Saturday, January 11, 2020

முதியவர்களுக்கு மிக பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடு


முதியவர் களுக்கு பாதுகாப்பற்ற மாநி லம் தமிழ்நாடு என தேசிய குற்ற பதிவு ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது.
நாட்டில் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத மாநி லங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தேசிய குற்ற பதிவு ஆணையம் புள்ளி விவரங் களின் படி 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 152 முதிய வர்கள் படுகொலை செய்யப் பட்டு உள்ளனர்.  இது நாட் டிலே மிக அதிகமானது ஆகும். தமிழகத்தை தொடர்ந்து மராட்டியம்  (135), உத்தர பிரதேசம் (127) ஆகியவை உள்ளன.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ் நாட்டில் மூத்த குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் உள் ளனர். 11.2 சதவீத முதியவர் களுக்கு எதிரான  ஒட்டு மொத்த குற்ற விகிதத்தில், 3,162 வழக்குகளில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள் ளது.
முதியோர் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மராட்டியத்தில் முதி யவர்களுக்கு எதிரான அதிக பட்ச குற்றங்கள் 5,961 ஆகவும், மத்தியப்பிரதேசத்தில் 8 சத வீதத்திற்கும் குறைவான முதி யவர்கள் உள்ளனர். அங்கு 3,967 வழக்குகள் உள்ளன.
முதியவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான கொலை முயற்சி  வழக்குகளை யும் தமிழ்நாடு பதிவு செய்து உள்ளது. 76 முதியவர்கள் குறிவைக்கப்பட்டு உள்ளனர். முதியவர் களிடம் 182 கொள்ளை வழக்குகள் மற் றும் 16 மிரட்டி பணம் பறித் தல் வழக்குகள் உள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...