மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள்
முக்கியமானது இதய செயலிழப்பு! அதிலும், சர்க்கரை நோய் கொண்டவர்களுடைய இதயம்
மற்ற சாதாரண இதயத்தைவிட மும்மடங்கு பலவீன மானது.
இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம்.
சிறுவயதிலும் ஏற் படலாம். நடுத்தர வயதிலும் ஏற்பட லாம், வயதான வருக்கும்
ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை
நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.
இதற்கான மிக முக்கிய காரணங்கள்
# உடல்பருமன்
# உடல் உழைப்பின்மை
# நீரிழிவு நோய் கட்டுப் பாடின்மை
# தொடர் மனச்சிதைவு நோய்
# தொடர் மருத்துவப் புறக் கணிப்பு
அய்ம்பது வயதினரைத் தாக்கிக் கொண்டிருந்த இந்த மரண நோய், இன்று இருபது வயதினரைக்கூட அதிகமாகத் தாக்குகிறது.
குறிப்பாக, இந்த இதயத் தமனி நோய்கள் சர்க்கரை நோயாளிகளை அதிகமாகத் தாக்குகின்றன.
இதற்குத் தீர்வு என்ன?
5 வகையான 100-களைக் கண்காணித்தலும் 3 வகையான 'உ'களை கடைப்பிடித்து வருவதுமே இதற்கான தீர்வாகும்...
# நம் உயரத்திலிருந்து 100அய்க் கழித்தால் வரும் எண்தான் நம் உடல் எடையாக இருக்க வேண்டும்.
# நம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவு 100அய்த் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நம் இதய ரத்த கால்சியம் ஸ்கோர் எனும் இதய நாள கால்சியம் படியும் இலக்கம் 100க்கும் கீழ் இருத்தல் அவசியம்.
# நம் கெட்ட கொழுப்பு எண் 100அய்த் தாண்டாமல் இருக்க வேண்டும்
# நம் உடல் தயாரித்திடும் நல்ல கொழுப்பு எனும் எண் 100 அய் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
உணவு, உள்ளுணர்வு, உடல் உழைப்பு எனும் இந்த மூன்றை முறையாகப் பாதுகாத்தால், நிச்சயமாக இதயம் பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment