Monday, January 6, 2020

ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தம் - மாநில அரசுகளின்

நிதிநிலை கடுமையாக பாதிக்கும்:  ஆய்வறிக்கையில் தகவல்

மத்திய அரசு, மாநிலங் களுக்கு வழங்கி வரும் ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகள் ரூ.1.23 லட்சம் கோடி அளவில் வரி வருவாய் இடை வெளியை சந்திக்கும் என்று ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டபோது, அதனால் ஏற்படும் வருவாய் இழப் புக்கு, அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு, அதாவது ஜூன் 2022 வரையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்கும் என்று உறுதி அளித்தது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டால், அதன் பிறகு மாநில அரசுகள் ரூ.1,00,700 கோடி முதல் ரூ.1,23,646 கோடி வரை வரி வருவாய் பற்றாக்குறையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று தேசிய பொது நிதி, கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர் கொள்ள வேண்டுமென்றால் மாநில அரசுகள், வேறு ஏதேனும் வழிகளில் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அல்லது செல வீனங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் மக்களின் நுகர்வு திறன் கடுமையாக சரிந்துள் ளது. நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதன் நீட்சியாக ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசு நிதிப் பற் றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்கும் வழிகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்கி வரும் ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டால் அது மாநில அரசுகளுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள், இழப்பீடுக்கான கால அளவை கூடுதலாக மூன்று ஆண்டுகள், அதாவது 2025 வரை, நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு நீட்டிக்கப்பட்டாலும் மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங் கும் அளவில் மத்திய அரசிடம் போதிய நிதி இருக்காது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...