மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
'யெஸ்' வங்கியின் நிர்வாகத்தை தனது
கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதை மீட்க பல்வேறு முயற்சிகளை
எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் யெஸ் வங்கி மீட்பு திட்டத்தில், பாரத
ஸ்டேட் வங்கி ஒரு பங்கு மதிப்பு 10 வீதம் ரூ.725 கோடி பங்குகளை ரூ.7,250
கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டலுக்கு யெஸ் வங்கி
1,200 முதல் 1,300 கோடி பங்குகளை வெளியிட்டுள்ளது.
இதில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட 7
முதலீட்டாளர்கள், யெஸ் வங்கியில் மொத்தம் ரூ.11,750 கோடி முதலீடு செய்ய
உள்ளனர். அய்சி அய்சிஅய் மற்றும் எச்டிஎப்சி ஆகி யவை தலா ரூ.1,000 கோடி
முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.
ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி,
மிகப்பெரிய பங்கு முதலீட்டா ளர்களான ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜூன்ஜூன்
வாலா மற்றும் அஜித் பிரேம்ஜி ஆகியோர் தலா ரூ.500 கோடி முதலீடு செய்து 3
சதவீத பங்குகளை வாங்க உள்ளனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் கூறுகையில், ‘‘யெஸ் வங்கியில் ஸ்டேட் பாங்க் மற் றும் சில
முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி வகுத்த திட்டத்தின் அடிப் படையில் முதலீடு
செய்ய முன்வந் துள்ளனர்.
யெஸ் வங்கியின் வாடிக்கையா ளர்கள்
வைப்புத் தொகை மற்றும் அவர்களது பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் வங்கி
மீண்டும் சிறப்பாக செயல்படவும் ரிசர்வ் வங்கி துரித மாக நடவடிக்கை
எடுத்தது. இதன் யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
அளித் துள்ளது’’ என்றார்.
இந்நிலையில் யெஸ் வங்கி மீதான
கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய
நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எஸ்பிஅய் வங்கி சார்பில் குறைந்தபட்சம் 3
உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவும் 7 நாளில் பதவி யேற்கும்.
தற்போதைய நிர்வாகி பிரஷாந்த் குமார் சிஇஓ -ஆக செயல் படுவார் எனவும் மத்திய
நிதிய மைச்சகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment