உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.
மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.
எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.
ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.
சிறுநீர் கழிக்கும் இடைவெளி
ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.
No comments:
Post a Comment