ஜே.என்.யு. வளாகத்தில் மாணவர்கள் மற் றும்
ஆசிரியர்களை முகமூடி அணிந்தவர்கள் தாக்கிய ஒரு நாளில் வெளிநாட்டில் இந்
தியாவின் பிம்பம் குறித்து கவலை தெரிவித்த நோபல் பரிசு பெற்ற அபிஜித்
பானர்ஜி, “என்ன நடந்தது என்பதன் உண்மையை'' நிறுவுமாறு அர சாங்கத்தை
வலியுறுத்தியுள் ளார்.
“உலகில் நாட்டின் பிம்பத் தைப் பற்றி
அக்கறை கொண்ட எந்த இந்தியரும் கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஜெர்மனி நாஜி ஆட்சியை நோக்கி நகர்ந்த ஆண்டுகளில் இது பல எதிரொலிகளைக்
கொண்டுள் ளது'' என்று முதன்மையான நிறுவனத்தின் பழைய மாண வரான பானர்ஜி
நியூஸ் 18 டாட்காமிடம் தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு
பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை வெடித்தது. கம்புகள்
மற்றும் கம்பிகளால் ஆன ஆயுதங்கள் ஏந்திய முகமூடி அணிந்த மனிதர்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களைத் தாக்கி வளாகத்தில் உள்ள சொத்துக்களை
சேதப் படுத்தினர். ஜே.என்.யு. மாண வர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட 28
பேர் காயமடைந்தனர். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வளா கத்தில் குழப்பம்
நிலவியது.
“அரசாங்கம் உண்மையில் என்ன நடந்தது என்ற
உண் மையை நிலைநாட்ட வேண் டும், அது எதிர் குற்றச்சாட் டுகளின் கோரஸில்
மூழ்கி விடக்கூடாது'' என்று பானர்ஜி கூறினார். வன்முறைக்கு விடுதி கட்டண
உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு
குறித்து கருத்துக் கேட்டதற்கு, பானர்ஜி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
“காயமடைந்தவர்களைப் பற்றி நான் மிகவும் கவ லைப்படுகிறேன். எல்லோரும் விரைவாக குணமடைய விரும் புகிறேன்'' என்று பானர்ஜி கூறினார்.
No comments:
Post a Comment