உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து
ஊர்களின் இஸ்லாமிய பெயர் களையும் இந்து பெயர்களாக மாற்றவேண்டும் என்று
சாமியார் சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற சாமியார் முதல்வர் ஆதித்யநாத்
மாநிலத்தில் அனைத்து இஸ்லாமிய பெயர் பட்டியல் கொண்ட மாவட் டங்களுக்கு
வைக்கும் இந்துப் பெயரை பரிந்துரைக்குமாறு ஆட்சி யாளர்களுக்கு கடிதம்
எழுதியுள் ளார்.
இதனடிப்படையில் பஸ்தி மாவட்டத்தின் பெயரை
வசிஷ்டர் நகர் மாவட்டம் என்று பெயர் மாற்ற அம்மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக
பரிந்துரைக்கடிதம் அனுப்பியுள்ளார். அதே போல் ஆஜம்கர், அலிகட், மாலிக்பூர்,
முசாபர்நகர், சாஜகான்பூர், பதே ஹபூர், புலந்சாகர், மற்றும் ஆக்ரா போன்ற
மாவட்டங்களில் பெயர் களையும் மாற்றும் வேலை நடந்து கொண்டு வருகிறது.
இதற்கான புதிய பெயர் பட் டியலை சாமியார்
சங்கங்களும் அர சின் பார்வைக்கு அனுப்பியுள்ளன. இதில் லவ மற்றும் குச
மாவட்டம், போன்ற பல இதிகாசப்பெயர்களும் அடங்கும். இது தொடர்பாக சாமியார்
சங்கத்தினர் ஊடகம் ஒன்றில் பேசும் போது, முகலாயர்கள் இந்துமதப்பெயருள்ள
அனைத்து ஊர்களின் பெயரையும் அழித்து அவர்களுக்கு ஏற்றவாறு பெயர் களை
வைத்துக் கொண்டனர், இத்தகைய பெயர்களால் அப் பகுதி யில் உள்ள இந்துமத
அடையாளங் களும் அழிக்கப்படுகிறது, இது இந் துக்களின் உணர்வுகளை புண்
படுத்தும் ஒன்றாக போய்விட்டது.
சாமியார்களின் தலைவர்களுள் ஒருவரான
பிரம்மாஷ்ராம் என்பவர் கூறும் போது, ஊர் என்பது அவ்வூரில் உள்ள
இந்துக்கோவிலின் பெயரை வைத்துத்தான் இருக்க வேண்டும். அயோத்தியா என்பது
அங்கு ராமர் பிறந்ததால் வந்தது, ஆனால் பிற்காலத்தில் அங்கு முகலாயர்கள்
இருந்த போது அதை பைசாபாத் என்று மாற்றினர். இதனால் அயோத்தியாவின் புகழ்
மங்கிவிட்டது, இதுமத உணர்வாள ராக சாமியார் ஆதித்யநாத் வந்த பிறகு தான்
அயோத்தியா பெயர் மீண்டும் வைக்கப்பட்டது, அதே போல் அலாகாபாத் பிரயாக்
ராஜ்-ஆக மாறியது. தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருப் பதால் நாடு
முழுவதுமுள்ள வேற்றுமதப்பெயர் அடங்கிய ஊர்களின் பெயரை எடுத்துவிட்டு
இந்துமதப்பெயர்கள் வைக்கவேண்டும் இதனால் உலகம் இந்தியாவை இந்துநாடாக பார்க்
கும் என்று கூறினார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில்
அமைந்துள்ள அலகா பாத் நகரின் பெயரை `பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று
கருத் துகள் வந்ததைத் தொடர்ந்து, தற் போது ``பிரிட்டிஷ் ஆட்சியின் தட
யங்களை ஒட்டுமொத்தமாக இந்தி யாவிலிருந்து நீக்க வேண்டும். அதன் ஒரு
பகுதியாக, இமாச்சலப் பிரதே சத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரை `ஷியாமளா
என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து
பரிஷத் கோரிக்கை வைத்துள் ளது.
இதேபோல, இமாச்சலப்பிரதேச சுற்றுலாத்
துறையின்மூலம் நடத்தப் பட்டுவரும் `பீட்டர் ஹோப்' என்ற ஹோட்டலுக்கு,
ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயரைச் சூட்ட வேண்டும்.
கவுசிப்பூர் நகருக்கு, சுதந்திரப் போராட்ட
வீரர் சுபாஷ்சந்திர போசின் நினைவாக அவரது பெயரைச் சூட்ட வேண்டும் குஜ
ராத்தின் அகமதாபாத் நகருக்கு கர்ணாவதி என்ற பெயர் மாற்ற வேண்டும் என்று
கூறிவருகின்றனர். இந்தியாவின் பெயரையே பாரத் வர்ஷா என்று மாற்றவேண்டும்
என்று இந்து ராஷ்டிரா தேசியகட்சி என்ற ஒரு அமைப்பு குடியரசு தலை வருக்கும்
மோடிக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்தியில் கடிதம் எழுதியிருந்தது -
_ இந்த நிலையில் சாமியார் அரசு மீண்டும் பெயர்மாற்ற பிரச்சினையை கையில்
தூக்கியுள்ளது.
No comments:
Post a Comment