குஜராத் வாக்காளர் பட்டியலில் இருந்து அத்வானி பெயர் நீக்கமாம்!
குஜராத்தில் உள்ள வாக்காளர் பட்டி யலில்
இருந்து பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்
ஆணையம் அறிவித்து இருக்கிறது.
டில்லி சட்டசபை தேர் தலில் சனிக்கிழமை
அவர் வாக்களித்தார். அத்வானி தனது மகள் பிரதி பாவுடன் டில்லியில் உள்ள அடல்
ஆதர்ஷ் வித்யாலயாவில் வாக்களித்தார்.
அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில்
வாக்காளர் பட்டியலில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க அவர் எப்போது
விண்ணப்பித்தார் என்பது உறுதியாகத் தெரிய வில்லை.
ஆனால் அவர் புதுப்பித்த பதிவுகள் அவர் இனி
அகமதாபாத்தில் வாக்காளர் அல்ல என் பதைக் காட்டுகின்றன என்று குஜராத்தின்
தலைமை தேர்தல் அதிகாரி முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.
அத்வானி ஜமல்பூர்-காடியா சட்டமன்றத்
தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக் காளராக இருந்தார். அகமதாபாத்தின்
கான்பூர் வட்டாரத்தில் உள்ள பண்டிட் தயாள் பவனில் உள்ள பாஜகவின் பழைய
அலுவலகம் தான் அவரது முகவரி. 2019 மே மாதம் நடந்த மக்களவைத் தேர் தலின்
போது, அகமதாபாத்-மேற்கு மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள அகமதாபாத்தில் உள்ள
ஒரு பள்ளியில் வாக்களித்தார் அத்வானி.

No comments:
Post a Comment