Monday, February 17, 2020

முட்டாள் தனத்தின் உச்சம் மாட்டுச்சாணியில் பற்பசை தயாரிக்க ஊக்கத் தொகையாம்


மாட்டு மூத் திரம் மற்றும் சாணியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட் களான பற்பசை, ஷாம்பு மற்றும் கொசு வத்தி தயாரிக்க ஆய்வு செய் வோரை ஊக்கப்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாம்.
அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைச் சகங்களின் நிதியுதவி மூலம் இந்த ஆய்வை மேற்கொள்ள புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு சூத்ரா-பி.அய்.சி இந்தியா என்று பெயரிட்டுள்ளது.  அறிவியல் பயன்பாட்டின் மூலம் ஆராய்ச்சியை பெருக்கி சுதேசி பசுக்களைக் கொண்டு பிரதான தயாரிப்புகள் செய்யும் இந்த திட்டத்துக்கு அரசு புதிதாக செயல்படுத்தியுள்ள பல்வேறு அமைச்ச கங்களின் கூட்டு நிதியில் இருந்து நிதியளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இது குறித்த ஆய்வில் இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருக்கிறது.
பசுவின் மூத்திரம் மற்றும் சாணியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்லாது புற்று நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கும் இதன்மூலம் தீர்வுகிடைக்குமா என்றும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்த திட்டத்திற்கென ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த முயற்சி முதல் முறை இல்லை என்ற போதும், இதற்கான வரவேற்பு இம்முறை எப்படி இருக் கும் என்று அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். சாணி மற்றும் மூத்திரம் கழிவுகள் தான். உடலில் உள்ள நச்சுப்பொருட்களோடு உணவுக்கழிவுகள் மற்றும் இதர தேவையற்ற ஹார்மோன்களின் வெளியேற்றம் இதன் மூலம் நடைபெறுகிறது, சுகாதாரம் விழிப்புணர்வு இல்லா காலங்களில் வீடுகளில் சாணியால் மெழுகினர். இதன் வாடை காரணமாக கரையான், கரப்பான் உள்ளிட்ட சிறு பூச்சிகள்  வீட்டிற்குள் வராமல் இருந்தன.
இது ஒரு புறப்பயன்பாட்டிற்கு மட்டுமே பயன் படுத்தும் பொருளாக இருந்தது.
ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசு இந்துத்துவ ஆதரவு அரசு என்பதால் மாட்டு மூத்திரத்தில் குளிர் பானம், மாட்டுச்சாணியில் பற்பசை  மற்றும் சில மருந்து வகைகளை செய்ய திட்டம் வகுத்துள்ளது. மாட்டுச் சாணியால் உடலுக்கு நன்மை என்று எந்த ஒரு ஆய்வும் இதுவரை கூறியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...