Saturday, October 1, 2011

குலக்கல்வித் திட்டத்துக்கு ஜே போடுவதா?


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (12) குலக்கல்வித் திட்டத்துக்கு ஜே போடுவதா?


கலி.பூங்குன்றன்


தி.மு.க. பிரிந்த பின் திராவிடர் கழகத்துக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் தந்தை பெரியார் அவர்கள் தி.மு.க.வையும் அதன் முன்னணித் தலைவர்களைப் பற்றியும் விமர்சனம் செய்தது என்பதைப் பற்றித்தான் திருப்பித் திருப்பி துக்ளக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார் திருவாளர் கே.சி.லட்சுமி நாராயணன்.


எந்த ஒரு கட்சியிலிருந்தும் பிரிவு ஏற்படும் பொழுது இத்தகைய விமர் சனங்கள் ஏற்படுவது இயல்புதான். இது குறித்து விடுதலை ஆதாரபூர்வமாகப் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிர சுக்குள் ராஜாஜி கோஷ்டி, காமராஜர் கோஷ்டி என்றெல்லாம் இருந்து வந்திருக்கின்றன. சத்தியமூர்த்தி அய்யர் அணி, ஆச்சாரியார் அணிகள் இருந் திருக்கின்றன. ஒருவரை ஒருவர் விமர் சனம் செய்திருக்கின்றனர். இதைப் பற்றி யெல்லாம் விரிவாக விடுதலை எடுத்துக் கூறியும், அரைத்த மாவையே அரைக்கும் அரை வேக்காட்டுத் தனத்தில் பம்பரம் சுற்றுகிறது துக்ளக்.


தி.க.வும் - தி.மு.க.வும் வாதப் - பிரதி வாதங்கள் செய்திருந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் காலத்திலேயே அதற்கான முடிவுகள் காணப்பட்டு, ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொல்லும் அளவுக்கு நிலைமைகள் சீரடைந்தனவே. இது சூத்திரர்களின் அரசே என்று கலைஞர் சொல்லும் அளவுக்கு திராவிடர் கழகத்துக்குப் பெரு வெற்றி கிடைத்துவிட்டதே. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், எழுதுவதற்கு வேறு சரக்கு இல்லாத கையறு நிலையில் நிற்பதாகத் தெரிகிறது.


இதனூடே சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது போல ஆச்சாரியார் (ராஜகோபாலாச்சாரி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்க வந்தாரே பார்க்கலாம்.


ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு சிறு வனும், சிறுமியும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல இயலும் வகையில் ஒரு புதிய, மாற்றியமைக்கப்பட்ட, ஏற்பாட்டை கல்வி முறையை ராஜாஜி அறிமுகம் செய்தார். அது ஒரு புரட்சிகரமான ஏற்பாடு. முன்னேறிய பல நாடுகளில் கல்வி முறை அவ்வாறு அமைந் திருக்கிறது.


அது வரை கல்வி கற்காத ஏழைக் குழந்தைகள், புதிய ஏற்பாட்டின் விளை வாக கல்வி கற்பார்கள் என்பதுதான் அந்தத் திட்டத்தின் தனிச் சிறப்பு. எனினும் திராவிடக் கட்சிகள், அரசியல் நோக்கத்துடன் அந்தப் புதிய ஏற்பாட்டை எதிர்த்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அந்த எதிர்ப் புக்கு ஆதரவு தந்தார்கள்.


அந்தச் சூழலில் ராஜாஜி அமைச் சரவை 13-.4.-1954 அன்று பதவி விலகிறது. அன்றைய தினமே காமராஜர் தலை மையில் புதிய காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்றது. (துக்ளக் 5-.1--0.2011 பக்கம் 12)


உடம்பெல்லாம் மூளை என்று பீற்றிக்கொள்ளும் ராஜாஜியால் வாய்தா காலத்துக்குக் கூட ஆட்சி செய்ய முடியாமல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் ஒட்டு மொத்த தமிழினமே எரிமலைக் குழம்பாக வெடித்துக் கிளம்பிய நிலையில், பஞ்சக் கச்சம் காணோம், துண்டைக் காணோம் என்று ஆச் சாரியார் ஓடி (அத்தோடு அவர் பொது வாழ்க்கையும் அனேகமாக அஸ்தமனம் ஆயிற்று!) 57 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அக்ரகாரத்தின் ஆற்றாமை அடங்கவில்லை.


ஆச்சாரியார் கொண்டு வந்த அந்தக் குலக்கல்வித் திட்டம் - வருணாசிரமப் புத்தி பார்ப்பனர்களை விட்டுப் போகவில்லை என்பதைத்தானே துக்ளக்கட்டுரை நிரூபிக்கிறது?


முன்னேறிய பல நாடுகளில் கல்வி முறை அப்படித்தான் இருக்கிறதாமே - எந்த நாட்டில் அப்படி இருக்கிறது? துக்ளக் பட்டியல் கொடுக்கட்டும் பார்க்கலாம். தொழிற்கல்வி என்கிற ஜாதித் தொழில் வேறு - அப்பன் தொழிலை அவன் மகன் -மகள் செய்ய வேண்டும் என்பது வேறு. இரண் டையும் போட்டுக் குழப்பக்கூடாது; குழப்ப முயற்சிக்கவும் கூடாது. அந்தச் சூழ்ச்சி வலையை முறியடித்தது விழிப்புணர்வுடன் தமிழ்நாடு.


புதியகல்வித் திட்டத்தின்படி அது வரையில் கல்வி கற்காத ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பார்களாம்.


என்ன கதை இது? இந்த அரைநேரக் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத் துவதோடு, ஏற்கெனவே இருந்து வந்த ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை மூடினார் அந்த மூதறிஞர் என்பதை மூடிபோட்டு மறைக்கும் முப்புரிகளின் சூழ்ச்சியை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இப்பொழுது மட்டுமல்ல. 1937_-39 ஆண்டுகளில் சென்னை மாநிலப் பிரதமராக வந்த போதும் கூட 2500 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திய நவீன மனு இந்த ஆச்சாரியார்.


முதல் அமைச்சர் என்றால் புதியன வற்றைத் திறப்பார்கள்.  மூளை நிரம்பி வழியும் இந்த மகானுபாவரோ மூடுவிழா நடத்துவதிலேயே  மூச்சு வைத் திருப்பவர்.


சூத்திரர்கள் _- பஞ்சம மக்கள் படித்து விடக்கூடாது படித்துவிட்டால் பிரா மண உயர்ஜாதித் தன்மை உருக் குலைந்து போய்விடும் - ஒரு கட்டத்தில் உடலுழைப்புச் செய்ய வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட் டாலும் ஏற்படக்கூடுமே _- அதனால் தான் இந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்.


ஜாதி பற்றிய ஆச்சாரியாரின் கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொண் டால், ஆச்சாரியார் எப்பொழுது பத விக்கு வந்தாலும் ஏன் பள்ளிக் கூடங் களை மூடுகிறார் என்பதன் ரகசியம் உடைபட்டுப் போய்விடும்.


