கேரளாவில் உள்ள தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில், கழிப்பறைகளை கட்ட, மாநில அரசு முடிவு செய்து
உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜன நாயக
முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப் பறைகளை கட்ட, மாநில
அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலை மையில், நேற்று
நடந்த அமைச் சரவை கூட்டத்தில், அந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டிருந்ததா வது: கேரளாவில் உள்ள தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில், ஆண் கள் மற்றும் பெண்களுக்கென, 12 ஆயிரம் ஆண் -_ பெண்
கழிப் பறைகளை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகளில் அதற்கு
தேவைப்படும், 3 சென்ட் நிலத்தை கண்டறியுமாறு, உள்ளூர் தன்னாட்சி
நிறுவனங்களுக்கு அறி வுறுத்த, அமைச்சரவை முடிவு செய்துள்ளது.நெடுஞ்சாலை
களில் பயணிக்கும் மக்கள், குறிப்பாக, பெண்களும் குழந் தைகளும், கழிப்பறைகள்
இன்றி, பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
பெட்ரோல், 'பங்க்' கழிப்பறைகளை, அங்கு
வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. இவற்றை கருத்தில்
கொண்டு, நெடுஞ்சாலைகளில் கழிப்பறைகளை கட்ட, மாநில அரசு முடிவு
எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு
நிறுவனங்களின் நிலங்கள் பயன்படுத்தப்படும். கழிப்பறை களுக்கு அருகில்,
சிறிய கடைகள், சிற்றுண்டி கடைகளும் அமைக்கப் படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment