பேரறிவாளன் விடு தலை விவகாரத்தில்
எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் எந்த
நட வடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி
படுகொலையில், சிபிஅய் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில்,
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பேரறிவா ளன் உட்பட 7 பேர் தற்போது
தண்டனை அனுபவித்து வருகின்ற னர். இந்த படுகொலைக்குப் பின் னால் உள்ள
சதித்திட்டம் குறித்து விரிவாக விசா ரிப்பதற்காக ஜெயின் கமிஷன் அமைக்
கப்பட்டது. இந்த படுகொலையில், வெளிநாட்டுச் சதி இருப்பதை மறுக்க முடியாது
என்று கூறிய ஜெயின் கமிஷன், இது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும்
என்று தனது இறுதி அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்தது.
ஜெயின் கமிஷனின் அறிக்கை யின்
அடிப்படையில், ராஜூவ் படு கொலையில் இன்றளவும் மர்மமாக உள்ள விஷயங்கள்
குறித்து விசா ரிப்பதற்காக 1999ஆம் ஆண்டு, சிபிஅய் தலைமை யில் எம்டிஎம்ஏ
என்ற விசாரணை அமைப்பு உரு வாக்கப்பட்டது. இந்தப் படு கொலையில் பயன்படுத்தப்
பட்ட வெடி குண்டை யார் உருவாக் கியது? அது எங்கிருந்து வந்தது? என் பது
உட்பட, மிக முக்கியமான விஷயங்கள் குறித்து 20 ஆண்டு களுக்கு மேலாக
எம்டிஎம்ஏ விசா ரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், எம்எடிஎம்ஏவின் விசாரணையை
உச்சநீதிமன்றம் கண் காணிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு
மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பெல்ட் வெடி குண்டுக்கு பேட்டரி
வாங்கித் தந்த தாக தன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், பெல்ட்
வெடி குண்டு எங்கிருந்து வந்தது என் பதே இதுவரை கண்டுபிடிக்கப்படா ததை அவர்
சுட்டிக்காட்டியிருந் தார். எனவே, எம்டிஎம்ஏ விசா ரணை முடியும் வரை தனக்கு
வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கும்படி மனுவில் பேரறிவாளன் கோரியிருந்
தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு
வந்தபோது, சிபிஅய் தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்த
முன்னேற்றமும் இல்லாததை சுட் டிக் காட்டிய நீதிபதிகள் அதற்கு கடும்
கண்டனமும் தெரிவித்தனர்.
ஆகவே, முழுமையான விசா ரணை அறிக்கையைத்
தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த னர். வழக்கு நேற்று மீண்டும்
விசார ணைக்கு வந்தபோது, சிபிஅய் தரப் பில் மற்றொரு விசாரணை அறிக் கைத்
தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதி நாகேஷ்வ ரராவ்
தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையில் புதிதாக ஒன் றும் இல்லை என்றும்
தொடர்ச்சி யாக ஒரே மாதிரியான அறிக்கையை சிபி அய் தாக்கல் செய்து வருவதா
கவும் கண்டனம் தெரிவித்தது.இதைத் தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு
வழக்குரைஞரிடம், உங்க ளுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று நீதிபதிகள்
கேள்வி எழுப் பினர்.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய
தமிழக அமைச் சரவை முடிவெடுத்து, அது தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டதை
பேரறிவாளன் வழக்குரைஞர் சுட் டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக
ஆளுநர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய பேரறிவாளனின்
வழக் குரைஞர், அந்த பரிந்துரைமீது ஆளு நர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம்
உத்தரவிட வேண்டும் என்றார். அப் போது குறுக்கிட்ட சிபிஅய் தரப்பு
வழக்குரைஞர், ஆளுநருக்கு நீதிமன் றம் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன
என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து
இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டது.
No comments:
Post a Comment