இவர்தான் ஆச்சாரியார்!


ஜாதி வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுமேயொழிய ஜாதிகளையல்ல. இதை எல்லோருக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இன்னும் சிறிது காலம்தான் உயிரோடு இருப்பேன். எனக்குப் பின்னால் இவைகளைச் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்.






ஜாதி இருப்பதுதான் நமது பாரம் பரியத்துக்குச் சிறப்பு. ;இந்தக் கூட்டுக் குடும்பம் போன்றே அதுவும் அழியக் கூடாத அமைப்பு.


(பம்பாய் படேல் நினைவுச் சொற் பொழிவில் ஆச்சாரியார்)


ஜாதி முறை ஒழியவேண்டுமென்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித் துத்தான் நம் முன்னோர்கள் வர்ணா சிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவர்கள் தங்கள் முறைக் கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்.


(கரூரில் ஆச்சாரியார் 29_-1_-1961 இல்)


இட ஒதுக்கீடு பற்றி . . .


முன்னாட்களில் ஜாதி  அமைப்பில் கீழ் மட்டத்தில் சேர்ந்திருப்பது இழிவாகவும், பிரதிகூலமாகவும் கருதப் பட்டது. பிரதிகூல நிலையில் தாங்கள் இருப்பது, பிறரது பரீட்சைக்கு உள் ளாகாதபடி சம்பந்தப்பட்டவர்களால் மறைத்துக் காக்கப்பட்டது. இப்போதே பழைய பிரதிகூல நிலையில் இருப்பதே புதிய அனுகூலமாகிவிட்டது. எனவே இதை மறைக்காமல் பின் தங்கிய வகுப்பிலும், ஷெட்யூல்டு வகுப்பிலும் இடம் பெறுவதற்காகப் போட்டி ஏற்பட்டுள்ளது. பின்தங்கியவர்கள் விசேஷ உரிமைகள் கேட்பதற்காகவே பழைய ஜாதி வித்தியாசங்களைக் காப்பாற்றுவதிலும் தீவிர நாட்டம் காட்டப்படுகிறது. பின்தங்கியவர்கள் நல்லவர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் பிரதிகூலம் ஒன்றையே சலுகையாக்கிக் கொள் ளாதபடி செய்ய வேண்டும்.


சமூகத்தை முறைப்படி சீர்திருத்துவதாக நம்பிக்கை கொண்டிருக்கும் சிலருக்கு இக்கருத்து ருசிக்காது. பின்தங்கியவர்களின் முன்னேற்றத்தையும் க்ஷேமத்தையும் தடுப்பதே இக்கருத்துகளின் நோக்கம் என்று அவர்கள் கண்டனம் செய் வார்கள். விவேகமற்றவர்கள் விவே கத்தை என்றுமே தவறாகத்தான் கருதியிருக்கிறார்கள்.


(தமிழக சட்டமன்றத்தில் கம்யூனல் ஜி.ஓ. பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சி.ஆர். ஆச்சாரியார் அளித்த பதில்.)


தர்மம் கெட்டுப் போனால், அதர்மத்தினாலாவது இதைத் தடுக்க முயலுவது ஒரு தருமமாகும் என்று சென்னை கோகலே மண்டபத்தில் (15-_12_1964) பேசியவராயிற்றே இதே ஆச்சாரியார்.


(சுதேசமித்திரன் 16_-2_-1964)
ஆச்சாரியார் கூறும் _ மனுதர்மம் வலியுறுத்தும் இந்தக் குலதர்மத்தின் அடிப்படையில்தான் ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைத் திணித்தார் என்பதைப் புரிந்து கொண்டால், துக்ளக்கும், கல்கியும், தினமலரும் இன்றைக்கு ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்திற்காக வக்காலத்து வாங்குவதன் வண்டவாளமும், இரக சியமும் அப்பட்டமாகப் புரியுமே!


இத்தகைய மனப்பான்மை உடைய ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க வேண்டும் - உத்தியோகங்களுக்குச் செல்லவேண்டும் என்பதில் நாட்டம் கொள்வாரா? அல்லது நயவஞ்சக வலை பின்னும் வேலையில் ஈடுபடு வாரா?


கே.சி. லட்சுமிநாராயண அய்யர் வாள் துக்ளக்கில்  குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து வரிந்து வரிந்து எழுதுவதில் ஆச்சரியமில்லை. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் இவ்வாறு எழுதியவர்தான்.


மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், ஏதாவது ஒரு தொழிலையும் ஓரளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்தார். ஒரு மாணவனுடைய பெற்றோர் எந்தத் தொழில் செய் கிறார்களோ, அந்தத் தொழிலை அவனுக்கும் கற்பித்தால், அவனுடைய பெற்றோர்க்கும் அது உதவியாக இருக்கும்; பார்த்துப் பழக்கம் இருக்கும் என்பதால், அவனுக்கும் அது எளிதாக வரும் - என்ற முறையில் அவர் சிந்தனை ஓடியது. முடிவைப் பொறுத்த வரை நல்ல எண்ணத்தோடு செய்யப்பட்ட முடிவுதான். அச்சத்தின் காரணமாக அதை மாற்றாத உறுதியும் ராஜாஜி யிடம் இருந்தது. செயல்படுத்தக்கூடிய துணிவும் இருந்தது.


ஆயினும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தபோது அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. தனது கட்சியை அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. குலக்கல்வி எனப் பேச்சு வந்த போது, அந்தத் திட் டத்தைக் கொண்டுவருவதில் தனக்கு இருந்த நோக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை எடுத்துக் கூறி மற்ற வர்களும் அதை ஏற்குமாறு செய்வதற்கு ராஜாஜி முனையவில்லை.


கட்சிக்குச் சற்றே வளைந்து கொடுத்து, மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்து, சிலரைச் சமாதானப் படுத்தி, பெயருக்குக் சில மாற்றங்களைச் செய்து, மக்களிடையே நின்று, திட்டத்தின் நன்மைகளை விளக்கிச் செயலாற்றும் அளவுக்கு இறங்கி வர அவர் தயாராக இல்லை. அதனால் அவரும் பதவியை விட்டுப் போனார். திட்டமும் போயிற்று. அதை எதிர்த்துப் புரளி கிளப்பியவர்களின் பேச்சு எடு பட்டது.  ராஜாஜியின் நல்லெண்ணம் அடிபட்டது.


(துக்ளக் 15.-7.-1988)


துக்ளக் மட்டுமல்ல,  கல்கியும், தின மணியும்,  தினமலரும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை அரை நூற் றாண்டுக்குப் பிறகும் கூட- தமிழ்நாட்டு மக்கள் அதை வெறுத்துத் தூக்கி எறிந்தார்கள் என்கின்ற  பாடத்தைக் கூடப் படிக்காமல் பூணூல் வெறியுடன் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத் திற்காகப் பூணூலால் பூமாலை சூட்டு கிறார்கள். இதுதான் அவாளுக்கே   உரிய வருணாசிரம வெறியும், பூணூல் புத்தியும்.


