நக்கீரர் என்ற கதையுண்டு. தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற்றிருப் போன் வெறும் புலவோனே -என்று பாடுவார் தண்டபாணி சுவாமிகள்.

அவர் வேலூரில் சமற்கிருதமே உயர்ந்ததென்று வாதிட்ட இருவரை எதிர்த்துத் தமிழே உயர்ந்ததென்று வாதிட்டார்; எவ்வகையிலும் அவர்கள் ஏற்காததால் திருவுளச்சீட்டு போட்டுத் தமிழே உயர்ந்ததென்று அறிவித்தார்.  தமிழே உயர்ச்சி எனச் சீட்டுக் கொடுத்த பெருமாளே என இறைவனைப் பாடினார்.

பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண் டுகளில் இந்தியா என்றாலே வேதமும், சமற்கிருதமும் மட்டுமே உள்ள நாடாக வெளிநாட்டினர் நினைத்தனர். மேக்சு முல்லர் என்ற செர்மானிய அறிஞர் சமற் கிருதத்தையும், வேதத்தையும் படித்து அவற்றைப் பற்றி நிறைய நூல்கள் எழுதிப் பரப்பினார்.  அவர் தமிழ் மொழி பற்றியும் தமிழர் நாகரிகத்தைப் பற்றியும் உணராமல் போய்விட்டேனே என்று பிற்காலத்தில் வருந்தித் தம் நாட்குறிப்பில் எழுதியுள் ளார் (இந்திய பண்பாடுகளின் மூலம்  ப. 32). சமற்கிருதக் கருத்துகள் யாவும் தமிழிலிருந்தே பெறப்பட்டவை.  ஆரிய நாகரிகம் நாடோடி நாகரிகம்; திராவிட நாகரிகமே உயர்ந்தது.  தமிழர்களின் நூற்றுக்கணக்கான நகரங்களையும் கோட்டைகளையும் ஆரியர்கள் தீயிட்டு எரித்தனர்;

ஆறு மாதம் எரிந்ததில் தமிழர்களின் இலக்கண இலக்கியக் கலைச்செல்வங்கள் எரிந்து சாம்பலாயின என்று மேக்சுமுல்லர் கூறுவார் (அப்பா துரையாரின்  தமிழ் முழக்கம் மாத இதழில்).        திராவிடருடைய நாகரிகம் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கியது; அதனைப் பின்பற்றியது ஆரிய நாகரிகம் என்று விவேகானந்தரும் ஜவகர்லால் நேருவும் கூறுவர்.  தமிழின் உயர்வை அறிந்த காந்தியாரும், நேதாஜியும் அம்பேத்கரும் மறுபிறவியிலாவது தமிழர்களாய் பிறக்க வேண்டும் என்று விரும்பினர்.  தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு, தாம் பார்ப் பனர் என்பதால் சமற்கிருதமே உயர்ந்த தென்று கூறித் தமிழைப் பழிக்கும் செயலைச் செய்வது, பெரியார் தோன்றிப் போக்கிய பார்ப்பன ஆதிக்கத்தை மீண் டும் தோற்றுவிக்க முயல்வதாகும். அவ் வாறு மீண்டும் ஆரியத்தீமை பரவினால் எதிர்ப்புத் தீ பரவட்டும் எனத் தமிழ்நாட்டு  அறிஞர் கூறும் நிலை ஏற்படும்!
(நிறைவு)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>




இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மத்திய அமைச்சரவையில் துறைகள் மாற்றம்


புதுடில்லி, ஆக.1- மத் திய அமைச்சரவையில் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்ச ராக இருந்த பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலை வர் தேர்தலில் போட்டி யிடுவதற்காக தனது அமைச்சர் பதவியை கடந்த மாதம் ராஜி னாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து, நிதித் துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப் படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கே, நிதி அமைச்சக பொறுப்பை கூடுதலாக கவனித்து வந் தார்.
இந்த நிலையில், மத் திய அமைச்சரவையில் நேற்று சிறிய அளவில் துறைகள் மாற்றம் செய் யப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் ஆனார்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்து வந்த சுஷில் குமார் ஷிண்டே, புதிய உள் துறை அமைச்சராக நிய மிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த மின்துறையை, மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதல் பொறுப்பாக கவனிப் பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை யின்பேரில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்தத் துறை மாற்றங்களை செய்துள் ளார். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது. இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளது.
ப.சிதம்பரம் மத்திய  நிதி அமைச்சராவது, இது 3 ஆவது முறை யாகும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஆவணி அவிட்டமாமே!


நாளை ஆவணி அவிட்டமாம்! பார்ப்பனர்கள் நாளை பூணூலைப் புதுப்பிக்கும் நாள்.
இடஒதுக்கீட்டால் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது என்றெல் லாம் நீட்டி முழங்கும் பார்ப்பனர்கள் அனைவரும் (சோ உள்பட) நாளைய தினம் தவறாமல், மறக்காமல் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள்.
இந்தப் பூணூலை அணிந்த பிறகுதான் எந்த ஒரு பார்ப்பனச் சிறுவனும் துவிஜாதி (இரு பிறவி யாளன்) பிராமணன் ஆகிறான். பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்பதற்கான டமார அறிவிப்புதான் இந்த பூணூல் அணிவிப்பு.
பார்ப்பனர்களைத் தவிர மற்ற செட்டியாரும், ஆசாரியாரும், பத்தரும் பூணூல் அணிந்து கொள்கிறார்களே என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்குச் சாத்திரத்தில் அங்கீ காரம் கிடையாது. இதுகுறித்து மனுதர்ம சாஸ்திரம் பச்சையாகவே நெற்றியில் மொத்துவது போலவே எழுதி வைத்திருக்கிறது.
பிராமணனுக்குப் பஞ்சு நூலா லும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலா லும், வைசியனுக்கு வெள்ளாட் டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனு தர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 44)
இதில் சூத்திரனுக்குப் பூணூல் தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது என் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இராமானுஜர்கூட ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்துப் பார்த்தாரே! பாரதியாரும் அதுமாதிரி முயன்றார். ஆனாலும் மூக்கறுபட்டது தான் மிச்சம்.
இந்து மதம், பார்ப்பனீயம் அதனை அனுமதிக்காது. பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றங்கள் என்பது குதிரைக் கொம்பே! சீர்திருத்தவாதி என்று பார்ப்பனர்கள் கூறும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 1938இல் சென்னை மாநிலப் பிரதம ராக இருந்தபோது ஆசாரியார், ஆச்சாரியார் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் ஆயிற்றே!
பார்ப்பனர்கள் சூத்திரர் வீடு களுக்கு விவாஹசுப முகூர்த்தங்களை நடத்தி வைக்கும் பொழுது மட்டும் ஒரு முகூர்த்த நாழிகைக்குப் பூணூலைத் தரிக்கச் செய்வார்கள். ஏன் அந்தப் பதவி உயர்வு என்றால் சூத்திரனுக் குக் கல்யாண உரிமை சாஸ்திரப்படி கிடையாதே! அதே நேரத்தில்  சூத்தி ரர்களின் பொருளைச் சுரண்டவும் வேண்டாமா?
மேலும் வேத மந்திரங்களைச் சூத்திரங்களின் காதுகளில் ஓதுவும் கூடாது என்பதால் தற்காலிகமாக மாப்பிள்ளையின் தோளில் பூணூலை மாட்டி, கல்யாணம் முடிந்து தட்ச ணையையெல்லாம் தட்டாமல், பாக்கியில்லாமல், கறாராகப் பெற்றுக் கொண்ட நிலையில், மறக்காமல் ஆம்! மறக்கவே மறக்காமல் மாப் பிள்ளை தோளில் பூட்டப்பட்ட அந்தப் பூணூலைக் கழற்றச் சொல்லி, குப்பையோடு குப்பையாகக் கூட்டி ஒதுக்கச் செய்த பிறகுதான் மேற்படி யான் நடையைக்கட்டுவான்.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும்கூட பூணூலைப் புதுப்பிப்பதற் காகவே ஒரு நாளை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் தனியே ஒதுக்கி வைத்து ஜாதி ஆணவக் குறியான பூணூலை மற்றவர்களைச் சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் என்பதை மறைமுக மாகத் தெரிவிக்கும் அறிவிக்கும்  வகையில்  புதுப்பிக்கிறார்களே!  அதனை அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம் என்றால் அதன் பொருள் - நம் மக்களுக்குப் போது மான அளவுக்கு மான உணர்வு பொங்கி எழவில்லை - வீறுகொண்டு கொந்தளிக்கவில்லை என்றுதானே பொருள்!


ராஜாஜி


கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல் லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு
பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண் டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.
அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத் தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத் தினாரோ அந்த காமராஜர்...  ராஜாஜியின் கடைசிக் காலத் தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.
(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)
கேள்வி கேட்டவர் அய்யங் கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப் படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?
பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.
1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.
இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?
- மயிலாடன்

முகலாய மன்னர்களின் நீதி


பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதியதாவது:-
ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.  மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.
2. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது இந்திய மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க உனக்கு உதவும். இதன் மூலம் நன்றிக் கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படுவாய்.
3. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது.
எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு.
அது ராசாவுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவைப் பராமரிக்கும்.
அதன்மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.
4. இஸ்லாமைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட அன்பு வாளால் செய்வது நல்லது.
5. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும்.
6. உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை ஓராண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது.
இவ்வறிவுரை ஹுமாயூனுக்கு மட்டுமல்ல. அவர் வழிவந்தவர்களும் அவுரங்கசீப்பின் ஆரம்ப நாட்கள் வரை கடைப்பிடிக்கப் பட்டிருப்பது வரலாறு. இந்தக் காலங்களில் கோயில்கள் இடிக்கப்படவில்லை. பசுவதை தவிர்க்கப்பட்டுள்ளது.(338)
ஷெர்ஷா:
குறுகிய கால _ அய்ந்து ஆண்டுகள் மட்டுமே - ஆட்சிதான். அரச வம்சம்கூட இல்லை. ஆனால் ஆட்சிமுறை, நிர்வாகம், நீதி வழங்கல், வரிவசூல் முதலியனவும்  இவற்றிலான சீர்திருத்தங்கள் இவற்றை எல்லாம் நோக்க பல வரலாற்று அறிஞர்கள் வானளாவப் போற்றுகின்றனர். மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்தவர் என்கின்றனர்.
இவருக்கு உவமையாக பிரான்சை ஆண்ட 14அம் லூயி, இரசியாவை ஆண்ட மகா பீட்டர், பிரசியாவை ஆண்ட மகா பிரடரிக் முதலியவர்களைக் கூறுகின்றனர்.
நான்கு நெடுந்தொலைவு சாலைகளை அமைத்தவர் இவரே. 1. வங்காள சோர்கானிலிருந்து மேற்கே சிந்து நதி வரை 1500 மைல் நீளம். 2. ஆக்ராவிலிருந்து பிரகான்பூர் வரை மட்டுமல்ல. சாலைகள் அத்தனையிலும் 1700 சத்திரங்களைக் கட்டி இந்து முஸ்லீம்களுக்குத் தனித்தனி தங்கும் விடுதிகளும் சத்திரத்தின் வாயிலில் குடிநீர் பானைகளும் இந்துக்களுக்கு உணவளிக்க பார்ப்பன சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்திருந்தார். (எஸ்.ஆர். சர்மா தரும் தகவல்) (345)
நீதி வழங்குவதில் கண்டிப்பானவர். அதிகார வர்க்கத்தையும் பெருஞ் செல்வர்களையும் (இந்திய அரசு போல் அல்லாது) குற்றத்திலிருந்து தப்பிச் செல்லவிட மாட்டார். ஏழைகளுக்கு நீதி எளிதில் கிடைக்கச் செய்தார். உறவினர், உயர்ந்தோர் என்பதற்காக நீதியைச் சாய்க்காமல் அவர்களைத்தான் அதிகம் தண்டிப்பார். ஏழை வேளாளனுக்கு மேலான நீதி கிடைத்தது.
தப்காதி அக்பரி (Tabagat-i-Akbari) என்னும் நூலில் நைசாமுதீன் அகமது என்பவர் ஷெர்ஷாவின் ஆட்சியில் வணிகர்கள் தங்கள் பொருட்களை யாரும் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற பயமின்றி எங்கும் பயணம் செய்யலாம். பாலைவனத்திலும் தூங்கலாம். ஷெர்ஷாவின் தண்டனைக்குப் பயந்தும், நீதியைக் காக்க வேண்டுமென்ற பற்றுக்கொண்டும் திருடர்களே வணிகர்களின் பொருட்களுக்குக் காவலிருப்பார்கள் என்கிறார். (இன்றைய இந்திய ஊழல் ஆட்சியை எண்ணிப் பாருங்கள். யாருக்கும் வெட்கமில்லை!) _ இந்திய வரலாறு 3ஆம் தொகுதி _ பேரா.கோ.தங்கவேலு எழுதியது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிடு _ 2002 பதிப்பு.
ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வரலாற்றாளர் எர்ஸ்கின் விவரிக்கிறார். (344, 345)
ஷெர்ஷாவின் மூத்த மகன் அதல்கான் ஒரு நாள் யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு கடைக்காரர் வீடு - சிதிலமடை மடை நிலை _ உரிய மறைப்புகள் இல்லாது கடைக்காரன் மனைவி ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த இளவரசன் அவள் அழகில் மயங்கி சிறிது நேரம் நின்று பார்த்ததோடு அவள்மீது ஒரு பீடாவை எறிந்துவிட்டுப் போய் விட்டான்.
அதிர்ந்து போன அப்பெண் கணவன் வந்ததும் தகவலைக் கூறித் தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழுது ஆர்ப்பரித்தாள். கணவன் நேரே ஷெர்ஷாவிடம் சென்று புகார் கூறினான். ஷெர்ஷா என்ன செய்தான்? இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான். அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்) இளவரசனின் மனைவி ஆடையின்றி குளிக்க அதை அந்தக் கடைக்காரன் யானை மீதிருந்து பார்த்து அவள் மீது பீடாவை வீச வேண்டும் என்றான். (மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)
இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர். பல பிரபுக்கள் சொல்லிப் பார்த்தும் ஷெர்ஷா இந்த முடிவிலிருந்து மாற மறுத்துவிட்டார். மன்னரின் நேர்மையைக் கண்டு அசந்துபோன கடைக்காரரே இறுதியில் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு நீதி வழங்குவதிலும் வரி வசூல் முறையில் செய்த சீர்திருத்தங்களையும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கடைப்பிடித்தனர்.  எனவேதான் வின்சண்ட் ஸ்மித் என்ற வரலாற்று அறிஞர்.
“No government not even the British government has shown so wisdom as this great pathan” என்று எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலும் தனது சொந்த குடிமக் களுக்கு எதிராக ஜிகாத் (புனிதப் போர்) தொடுத்ததில்லை. (346)
எத்தனை உயர்ந்த உள்ளம். மண்ணின் மைந்தர்களை அடியோடு அழிக்கப் போர் செய்த வந்தேறிகளுக்குத் துணைபோன _ இன்னும் ஆதரவுக் கரம் நீட்டும் இந்திய அரசை எண்ணிப் பாருங்கள். எத்தனை கொடுமை இது. எளிய ஷெர்ஷாவின் உயர்வும் முனைவர்களின் இழிவும் புரியும்.
மக்களுக்காக இலக்கியம் படைத்த கபீர்
சமஸ்கிருதம் கிணற்று நீர் என்றால்
மக்களின் மொழி ஓடு நதி என்றார்(197)
அமர்தாசு சீக்கிய மதப் பிரச்சாரத்தை மக்கள் பேசும் மொழியில் செய்தார். அதைக் கேட்ட பார்ப்பனர்கள் இவர் ஏன் சமஸ்கிருதத்தைக் கைவிட்டார்? என்று கேட்டனர். அதற்கு பதிலுரையாக அமர்தாசு கூறினார்.
கிணற்று நீரைப் பக்கத்து நிலத்திற்குத்தான் பாய்ச்ச முடியும். ஆனால் மழைநீர் கொண்டு உலகம் முழுவதிலும் விவசாயம் செய்யலாம் என்றார் (484)
கபீர் கூறியவை:
நீங்கள் உங்கள் இதயத்தைச் சிரைக்கவில்லை
உங்களது முடியை ஏன் சிரைக்கிறீர்கள்?
மனிதனின் பாவங்கள் அவனது இதயத்தின் வேலை
தலையைச் சிரைத்து என்ன பயன்?

புத்தகங்கள் ஒரு சிறை
அதன் கதவுகளில் இப்படி எழுதப்பட்டுள்ளது
கற்கள் உலகை மூழ்கடித்து விட்டன
பண்டிதர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் (192)

கற்களைக் கும்பிடுவதன் மூலம்
கடவுளைக் காணமுடியும் என்றால்
நான் மலையைக் கும்பிடுவேன் (196)

பெற்றோர்கள் உயிரோடு இருந்தபோது
அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை
இறந்ததும் அவர்களுக்கு விருந்து படைக்கிறார்கள்
எலிகளும் நாய்களும் சாப்பிடுவது எப்படி அந்தப்
பரிதாபமான பெற்றோர்களுக்குப் போய்ச் சேரும்.  (186)

ஆதாரம் :- காலந்தோறும் பிராமணியம் பாகங்கள் 1 மற்றும் 2 :  அருணன் எழுதிய நூலிலிருந்து.

- ம.கிருஃச்ணமூர்த்தி

JULY 16-31


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...