புதுடில்லி, ஆக.1- மத் திய அமைச்சரவையில் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்ச ராக இருந்த பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலை வர் தேர்தலில் போட்டி யிடுவதற்காக தனது அமைச்சர் பதவியை கடந்த மாதம் ராஜி னாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து, நிதித் துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப் படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கே, நிதி அமைச்சக பொறுப்பை கூடுதலாக கவனித்து வந் தார்.
இந்த நிலையில், மத் திய அமைச்சரவையில் நேற்று சிறிய அளவில் துறைகள் மாற்றம் செய் யப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் ஆனார்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்து வந்த சுஷில் குமார் ஷிண்டே, புதிய உள் துறை அமைச்சராக நிய மிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த மின்துறையை, மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதல் பொறுப்பாக கவனிப் பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனை யின்பேரில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்தத் துறை மாற்றங்களை செய்துள் ளார். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது. இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராவது, இது 3 ஆவது முறை யாகும்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- நித்தியானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட பாஸ்போர்ட்கள் முடக்கம்
- புனே குண்டு வெடிப்பு: தீவிரவாதிகளின் திட்டமிட்ட செயல்தான் -மத்திய உள்துறை செயலாளர்
- திடீர் மின் தடைக்கு காங்கிரஸ் கூட்டணிதான் காரணம்: உ.பி. முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு
- சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14 ஆம் தேதி வரை காவல் நீடிப்பு
- இந்திய பங்கு சந்தை இன்று ஏற்ற நிலையில் முடிந்தது
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
1 comment:
10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை பாடநூல்களை வைத்துக்கொண்டு எழுதும் நடைமுறை மத்திய இடைநிலைக் கல்விக் கழகம் அறிமுகப்படுத்துகிறது
நாக்பூர், ஆக.1- நாட்டின் கல்வி நடைமுறையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை மத்திய இடைநிலைக் கல்விக் கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 10, 12 வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் பாடநூல்களை வைத்துக் கொண்டே எழுதலாம் என்பதுதான் இந்த மாற்றம். தற்போது உள்ள மனப்பாடம் செய்து எழுதும் நடைமுறைக்கு மாற்றாக மாணவர் களிடையே உயர்ந்த அளவு சிந்தனை ஆற்றலை இந்தப் புதிய நடைமுறை ஏற்படுத்தும் என்று மத்திய இடை நிலைக் கழகத் தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார். உண்மையாகக் கூறுவதானால் இது புத்தகத்தை வைத்துக் கொண்டு எழுதும் தேர்வு முறையல்ல;
முன்ன தாக அறிவிக்கப்பட்ட தேர்வு என்று இது அழைக்கப்படும். இது 10 ஆம் வகுப்பின் அனைத்துப் பாடங்களுக் கும், 12 ஆம் வகுப்பின் சில முக்கிய பாடங்களுக்கும் பொருந்தும். முன்னதாக அறிவிக்கப்படும் இந்தத் தேர்வின் சிறப்பு அம்சங்களைப் பற்றி விவரித்த ஜோஷி, மாணவர்கள் எழுதவேண்டிய தேர்வு பற்றி அவர்களுக்கு தேர்வுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப் படும். ஆனால் கேட்கப்படும் கேள்விகள்எளிதானதாகவும், நேரிடை யானவையாகவும் இருக்க மாட்டா. மாணவர்களின் பகுத்தாய்வு செய்யும் ஆற்றலை அது சோதிக்கும் என்று கூறினார்.
இந்த புதிய தேர்வு நடைமுறை பற்றிய முழு விவரங்களுடன் கூடிய முறையான அறிவிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இந்த விகாரத்தைக் கையாள்வதற்காக ஒரு சீர்திருத்தக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ஜோஷியே தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கும் கல்விக் கழக வட்டாரங்கள், கல்வி நடை முறைகள் மாணவர் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமைக்கப் பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றன.
Post a Comment