கல்கி என்ன கதைக்கிறது? அதையும் பார்த்து விடலாமா?


ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம், இருக்கிற பள்ளிகளையும், ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத் துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது.


எந்தத் தொழிலானாலும் அது இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் ஊற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது. தொழிற்கல்வித் திட் டத்தைக் குலக்கல்வித் திட்டம்  என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது  (1980 ஜூலை).


ஆச்சாரியாரின் குலக்கல்வி - தொழிற்கல்வியாம். மலம் எடுப்பவன் மகன் மலம் எடுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள்தான் பெரும்பாலும் படிப்பாளிகள். உத்தி யோகம் பார்ப்பவர்கள் (1950_களைக் கணக்கில் கொள்ள வேண்டும்). வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, இருப்பார்கள். பொறியாளர்களாக இருப்பார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பிற்பகலில்  என்ன தொழிலைச் செய்வார்கள்? புள்ளி விவரம் வாரியாக இதுவரை இந்த வினாக்களுக்குப் பதிலிறுத்துண்டா பார்ப்பன வகையறாக்கள்?


தினமலர் என்ன சொல்லுகிறது?


கேள்வி: இன்றைய இளைய சமுதா யத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதை விட ஏதாவது கைத்தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதை விட, கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்யலாமே?


பதில்: கற்றுத் தருவதைவிட - என் பதை விட - நீங்கள் கூறும் திட்டத் தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம்.  (படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டதால் ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி  பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி- மாலையில் தொழிற்கல்வி) தொடரவிடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்.
(தினமலர் -வார மலர் 4-4-2010)
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டப்படி அரை நேரம் படித்து, அரை நேரம் குலத் தொழிலைச் செய்ய விட்டிருந்தால், இந்தத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அளவு படித்திருப்பார்களா? சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 89 சதவிகித மாணவ, மாணவிகள் பார்ப்பனர் அல்லாதார் என்று துணைவேந்தர் க.திருவாசகம் சொல்லும் (20-.11-.2010) நிலை உருவாகி இருக்காதல்லவா? எல்லாம் பார்ப்பனர் களின் வயிற்றில் அல்லவா அறுத்து வைக்கப் பட்டிருக்கும். அந்த நிலை பறிபோய்விட்டதே என்கிற ஆத்திரம் 56 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவாளுக்கு அடங்கவில்லை.


பார்ப்பனர்களைப் பொறுத்தவரை மனுநீதிதான்  ஆதிக்கபுரியைக் கட்டிக் காக்கும் கோட்டை.


சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.


(மனுதர்மம அத்தியாயம் 10 சுலோகம் 96)


பெரியார் சகாப்தத்தில் இது தலை கீழாக மாறி விட்டது; மனுதர்மப்படி குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த பார்ப்பன ராஜாஜி பதவியை விட்டு விரட் டப்பட்டார்.


அதனால்தான் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், - ஒரு காலகட்டம், -ஒரு திருப்பம் என்றார்.


தந்தை பெரியாருக்கு எதிராக துக்ளக் ஆச்சாரியாரைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதனைச் சவாலாக ஏற்கிறோம்.  ஆச்சாரியாரின் ஆரியத் தாண்டவம்.
-  அடுத்த இதழில்!


மருத்துவரின் மருத்துவர்!


மருத்துவரின் மருத்துவர்!


மானமிகு ஆசிரியர் அய்யா வாழ்வியல் சிந்தனையாக இதயத்தைப் பற்றி மருத்துவர்களை மிஞ்சும் அளவிற்கு "மருத்துவரின் மருத்துவராக" எழுதியிருந்தார். ஒரு மருத்துவர் என்ற முறையிலும், நானும் ஏதோ கொஞ்சம் எழுதுவேன் என்ற முறையிலும் நான் மிகவும் பாராட்டி வியக்கின்றேன்.
ஒவ்வொருவரும் பல முறைப் படிக்க வேண்டிய முக்கிய "மந்திரம்" அந்த வார்த்தைகள். இன்றைய கால கட்டத்திலே "மாரடைப்பால் எதிர் பாரா சாவு" என்பது, அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன் "மடத்தனத்தால் சாவு" என்றுதான் சொல்லப்பட வேண்டும். ஏன் ?
மாரடைப்பால் சாவதைப் பெரும்பாலும் தடுத்துவிட முடியும். 40 வயதிற்கு மேலே ஆண், பெண் இரு பாலரும் மூன்று அல்லது அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை டிரெட்மில் ஈ.கே.ஜி"  எனும் ஒடச்சொல்லி, அப்போது இதயம் ஒழுங்காக இருக்கிறதா என்ற சோதனையைச் செய்து கொள்ளவேண்டும். இதில் இதயம் வேகமாகத் துடித்து, அதிகமாக வேலை செய்யும் போது இதயத்திற்கு வேண்டிய அளவு ரத்தம் வருகிறதா இல்லை அடைப்பு இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கு மேலே ஆவன செய்யலாம். அது மாரடைப்பைத் தடுக்கும் மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை, ஸ்டெண்ட் என்பன ஆகும். வருமுன் காப்பது என்பது இதுதான்.ஆம்! செல வாகுமே! கட்டாயம் ஆகும். ஆனால் மாரடைப்பால் இறப்பதை விடவோ, வந்த பின் துடித்துக் கொண்டு ஒன்றுக்குப் பத்தாகச் செலவு செய்வதையோ தடுக்குமே! பெரியார் திடல் மருத்துவ மனையிலும், மற்றும் மருத்துவ வசதிகள் உள்ள நமது நிறுவனங்களிலும் முன்னோடிகளாக இந்தப் பரிசோதனை இதய மருத்துவர்களைக் கொண்டு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை என்று செய்யலாம். மாரடைப்பு யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. புகை பிடித்தல், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத, ஒல்லியாக மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கே வந்துள்ளது என்றால் என்ன சொல்ல முடியும்? நமது தாத்தாவையா மாற்ற முடியும் ? ஆகவே அனைவரும் இந்தப் பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த வழி.
வாழட்டும் இதயம்.  வாழ்க பெரியார் ! வளர்க மருத்துவப் பகுத்தறிவு!
- சோம.இளங்கோவன்

பார்ப்பனீய அகராதியில் டாப் 10 வார்த்தைகள்!...

பார்ப்பனீய அகராதியில்
டாப் 10 வார்த்தைகள்!....

பதவி: எல்லாத் துறைகளிலும் எல்லாப் பதவிகளும் எங்களுக்கே...

வேலை: சூது, சூழ்ச்சி, வஞ்சகம், இரட்டைநா, பதவி இவைகளால் திராவிடர்களை ஒழிப்பது..

பழைய நினைவு: மனுநீதி தர்பார்.. மதிக்காத மன்னர்களையே பூண்டோடு ஒழிந்து பார்ப்பனீயத்தைக் காத்தது.

