டில்லி கலவர வன்முறை விவ காரத்தை எழுப்பி
எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் கடும் அமளியில் ஈடு
பட்டனர். மக்களவையில் கருப்பு கொடி காட்டிய எதிர்க்கட்சி உறுப் பினர்களை
பாஜக உறுப்பினர்கள் தள்ளி விட்டதால் மோதல் ஏற் பட்டது.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை
கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி கூடியது. கடந்த மாதம் 11ஆம் தேதியுடன்
நிறைவடைந்தது. அந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து 2ஆம் கட்ட கூட்டத்தொடர் நேற்று
தொடங்கியது. மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத் தொடரில்
பாதுகாப் புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்
உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
அவை தொடங்கியதும் கடந்த மாதம் 28ஆம் தேதி
மரணம் அடைந்த பீகார் மாநிலம் வால்மீகி நகர் தொகுதி அய்க்கிய ஜனதா தளம்
நாடாளுமன்ற உறுப்பினர் பத்தியநாத் பிரசாத் மக்தோவுக்கு மக்களவையில் இரங்கல்
தெரி விக்கப்பட்டது. தொடர்ந்து ஆம் ஆத்மி உறுப்பினர் பகவந்த் மான் பதாகையை
கையில் ஏந்தியபடி டில்லி கலவர பிரச்சினையை அவையில் எழுப்பினர். அப்போது
இருதரப்பு உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணி வரை
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை
மீண்டும் கூடியது. அப்போது அவையின் மய்யப்பகுதியில் கூடிய காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருந்த
பகுதிக்குள் கருப்பு கொடியுடன் புகுந்தனர். அப்போது டில்லி கலவரத்தை தடுக்க
தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி முழக்கமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள்,
குறிப்பாக கடைசி வரிசையில் இருந்த பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ்
உறுப்பினர்களை நெருக்கித் தள்ளினர். தொடர்ந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் மாறி, மாறி தள்ளியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவையை
பிற்பகல் 3 மணி வரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார். பின்னர் நாள்
முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை: இதேபோல் மாநிலங்களவையும்
நேற்று காலை கூடியபோது, முன்னாள் மாநிலங் களவை உறுப்பினர் ஏ.வி.சுவாமியின்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து அவைத் தலைவர் வெங்கையா
நாயுடு 24 துறைகளை சேர்ந்த நிலைக்குழு பரிந்துரை செய்த மானியக்
கோரிக்கைகள் தொடர்பான குறிப் புகளை வாசித்தார்.
அப்போது பேசிய வெங்கையா நாயுடு,
`‘தற்போதைய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் முதல் பகுதி 96 சதவீத
அமர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. இது போல் 2ஆவது அமர்வு சிறப்பாக நடைபெற
வேண்டும். மேலும் டில்லி கலவரம் தொடர்பாக விவா திக்க வேண்டும் என்று
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கீது கொடுத் துள்ளனர். இந்த விவகாரம்
தொடர்பாக கட்டாயம் விவாதிக் கப்படும். அதேநேரத்தில் முதலில் டில்லியில்
அமைதி திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும். அங்கு இயல்பு நிலை திரும்பியதும்
இது தொடர்பாக விவாதிக்கப்படும்’’ என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ்,
இடதுசாரிகள், திரிணா முல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகு ஜன் சமாஜ், திமுக
உறுப் பினர்கள் அவையில் எழுந்து நின்று அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
டில்லியில் மத்திய அரசு தனது கடமையை
செய்யத் தவறி விட்ட தாக குற்றம்சாட்டினர். அப்போது பேசிய எதிர்க்கட்சி
தலைவர் குலாம்நபி ஆசாத், ‘`டில்லி யில் வன்முறை நடந்த 3 நாட்களாக மத்திய
அரசு தூங்கிவிட்டது’’ என குற்றம்சாட்டினார்.
அப்போது திரிணாமுல் காங் கிரசார் தங்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டியபடி `டில்லி பற்றி எரிகிறது’ என முழக்கமிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த
பேரவைத்தலைவர் வெங்கயா நாயுடு, கண்களில் கட்டியுள்ள துணிகளை
அவிழ்க்குமாறும் கூறியதுடன், `‘அவையில் கண்களில் துணி கட்ட அனுமதியில்லை’’
என்று தெரிவித்தார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்க மிட்டதால்
அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார் வெங் கையா நாயுடு. பின்னர் அவை
நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment