Wednesday, January 8, 2020

புதிய கிரகம் பூமிக்கு அருகில் கண்டுபிடிப்பு

விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா வின் 'நாசா' விஞ்ஞானிகள் அறிவித் துள்ளனர்.
கடந்த, 2018இல், நாசா, 'டெஸ்' என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. விண்வெளியில், நட்சத் திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் செல்கின் றனவா என்பதையும், அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்வது தான், இதன் வேலை.
இந்த ஆய்வில், பூமியில் இருந்து, 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில், ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதற்கு, 'டி.ஓ.அய்., 700டி' என, விஞ்ஞானிகள் பெயரிட் டுள்ளனர். இது, பூமியை விட, 20 சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தை, 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
சூரியனிடம் இருந்து, பூமி பெறும் வெப்பத்தில், 86 சதவீதத்தை, புதிய கோள் பெறுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங் கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின், மூன்று மாதிரிகளை உரு வாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக்கோள், 'டி.ஓ.அய்.,700பி,சி,டி.,' என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது. இதில், தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள கோள்தான், பூமிக்கு நெருக் கமான அம்சங்களுடன் உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...