Tuesday, March 3, 2020

மார்ச் முதல் மே வரை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும்

இந்தியாவில்,  மார்ச் முதல், மே வரை, வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக் கும் என, வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மய்யம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல், மே வரை, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும். பஞ்சாப், இமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், அரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்,
குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மகாராட்டிரா மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளிலும், வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும்.
இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் குறைந்த அளவு மட்டுமே வெப்பம் அதிகரிக்கும். வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...