தற்போதைய மகிழ்ச்சி: ஊடகங்கள்,வீடணர்கள் துணையோடு அப்பாவி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தது.

பொழுது போக்கு: பழி பாவங்களுக்கு அஞ்சாமல்.. எதிரிகள் மீது பழி போட்டு தலை வாங்குவது அவர்கள் உழைப்பை சுரண்டிப் பிழைப்பது. அவர்களையும் அவ மானப்படுத்துவது..

ஒரே தலைவர்: மனுதர்ம ராஜா (பார்ப்பன பாதுகாவலன்).
மறந்து போன தலைவர்: சங்கராச்சாரி.

மறக்க முடியாத செயல்: :ஊடகங்களின் உதவியோடு அக்கப் போர் ஆயதத்தால்.. ஒரு சூத்திர நல்லாட்சியைக் கெடுத்துக் கவிழ்த்தது.

அச்சப்படுவது: அய்யா, அண்ணா, கலைஞர், தமிழர் தலைவர் இவர்களின் தளரா உழைப்பால் திராவிட சமுதாயம் எல்லாத் துறை களிலும் பெற்றிருக்கும் துரித வளர்ச்சி.. நீதிமன்றங்களின் நேர்மையான தீர்ப்பு. தமிழர்களின் விழிப்புணர்வு.

ரகசியக் கனவு: கோள்களில் குடி யேறுவதாக இருந்தால்.. அங்கேயும் பார்ப்பனீய சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தல் - தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை -

அடியோடு அழித்தல் - செம்மொழி தமிழை ஒழித்து செத்த மொழியாம் சமஸ் கிருதத்திற்கு உயிர் கொடுத்தல் - எங்கும் பார்ப்பனர் - எதிலும் பார்ப் பனர் என்ற பொற்காலத்தை உருவாக்குதல்...

இத்தகைய நாட்டையே கெடுக்கும் கொடுமை நிறைந்த பார்ப்பனீய நோயை... அடியோடு ஒழிக்க ஒரே வழி ஈரோட்டு மருந்தே...!

அனைத்துத் தமிழர்களும் இதனைப் புரிந்து கொண்டால்... தமி ழினம் செழிக்கும்! பார்ப்பனீயம் மடியும்!!

-நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

கல்வி அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்


(25.9.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கல்வியை மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வரக் கோரும் மாநாட்டில் ஆற்றப்பட்ட தொடக்கவுரை)
ஒரு சமூகத்தில் மொழியையும், கலாச்சாரத்தையும், ஒரு தலை முறை யினரிடமிருந்து அடுத்த தலைமுறை யினருக்குச் செலுத்தும் காரணத்தால், கல்வி என்பது சமூகத்தின் மிக முக் கியமான கருவியாகக் கருதப்பட்டு வருகிறது. தங்களைப் பற்றி தாங்களே அறிந்து கொள்வதற்கும், பாரம்பரியத் தின் மூலம் தாங்கள் பெற்றுள்ள கலாச்சாரத்தைப்பற்றி தெரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் வரும் ஓரிடமே கல்வி நிறுவனம் என்ற காட்சியை அது மனக்கண்முன் கொண்டு வருகிறது. மனிதனின் வாழ்க்கையிலும், சமூகத் திலும் அதன் செயல்பாடு இருவகைப்பட்டது. ஒன்று பயன்பாடு; மற்றது கலாச்சாரம். கல்வி என்பது மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்திருப்பதாகும். வாழ்க்கைக் குத் தயார்ப்படுத்துவது அல்ல அது; வாழ்க்கையேஅதுதான். மொழி என்பது ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம் மட்டுமல்ல; கலாச்சாரம் என்பது பிரிக்க முடியாத மொழியின் ஒரு பகுதியாக விளங்குவதாகும்.
பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா
பல மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், இனங்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் கொண்ட நாடு இந்தியா. ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவை ஒரே ஒரு நாடாக ஆக் கினர். பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவுக்கு உண்மையான ஒரு கூட்டமைப்பு அரசு முறையே பொருத்தமானது என்ற உறுதியான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந் தனர். அதனால் தான், எதிர்காலத் தில் ஒவ்வொரு மாகாணமும் இயன்றவரை தனது சொந்த வீட்டின் எஜமானனாக இருக்க வேண்டும். இவ்வாறு மாகாணங்களுக்கான சுதந்திரமான வாழ்க்கை அளிக்கப் பட்டு, புதிய கூட்டமைப்பு கட்ட மைப்பைக் கொண்ட ஒரு தொகுப்பாக அது தங்களைத் தாங்களே வடிவ மைத்துக் கொள்ளும் என்ற முடி வுக்கு சைமன் கமிஷன் வந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது, இந்திய நாட்டு நிருவாகத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க ஆங்கிலேய அரசு விரும்பியதால், 1935 இந்திய அரசு சட்டத்தில் மாகாணங்களுக்கான முழு சுயஅதிகாரத்தை அது அளிக்கவில்லை.
அனைத்து கூட்டமைப்பு நாடுகளிலும், சட்டமியற்றும் அதிகாரங்கள் மத்திய மற்றும் மாகாண, மாநில அரசுகளுக் கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, அந்நியச் செலாவணி, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் மட்டும் தான் மத்திய அரசுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதர சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களும் மாகாண, மாநில அரசுகளுக்கே வழங் கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதன் காரணம், அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டால், அது சர்வாதிகாரத் திற்கு வழி வகுக்கும் என்பதுதான். யதேச்சாதிகாரம் என்பது பேரரசுக் கொள் கையின் கூட்டாளியாகும் என்பதால், சுதந்திரத்துடன் அது சேர்ந்து இருக்க முடியாது என்று 1936 இல் ஜவஹர்லால் நேரு கூறினார். கல்வி போன்ற துறைகள் உள்ளூர் மக்களுக்கு மிகவும் நெருக்க மானவையாக இருந்து ,  அவற்றின் மீது அவர்கள் மிகுந்த பற்றுடையவர்களாக இருப்பதாலும், அவர்களின் மொழி, கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந் தவையாக இருப்பதாலும், அவை மாகாண, மாநில அரசுகளுக்கே ஒதுக்கப்பட்டன. மக்களை எளிதாகச் சென்றடைந்து, அவர்களின் தேவைகளை பயன் நிறைந்த வகையில் விரைவில் நிறைவு செய்ய மாகாண, மாநில அரசுகளால் மட்டுமே இயலும். உலகம் முழுமையிலும்,   கூட் டமைப்பு நாடுகள் அனைத்திலும் பின்பற்றப் படும் அதிகாரப் பங்கீட்டு நடைமுறை இதுதான்.
உலகின் அனைத்து கூட்டாட்சி நாடுகளிலும் கல்வி, மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே உள்ளது
அமெரிக்க அய்க்கிய நாடுகளில், கல்வி பற்றி சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. அந்த அதி காரத்தை மாநில அரசுகள் தங்களிடமே வைத்துள்ளன. கனடா நாட்டிலும், கல்வி பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டும்தான் உண்டு. ஆஸ்திரேலியாவிலும் கூட, காமன்வெல்த் அரசுக்கு கல்வி பற்றிய சட்டமியற்றும் நேரடி அதிகாரம் கிடையாது. மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் விடப் பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கல்வி பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரம் கன் டோன்கள் எனும் உள்ளாட்சி அமைப்பு களிடமே உள்ளன. இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சி நடந்தபோதும் கூட, 1919 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளின் இந்திய அரசு சட்டங்களில் கல்வி பற்றிய சட்டங் களை இயற்றும் அதிகாரம் மாகாண அரசு களுக்கு  மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்ட மன்றத்தில்,  நோக் கங்கள் பற்றிய தீர்மானத்தை பண்டிதர் ஜவஹர்லால் நேரு அறிமுகப்படுத்திய போது, கல்வித் துறை மாகாணப் பட்டிய லில்தான் சேர்க்கப்பட்டிருந்தது. மாகாண அரசமைப்புச் சட்டக் குழு தயாரித்த மாகாணங்களின் சட்டயமிற்றும் அதிகாரம் பெற்ற துறைகளைப் பற்றிய பட்டியலில் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி இரண்டாம் (மாகாணப்) பட்டியலில் 18 ஆம் எண் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்திய மக்களின் விருப்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்பதுதானே அல்லாமல், ஒன்றுபோலவே (ரவையசல)   இருக்க வேண்டும் என்பது அல்ல. நாட்டில் உள்ள இனங்கள், சமூகக் குழுக்களுக்கு கூட்டாட்சி அமைப்பு மட்டும்தான் பொருத்த மானதாக இருக்கும் என்ற கருத்தையே அரசமைப்புச் சட்ட மன்றமும் கொண்டி ருந்தது. எனவே, ஒரு கூட்டாட்சி அமைப்பு அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான நோக்கங்கள் பற்றிய தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதனால், நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தின்படி முதன்மை அரசமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் அவர்களால் இந்திய அரசமைப்புச் சட்டம் வனையப்பட்டது.  அது ஒரு உண் மையான கூட்டாட்சி அரசமைப்புச் சட்டமாகும்.
மாநிலங்களை பலவீனப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு 1949-லேயே எழுந்தது
ஆனால், இழப்புக் கேடாக, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு  நோக்கங்கள் பற்றிய தீர்மானத்திற்கு எதிரான மாற்றங்கள் பலவற்றைச் செய்தது. அரசமைப்புச் சட்டமன்ற உறுப்பினர் மவுலானா ஹசரத் மொஹானி என்பவர், இப்போது வனையப் பட்டுள்ளது அனைத்துப் பகுதிகளும் ஒன்று போன்ற இந்திய சாம்ராஜ்யத்துக்கான அரசமைப்புச் சட்டம்தான் என்று கூறியதைச் சுட்டிக் காட்டலாம். 1949 செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறிய தாவது:- மத்திய அரசின் அதிகாரங் களை அதிகப்படுத்தவும், மாகாண அரசாங்கங்களை பலவீனப் படுத்தவும் டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதாக நமது நண்பர் நசிருதீன் கூறியதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதற்கும் மேலே ஒரு படி சென்று, இன்று இங்கே என்ன நடக்கிறதோ, அது அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படையையே மாற்றி விடும் என்று என்னால் கூறமுடியும். நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தின் படிதான்  இந்த அரசமைப்புச் சட்டம், ஒரு ஜனநாயகக் கூட்டாட்சி மற்றும் சமத்துவ மக்களாட்சி வழியில்  தயாரிக்கப்படுகிறது என்று நானும் முதலில் நினைத்துக் கொண்டி ருந்தேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் சமத்துவத்தை அதிலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது, அனைத்து மாகாணங்களையும் ஒன் றாக இணைத்து, பழைய ஆங்கிலே யரின் ஒன்றுபட்ட இந்திய சாம்ராஜ்யம் போன்ற  ரவைல  இந்திய சாம்ராஜ் யத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன் றுகிறது. அதைத் தவிர, அதில் வேறு எந்த நோக்கத்தையும் நான் காண வில்லை. இனியும் இந்த அரசமைப்புச் சட்டம் ஜனநாயக, சமத்துவ அல்லது கூட்டாட்சித் தத்துவப் பண்பினைப் பெற்றிருக்கவில்லை என்ற கருத்தை நான் மட்டுமே கொண்டி ருக்கவில்லை என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அது முழுமையான இந்திய சாம்ராஜ்யமாகவே ஆகிவிடும்; அதில் மாகாணங்களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இதுவே எனது கருத்து. அதனைத்தான் நான் முழுமையாக எதிர்க்கிறேன்.
மாகாணங்களுக்கு சுயஅதிகாரம் அளிக்கத் தவறியது என்பதற்காகத் தான், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கருப்புச் சட்டம் என்றும், சதிகாரச் சட்டம் என்றும் அழைக்கப் பட்டது. ஆனால்,  நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு சில விலக்குகளைத் தவிர மற்ற அனைத்து வகைகளிலும், அந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட் டதைப் போன்றே அரசமைப்புச் சட்டம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

மோடி அணியும் மூடி! - கவிஞர் கலி.பூங்குன்றன்


 மோடி அணியும் மூடி! - கவிஞர் கலி.பூங்குன்றன்

2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி - 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வன்முறை உலகில் அதற்கு முன் நடத்தப்பட்ட அதி பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெறத் தக்கதே.

கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது - தொடக்கத்தில் விபத்து என்றே கருதப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே செய்தியை வெளியிட்டன.
விபத்து நடந்த இடத்தையும், பலியானவர்களையும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி நேரில் சென்று பார்த்த பிறகே பிரச்சினை திசை திருப்பப்பட்டது.

பலியானவர்களை அவரவர் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வது என்ற முடிவும் மாற்றப்பட்டு அனைத்துச் சடலங்களையும் ஊர்வலமாகக் கொண்டு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அன்று காவல்துறை அதிகாரிகளைக்கூட்டி கலவரத்துக்கான கத்தி தீட்டப்பட்டது.

நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது. - தலையிடக் கூடாது என ஆணையிடுகிறார் முதல் அமைச்சர்.

இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உளவுத்துறை அதிகாரி ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

மோடியின் இந்துத்துவா வெறியாளர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சி-ஹ்சான் ஜாப்ரி மனைவி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப்பத்திரமாகவே (AFFIDAVIT) இதனைத் தாக்கல் செய்தார் என்பது முக்கியமாகும்.

எந்த அளவுக்கு முதல் அமைச்சர் மோடி சென்றுள்ளார்? தெகல்கா புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி கண்டு டேப்களை வெளியிட்டுள்ளதே!



பல்கலைக்கழக தலைமைத் தணிக்கையாளர் திமந்பட் இதோ பேசுகிறார். 

கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு த-குந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள். இதற்குப் பின்னும் நாம் எதுவும் செய்யவில்லை யென்றால், இதற்குப் பதிலடி கொடுக்கவில்லை யென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல்வர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டேன் என்று பல்கலைக்கழகத்தின் தலைமைத் தணிக்கையாளர் சொல்கிறார் என்றால் - மோடி எப்படிப்பட்ட மூர்க்கர்- முரடர் - மோசமான மதவெறியர்.

மோடி கூட்டிய கூட்டத்தில் நடந்ததை நன்கு அறிந்தவர் அமைச்சரவை சகாவான ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடமும் நடந்தவை பற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இவரை விட்டுவைத்தால் ஆபத்து என்று நினைக்கிறார்கள்; விளைவு, அந்த அமைச்சர் படுகொலை செய்யப்படுகிறார் - நடைப் பயணத்தில் இருந்தபோது.

தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தார். ஆணையம் குறட்டைவிட்டதா, கோட்டைவிட்டதா என்பது யாருக்கோ வெளிச்சம்.

முதல் அமைச்சர் மோடி பற்றி அவரது கட்சியைச் சேர்ந்தவர்களிடமே  (பி.ஜே.பி.) பேட்டி வாங்கி வெளியிட்டது தெகல்கா.

விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த தலைவர் - அவர் பெயர் ராஜேந்திர வியாஸ் - என்ன சொல்கிறார்? நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறாரே.

நீங்கள் ஜெய்ராம் என்று சொன்னால் காவல்துறையினர் புரிந்து கொள்வார்கள் என்று சங்பரிவார்க்குச் கூறப்பட்டதாக தவால் ஜெயந்த் பட்டேல் (வி.எச்.பி.) கூறியுள்ளார்.

காவல்துறையினரே எப்படியும் 70 _ 80 பேர்களைக் கொன்றிருப்பார்கள் என்கிறார் சுரேஷ் ரிச்சர்ட்.

இன்று பஜ்ரங்தளைச் சேர்ந்த (குரங்குப் பட்டாளம் என்று பொருள்) ஹரேஷ் பட் என்ன கூறுகிறார்? மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்து விடுங்கள். அதற்குமேல் கால அவகாசம் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.

இன்னொரு பஜ்ரங்தள் சொல்லியிருப்பது - அவர் பெயர் பாபுபஜ்ரங்கி _ பேசுகிறார்: கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக முதல் அமைச்சர் மோடி செய்து முடித்தார். முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்தால்தான் இவ்வளவையும் செய்து முடிக்க முடிந்தது என்கிறார்.



குஜராத் கலவரம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் கலவர வீடியோ காட்சி என்னிடம் காட்டப்பட்டது. அந்தக் காட்சிதான் என்னைப் பயங்கரவாதியாக ஆக்கியது என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றால் குஜராத் குரூரம்தான் எத்தகையது! சிந்திக்க வேண்டிய ஒன்றே.
குஜராத் கலவரத்தில் மிகவும் கொடுமையானது பேக்கரி அடுப்பில் 14 பேர்களை விறகுக் கட்டைகளைப் போல் கட்டி துடிக்கத் துடிக்கக் கொளுத்திக் குதூகலித்ததாகும்.

வதோதரா என்ற நகரம் பெஸ்ட் பேக்கரி என்னும் நிலையம். சங்பரிவார் கும்பல் கொலைவெறி ஆட்டம் போட்டு உள்ளே புகுந்து _ பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லா ஷேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார். காவல் நிலையம் சென்று 21 பேர் மீது  புகார் கொடுத்தார்.

பிரச்சினை பெரிதான நிலையில் பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தனர்;  நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன.  அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிட உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

முதலில் 21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ.மகீதா என்பவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா? குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி  அளித்து உபசரிக்கப்பட்டது. மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - உதவியாளர்கள் இத்யாதி... இத்யாதி...

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.) அரிஜித் பசாயத் குஜராத் மாநில மோடியை நீரோ மன்னன் என்று எழுதினார்கள்.
எந்தப் பார்ப்பன ஏடும், இதற்காக மோடி பதவி விலக வேண்டும் என்று நான்கு எழுத்துகள் எழுதவில்லை.

அத்தோடு நீதிபதிகள் விட்டார்கள் இல்லை. வரைந்து தள்ளியிருக்கிறார்கள் பத்தி பத்தியாக.

சட்டத்தின் பார்வையில் இது விடுதலையே அல்ல; தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.

மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும் படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

எந்தவிதப் பாதுகாப்புமற்ற தப்பான இடத்தில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.

மனிதநேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய் விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சகமும், ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!

நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பியபடி செய்யும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் புலனாய்வோ கடன்காரத்தனமாக ஏனோ தானோ எனச் செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையிலே செயல்படவில்லை. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்றது உச்ச நீதிமன்றம்.

_இதற்குமேல் ஒரு தீர்ப்பில் சொல்லப்பட என்ன இருக்கிறது? இதைப்பற்றி எந்தப் பத்திரிகை மூச்சுவிட்டது?

பத்திரிகா தர்மம் பேசும் பார்ப்பனப் பத்திரிகைகளின் பசப்புகளைத் தெரிந்துகொள்ள இந்த இடம் போதுமானதே.

குஜராத் மாநிலத்தில் வழக்கு நடத்தப்படக் கூடாது. மும்பையில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு நிற்காமல் மோடி அரசு நியமித்த அரசு வழக்குரைஞர்களையும் அகற்றிவிட்டு வேறு இரு வழக்குரைஞர்களை (பி.ஆர்.வகீல், மஞ்சுளா) நியமித்தது.

மொத்தம் 4,252 வழக்குகளில் குஜராத் அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டவை 2,000க்கு மேலாம். மறுபடியும் அனைத்து வழக்குகளின் மீதும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று மோடியின் முரட்டுத் தலையில் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம்.

குஜராத் மாநில எல்லைக்குள் சிக்கிய உயர் நீதிமன்றம்வரை எப்படி தன் கைக்குள் போட்டு மடக்கி வைத்திருந்தது மோடியின் குஜராத் அரசு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பளிச் பளிச்சென்று தெரிகிறதே.

நடோரா பாட்டியா என்னும் இடத்தில் காவிகள் கூலிகள் 58 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். காவல் நிலையம் வழக்கை எப்படிப் பதிவு செய்தது தெரியுமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்கின்றது என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன?

முதல் தகவல் அறிக்கையிலேயே தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது என்றுதானே பொருள்.

மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் மாயாபென் கோட் நானி என்னும் பெயர் கொண்ட அமைச்சர். நரோடா பாட்டியா மாவட்டம் _ நரோடா கிராமத்தில் 106 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் இந்தப் பெண்  அமைச்சர். தலைமறைவானவர் பின் சரணடைந்து சிறைவாசம் கண்டவர்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நரவேட்டையில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1,70,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 3 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை. 4,000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. காவல்துறையினர் 10 ஆயிரம் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.
காவல்துறையினரே தங்கள் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத்துக் கொடுத்துக் கொளுத்தச் செய்தனர் என்பது எத்தகு கொடுமை!

