சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில்
இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கரோனா வைரஸ் தற்போது நாடு
முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரு கிறது. 25-க்கும் மேற்பட்ட
நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும்
அதிகரித்து வருகின் றன.
குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய
பாதிப்பை கரோனா வைரஸ் ஏற் படுத்தியுள்ளது. கரோனா வைரசின் பிறப்பிடமாக
கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவ மனைகள் அனைத்தும்
நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தாக் குதலால் இதுவரை 723
பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஹுபெய்
மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் மரணம்
அடைந்துள்ளனர். இதனால் கரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின்
எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 2,147 பேர் பாதிப்படைந்து
உள்ளனர். கரோனா வைரஸ் மேலும் 36,690 பேரிடம் பாதிப்பு
ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2002-2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட
சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட கரோனா வைரஸ்
தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment