மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021க்காக
முதல்முறையாக கைப்பேசி எண்கள், குழாய் எரிவாயு இணைப்பு உள்ளதா உள்ளிட்ட
விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டம், என்பிஆர் ஆகியவற்றை
எதிர்த்து பல பகுதிகளில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. மேற்கு வங்கம்,
கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று
அறிவித்துவிட்டன.
இந்நிலையில் மேலும் ஒரு கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய
விவரங்களை கொண்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது. அந்தத் தரவுகளில் ஸ்மார்ட்
போன்கள், குழாய் மூலம் வீடுகளில் எரிவாயு இணைப்பு உள்ளதா, கைப்பேசி பற்றிய
விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதிலும் கைப்பேசி எண்கள் மக்கள் தொகை
தொடர்பான கணக்கெடுப்புக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளில்
இடம்பெற்ற ஒரு அம்சமான வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 31 கேள்விகள். தரவுகள் பற்றிய விவரங்கள் இம்முறை
சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை 2021 கணக்கெடுப்பு பற்றி அமைச் சரவையில்
ஒப்புதல் தரப்பட்ட பின்னர் இந்த விவரங்கள் கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் ஆகிய
மாதங்களுக்கு இடையே நடைபெறும்.
என்பிஆர் தரவுகளுக்காக, பிறப்பு,
பெற்றோர்களின் பிறப்பு, கடைசியாக எங்கு குடியிருந்தீர்கள், பான், ஆதார்,
வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். இந்த
நிலையில் உணவுப் பழக்கம் குறித்தும் கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. அசைவமா?
சைவமா? பகுதி நேர அசைவ விரும்பியா, அசைவம் சாப்பிட விரும்புவீர்களா,
என்றெல்லாம் கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment