Wednesday, February 12, 2020

கவர்னர் ஜெனரலாகப் பணி புரிந்த ஹாம் ஹெர்ஸ்ட் பிரபுவிற்கு, அவர் 1823 ஆம் ஆண்டு, திசம்பர் 11ஆம் நாள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்: "இந்தியாவில் நெடுங்காலமாக வழக் கத்தில் இருந்து வருகின்ற கல்வி அறி வைப் பரப்புவதற்கு, இந்துப் பண்டிதர் களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளி களை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக்கூடம் (பேகன் பிரபு வின் காலத்திற்கு முன்பு அய்ரோப்பாவில் இத்தகைய கல்விக் கூடங்கள் இருந்தன) இலக்கண நுட்பங்களையும், அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர் களின் மனத்தில் பெருஞ்மையாக ஏற்றி வைக்குமே ஒழிய, சமுதாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட் டவை எவையோ, அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய, பயனற்ற வெறும் சொற்சிலம்ப வாதங்களையும் தெரிந்து கொள்ளுவர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வரு கின்றது... உண்மை அறிவின் ஒளியைப் பெறவொட்டாமல், அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்குமாறு பிரிட்டிஷ் இனத்தைச் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருந்திருக்குமானால், பள்ளிப்பயிற்சி முறையைப் பேகனின் தத்துவ விளக்கத்தினால் மாற்றியமைத் திருக்க வேண்டியது இல்லை. ஏனெனில், பழைய முறையே, அறியாமையை மிகச்சிறந்த முறையில் நிலைபேறுடைய தாகச் செய்ய முடியும். இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச்செய்வது பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால் சமஸ்கிருதக் கல்வி முறையே அதற்குப் போதியதாகும். ஆனால், பிரிட்டனின் குடிமக்களினுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது உடனடியாக மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும் கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக் கியல், இயற்கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு, மற்றும் பயன்தரும் அறிவியல் கலை களைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இவற்றை நடை முறையில் சாதிப்பதற்கு இப்பொழுது வகுத்துள்ள திட்டத்தில் ஒதுக்கப் பட்டுள்ள நிதி வசதி போதியதாகும். அய்ரோப்பாவில் கல்வி பயின்றவர் களுள் நுண்மாண் நுழைபுலமும், பரந்து பட்ட கல்வியறிவும் உடைய பண்பாளர் சிலரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குத் தேவையான புத்தகங்களையும், கருவிகளையும் வேறு பல சாதனங் களையும் கொண்ட கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும்." இந்திய நாட்டின் தலைமைக் குரு வான பிஷப் ஹீபர் (Heber) இக் கடிதத்தை ஹாம்ஹெர்ஸ்ட் பிரபுவிடம் கொண்டு சேர்த்தார். - "ராஜாராம் மோகன்ராய்" நூலில் (பக்கம் 40-42)

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஊர்களின் இஸ்லாமிய  பெயர் களையும் இந்து பெயர்களாக மாற்றவேண்டும் என்று சாமியார் சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற சாமியார் முதல்வர் ஆதித்யநாத் மாநிலத்தில் அனைத்து இஸ்லாமிய பெயர் பட்டியல் கொண்ட மாவட் டங்களுக்கு வைக்கும் இந்துப் பெயரை பரிந்துரைக்குமாறு ஆட்சி யாளர்களுக்கு கடிதம் எழுதியுள் ளார்.
இதனடிப்படையில் பஸ்தி மாவட்டத்தின் பெயரை வசிஷ்டர் நகர் மாவட்டம் என்று பெயர் மாற்ற அம்மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக பரிந்துரைக்கடிதம் அனுப்பியுள்ளார். அதே போல் ஆஜம்கர், அலிகட், மாலிக்பூர், முசாபர்நகர், சாஜகான்பூர், பதே ஹபூர், புலந்சாகர், மற்றும் ஆக்ரா போன்ற மாவட்டங்களில் பெயர் களையும் மாற்றும் வேலை நடந்து கொண்டு வருகிறது.
இதற்கான புதிய பெயர் பட் டியலை சாமியார் சங்கங்களும் அர சின் பார்வைக்கு அனுப்பியுள்ளன. இதில் லவ மற்றும் குச மாவட்டம், போன்ற பல இதிகாசப்பெயர்களும் அடங்கும். இது தொடர்பாக சாமியார் சங்கத்தினர் ஊடகம் ஒன்றில் பேசும் போது, முகலாயர்கள் இந்துமதப்பெயருள்ள அனைத்து ஊர்களின் பெயரையும் அழித்து அவர்களுக்கு ஏற்றவாறு பெயர் களை வைத்துக் கொண்டனர், இத்தகைய பெயர்களால் அப் பகுதி யில் உள்ள இந்துமத அடையாளங் களும் அழிக்கப்படுகிறது, இது இந் துக்களின் உணர்வுகளை புண் படுத்தும் ஒன்றாக போய்விட்டது.
சாமியார்களின் தலைவர்களுள் ஒருவரான பிரம்மாஷ்ராம் என்பவர் கூறும் போது, ஊர் என்பது அவ்வூரில் உள்ள இந்துக்கோவிலின் பெயரை வைத்துத்தான் இருக்க வேண்டும். அயோத்தியா என்பது அங்கு ராமர் பிறந்ததால் வந்தது, ஆனால் பிற்காலத்தில் அங்கு முகலாயர்கள் இருந்த போது அதை பைசாபாத் என்று மாற்றினர். இதனால் அயோத்தியாவின் புகழ் மங்கிவிட்டது, இதுமத உணர்வாள ராக சாமியார் ஆதித்யநாத் வந்த பிறகு தான் அயோத்தியா பெயர் மீண்டும் வைக்கப்பட்டது, அதே போல் அலாகாபாத் பிரயாக் ராஜ்-ஆக மாறியது.  தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருப் பதால் நாடு முழுவதுமுள்ள வேற்றுமதப்பெயர் அடங்கிய ஊர்களின் பெயரை எடுத்துவிட்டு இந்துமதப்பெயர்கள் வைக்கவேண்டும் இதனால் உலகம் இந்தியாவை இந்துநாடாக பார்க் கும் என்று கூறினார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகா பாத் நகரின் பெயரை `பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று கருத் துகள் வந்ததைத் தொடர்ந்து, தற் போது ``பிரிட்டிஷ் ஆட்சியின் தட யங்களை ஒட்டுமொத்தமாக இந்தி யாவிலிருந்து நீக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக, இமாச்சலப் பிரதே சத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரை `ஷியாமளா என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை வைத்துள் ளது.
இதேபோல, இமாச்சலப்பிரதேச சுற்றுலாத் துறையின்மூலம் நடத்தப் பட்டுவரும் `பீட்டர் ஹோப்' என்ற ஹோட்டலுக்கு, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயரைச் சூட்ட வேண்டும்.
கவுசிப்பூர் நகருக்கு, சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ்சந்திர போசின் நினைவாக அவரது பெயரைச் சூட்ட வேண்டும் குஜ ராத்தின் அகமதாபாத் நகருக்கு கர்ணாவதி என்ற பெயர் மாற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்தியாவின் பெயரையே பாரத் வர்ஷா என்று மாற்றவேண்டும் என்று இந்து ராஷ்டிரா தேசியகட்சி என்ற ஒரு அமைப்பு குடியரசு தலை வருக்கும் மோடிக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்தியில் கடிதம் எழுதியிருந்தது - _ இந்த நிலையில் சாமியார் அரசு மீண்டும் பெயர்மாற்ற பிரச்சினையை கையில் தூக்கியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...