Tuesday, March 3, 2020

ஈரானில் கரோனா வைரஸ் - பலி 54 ஆக அதிகரித்தது

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து, அய்ரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவே கமாகப் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வரு கிறது.
இந்நிலையில், எண்ணெய் வளம்மிக்க ஈரான் நாட்டில் இதுவரை 978 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக் கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர் பாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவலாக சமீபத்தில் நடத்தப்பட்ட பரி சோதனையில் இவர்களில் 385 பேர் புதிய நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், இந்நோயின் தாக் கத்துக்கு உள்ளானவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட் டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால், இன்றைய நிலவரப்படி ஈரா னில் கரோனா வைரஸ் பாதிப் பால் பலியானவர்களின் எண் ணிக்கை 54 ஆக அதிகரித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட் டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...