Friday, February 21, 2020

பார்ப்பன ராஜ்ஜியமோ!

பா.ஜ.க. அரசின் பாகுபாடான அணுகுமுறை அம்பலம்

பண்டிட்டுகளுக்காக புதிய 10 சிறப்பு நகரங்களாம்!
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை மத ரீதியில், ஜாதி ரீதியில் பாகுபடுத்தி, பரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பார்ப்பனர்களான பண்டிட்டுகளுக்கு மட்டும் சலுகைகளை அறிவிப்பதுடன், அவர்களுக்காகவே தனியே 10 நகரங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பாஜக அரசால் உறுதி கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம்  தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
மேலும், இம்மாநிலம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, செயல்பட தொடங்கியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும்  பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக உறவு, போக்குவரத்து ஆகியவற்றை நிறுத்தி கொண்டது.
அய்நா உள்ளிட்ட பன்னாட்டு அரங்கிலும் இந்தியாவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, புதிய சட்டசபை தொகுதிகள் எல்லை வரையறை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீர மைப்பு பணி துவங்கியுள்ளது.
மேலும், ஜம்மு  காஷ்மீரை மேம்படுத்து வதாக கூறி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காஷ் மீரை சேர்ந்த பண்டிட் குழுவினர் சந்தித்தனர்.
அப்போது, அவரிடம்,  பண்டிட்டுகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கேட்ட அமித் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 10 மாவட்டங்களிலும் பண்டிட்டுகளுக்காக 10 புதிய நகரங்கள் கட்டமைக்கப்படும் என்று உறுதியளித் தாராம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...