Tuesday, February 18, 2020

இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை நீதிமன்றங்கள் உணரவில்லை: லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வான்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களுக் கான இட ஒதுக்கீட்டின் முக்கியத்து வத்தை நீதிமன்றங்கள் உணர வில்லை என்று லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அளித்த பதில்களின் விவரமும் வருமாறு:
கேள்வி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது உரிமையல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக் கிறது. ஆனால் இதை எதிர்த்து மத் திய அரசு மேல் முறையீடு செய்ய வில்லையே?
பதில்:  சமூக நீதித் துறை அமைச் சர் தவார்சந்த் கெலோட் நாடாளு மன்றத்தில்  அறிக்கை ஒன்றை சமர்ப் பித்துள்ளார். சரியான நடவடிக் கை யை  எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது என்பதை இது பிரதிபலிக் கிறது.
கேள்வி: இதுபோன்ற தீர்ப்புகள் மீண்டும் மீண்டும் வந்து, அரசாங் கம் அதை எதிர்த்து வருகிறது. இது குறைபாடு என்று சொல்லலாமோ?
பதில்: ஆம், இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. அது நீதித்துறையி லேயே உள்ளது. அதனால் தான் நீதித்துறை சேவையை அமைக்க லோக் ஜன் சக்தி கட்சி கோரி வரு கிறது. இத்தகைய தீர்ப்புகள் நீதி மன்றங்கள் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத் தவில்லை என்பதை பிரதிபலிக்கின் றன. இட ஒதுக்கீட்டின் முக்கியத்து வத்தை அவர்கள் உணரவில்லை.
உயர் நீதித்துறையில் இந்த சமூகங்களிலிருந்து எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தரும் இந்திய நீதித்துறை சேவைதான் இதற்கு ஒரே வழி. இதுபோன்ற வழக்குகள் விசாரிக்கப் படும் போது தலையிடுவதில் அரசாங் கமும் அதிக அக்கறை காட்டியிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும்  இதர பிற்படுத்தப் பட்டோர் தொடர்பான இட ஒதுக்கீடு மற் றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் 9 ஆவது அட்டவணையில் வைக் கப்பட வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...