3,800 கோடி ரூபாய் இழப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 12 லட்சம் பேர் களத்தில் இறங்கி வன்முறை வேட்டை நாய்களாக ஆடித் தீர்த்தனர். ஒரு கணம் மனக்கண்முன் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கட்டும் - மனச்சான்று உள்ளவர்கள்.

61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளைத் துறந்து ஓடிவிட்டனர். 70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.
ஹிட்லரின் மறுபதிப்பான மோடி அச்சூழலில் - கவுரவ யாத்திரை ஒன்று  மேற்கொள்கிறார். (இதில் கவுரவம் என்ன வேண்டிக் கிடக்கிறது!) அப்பொழுது அவர் திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படிக்கக் கொடுக்க வேண்டும்  - என்று ஒரு முதல் அமைச்சர் பேசுகிறார் என்றால், சீ... இப்படியும் சில மனிதர்களா என்று துக்கப்படத்தான் வேண்டியுள்ளது. பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் இடித்தபோதுகூட இந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா? பி.ஜே.பி., அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி என்று சொன்ன சண்டியர் இவர்.

21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலைகள் நடத்தப்பட்ட குஜராத் கலவர வழக்கில் முதல் அமைச்சர் மோடி வசமாக மாட்டுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு.

ஆனால் என்ன நடந்தது? வழக்குக்குத் தேவைப்பட்ட ஆதாரங்கள் அத்தனையும் 2007இல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்று மோடி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆணையத்தில் அரசு சார்பாக ஆஜரான குஜராத் அரசு வழக்குரைஞர் எஸ்.பி.வகீல் தெரிவித்துள்ளார்.

எந்த எல்லைக்கும் சென்று தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் கும்பலின் தலைவனாக மோடி இருப்பது இதன் மூலம் அம்பலமாகவில்லையா?

பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் மோடியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாற்று மோடி ஓர் அசிங்கமான மனிதர் என்பதற்கான ஆதாரமாகும்.
குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமான குற்றச்சாற்றை மோடி மீது சுமத்தியுள்ளார். காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மூலம் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தத் தகவலை அந்தக் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமார், நானாவதி ஆணையத்திடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார் என்றால் மோடியின் மோசமான குணத்தைத் தெரிந்து கொள்ளலாம். குஜராத்தில் மனித உரிமைகளுக்காக  குரல் கொடுத்துவரும் வழக்குரைஞர் மேமோன் கூறினார்:- குஜராத்தில், பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல;பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் என்றார்.

இன்னொன்றும் முக்கியமானது. பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்று தனிச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் இல்லை என்று கூறினார் அந்த மனித உரிமைக்கான வழக்குரைஞர்.

மோடி ஆட்சியில் பொடா சட்டத்தின்படி 287 பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர்.

எப்படி இருக்கிறது? படுகொலை செய்யப்பட்ட சமூகத்தவர் மீது சட்டம் பாய்கிறது; படுகொலை செய்தவர்களுக்குச் சட்டம் சரணாகதி. ஆம், இதுதான் மோடி என்னும் மூவாயிரம் மடங்கு ஹிட்லரின் புத்தியும்  - சட்டத்தை மிதிக்கும் மிருகத்தனமும்.
மோடியின் சிந்தனை எத்தகையது. கர்மயோகி என்னும் நூலை 2007ஆம் ஆண்டில் மோடி எழுதினார். அதில் என்ன கூறுகிறார்? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின்  வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுள்களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம். (THE TIMES OF INDIA 5-5-2010)

விபரீத துண்டறிக்கைகள் - சுவரொட்டிகள்!

ஒரு பக்கம் மோடியின் தலைமையில் அரச பயங்கரவாதம் என்ற தன்மையில் காவல்துறையின் தக்க பாதுகாப்போடு முஸ்லிம்கள் வன்முறையாளர்களால் - கூலிகளால் படுகொலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம் சங்பரிவார்க் கும்பலால் துண்டு வெளியீடுகளும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு இந்த வெறித்தனம் கொம்பு சீவி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவுட் லுக் ஏட்டில் வந்துள்ள நடுத்தர இந்துக்கள் என்ற பெயரில் வெளியான துண்டறிக்கை இதோ:-

அன்பார்ந்த நண்பர்களே,

உங்கள் உயிருக்கு ஆபத்து. நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். கிருஷ்ணன், அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர்களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே என்று.

தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பறையிலோ கொல்லுவார்கள்.

போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றுபவர்கள். வந்தே மாதரம், பாரத் மாதாக்கீ ஜே என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது?

எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள். ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும்.

பின்லேடன் 5,000 அமெரிக்கர்களைக் கொன்றான். அமெரிக்கர்கள் 10,000 ஆப்கானியர்களைக் கொன்று சரியாகக் கணக்குத் தீர்த்துக் கொண்டனர்!

முஸ்லிம்கள் ஏ.கே.47-களையும், ஆர்.டி.எக்ஸ்., ராக்கெட் ஏவுகணையும் வைத்துள்ளனர்.

கோத்ரா என்பது ஒரு டிரய்லர்தான் இனிமேல்தான் முழுத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. முஸ்லிம்கள் நிறைய கோத்ராக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இஸ்லாமிய நாடுகள் அல்லாதவைகளை இஸ்லாமிய நாடுகளாக்கும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட இராம சேவக்குகள் சமூகத்திற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும்!

விசுவ இந்துபரிஷத்திற்கு வழங்கும் 50 சதவிகிதம் வரிச் சலுகை (80G of IT Act) யைப் பயன்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடை வழங்குங்கள்.
இப்படிக்கு,
சினுபாய்பட்டேல்,
நிதிப் பிரமுக், விசுவ இந்து பரிஷத்

இந்து மதத்தில் கர்மா பலனை - அவாள் அவாள் தலையெழுத்து என்கிற ஒடுக்குமுறையை நியாயப்படுத்திப் பேசும் நீரோ மன்னன்தான் (உச்ச நீதிமன்றம் கொடுத்த பட்டம்) இந்த மோடி.

மோடியின் இந்தக் கருத்துக்காக அந்த நூலைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. (11.12.2007)

கலவரம் நடந்த ஓரிரண்டு மாதங்களில் பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட வந்தார். நிவாரண நிதியாக 150 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தார். ஆனால், அம்மாநில உள்துறை அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?

இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் தொகையும் தேவையில்லை என்றார். மோடி எள் என்றால் மந்திரி எண்ணெய்யாகத் தானே இருப்பார்!

இந்த இந்துத்துவா கும்பலால், மோடிகளால் இந்தியாவின் கதை உலகெல்லாம் ஊளை நாற்றம்.

1992இல் பாபர் மசூதியை இடித்து உலகமே காறி உமிழும் நிலை ஏற்பட்டது என்றால் 2002இல் குஜராத்தில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் மற்றொரு முறை இந்தியாவை மட்டரகமாக நினைக்கும் நிலைக்கு நெட்டித் தள்ளின.

