Monday, February 10, 2020

கல்வி வளர்ச்சியில் மத்திய அரசின் அக்கறை இதுதானா? குறைந்துபோன கல்விக்கான நிதி ஒதுக்கீடு

அரசுத் தரவுகளின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் கல் விக்கு நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
2020_21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்காக மத்திய அரசு ரூ.99 ஆயிரத்து ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ரூ.3 ஆயிரம் கோடி திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் மாநிலங்களவை யில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய நிதிநிலையறிக்கை நிதி ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ""ஒட்டு மொத்த நிதிநிலையறிக்கையில், கல்விக்காக 3.2% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15, 2015-16, 2016-17, 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.61%, 3.89%, 3.66%, 3.71% மற்றும் 3.48% ஆக இருந்தது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) சதவீத அடிப்படையில் 2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டு களில் முறையே 4.07%, 4.20%, 4.32% மற்றும் 4.43% ஆக இருந்தது'' என்று குறிப்பிட்டார்.
முந்தைய நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக 3.48% நிதி ஒதுக்கப்பட்டபோது, உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) சதவீத அடிப்படையில் 4.43% நிதி, கல்விக்காக ஒதுக்கப்பட்டது. இது 6 சதவீதத்தை நோக்கி உயரும் என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜிடிபியும் உயரவில்லை. கல்விக் கான அக்கறையும் மத்திய அரசுக்கு இருப்ப தாகத் தெரியவில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...