அய்ரோப்பிய ஒன்றியம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒதுக்கல் - 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் 15 நாடுகள் கையொப்ப மிட்டுள்ளன.

கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை - இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை.  கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ இந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம், நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையான வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு தண்டிக்க வேண்டுமென அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் (15 நாடுகள்) கேட்டுக்கொண்டதே!

ஒரு மாநிலத்திற்கு முதல் அமைச்சராக இருக்கும்போதே இந்தக் கேவலம் என்றால், இந்த மோடி பிரதமர் ஆகவேண்டும் என ஒரு சதிக்கும்பல் திட்டம் தீட்டுகிறது என்றால் - இந்த மானக்கேட்டை - குரூர எண்ணத்தை என்னவென்று சொல்லுவது!.

இன்றைக்கு நரேந்திர மோடியை பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று வெட்கமின்றி பி.ஜே.பி. வகையறாக்கள் - பேச ஆரம்பித்துள்ளனரே. இதே பி.ஜே.பி. தலைவர்கள் குஜராத் படுகொலையின்போது என்ன வெல்லாம் சொன்னார்கள்?

குஜராத் சம்பவம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட களங்கமே.

- உத்தரபிரதேசம் காசியாபாத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டத்தில் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி (8.3.2004)

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சியின்போது பிரதமர் வாஜ்பேயி ஒரு சிறைக்கைதி போலத்தான் இருந்தார். குஜராத்தில் நடந்த மதக்கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்றவற்றில் உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் வாஜ்பேயி எடுக்கத் தவறியதே தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம்.

விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்கள் போப்பின் கொடும்பாவியை எரித்தபோது வாஜ்பேயி தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

குஜராத் கலவரத்தின்போது தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் போனதையும் வாஜ்பேயி ஒத்துக்கொண்டார்.

அய்.நா.மன்றத்தின் உதவிக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி வேதனை அடைந்தார் வாஜ்பேயி.

- இவ்வளவையும் சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிதான். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் குலுமணாவில் ஓய்வு எடுக்கச் சென்ற அடல்பிகாரி வாஜ்பேயி தேர்தல் தோல்விக்கான காரணத்தில் குஜராத் மதக் கலவரம் முக்கியக் காரணம் என்று சொல்லவில்லையா?

குஜராத் கொலைகளுக்குப் பிறகு - எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வேன் என்று வாஜ்பேயி சிணுங்கவில்லையா?
இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோடி அந்நாடுகளுக்கு வருவதற்கு விசா மறுக்கவில்லையா?

விசுவ இந்து பரிஷத்தின் சுவரொட்டிகள்

இந்துக்களே, விழித்துக் கொள்ளுங்கள்!

முஸ்லிம் கடைகளுக்குப் போகாதீர்கள்!

முஸ்லிம் கடைகளில் எந்தச் சாமான்களையும் வாங்காதீர்கள்!

நம்மிடம் சம்பாதித்துக் கொண்டு, அதை நமக்கே எதிராகப் பயன்படுத்துகிறார்கள்!

நமது கடைகளுக்கு அவர்கள் வருவதில்லை. பின் ஏன் நாம் அவர்களது கடைகளுக்குச் செல்லவேண்டும்?

முஸ்லிம்களைக் கொல்ல தனி ஆயுதங்கள் தேவையில்லை. அவர்களுடன் உள்ள வியாபார உறவுகளைத் துண்டியுங்கள்.

பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்!

-விசுவ இந்து பரிஷத் சார்பில் பரவலாக விநியோகிக்கப்படும் துண்டறிக்கையின் வாசகங்கள் இவை!

இவை எல்லாம் சட்டப்படி குற்றமானவை அல்லவா? இந்தத் துண்டு அறிக்கைகளை, சுவரொட்டிகளை வெளியிட்டவர், அச்சிட்டவர்கள் மீது மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?

காவிக்கும்பலிடம் சட்டம் சரணாகதி ஆட்சிதான்  குஜராத்தில். இந்த யோக்கியர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம். சிந்திப்பீர்!

உண்மைகளும் நிகழ்வுகளும் இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டில் சோ ராமசாமி போன்றவர்கள் மோடியை உத்தமப்புத்திரர் என்றும், பிரதமராக அவர் வந்தாலே போச்சு என்று துணியைப் போட்டுத் தாண்டுகிறார்கள் என்றால் இந்தப் பார்ப்பனர்களின் இந்துத்துவா குரூரத்தை நாட்டுமக்கள் உணரவேண்டாமா?

சோ அய்யர் சொல்கிறார்:_ கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. அரசைக் குற்றம் கூறமுடியாது (துக்ளக் 6.5.2009) என்று சொல்கிறார்.

அப்படியானால் யார்தான் பொறுப்பு? இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பா.ஜ.க. வைச் சேர்ந்த மோடி முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இல்லவே இல்லையா? ஒரு ரயில் கவிழ்ந்ததால் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுகிறது. இவ்வளவு பெரிய கொடுமை நடந்தபோது அங்கு ஆட்சியில் இருந்தவர் பொறுப்பு இல்லை என்று சோ சொல்லுகிறார் என்றால் இவரைவிடப்  பொறுப்பற்ற பத்திரிகையாளர் யார்?
உச்ச நீதிமன்றம் நீரோ மன்னன் என்று மோடிக்குப் பட்டம் கொடுத்துவிட்டது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அறிக்கை வெளியிட்டுவிட்டன. வாஜ்பேயியும் அத்வானியும்கூட குஜராத் கொடூரங்களுக்கு வேதனைப்பட்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் திசை திருப்பிய மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் மக்கள் எல்லாம் மடையர்கள் என்ற ஆணவத்தில்தானே?
பல கோடி ரூபாய் செலவு செய்து குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் பிரதமர் நாற்காலி தானாகவே நடந்து வந்து அவரை உட்கார வைத்துவிடும் என்ற நப்பாசை இந்த நரேந்திர மோடிகளுக்கு.

வீராதிவீரர், சூராதிசூரன் என்று ஜாக்கி வைத்துத் தூக்கப்படுகின்ற இந்த மோடியின் உண்மையான வீரம் என்ன? - சூரம் என்ன?

சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடக வியலாளரான கரன்தப்பாருடன் பேட்டியில் அமர்ந்த இந்த மோடி  என்னும் மனிதனால் நான்கரை நிமிடங்கள்தான் தாக்குப் பிடித்து உட்கார முடிந்தது. கரன்தப்பாரின் சுனையான கேள்விக் கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று சொல்லும் வகையில் ஓடினாரா இல்லையா?

இந்தியா முழுவதையும் குஜராத் ஆக்கவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் நோக்கம்.
பார்ப்பனர்களுக்கு  மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் தேவைப்படுகிறது.
எந்தக் கட்சி பார்ப்பனர் அல்லாதாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...